Friday, 23 August 2013

கற்பும் கர்ப்பமும்

காதல், காமம், கன்றாவி, கற்பு, கர்மம் எல்லாமே கலவி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட செயலேயன்றி காதலிக்கும் போது காமம் கூடாது, திருமணம் செய்த பிறகும் காதலிக்கலாம் என்று கேனத்தனமான கொள்கை உடையவர்கள் இதைப் படிப்பதை தவிர்த்து வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் பார்க்கலாம்...

தமிழ் சினிமாவின் சமகால இயக்குனர்களில் செல்வராகவன், பாலா, மிஷ்கின், அமீர், பிரபுசாலமன் போன்றவர்களை ஒரு வகையாகவும், வசந்தபாலன், பாலாஜிசக்திவேல், சுசீந்திரன், சசி போன்றவர்களை ஒரு வகையாகவும் பிரித்துக் கொள்ளலாம்.  முதல்வகை இயக்குனர்கள் எதற்காகவும் தங்கள் படைப்பில் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாத, தாங்கள் நினைப்பது மட்டும் தான் திரையில் வரவேண்டும் என்ற பிடிப்போடு இருப்பவர்கள்.  இரண்டாம் வகையில் இருப்பவர்கள் எப்படியாவது இந்த சமூகத்திற்கு மெசேஜ்(!) கொடுத்தாக வேண்டும், அதே சமயம் படமும் அனைத்து சென்டர்களிலும் ஹிட்டடிக்க வேண்டும் என்ற நோக்கில் படமெடுப்பவர்கள். 

சங்கர், ஹரி, தரணி, etc. என்றொரு பெரிய லிஸ்ட் இயக்குனர்கள் லாஜிக்கையெல்லாம் தூக்கி குப்பையில் கடாசிவிட்டு "ஹிட்" ஒன்றே
குறி என, வெறியுடன் ஒரே பார்முலாவை வைத்து அரைத்த மாவை அரைத்து காலந் தள்ளிக் கொண்டிருக்கின்றன.  பாலாஜி தரனீதரன் (ந.கொ.ப.கா), தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம்), கமலக்கண்ணன் (மதுபானக் கடை), பா.ரஞ்சித் (அட்டகத்தி) என ஒரு பட்டாளம் திடீரென உள்ளே புகுந்து ஆனந்த அதிர்ச்சியையும் அவ்வப்போது வழங்குவதுண்டு.

விடலைப் பருவ காதலை பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லையைத் தொடர்ந்து பல இயக்குனர்கள் நோண்டி நுங்கு எடுத்து இன்னும் சப்பி போட்ட மாங்கொட்டையில் சதையைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.  பூணூல்-சிலுவையைக் கழட்டி வீசிய க்ளைமேக்ஸைத் தொடர்ந்து "ஆற்றைக் கடந்து ஓடிப் போய் காதலில் வெற்றியடைவது",  "ஸ்லோ மோஷனில் ஓடி ரயிலைப் பிடித்தவுடன் பச்சைக் கொடியைக் காட்டி சுபம் போடுவது", "ரெண்டுபேரும் செத்துப் போவது", "ஒருத்தர் செத்து ஒருத்தர் லூசாவது (இதில் லூசாவது பெரும்பாலும் ஆண்களே)", "பொது எதிரியைக் கொலை செய்து ஜெயிலுக்குப் போவது" என பல வரலாற்று முடிவுகள் கொண்ட பாதையை தமிழ் சினிமா கடந்து வந்திருக்கிறது.  ஆனால் நிஜத்தில் நடக்கும் சில நிகழ்வுகளோ, "பெண் முகத்தில் ஆசிட் அடிப்பது", "பெற்றோர் தூக்கு மாட்டிக் கொள்வது", காலனியைக் கொளுத்துவது", "போலிஸ் ஸ்டேஷனில் கட்டப் பஞ்சாயத்து செய்து கொள்வது", "தற்கொலை அல்லது கொலை செய்யப் பட்டவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது" போன்றவை.
சென்னை நகரத்தில் தங்களைத் தானே மாடர்ன்கள் என நினைத்துக் கொண்டு பல அரை வேக்காடுகள் செய்யும் இன்ஸ்டன்ட் காமத்தையும், ரூம் போட்டு மேட்டர் செய்வதில் இருக்கும் ஆர்வத்தில் பாதுகாப்பை மறந்ததையும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் ஒரு படைப்பாக்கி மிடில் கிளாஸ் ஆடியன்ஸை நோக்கி குறி வைத்து எறிந்து அதில் வெற்றியும் பெற்று விட்டார் "ஆதலால் காதல் செய்வீர்" சுசீந்திரன்.  1989-ல் புதியபாதையில் "நிரோத் உபயோகம்" பற்றி அனைவருக்கும் மண்டையில் உறைக்கும் வகையில் படு லோக்கலாக பார்த்திபன் சொன்னதை ஒரு ஓரத்தில் ஜாம் தடவி சுசீந்திரன் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.

படத்தின் முற்பாதியில் வரும் கல்லூரிக் காதல், பெண்-பெற்றோர் உறவு, பையன்-பெற்றோர் உறவு, நட்பு என்று எதிலும் எந்தப் புதுமையும் இல்லை.  பிற்பாதியில் கல்லூரிக்குச் செல்லும் பெண் கர்ப்பமானதைத் தொடர்ந்து இரு குடும்பங்களிலும் ஏற்படும் குழப்பங்களை பார்வையாளர்களுக்குத் தெளிவாக காட்டி பரபரப்பை ஏற்படுத்திய  விதம் ஓகே.  பெண்ணின் பெற்றோர்களாக துளசியும் ஜெயப்பிரகாஷும் வாழ்ந்து காட்டியுள்ளனர்.

படம் முடிவதற்கு ஐந்து நிமிடங்கள் முன்பு ஹீரோ/ஹீரோயின் என்ட்ரி... பஞ்ச் டயலாகாக ஒரு அலறல்... "அட" போட வைத்தது.

காதல்-காமம் ரெண்டுமே "மேட்டரு"க்கான மீட்டர் தான் என்பதை குழப்பமில்லாமல் சொல்லி; கல்லூரி மாணவர்கள், குறிப்பாக பெண்கள்- உடலுறவு, பாதுகாப்பு, கர்ப்பம், கருத்தடை, பாலியல் நோய்கள், கருக்கலைப்பு, ஆணுறை, லூப், Morning-After Pill போன்ற விபரங்களை தெளிவாக அறிந்திருக்க வேண்டும் என்பதை முன் வைத்து இப்படம் வந்திருந்தால் பாராட்டியிருக்கலாம்.  அதை விடுத்து கர்ப்பமான பெண்ணின் பெற்றோர் அழுது புலம்புவதும், பஞ்சாயத்து பேசுபவர்கள் பெண்ணைப் பற்றி மட்டும் கேவலமாகப் பேசுவதும் (பெண்ணின் அம்மா கூட பையனின் அக்காவை கேவலமாகப் பேசுகிறார்), திருமணம் ஆகாத ஒரு பெண்ணின் கருக்கலைப்பு என்பதை போதைப் பொருள் கடத்தல் ரேஞ்சை விட ஓவராகக் காட்டியதும், எப்படியாவது அந்தப் பெண் தன் கருவை கலைத்து விட மாட்டாளா.. என்ற எண்ணத்தை பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்த மேற்கொண்ட பிரயத்தனங்களும் சலிப்படைய வைக்கின்றன.

பலரும் இப்படத்தை பெற்றோர் தமது பதின்வயது குழந்தைகளுடன் சென்று கட்டாயம் பார்க்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றனர்.  தாரளமாக சென்று பார்க்கலாம்.  பாலியல் குறித்த நல்ல புரிதல் உள்ள இளைஞர்க்கு இப் படம் பெரும் மொக்கையாகவே தோன்றும்.  இறுதிக் காட்சியில் பெண்ணுக்கு வேறொரு பையனுடன் நிச்சயதார்த்தம் நடப்பது போல காட்டி கற்பை(!) விட கர்ப்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவிற்காவது தமிழ் சினிமா வளர்ந்துள்ளதே என்பது ஆறுதல்..!!

7G-ரெயின்போ காலனியில் அனிதா கதிரிடம் ஹோட்டல் ரூமில், "i feel like doing it" என்று சொல்வாளே, அதுதாண்டா காதல்..!!
 

- அன்புடன்
- மலர்வண்ணன்

22 comments :

 1. நனறாக இருக்கு! அமா! அது எந்த பட ஸ்டில்?

  ReplyDelete
  Replies
  1. நன்றி...
   ஆ.கா.செ. பட ஸ்டில் தான் அது..

   Delete
 2. ***காதல், காமம், கன்றாவி, கற்பு, கர்மம் எல்லாமே கலவி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட செயலேயன்றி காதலிக்கும் போது காமம் கூடாது, திருமணம் செய்த பிறகும் காதலிக்கலாம் என்று கேனத்தனமான கொள்கை உடையவர்கள் இதைப் படிப்பதை தவிர்த்து வேறு ஏதாவது உருப்படியான வேலை இருந்தால் பார்க்கலாம்...***

  கொஞசம் சின்னச் சின்ன வாக்கியமா எழுதினீங்கனா, உங்க பொன்னான பதிவை, யாரு படிக்கலாம்னு சொல்றீங்க, யாரைப் படிக்காமலே வெளிய போகச் சொல்லுறீங்கனு புரியும்! எதுக்கு இம்பூட்டு நீளமா? சரி, விடுங்க..

  ///7G-ரெயின்போ காலனியில் அனிதா கதிரிடம் ஹோட்டல் ரூமில், "i feel like doing it" என்று சொல்வாளே, அதுதாண்டா காதல்..!! ///

  அப்படிங்களா?!!! இந்த எழவைச் சொல்லத்தான் இந்தமாரி கேணத்தனமா ஒரு பதிவுத் தலைப்பா!!!

  அந்தப் படத்தை எடுத்த பொறம்போக்கு செல்வராகவன் என்ன பண்ணினான் தெரியுமா உமக்கு? காதலிச்சவளை கைவிட்டுப்புட்டு அரேஞிட் மேரேஜ் பண்ணிக்கிட்டான். May be he did not know how to do her properly! அதெல்லாம் புரிஞ்சா நீர் ஏன் வாய்கிழிய பேசுறீர்!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி வருண்

   //இந்த எழவைச் சொல்லத்தான்//
   "i feel like doing it" என்று ஒரு காதலி தன் காதலனிடம் சொல்வது உங்களுக்கு இழவாகத் தெரிந்தால், உண்மையிலேயே இழவு என்பது உங்களுக்கு எப்படித் தெரியும் என நினைத்துப் பார்த்தேன்... சிரிப்பை அடக்க முடியவில்லை.

   //காதலிச்சவளை கைவிட்டுப்புட்டு அரேஞிட் மேரேஜ் பண்ணிக்கிட்டான்//
   காதலித்து திருமணம் செய்து கொண்டவரை விவாகரத்து செய்து விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வது கொடுங் குற்றம்னு எந்த இபிகோ செக்ஷன்ல வருதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா?

   //May be he did not know how to do her properly!//
   எங்க போய் சுத்தினாலும் கடைசில "அந்த" இடத்துல வந்து நிக்குறீங்க பாருங்க... அந்த நேர்மை புடிச்சிருக்கு..!!

   நீங்க சொல்ற மாதிரி பார்த்தா...
   புதுப்பேட்டை எடுத்த செல்வராகவன் கொலை செய்யணும்...; அஞ்சாதே எடுத்த மிஷ்கின் பொண்ணுங்கள கடத்தி பலாத்காரம் செய்யணும்...; சேது எடுத்த பாலா லூசாகித் திரியனும்...
   சூப்பரப்பு....!!! பின்றீங்க வருண்...!!!

   Delete
 3. இந்த படத்தில் வரும் மாப்பிள்ளைக்கு எல்லா விவரத்தையும் சொல்லி திருமணம் செய்தார்களா? இல்லை மறைத்தா?

  மாப்பிள்ளை யார்? வழக்கம் போல [முட்டாள்] அமெரிக்க மாப்பிள்ளையா?
  இல்லை சேஞ்சுக்கு டில்லி -பாம்பே காரனா?

  ReplyDelete
  Replies
  1. நீங்க வேற இப்ப எல்லாம் சென்னை, பங்களூரிலே (முட்டாள்) மாப்பிள்ளைகள் கிடைக்கின்றார்களாம்?!

   Delete
  2. //சென்னை, பங்களூரிலே (முட்டாள்) மாப்பிள்ளைகள் கிடைக்கின்றார்களாம்?!//
   அந்தளவுக்கு டெவலப் ஆயிருச்சா?

   Delete
  3. //மாப்பிள்ளைக்கு எல்லா விவரத்தையும் சொல்லி திருமணம் செய்தார்களா? இல்லை மறைத்தா?//
   மாப்பிள்ளையோட முகத்தைப் பார்த்ததுல எல்லாந் தெரிஞ்ச மாதிரி தான் இருந்தது.

   Delete
  4. Check this out.

   http://worldcinemafan.blogspot.in/2013/08/blog-post_14.html

   "‘ திருமண ஊர்வலங்களிலும் கர்பா நடனங்கள் உண்டு.
   எங்கள் உணவகம் இருந்ததற்கு பக்கத்து வீட்டில் ஒரு திருமணத்தில்,
   மணப்பெண் ஒரு கர்பா சீசனில் கர்ப்பமாகி கலைத்தவள் என்று மாப்பிள்ளை வீட்டுக்கு தெரிந்து விட்டது.
   ஆனால் அதற்காக அந்தப்பெண் ஒதுக்கப்பட்டு விடவில்லை.
   ஐந்து லட்சம் அதிகமாக ‘ஸ்த்ரீதனம்’ கோரப்பட்டு மணம் இனிதே முடிந்தது.
   மறைப்பது பெண் வீட்டார் திறமை.
   கண்டு பிடித்துக்கொள்வது பிள்ளை வீட்டார் திறமை.
   எல்லாம் சில லட்சங்களுக்காக.’"

   நூல் : நாடோடித்தடம்
   ஆசிரியர் : ராஜ சுந்தர ராஜன்
   வெளியீடு : தமிழினி பதிப்பகம்

   Delete
  5. வாங்க உ.சி.ர...
   ராஜா சுந்தர ராஜனின் எழுத்துக்களை அறிமுகம் செய்த வைத்தமைக்கு நன்றி...

   Delete
 4. அப் படம் ஓர் அச்சத்தை விதைக்கின்றது, ஆனால் அவ் அச்சத்தை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை ஆழமாய் பதிவு செய்ய தவறி விட்டது. அது குறித்து ஒரு பதிவு எழுதினேன், வெளியிடவில்லை. அவற்றில் சிலவற்றை நீங்கள் குறிப்பிட்டு விட்டீர்கள். சுருக்கமாய் சொன்னால், வயிற்றுப் பசி போல, கீழ் வயிற்றுப் பசி (காமமும்) அனைவருக்கும் வருவது. வயிற்றுப் பசியைத் தீர்க்க வீட்டுச் சாப்பாடோ, கடைச் சாப்பாடோ கிட்டும் சூழல் உண்டு. ஆனால் கீழ் வயிற்றுப் பசியைத் தீர்க்க இச் சமூகம் என்ன வழி சமைத்துள்ளது? கலியாணம் பண்ணி வீட்டுச் சாப்பாடு சாப்பிட வேண்டும். கலியாணம் பண்ண தாமதமாகி வரும் இக் காலத்தில், கீழ் வயிற்றுப் பசிக்கு வீட்டில் உணவில்லை என்ற போது, வெளியில் தேடுவோம். அப்போது பின்விளைவுகளை கருத்தில் கொண்டு, ஆணுறை, காப்பர் டி, கருத்தடை மாத்திரை, கருக்கலைப்பு போன்ற எதாவது ஒன்றையோ (ஒன்றுக்கு மேல் சமயங்களில்) பயன்படுத்தி தொலைத்தால் அநாதரவான குழந்தைகளை ஏன் பெற வேண்டும், மக்கள் தொகையை பெருக்க வேண்டும், காலில் விழ வேண்டும், நல்ல வேலைக் கிடைக்க முன் கலியாணம் பண்ண வேண்டும், வரதட்சணைக் கொடுக்க வேண்டும், விவாகரத்தில் போய் நிற்க வேண்டும். மேற் சொன்ன நான்கு தடை சாதனங்களையும் இலவசமாய் கிடைக்க சமூகம் வழிகோல வேண்டும். இல்லை பசியை அடக்கி கொண்டு தான் கிட எனக் கூறும் கலாச்சாரக் காவலர்களே, சாப்பாடு கிடைக்கும் வரை பட்டினி கிடந்து ஒன்று உடல், மனம் கெடும், அல்லது திருடி தின்னும் சூழல் வரலாம், 100-க்கு 95 பேர் காமப் பசியை அடக்கிக் கொண்டு பல காலம் வாழ்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

  ReplyDelete
  Replies
  1. //அது குறித்து ஒரு பதிவு எழுதினேன், வெளியிடவில்லை. அவற்றில் சிலவற்றை நீங்கள் குறிப்பிட்டு விட்டீர்கள்.//
   இப்பதிவை எழுதி draft இல் வைத்துவிட்டு check செய்து பின்னர் publish செய்யலாம் என்று இருந்த இடைவெளியில் நம்பள்கி சார் இதே கருத்தை இதை விட பலமடங்கு தெளிவாக, சுவாரசியாமாக வெளியிட்டு விட்டார்.
   http://www.nambalki.com/2013/08/blog-post_22.html

   உங்கள் கருத்துக்களை ஒரு வார்த்தை விடாமல் அப்படியே வழிமொழிகிறேன். இதுகுறித்த உங்கள் பதிவையும் விரைவில் வெளியிட கேட்டுக் கொள்கிறேன்.

   Delete
  2. வணக்கம் நண்பர்களே !

   இந்த படம் பற்றிய விவாதங்களை புறந்தள்ளி ,இக்பால் கருத்துக்களை சற்று உற்று நோக்குங்கள் அன்பு பண்பு பாசம் நேசம் இவற்றில் தம் வாழ்வையே அடகுவைத்து விட்டு அக்காள ,தங்கை திருமணம் இவைகளை முடித்துவிட்டு சற்று திரும்பி பார்க்கையில் அகவை 40ஐ தாண்டிவிடுகிறது,தலையில் கடன் சுமை வேறு இந்தச் சூழ்நிலையில் மனமகனுக்குரிய தோற்றம் ,பொலிவு கெட்டு விடுகிறது ,கல்யாண சந்தையில் விலை போகமுடியாத ரெண்டான் கெட்டாங்களாக ,பார்பவர்களுக்கு கேலிப் பொருளாக நண்பர்களாலேயே சற்று தொலைவில் வைத்து பார்க்கப் படுகின்ற அந்த அவல நிலையை இந்த சமூகத்தில் காண்கின்றோம்.மணப்பந்தல் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள் உண்மை புரியும்.தரகர்களே நம்பிக்கை இழந்து இவர்களுக்கு துணை தேடும் வேலையை செய்கின்றனர். இன்றைய பெண்பிள்ளைகளின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கின்றது.

   ஆனால் ,இந்த பாசம் மிக்க கணவான்களின் மனதை அறிந்தவர்கள் சிலரே ஆறுதலாய் உள்ளனர். இச்சைக்கும் இடம் கொடாமல் மனதை அலைபாய விடாமல் சூழ்நிலைக் கைதிகளாய் குடும்ப பாரம் சுமக்கும் இவர்களுக்கு என்று தான் விடிவு. காலம் பதில் சொல்லுமா?
   நன்றி...


   Delete
  3. //அன்பு பண்பு பாசம் நேசம் இவற்றில் தம் வாழ்வையே அடகு வைத்து//

   நீங்கள் சொல்லும் இதுபோன்ற கனவான்களைப் பார்த்தால் ஒருபுறம் பரிதாபமாக இருந்தாலும், அவர்களின் இந்த நிலைக்கு அவர்களே ஒருவிதத்தில் காரணமாக அமைந்து விடுகின்றனர். சமூகத்திற்கும், silly feelings-க்கும், sentiments-க்கும் கட்டுப் பட்டு, தங்கள் இளமையைத் தொலைத்தொழித்து விட்டுத் திரியும் இவர்களைக் கண்டால் பல நேரங்களில் கோபம் தான் வருகிறது.
   நடுத்தரக் குடும்பத்து ஆண்களில் பெரும்பாலோனோருக்கு குடும்பச் சுமை இருக்கத் தான் செய்கிறது. நாட்டிற்காக, சமுதாய மேம்பாட்டிற்காக, இன விடுதலைக்காக வாழ வேண்டிய வயதை ஒருவனோ ஒருத்தியோ பணயம் வைத்தால் அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் தன் ஒரே ஒரு குடும்பத்திற்காக தன்னிடம் இருக்கும் ஒரே ஒரு வாழ்க்கையை பணயம் வைப்பது நெருடலான விஷயமே...!!

   Delete
  4. //சமூகத்திற்கும், silly feelings-க்கும், sentiments-க்கும் கட்டுப் பட்டு, தங்கள் இளமையைத் தொலைத்தொழித்து விட்டுத் திரியும் இவர்களைக் கண்டால் பல நேரங்களில் கோபம் தான் வருகிறது.//

   எனக்கே என் மீது கோபம தான் வருகிறது ,அந்த நேரங்களில் அது ஆற்றான்மையாக உருவெடுத்து பிறர் மீது எரிந்து விழத்தோணுகிறது.என்ன செய்வது எம்மை நம்பிய குடி காக்க வேண்டுமே ?நீங்கள் சொல்வது போல் செய்ய வேண்டுமென்றால் குடும்பத்தை உதறிவிட்டு நாட்டு சேவையில் ஈடுபட வேண்டும்.பிறகு குடும்பத்தை காப்பார் யார்? நம்பிக்கை துரோகம் தவறல்லவா? நாளை நாட்டுப் பணியில் இடர் ஏற்படும் போது நாட்டை உதற முடியுமா?
   ஒரு சிலருக்கு மட்டுமே அந்த கல் நெஞ்சம் அமைகிறது, அவர்களே நாட்டுக்கும் வீட்டுக்கும் சிறந்தவர்களாக அமைகின்றனர்.
   குடும்பத்தை உதறி (அவர்களின்/ஊரார் வசைமொழிகளையும், சாபங்களையும் வாங்கி) வாழ்வில் உயர்ந்து பின்னாளில் எல்லாம் இருந்தும் ஏதும் இல்லாதவனாய் குற்றவுணர்வுடனும் பழிச்சொல்லுடனும் வாழ்வதைக் காட்டிலும் குறைந்தபட்சம் குடும்பத்திற்காவது உதவியாக இருந்து விட்டு போகிறோமே ....
   இன்றைய நிலையில் அயல் நாட்டில் பணிபுரிபவர்களில் (அமரிக்கா ,ஜெர்மன்,லண்டன் ,பிரான்ஸ் இன்னும் சில நாடுகள் நீங்கலாக )பெரும்பாலானோர் இத்தகையவர்களே.
   என் பார்வையில் அடைப்புக்குள் இருக்கும் நாடுகளில் இருப்பவர்கள் ஏதோ ஒரு வகையில் தங்கள் சுய லாபத்திற்காக மட்டுமே செல்கிறார்கள் சொற்ப பேர் மட்டுமே திரும்பி வருகிறார்கள் ஏனையோர் அங்கேயே தங்கி விடுகிறார்கள்.அன்னை தந்தை மரிப்புக்குக் கூட நிறைய பேர் வரமுடியாத சூழ்நிலை.
   அவரவர் கஷ்டம் அவரவர்க்கு ...
   நிறைய சொல்லிவிட்டேனோ ..பொறுத்தருள்க....
   நன்றி.

   Delete
  5. // இல்லை பசியை அடக்கி கொண்டு தான் கிட எனக் கூறும் கலாச்சாரக் காவலர்களே, சாப்பாடு கிடைக்கும் வரை பட்டினி கிடந்து ஒன்று உடல், மனம் கெடும், அல்லது திருடி தின்னும் சூழல் வரலாம், 100-க்கு 95 பேர் காமப் பசியை அடக்கிக் கொண்டு பல காலம் வாழ்வார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.//

   தன் கையே தனக்குதவி என சொந்த சமையல் செய்து கொள்ளும் எத்தனையோ ஆடவர், பெண்டிர் உளர். சொந்த சமையல் சமூகத்தில் கேவலமாகப் பார்க்கப்படுவதால் பெரும்பாலோர் வெளியே சொல்லிக் கொள்வதில்லை.

   Delete
  6. //சமூகத்திற்கும், silly feelings-க்கும், sentiments-க்கும் கட்டுப் பட்டு, தங்கள் இளமையைத் தொலைத்தொழித்து விட்டுத் திரியும் இவர்களைக் கண்டால் பல நேரங்களில் கோபம் தான் வருகிறது.//

   தனக்கு முன்னால் 2 சகோதரிகள், பின்னால் 2 சகோதரிகள் உடன் பிறந்த சக பணியாளர் ஒருவர் மூத்த சகோதரிகளுக்கும் முந்தி முதலில் தன் திருமணத்தை முடித்துக் கொண்டார். (சமூகக் கண்ணோட்டத்தில்) மிகவும் வித்தியாசமான நிகழ்வை அவர் மனைவி கொண்டு வரும் சீதனத்தை தன் சகோதரிகள் மணத்திற்கு பயன்படுத்துவாரோ என்னவோ என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம்.

   Delete
  7. //அவரவர் கஷ்டம் அவரவர்க்கு... நிறைய சொல்லிவிட்டேனோ.. பொறுத்தருள்க....//

   உங்கள் வலி புரிகிறது...
   வழியும் உங்களிடம் தான் உள்ளது..

   Delete
  8. //ஒருவர் மூத்த சகோதரிகளுக்கும் முந்தி முதலில் தன் திருமணத்தை முடித்துக் கொண்டார்//

   நிச்சயமாக இதற்கு காமம் மட்டும் காரணமாக இருந்திருக்க முடியாது என்று தோன்றுகிறது

   Delete
  9. //சொந்த சமையல் சமூகத்தில் கேவலமாகப் பார்க்கப்படுவதால்//

   அதைக் கேவலமாகப் பார்ப்பதே கேவலம். அது மட்டுமல்லாமல் டிவியில் டாக்டர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அதை தவறு என்றும் உளறுகிறார்கள்.

   Delete
 5. இக்பால் செல்வன்:
  நான் எழுதினா என்ன? நீங்க எழுதினா என்ன?
  உங்கள் கருத்தை நீங்கள் பதிவு செய்யுங்கள். சிந்தனைகள் எல்லோருக்கும் வரும்; ஒரே சிந்தனைகள் எல்லோருக்கும் வரும்!
  எப்பூடி?
  கிருஷ்ணர் பால் கடைந்தார் என்று எல்லாரும் தான் சொல்றாங்க? யாராவது காப்பி என்று சொல்கிறர்கள?
  சிவபெருமான் தலையில் கங்கை இருக்கு என்று எல்லோரும் சொல்றகா! அதயே திருப்பி திருப்பி சொல்றாக--வெட்கம் இல்ல்லாமல்.

  அப்படி நீங்கள் என் எண்ணங்களை பதிவு செய்தால் அது காப்பி என்று சில முட்டாள்கள் சொல்லலாம். முட்டாள்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்குரீர்கள்.

  one plus one is always? இரண்டு நைனா? அதை நான் சொன்னா என்ன நீங்க சொன்ன என்ன?
  இது என்றும் மாறாது!

  ReplyDelete
  Replies
  1. //சிந்தனைகள் எல்லோருக்கும் வரும்; ஒரே சிந்தனைகள் எல்லோருக்கும் வரும்!//
   சில நேரங்களில் நீங்களும் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறீர்கள்... நன்றி

   //முட்டாள்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்குரீர்கள்.//
   Correct. பல சமயங்கள்ல நானும் தெரியாமக் கொடுத்து விடுகிறேன்..!!


   Delete