Saturday 21 February 2015

நியூஸிலாந்தின் பூசாரித்தனமும் பாகிஸ்தானின் பொங்கச்சோறும் - 1992

1978-ற்கு முன் பிறந்த கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர்கள் இதைப் படிக்கும் போது அசை போட்டுக் கொள்ளலாம்.  1987-ம் ஆண்டில் இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நடத்திய உலகக் கோப்பையை அடுத்து, (இந்தியாவும் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் விளையாடும் என பலரும் எதிர்பார்த்து இரு அணிகளும் அரை இறுதியில் ஊத்திக் கொண்டது வேறு விஷயம்) 1992-ம் ஆண்டு போட்டியை ஆஸியும் நியூஸியும் சேர்ந்து நடத்தின.  வண்ண உடை வீரர்கள், பாகிஸ்தானுக்கு பச்சை, நல்ல வேளை இந்தியாவுக்கு காவிய கொடுக்கல..!!

போட்டிக்கு முன்பாக ரிடயர்டு ரவுடி கவாஸ்கர், “பாகிஸ்தான் தான் கோப்பையை வெல்லும்..” என அடிச்சு விட்டு இறுதி வரை மண்டையை சொறிந்து கொண்டிருந்தார்.  Wessels, Kirsten, Cronje, Rhodes, Donald என கலக்கிய தென் ஆப்பிரிக்காதான் கோப்பையை வெல்லும் என வல்லுனர்கள் ஆரூடம் கூற, ஏற்றார் போல் விளையாடிய முதல் போட்டியிலியே Boon, Marsh, Jones, Border, Waugh, Reid, McDrmott அடங்கிய ஆஸியை 170 ரன்னுக்கு சுருட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வ வைத்தனர்.

Round robin-ல் தொடர்ச்சியாக தான் விளையாடிய 7 போட்டிகளிலும் நியூஸி தன் சொந்த மண்ணில் அபார வெற்றி பெற்று Greatbatch, Crowe, Jones, Rutherford, Watson, Larsen என power packed அணியாக மிரட்டி வந்தது.  8-வது போட்டியில் அதுவரை 3 போட்டிகளில் மட்டுமே வென்றிருந்த பாகிஸ்தானை எதிர் கொண்டது.  அன்றுதான் நியூஸிக்கு சனியும் பாக்கிற்கு சுக்கிரனும் வந்து உட்கார்ந்தனர்.  ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற மதப்பிலும், அதுவரை அனைத்து போட்டிகளையும் சொந்த மண்ணில் விளையாடி வென்ற கொழுப்பிலும், அன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு ஆஸி சென்று விளையாட வேண்டிய கட்டயாத்தினாலும், தோற்க முடிவு செய்து 106/8 என்றிருந்து, 166-க்கு ஆல்அவுட் ஆகி உள்ளூர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.  மெய்யாலுமே விளையாட்டாக 9 பேரை பந்து வீசச் செய்து, RameezRaja-வை செஞ்சுரி அடிக்க வைத்து திருப்தியுடன் தோல்வியடைந்தனர்.

இங்கு ஒரு விஷயத்தை நினைவுகூர்ந்தாக வேண்டும்..., 1986-ல் இந்தியா, ஆஸி, நியூஸிக்கு இடையே நடந்த முத்தரப்புப் போட்டியில் ஒரு முக்கியமான போட்டியில் ஆஸியிடம் நியூஸி அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் இறுதிப் போட்டியில் இந்தியாவை வெளியேற்றும் வாய்ப்பு இருந்தது.  அப்போட்டியில் ஆஸி 7 ரன்களுக்கு ஆட்டமிழந்து 206 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இந்தியாவை வெளியேற்றியது.  அவ்வார ஆனந்த விகடனில் “அவுட் ஆகிறார், ஆனால் சிரித்துக் கொண்டே வெளியேருகிறாரே..” என கபில்தேவ் கன்னத்தில் கை வைத்து புலம்புவது போல் வந்த கார்ட்டூன் இன்னும் நினைவிருக்கிறது...

மொத்தத்தில் 3 வெற்றி, 1 no result மற்றும் 1 ஓஸிகாஜி தந்த உற்சாகத்தில் பாகிஸ்தான் அரையிறுதியில் மீண்டும் நியூஸியை எதிர் கொண்டது.  263 ரன்கள் சேஸிங்கில், 140/4 என்ற நிலையில், Inzamam என்ற சிறுவன் அபிமன்யு போல உள்ளே புகுந்து 37 பந்துகளில் 60 ரன்களை விளாச இறுதிப் போட்டிக்கு MCG-யில் தன் இடத்தைப் பதிவு செய்தது பாக்.  பாம்புக்கு பால் ஊத்திய நிலையில் கறுப்புத் தொப்பிகள் முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு வெளியேறினர்.
அடுத்த அரையிறுதிப் போட்டி பெரிய காமெடி... தலா 5 வெற்றிகளைப் பெற்றிருந்த இங்கிலாந்தும் தென்னாப்பிரிக்காவும் மோதின.  45 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட போட்டியில் இங்கிலாந்து 252 ரன்கள் எடுக்க, தென்னாப்பிரிக்கா அழகாக சேஸ் செய்ய 43 வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் என்ற நிலையில் மழை வர..., மழை விட்டு மீண்டும் ஆரம்பிக்கும் போது அப்போது உருவாக்கப்பட்ட பாடாவதி விதியின் படி தென்னாப்பிரிக்கா 1 பந்தில் 21 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் தொங்க போட்டபடி வெளியேறியது, அந்தச் சோகம் இன்னும் பல வழிகளில் அந்த அணிக்கும் இன்றும் தொடர்வதுதான் பரிதாபம்.

இறுதிப் போட்டியில் கடைசி ஓவர்களில் மீண்டும் Inzamam 35 பந்துகளில் 42 ரன்களும் Akram 18 பந்துகளில் 33 ரன்கள் மற்றும் முக்கியமான 3 விக்கட்டுகளை எடுத்தும் 3 முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்தின் கனவை தகர்த்தனர்.
இந்திய-பாகிஸ்தான் போட்டியில் Miandad குரங்கு மாதிரி தவ்வியது இந்த உலகக் கோப்பையின் சுவாரசியமான நிகழ்வு...
கவாஸ்கர் உளறியது பலித்து விட்ட குஷியில் PCB அவரை அழைத்து கவுரவப் படுத்தியது தனிக்கதை...!!

- அன்புடன்
- மலர்வண்ணன்



8 comments :

  1. அவ்வப்போது பகிர்வுகள் தொடராவிட்டால்.... வர மாட்டேனாக்கும்...! ஹிஹி...

    ReplyDelete
  2. சரியா ஒரு வருட இடைவெளி ஆகிடுச்சி DD,
    2nd இன்னிங்ஸ் ஆரம்பம்..., இனி வாரமொரு முறை வந்திடலாம்...

    ReplyDelete
  3. அடுத்த மேட்சில் காவிகள், காவி உடைக்கு சிபாரிசு செய்தாலும் செய்யலாம் க. திரு. மலர்வண்ணன் அவர்களே!!

    ReplyDelete
  4. அந்த நிறத்தை நெதர்லாந்து வைத்துள்ளது திரு.வலிப்போக்கன் அவர்களே!! கஞ்சி போட்டு அயர்ன் பண்ண காக்கி டவுசர் எப்படியிருக்கும்?!

    ReplyDelete
  5. பாகிஸ்தானின் பொங்கச்சோறும் யாருக்கெல்லாம் கிடைத்திருக்கும்.

    ReplyDelete
  6. அதான்... நியூஸிக்கு மொத்தமாவும் கவாஸ்கருக்கு தனியாவும் குடுத்துட்டாங்களே..!!

    ReplyDelete
  7. அடுத்த நிணைவுகள் இன்னும் மலரவில்லையே..தலைவரே.....

    ReplyDelete
  8. தயாராயிட்டு..., வேலைப் பழு காரணமா proof பாக்க முடியல, இவ்வார இறுதியில் நிச்சயம் விட்ருவோம் நண்பரே...

    ReplyDelete