Thursday 30 July 2015

இனிப்பான இனப் படுகொலை

வேலை விஷயமாக ஒரு அமெரிக்க நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். போன வேலை முடித்து factory-யில் இருந்து parking-க்கு நடந்து வரும் வழியெல்லாம் பரவலாக தேனீக்கள் செத்துக் கிடந்தன. இன்னும் சரியாக சொல்வதென்றால் கொல்லப் பட்டிருந்தன. தேனீக்கள் அழிந்து வரும் நிகழ்வு உலகின் நிலப் பரப்பில் வாழ்ந்து வரும் பிற உயிரினங்களின் அழிவிற்கு விரைவில் எடுத்துச் செல்லும் என்பது வேறு என்றாலும்....,

வனங்களையும் வயல்களையும் அழித்து, கம்பெனிகளை உருவாக்கி, பின் அதனுள்ளே குரோட்டன் செடிகளை நட்டு, வெள்ளைக்காரனை கூட்டியாந்து போட்டோ பிடித்து, மரம் வளர்ப்போம் என்று முழங்குவதும், ஈமெயில்களின் இறுதி வரியில் பிரிண்ட் எடுக்காதே, save trees என்று பொங்குவது தான் கார்பரேட்டுகளின் இயற்கை சார்ந்த அதிகபட்ச போராட்டம். 

இப்போது கண்ட தேனீக்களின் இந்த இனப் படுகொலையை எவ்வாறு செய்திருப்பார்கள்!? 

தேனீக்கள் அவை பாட்டுக்கு தேன் கொண்டு வந்து சேர்ப்பதும், ராணி தேனியிடம் நல்ல பெயர் வாங்கி ஜல்சா செய்ய முயல்வதுமாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்க, அவற்றின் கூடுகளைக் கண்டு பொறுக்காத ஒருசில வொயிட்காலர் அம்பிகளும் அபிஷ்டுகளும் கல்லைக் கொண்டு எறிய, அவை திருப்பித் தாக்கி ஓட ஓட விரட்டியடித்திருக்கின்றன.

"நாங்க சத்ரியன் இல்லடா சாணக்யன்..." என கருவிக் கொண்டு அம்பிகள்  HR-க்கு தாங்கள் உடல் ரீதியாவும் மன ரீதியாகவும் தேனீக்களின் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப் பட்டதை மனம் திறந்த ஒரு ஈமெயிலில் வரைந்தனர்.

4 நாட்களாக வேலையே இல்லாமல் இருந்த HR, அடிச்சுதடா சான்ஸ் என நான்கு ஆண் செக்யுரிடிகளையும், இரண்டு பெண் செக்யுரிடிகளையும் அழைத்துக் கொண்டு தேன்கூடுகளை பார்வையிட்டு அவற்றை பல ஆங்கிள்களில் போட்டோ எடுத்துக் கொண்டார்.  பின்னர் அவற்றை photoshop மூலம் close-up செய்து ராட்சத ஜந்துக்கள் போல உருவாக்கினார்.  அப்புறமாக தேனீக்களின் கொடூர குணநலன்களையும், விஷத் தன்மையையும், google, bing, wiki, என்சைக்ளோபீடியா என 2 நாட்கள் ஹோம்வொர்க் செய்து ஒரு பெரிய power point presentation ரெடி செய்து Admin-க்கு தொழிலாளர்களின் பாதுகாப்பு பற்றியதால் ASAP, On Top Priority ஆவண செய்யவும் PDNF என ஊர் உலகத்துக்கே cc வைத்து, அவர் boss-யும் இவர் boss-யும் bcc-யில் வைத்து அனுப்பினார்...!!

Admin லேசுப்பட்ட ஆளா என்ன?  அவர் தேனீக்கள் பற்றி Phd பண்ணும் அளவுக்கு ஒரு ரிபோர்ட் தயாரித்தார்.  இதற்கிடையில் HR ரெண்டு தரம் அட்மின்-க்கு gentle reminder ஈமெயில் போட்டுத் தாக்கியது தனிக்கதை.  ரிப்போர்ட் தயாரானதும் அதை தன்னோட boss-க்கு approval அனுப்பி தேவுடு காத்த நேரத்தில் HR-ன் reminder-க்கு திருப்பித் தாக்கினார்.

தேனீக்களை ஒழிக்க ஆவண செய்யும் படி அனுமதி வந்தது.  அதற்கான பட்ஜெட்டை procurement team-ம், vendor-ஐ purchase department-ம் முடிவு செய்யுமாறு management உத்தரவிட்டது.

ஒரே நாளில் ஒரே நேரத்தில் அனைத்து தேனீக்களையும் ஒன்று விடாமல் அழிப்பது திட்டம்.  மொத்தம் 20 கூடுகள், கூட்டுக்கு 4 பேர் என வைத்துக் கொண்டாலும் 80 பேர்.  ஒருவருக்கு ரூ.1000 என வைத்துக் கொண்டாலும் ரூ.80000.  எரிபொருள் ரூ.40000, ஒரு நாள் தீயணைப்பு வண்டி வாடகை ரூ.10000, ஒரு நாள் ஆம்புலன்ஸ் வாடகை ரூ.10000, முதலுதவி சாதனங்கள் ரூ.5000, பாதுகாப்பு மருத்துவர் மற்றும் நர்ஸ் ரூ.15000, தேன் கூட்டை அழிக்கும் வீரர்களுக்கான மருத்துவ காப்பீடு ரூ.160000, இதர செலவுகள் ரூ.30000, ஆக மொத்தம் ரூ.350000 என மதிப்பீடு போடப்பட்டது.Purchase-லிருந்து டெண்டர் விட, 15 பேர் பங்கு பெற்றனர். 

எவ்ளோ கொறைச்சலா செய்வீங்க..., எந்தளவுக்கு திருப்திகரமா செய்வீங்க..., revised rates குடுங்க..., final offer தாங்கன்னு Commercial evaluation-ல் முடிவில் 5 பேர் தடித்த வார்த்தைகளில் திட்டிவிட்டு வெளியேறினர்.

இதுக்கு முன்னால அமெரிக்காவுல உங்க கம்பெனி தேனீ ஓட்டியிருக்கா..., இந்தியாவுல எத்தனை வருசமா ஓட்டுறீங்க..., தேனீ எத்தனை வகைப்படும், ஐந்து பக்கங்களுக்கு மிகாமல் பொருள் தருக...,  கடைசி மூன்று வருட  ஆடிட் ரிப்போர்ட் குடுங்க...., உங்களோட முக்கியமான மூன்று client  reference தாங்க..., போன்ற  Technical evaluation முடிவில் 5 பேர் அப்பத்தா வரை இழுத்து கழுவி ஊத்தி வெளியேறினர்.

கடைசியாக 5 vendor-களை தேர்வு செய்து அவர்களிடம் EMD-யாக ரூ.50000 DD எடுத்துக் கட்ட சொல்ல அதில் இரண்டு பேர் கரடியை விட கடுமையாக காறித் துப்பிவிட்டு சென்றனர்.

மூன்று பேர் பங்கேற்ற இறுதி கட்டத்தில் ஒருவர் ஏற்கனவே ECR-ல் தங்கியிருந்த ஒரு அமெரிக்க அம்மணியின் கெஸ்ட் ஹவுஸில் தேனீ ஓட்டிய அனுபவமும், அறிவும், திறமையும் இருந்தமையால் "MNC ஈ ஓட்டிகள்" என்ற தகுதியோடு தேர்வு செய்யப் பட்டார்.  இந்த ப்ரொஜெக்டை முடிக்க அவருக்கு ரூ.10000 தருவது என முடிவாயிற்று.

இந்த ஆப்பரேஷனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என விவாதித்ததில் அதை ஒரு சுற்றறிக்கையாக அனைத்து தொழிலாளர்களுக்கும் HR அனுப்பி, சிறந்த பெயர் வைப்பவருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என அறிவித்தார்.

கம்பெனியின் legal team ஒரு agreement தயார் செய்தனர்.  காலை 8 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிக்குள் ஆப்பரேஷனை முடிக்க வேண்டும். தாமதமாக ஆரம்பித்தால் ரூ.1000-மும், குறித்த நேரத்தில் முடிக்கா விட்டால் ரூ.1000-மும் penalty.  போரின் போது தேனீக்கள் கம்பெனி தொழிலாளர்கள் யாரையேனும் முதல் முறை கொட்டினால் ரூ.1000-மும், இரண்டாம் முறை கொட்டினால் ரூ.2000-மும், மூன்றாம் முறை கொட்டினால் contract முன்னறிவிப்பின்றி terminate செய்யப்படும், வீரர்களுக்குண்டான அனைத்து பாதுகாப்புகளும் (ESI, PF உட்பட) மேற்கொள்ளப் பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு 2000 அம்ச உடன்படிக்கைகள் உருவாக்கப் பட்டன.  இந்த agreement 1+​1 ரூ.1000 பத்திரத்தாளில் பதிய வேண்டும், அதை vendor தன் செலவில் ஏற்க வேண்டும் என முடிவாயிற்று...!!

எனக்கென்ன தோணிச்சுன்னா..., இந்தக் கொடுமையை எல்லாம் பார்த்து அந்த தேனீக்களே coco cola-வை உறிஞ்சிக் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்குமோ..!!










அன்புடன்
- மலர்வண்ணன்



6 comments :

  1. ஏண்டாப்பா அம்பி வேலையெல்லாம் எப்படி போயிண்டிருக்கு! குழந்தைகள் ஜப்பான் மொழியெல்லாம் படித்தாளே! எல்லோரும் ஆத்துல ஷேமமா!

    தேனீக்களை அழித்த முட்டாள்கள்!
    தமிழ்மணம் ஓட்டும் போட்டு இருக்கேன் நோக்கு;2.

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ வசிஷ்டரே...
      புது வேலையில் சேர்ந்து ஒரு வருஷம் ஆயிட்டுது.., நன்னா போயிண்டிருக்கு.., நான் சேர்ந்த நேரம் கம்பெனியில் 60%ஐ அமெரிக்காகாரன் தூக்கிட்டான்.., மெய்யாலுமே ஒரு வருஷமா ஒழிச்சலே இல்லாத வேலை.., இப்போ நேரம் ஒதுக்க பழகிட்டேன். இனி வாரம் ஒரு முறையாவது கட்டாயம் வந்துவிடுவேன்.
      ஜப்பானிய மொழியை ஆத்துல எல்லாரும் தொடர்ந்து கத்துண்டு இருக்கா..., மூத்தவள் இப்போ french -ம் சேர்த்து கத்துக்கிறா..!!
      அங்கே நம்மாத்துல மாமியும் புள்ளையான்டான்களும் க்ஷேமமா?! உங்களையும் இனிமே அடிக்கடி எதிர்பார்க்கிறேன்.

      Delete
    2. வாங்க... வாங்க... இப்படி கொட்டிகிட்டேவா வர்றது...? ஹிஹி...

      ஜப்பான்...? வாழ்க நலம்...

      Delete
    3. கொட்டுனா அள்ளிக்கலாம் விடுங்க DD

      ஆம்.., ஜப்பான்.., இன்னும் சில வருடங்களில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுகோட்டை, ஸ்ரீ சிட்டி பகுதிகளை ஆளப் போகிறவர்கள்..!!

      Delete
  2. செம பதிவு! கொட்டிட்டீங்க! தேனீக்களை அழிக்கும் இனப்படுகொலையாளர்களை எந்த பாலைவனத்திற்கு அனுப்பலாம்..சொல்லுங்க..

    ReplyDelete
    Replies
    1. பாலைவனமெல்லாம் எதற்கு, தண்டனை தரும் பொறுப்பை தேனீக்களிடமே விட்டு விடலாம்..!!

      Delete