Saturday, 8 August 2015

ஒலக சினிமா விமர்சகர்களுக்கு ஓர் வேண்டுகோள்

ஒலக சினிமாக்களை உட்கார்ந்த எடத்துல இருந்து பார்த்து, பார்த்த கையோட விமர்சனங்களை அடிச்சு தெறிக்க விடும் தமிழ் இணைய ஒலக சினிமா விமர்சன ஜாம்பாவான்களுக்கு,

நீங்க விமர்சனம் செய்த பல படங்களை Torrentடிட்டு கண்டுகளித்த பலரில் நானும் ஒருவன்...
எந்தத் தமிழ்ப் படம் எந்த உலக சினிமாவிலிருந்து சுடப்பட்டு எடுத்தது என நீங்க முந்தித் தரும் தகவலை facebook-ல் போட்டு அழகு பார்க்கும் பலரில் நானும் ஒருவன்...
தலைப்பிலயே 18+ என போட்டு உசுப்பேத்தி எப்படியாவது உங்கள் விமர்சனத்தை வாசகர்களை படிக்க வைக்க நீங்கள் படும் பாட்டை அறிந்தவர்களில் நானும் ஒருவன்...
ஹிட்ச்காக், கிம்கிடுக், டொராண்டினோ, அகிரா, ச.ரே தவிர வேறு எந்த மயிராண்டியும் டைரக்டரே அல்ல என நீங்கள் பொங்கும் போது புல்லரித்தவர்களில் நானும் ஒருவன்...
இதுபோக அவ்வப்போது உலக இசை மற்றும் நடனங்களை நீங்கள் விமர்சிக்கும் அழகை ரசித்தவர்களில் நானும் ஒருவன்...


உங்களிடம் கோடான கோடி வாசகர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளும் ஒரே கோரிக்கை என்னன்னா...
தயவு செய்து, விமர்சனத்தை தட்டச்சு செய்து வாசிப்பிற்காக மட்டும் வெளியிடுங்கள்...
மூஞ்சிக்கு நேரா கேமராவை வைத்து உங்க விமரசனத்தை வீடியோவாக வெளியிடாதீர்கள்...
முடியல...
தப்பா எடுத்துக்கலன்னா ஒன்னே ஒன்னு கடைசியா சொல்லிக்கிறேன்..., நீங்க அதுக்கு சரிப்பட்டு வரல...!!!

Cheers...!!!
மலர்வண்ணன்
19 comments :

 1. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்...?

  வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்...?

  ReplyDelete
  Replies
  1. இதுல ஏதும் உள்குத்து இருக்கா DD?!

   Delete
 2. இப்ப ஆங்கிலப் படங்கள் தமிழில் வசனத்துடன் வெளி வருகிறதா?
  இப்ப sub titles எல்லாம் போடுகிறார்கள் இந்தியாவில் என்கிறார்கள். இது உண்மையா?

  ReplyDelete
 3. Replies
  1. முடியாமத்தான் இந்த முடிவுக்கு வந்தேன்...

   Delete
 4. நீங்க இதையே ஒரு பெரிய பின்னூட்டமாக அவர் தளத்திலேயே எழுதி இருக்கலாம். அப்படி செய்திருந்தால் பின்னூட்டம் மாடரேஷன் கடந்து வந்து இருக்காதுனு சொன்னாலும், உங்க மெசேஜ் அவருக்கு கிடைத்து இருக்கும்.

  அவருக்கு காதலிகள் எல்லாம் ரொம்ப அதிகமாக இருந்தாங்கணு அவரே சொல்லி நான் வாசிச்சு இருக்கேன். அதனால அவருக்கு அவர் மேல் கொஞ்சம் "உயர்ந்த மதிப்பாக" இருக்கலாம். "பிடிக்கலைனா நீங்க ஒதுங்கிப்போயிட வேண்டியதுதானே? என் வீடியோவைப்பார்த்து ந்றையப் பெண்கள் மாஸ்டர் பேட் பண்ணுறாங்கனு அவர் சொன்னா நீங்க எப்படி இல்லைனு சொல்ல முடியும்னு எனக்குத்தெரியலை. :)) நீங்க ஸ்ட்ரைட்டா இருக்கனால அவர் அழகு/கவர்ச்சியெல்லாம் பெண்களுக்குத்தான் புரியும்னுகூட அவர் ஜஸ்டிஃபை பண்ணலாம்.

  இந்தக் கோணங்களிலும் நீங்க கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க.. :)

  ReplyDelete
  Replies
  1. எப்படி கோர்த்து வுட்டீங்க பாருங்க...!!
   //என் வீடியோவைப்பார்த்து ந்றையப் பெண்கள்// - இந்தளவுக்கு surreal-ஆ??
   நாங்க பொத்தாம் பொதுவாத் தான் சொன்னோம்..!!
   பின் விளைவுகளுக்கு கம்பேனி எந்த விதத்திலும் பொறுப்பேற்காது.

   Delete
 5. ஹஹஹ்ஹ நல்லா சொல்லிப்புட்டீங்கப்பு!

  ReplyDelete
  Replies
  1. ஓ.... நீங்களும் நம்மாளுதானா...!!

   Delete
 6. நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்களோ தெரியவில்லை. ஆனாலும் இதைச் செய் அதைச் செய்யாதே எனக் கூறும் அதிகாரம் இந்த இணைய வெளியில் பதிவுலகில் உண்டா? பிடிக்கவில்லையா? ஒதுங்கி விடலாம்.
  அல்லது அவருக்கே பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். உங்களைக் கூட இதைச் செய் என்று கூற எனக்கு அதிகாரமில்லை அதனால் பின்னூட்டத்தில் இடுகிறேன். இனி உங்கள் எண்ணம் போல்.

  ReplyDelete
  Replies
  1. பலபேரு வந்துபோற இடம்ங்க, ஒதுங்கியெல்லாம் போக முடியுமான்னு தெரியல...
   நம்ம அதிகாரம் எல்லாம் பண்ணலியே, வேண்டுகோள் தானே விடுத்திருக்கோம்...
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி யோகன்..

   Delete
 7. இங்கு வரம்புக்கு உட்பட்டு எதையும் எழுத யாருக்கும் உரினையுண்டு .படம் போடவேண்டாம் என்று எழுத உங்களுக்கு உரிமை உண்டு .அதேபோல படம் போட அவருக்கு உரிமை உண்டு .வாசிப்பதற்கோ படிப்பதற்கோ ஆசைப்படுபவர்கள் அந்த அந்த தளங்களுக்கு செல்லலாம் .இது எனது கருத்து .உங்கள் வேண்டுதலும் ஏற்றுக் கொள்ள தக்கதே /

  ReplyDelete
  Replies
  1. இது ஒரு spoof-க்காக எழுதியதுங்க..., serious-ஆ எடுத்துக்க எதுவுமே இல்ல.., வரம்பு, உரிமை, சுதந்திரம் போன்ற வார்த்தைகள் எல்லாம் கொஞ்சம் too much..., நான் யாரை யாரை குறிப்பிட்டு எழுதியுக்கிறேனோ அனைவரிடமும் நட்புடனேயும் அவர்களின் ரசிகனாகவும் இருக்கிறேன்..
   நன்றி...

   Delete
 8. வாசிப்பதற்கோ அல்லது பார்பதற்கோ என்று வரவேண்டும்

  ReplyDelete