Thursday 14 January 2016

தாரை தப்பட்டை - அடிச்சு பிரிச்சாச்சு...

நீங்க ஜல்லிக்கட்ட நடத்துங்க இல்ல நாசமா போங்க... ஒன்னுக்கு நூறு ஜல்லிக்கட்டு பாத்தாச்சு... வரலட்சுமியோட தாரை தப்பட்டை ஆட்டம் தான்...!! யப்பா என்னா ஆட்டம்டா...!! அதுவும் ஆடும் போது ஏறிய மேலாடையை தோரணையாக இறக்கி விட்டு அடுத்த குத்தை ஆரம்பிப்பது... அப்பப்பா...!! கூட ஆடுன மத்தவங்களையும் சும்மா சொல்லக் கூடாது, ச்சும்மா பிச்சு உதறிட்டாங்க..., பொங்கல் போனஸ்சா காயத்ரி ரகுராமோட கலகலப்பான ஒப்பாரி ஆட்டம்...!!

GMகுமார் தவில் வாசிப்புக் காட்சியிலிருந்து ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜாங்கம் இன்னுமொரு ஆயிரம் படத்துக்கு தாங்கும். சன்னாசி, சூறாவளிக்கு மேக்அப் போடும்போது "ஆட்டக்காரி மாமன் பொண்ணு" பாடலை instrumental bgm-மாக வருவதாகட்டும், இடிந்த கட்டிடத்தினுள் இருந்து ஆட்ட கோஷ்டி வெளியே வருவதாகட்டும், பின்னணி-முன்னணி...!! climax சண்டைக் காட்சிக்கு தாரை தப்பட்டை theme இசையை கோர்த்த அந்த 5 நிமிடம் அகோர தாண்டவத்தின் உச்சம்...!!

"ஆட்டக்காரி மாமன் பொண்ணு..." பாடல் படத்தில் இல்லாதது ஏமாற்றம். அமுதவாணன் தங்கை கேரக்டருடன் பாடும் பாடல் ஆடியோ ரிலீசில் இல்லாதது மகிழ்ச்சி, beep பாடலே கிட்ட நிக்க முடியாது. விஜய் சூர்யா ரஜினி கமல் அஜித் என அனைவரையும் ரவுண்டு கட்டி அடித்த அடி, ஐயோ..!! குறிப்பா "ஒன்னார்ரூவா ப்ளேடு வாங்கி செரச்சு வெச்சிருக்கேன்...", "சோடா, சோடா இவன் குண்டு இல்லாத சோடா...", "பொதுவாக எம்மனசு தங்கம் ஒரு பொம்பளைய பாத்துப்புட்டா தொங்கும்..."

கலாசார காவலர்கள், மாதர் சங்கங்கள் மீண்டும் ஒரு ரவுண்டு வர வாய்ப்பிருக்கு...!! ஆனா இணைய அறச்சீற்ற நட்புறவுகள நெனச்சா தான் டரியலா இருக்கு. அதுவும் குறிப்பா பாலா-இளையராஜவ புடிக்காதவங்களுக்கு ஒரு வாரத்துக்கு புர்ர்ச்சி பண்ணி போராடுற அளவுக்கு மேட்டர் இருக்கு. மீண்டும் "அறிவிருக்கா..."ன்னு ஆரம்பிச்சு கும்மியடிக்கலாம்.

படத்துல கஞ்சா அடிக்கிற சீன் இல்லாம பாலாவுக்கு படம் எடுக்க வராது போல...!!

பக்காவான பாலா டெம்ப்ளேட் படம்... விளிம்பு நிலை மனிதர்கள், கொடூர வில்லன், அவனுடைய அதிகொடூரமான சாவு.., etc, etc..
கர்ப்பிணிகள் குழந்தை பிறக்கும் வரை இப்படத்தை பார்க்க வேண்டாம், 18 வயசுக்கு கீழுள்ளவர்கள் வயசுக்கு வர வரைக்கும் வெயிட் பண்ணி பார்க்கலாம்.


தாரை தப்பட்டை - அடிச்சு பிரிச்சாச்சு...

10 comments :

  1. AVOID THIS FILM OBSCENE DANCES AND SONGS

    ReplyDelete
  2. தனியாகத் தான் போகணும் போல... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. ஓ... வீட்ல விசேஷமா?! வாழ்த்துக்கள்...

      Delete
  3. என் பதிவில் மலர் இட்ட பின்னூடமும்--அதுக்கு என் பதிலும். யாராக இருந்தாலும்---சிஷ்யனாகவோ, குருவாகவோ, நண்பனாகவோ அல்லது எதிரியாக இருந்தாலும்--அவர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். நான் கொடுப்பேன்...கருத்து சுதந்திரம் இல்லாவிட்டால் நாம் எல்லாம் புழு பூச்சிகள்--அதாவது இப்ப தமிழ்நாட்டில் வாழும் மக்கள்--என் பெற்றோர்கள் உள்பட!

    என் சமீபத்திய பதிவில் என் சிஷ்யனின் அறிவு பூர்வமான பதில்...கீழே...
    ____________________________
    மலரின் நினைவுகள்January 15, 2016 at 5:21 AM
    அரைகுறையா விஷயத்தை தெரிஞ்சுகிட்டு அடிச்சு விடாதீங்க தல...
    அந்த பாட்டு ஆடியோ cd ல இடம் பெறல,
    திருவிழாக் கூட்டங்களில் பாடப் படும் கி.ரா. வகை ரெட்டை அர்த்தப் பாடல் அது...

    சில வரிகள்:
    பெண்: "சரக்கு வெச்சிருக்கேன், எறக்கி வெச்சுருக்கேன், கறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வெச்சிருக்கேன்..."
    ஆண்: "________ ________ _________ ஒன்னாரூவா ப்ளேடு வாங்கி செரச்சு வெச்சிருக்கேன்..."
    பெண்: "உங்கூர்ல கோழிய ப்ளேடு வெச்சு தான் செரப்பீங்களா..?"

    ஆண்: "டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா... _______ _______ _______
    பெண்: "சோடா.. சோடா... இவன் குண்டு இல்லாத சோடா.... _______ ______

    ஆண்: "பொதுவாக எம்மனசு தங்கம், ஒரு பொம்பளைய பாத்தாக்க தொங்கும்...!!

    இதுபோல அந்த பாட்டு முழுசும் வரும். சிச்சுவேஷனும் அதுக்கேத்தா மாதிரி தான் இருக்கும். கிராமத்து சிறுசு பெரிசு பொண்டு பொடிசுகள் அனைவரும் கை தட்டி என்ஜாய் பண்ணுவது போல..!!

    இளையராஜாவுக்கு நிச்சயமாக தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கும், 1000வது படம் வேற?!

    உடனே "நேத்து ராத்திரி..., நிலா காயுது..., ஆப்பக்கட அன்னக்கிளி... பலானது ஓடத்து மேல..."ன்னு அவரு அடிக்கலயான்னு தயவு செய்து defend பண்ணாதீங்க... இது எவன் கெளப்பி விட்டதுன்னு தெரியல...
    ___________________________________
    நம்பள்கிJanuary 15, 2016 at 6:34 AM
    அம்பி! அடிச்சு விடலை!
    ஒரு பதிவில் வந்த செய்தி. லிங்க் கூட கொடுத்து இருக்கேன்.
    please, fill in the blanks' இல்லை, I maybe forced to fill in the blanks mmyself!

    [[[ஆண்: "பொதுவாக எம்மனசு தங்கம், ஒரு பொம்பளைய பாத்தாக்க தொங்கும்...!!]]
    பொருள் குற்றம் உள்ளது புலவரே! தொங்கும் சரியானா வார்த்தை இல்லை. புரிஞ்சா சரி!

    நான் இளையராஜாவின் இசையை மதிப்பவன். சினிமா பாட்டு என்பது திருக்குறள் அல்ல. மேலும், சென்சார் செய்த பாட்டு. கி,ரா. வின் சிஷ்யன் அதுக்கு எல்லாம் கோபப்படமாட்டான். ஆனா, குச்சி மூலம் காஞ்சி மடத்தலிவர் மூலம் கொடுத்த பன்னாடையை வாங்கிக்கொண்டது என்னைப் பொருத்தவரை மன்னிக்க முடியாதா குற்றம். இளையராஜா என்ற மேதை எங்கே. அந்த ஆள் எங்கே? அசிங்கம்! அவமானம். அப்படி என்ன அந்த பொன்னாடையை குச்சி மூலம் அந்த ஆள் போடுவது. இது இளையராஜ்வின் தகுதிக்கு போடும் பொன்னாடையா அல்லது ஜாதி அவமானமா?

    ReplyDelete
    Replies
    1. //குச்சி மூலம் காஞ்சி மடத்தலிவர் மூலம் கொடுத்த பன்னாடையை வாங்கிக்கொண்டது என்னைப் பொருத்தவரை மன்னிக்க முடியாதா குற்றம். இளையராஜா என்ற மேதை எங்கே. அந்த ஆள் எங்கே? அசிங்கம்! அவமானம்.//
      - 100% இதில் உங்களுடன் ஒத்துப் போகிறேன்... வெட்கக் கேடு தான்... ஆனா இந்த பதிவுக்கு சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியல...

      Delete
  4. வணக்கம்
    தங்கள்சொல்லிய விமர்சனம் சிறப்பு வாழ்த்துக்கள்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்
      பொங்கல் வாழ்த்துக்கள்

      Delete
  5. தாரை தப்பட்டை அப்படியா??!! எங்க ஊருக்கு வந்தா பார்க்கறேன்...வருமானு தெரியல..

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா...
      உங்க ஊருக்கு வர்றது கொஞ்சம் டவுட் தான்...!!

      Delete