Wednesday, 20 January 2016

இவனுங்களை என்ன பண்ணலாம்..!?


செவாலியே சூப்பர்ஸ்டார் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி விஜய் ஆண்டனி நடிப்பில்(!) வெளிவர இருக்கும் "பிச்சைக்காரன்" (பிச்சகாரனுக்கு செக்குருட்டி பிச்சகாரனேவா... யுனிபார்ம் பிரமாதம்) படத்தில் "பாழாப் போன ஒலகத்துல.."ன்னு ஒரு சமுதாய சீர்திருத்த தத்துவப் பாடல்.  முழுசா கேட்டிங்கனாக்க அம்புட்டையும் அவுத்துப் போட்டு (பாட்டோட பேரு க்ளாமர் சாங்) பரமண்டலத்தில் இருக்கும் பிதாவேன்னு பாவமன்னிப்பு கேட்க ஓடுவீங்க... அப்படியொரு உணர்வைக் கொடுக்கும்.

கவுஜய எழுதின லோகனோ, எவனோ அதுல என்ன சொல்றாருன்னா...

"கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுறான்...
தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்..."

தப்பு தப்பான்னா..., கவிஞருக்கு ஏதோ கோட்டா டாக்டர் ஊசிய பின்னாடி போடுறதுக்கு பதிலா முன்னாடி போட்டுட்டாரோ என்னமோ?

கோட்டாவுல சீட்டு வாங்கின சூத்திர டாக்டராவே இருந்தாலும் அவரு சுயமா படிச்சு பாஸ் பண்ணாத்தான் டாக்டராகி  கிளினிக் வெச்சு நடத்த முடியும்.  பாஸ் பண்றதுக்கெல்லாம் கோட்டா கிடையாது.   என்னவோ கோட்டாவுல சீட்டு வாங்கினவன் எல்லோரும் MBBS பெயிலாகி போலி டாக்டரா சுத்திட்டு இருக்க மாதிரியில்ல இருக்கு இவனுங்க சொல்ற தத்துவம்..!!

Quotaன்னாலே அறிவற்றவன், தகுதியற்றவன், திறமையற்றவன் பெரிய பதவிகளில் உட்காரப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரம் என நன்கு படித்த அரிப்புஜீவிகள் அப்பப்போ கொந்தளித்து அடங்குவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.  அவர்களின் பார்வைக்காக 2012-ம் ஆண்டின் cut-off லிஸ்ட் இதோ...
இந்த லிஸ்ட்ல தகுதியற்றவனோ, திறமையற்றவனோ இருக்கிறா மாதிரி என் மனசுக்குத் தெரியல.  அப்படியே இருந்தாலும் அவனுடைய பின்புலத்தை ஆராய்ந்தால் முதல் அல்லது இரண்டாவது தலைமுறையில் படித்தவனாக இருப்பான்.

வாச்சாத்தி, மேலவளவு, தின்னியம், கீழ்வெண்மணி, உத்தப்புரம், இளவரசன் இதுக்கெல்லாம் சற்றும் குறைவில்லாத வன்முறை சம்பவம் ரோஹித்வெமுளாவின் மரணம்...  பலரும் இச் சம்பவம் பற்றி பலதும் எழுதிக் கொண்டிருந்தாலும் ஒரு படம் முழுக்கதையையும் சொல்லிவிட்டது.
இம் மரணத்திலும் ஓர் அரிப்புஜீவி செய்த வேலை என்னன்னா, "தற்கொலை செய்து கொண்ட ரோஹித் ஒரு தலித்தே இல்லை. அவர் பிறப்பு சான்றிதழை செக் செய்து பார்த்ததில் அவர் ஆந்திரால ஓபிசி தான். அவர் தலித் என்று போடுவதற்கு முன்னால் அது உண்மைதானா என்று உறுதி செய்யுங்கள் " என்று facebook-ல் உளறிக் கொட்டியது பானு கோம்ஸ் என்ற கால் வேக்காடு!!  "இட ஒதுக்கீட்ல படிச்ச டாக்டர் கிட்ட ஊசி போட்டுக்க மாட்டேன்.."ன்னு சொன்ன அதே RSS மங்கையர்த் திலகம் தான் அது.
சாதிச் சான்றிதழுக்கும் பிறப்பு சான்றிதழுக்கும் கூட வித்தியாசம் தெரியாம அவசர அவசரமா வன்மத்தைக் கொட்டிய அந்த சம்முவ ஆர்வலர ஆளாளுக்கு கழுவி ஊத்த ஆரம்பிக்க கமுக்கமா போஸ்ட்ட டெலிட் பண்ணிட்டு பம்மிடுச்சு...

பொதுவாக ஒருவர் மீது தோன்றும் வெறுப்பில் அவரின் சொந்தங்களை வசைபாடுவதை முடிந்தவரை ஒரு போதும் செய்வதில்லை. ஆனா இப்படி ஒரு செய்தியை வெளியிட்ட ஒரு பொறம்போக்கை குலதெய்வம் வரை இழுத்து திட்டணும் போல இருக்கு...
பாலா-ராஜாவை விமர்சித்ததற்காக அல்ல...  என்னமோ சமுதாயத்தையே காப்பாத்துற பெரிய யோக்கிய beep மாதிரி,  நியூஸ் போடுற beep son அதுக்கு வரலட்சுமியோட தொப்புள் தெரியும் இடையை என்ன beepக்கு வெளியிடணும்!?

சமீபத்துல கொஞ்ச நாளா whatsapp ல சுத்திட்டு இருக்க கோமாதா சம்மந்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியின் அதிர்ச்சிகர  முடிவுகள்:

நொய்யில ஆக்சிஜன் வர்றது, மழை கொட்டுறது கூட பொறுத்துக்கலாம்...,
ஆக்ஸிஜன சுவாசித்து ஆக்சிஜனையே வெளிய வுடுற கண்டுபிடிப்ப கூட தாங்கிக்கலாம்...,
ஆனா, கழுத்துல விஷத்த அடக்கி வெச்சுக்கிதுன்னு நாசா காரனே சொல்லிட்டான்னு விட்டான் பாரு...!! டேய்...!!


இந்த நாதாரிகளை என்ன பண்ணலாம்?!

---------

 

15 comments :

 1. இ்வனுங்க மூஞ்சீயில கோமாதா சாணத்த கரை்ச்சு ஊத்தலாம....
  கடடூரைய இன்னும் கொஞ்சம் நீட்டியிருக்கலாம் அண்ணா...படிக்க ஆரம்பித்தவுடன் முடிந்து விடுகிறது...

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு மேல வளர்த்தா கெட்ட கெட்ட வார்த்தையா வந்து விழுது ஜானி...
   அதான், அளவா முடிச்சாச்சு...

   Delete
 2. எததனை முறை நீங்கள் எழுதினாலும் பத்திரிகைகள் கோட்டா என்று நக்கல் செய்யும். அதே பிராமணன் தனியார் மருத்துவ கல்லூரியில் குறைந்த மார்க் வாங்கிப் படித்தாலும்-அறிவு தானாக ஊற்றுப் பெருக்கெடுக்கும்.

  MMC-ல் ST-ல் 199.75/200 முட்டாளா? எண்டா பொய் சொன்னாலும் பொருந்த சொல்லணும். நானும் இதைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்,

  எவ்வளவு தடவை நாம் உண்மைய சொன்னாலும், பத்திர்கைகள் பொய் சொல்லிக்கொண்டே இருக்கும்..அதுக்கு சூத்திரப்பயல்கள் (பிராமணர் அல்லாத எல்லோரும்) பேஷா ஒத்து ஊதுவாங்க!

  எத்தனை தடவை உண்மை எழுதினாலும் (ஆதாரத்துடன்) எப்ப எப்ப முடியுமோ அப்ப ராஜாஜி தான் மது விலக்கை கொண்டுவந்தார்கள் என்று புளுகுவார்கள். அவர்கள் ஆயிரம் தடவை புளுகுவார்கள்--எழுதுவார்கள்--அதை எதிர்த்து ஒரு சூதிர்ப்பபய பேசமாட்டேன்--ஆனால், நாம் உண்மையை இரண்டு மூன்று தடவை எழுதினாலும் (ராஜாஜி ஒரு டூப் மாஸ்டர் என்று} நம்மை இவர்கள் அரைத்த மாவையே அரைக்கிறான் என்று அவாளுடன் சேர்ந்து கும்மி அடிப்பார்கள்.

  நம்மளிடம் வாதாட முடியவில்லை என்றால், "உன்னோட எவன் பேசுவான்? போய் பிள்ளை குட்டிங்களை படிக்கவையுங்க, உங்களுக்கு மனநோய் உள்ளது (பெரிய F.R.C.P (psychiatry), இல்லை கடவுள் செக்ரெட்டரி மாதிரி பேசுவானுங்க! பார்ப்பானைக் கூட விட்டுவலாம்...எங்காட்கள் ஊதர ஒத்து இருக்கே அப்பா சாமி---எல்லாமே ஹிட்லரின் Goebbels கும்பல்!

  இவனுங்க கோவிலில் பஜனை செய்பவர்கள் (கருவறைக்கு வெளியே செய்யும் பஜனையும், கருவறையில் செய்யும் பஜனையும் {ஹி! ஹி!! புரிந்தா சரி!} மட்டும் தான் நல்ல மனநிலை உள்ள்ளவர்கள் செய்யும் காரியம்!

  ReplyDelete
  Replies
  1. விட்டா கல்லறையிலும் பஜனை செய்வார்கள்...!!

   Delete
 3. அறிவியல் ஆராய்ச்சியின் தகவல்களுக்கு நன்றி...

  ReplyDelete
 4. //பார்ப்பானைக் கூட விட்டுவலாம்...எங்காட்கள் ஊதர ஒத்து இருக்கே அப்பா சாமி//

  அதேதான். இந்த சூத்திரப் பாப்பானுக போடுற ஜால்ரா இருக்கே. அந்த அளவுக்கு மெரிட் முக்கியம் என்றால் தனியார் கல்லூரியில் காசு கொடுத்து படிக்க மாட்டோம் அதை மூடுங்கள் என்று போராட்டம் நடத்த வருவார்களா?

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய நண்பர்களிலே சிலர் நீங்க சொன்னாப்ல சூ.பா. வகை தான்..., அவங்க வீட்ல பண்ற அக்குரும்பு இருக்கே... அய்யய்யோ!!, சைவம், அமாச, கிருத்திக, பிரதோசம், ஒருபொழுது, மாலை, மயிரு, மட்டைன்னு அசல் பாப்பான் தோத்தான்... இதுல அப்பப்போ அக்ரஹார பாஷையில பேசுவானுவ...

   Delete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. [[மாநில அளவில் எஸ்ஸி மற்றும் பிராமணர்களைத் தவிர கிட்டத்தட்ட அனைவரையுமே, வேறுவேறு பெயர்களில் MBC பட்டியலில் கலைஞர் கருணாநிதி, கொண்டு வந்து விட்டார்]]]

  தமிழ் இளங்கோ:
  உங்கள் தகவல் சரியல்ல! F.C-ல், பிரமணர்களுக்கு I.A.S தயவால் தமிழக அரசில் வேலை கிடைக்கும்---- F.C-ல் எங்களுக்கு முழு ஆப்பு தான்--தமிழக அரசில் என் பிராமன நண்பர்கள் பலருக்கு வேலை கிடைதுல்ள்ளது--அப்ப எங்களுக்கு? ஆப்பு தான்! ஒரு பத்து குடும்பம் தவிர எங்களில் எல்லோரும் வெவ்வேறு நாடுகளுக்கு புலம் பெயர்ந்து விட்டனர்.

  தனியாரில் தலைமைப் பதவி ஐயனுக்கு; அவன் எங்களை வேலைக்கு எடுத்தால் அவனுக்கு அறிவில் வேலையில் ஆப்பு அடிப்போம் என்று அவனும் எங்களை தேர்வு செய்யமாட்டான்---பயம் தான் காரணம்.

  உண்மையான திரிசங்கு சொர்க்கம் எங்க ஆட்களுக்குத்தான்! இந்தியாவில் எங்கும் எங்கள் மாதிரி F.C--க்கு வேலை கிடைக்காது! இட ஒதுக்கீடு தவறு என்று நினைக்கும் போலி கும்பல் எங்களுடையது!

  ReplyDelete
 7. கேக்குறவன் கேனையன்னா கேப்பையிலும் நெய்வடியும்னு, ஒரு பழமொழி சொல்வாங்க. அந்த மாதிரி படிக்குறவன் எல்லாம் கேனையனுங்க என நினைச்சுதான் இந்த மாதிரி வதந்திகள் உருவாக்கப்படுது.

  ReplyDelete
  Replies
  1. வதந்திகள் என்பதை விட இது ஒரு வகையான bluntly ன்னும் சொல்லலாம். திரும்ப திரும்ப நசுக்கி நசுக்கி மழுங்கடித்தல்.

   Delete
 8. தி.தமிழ் இளங்கோ
  //மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் இட ஒதுக்கீடு என்பது ஒரு குறிப்பிட்ட சிலபேருக்கு மட்டுமே கொடுப்பது போலத் தோன்றினாலும், உண்மையில் இந்தியாவில் இப்போது எல்லா ஜாதியினருக்குமே ரிசர்வேஷன் எனப்படும் கோட்டா வழங்கப்பட்டு வருகிறது. SC (15%) ST (7.5%) BC, MBC (27.5%) போக மீதி உள்ள 50% ரிசர்வேஷன் என்பது மற்றவர்களுக்கான ’கோட்டா’ ஆகும். இதில் பிராமணர்களும் அடக்கம்.
  MBC மற்றும் SC என்ற இரண்டுக்கும் சலுகைகள் ஒரே மாதிரிதான் இருக்கின்றன. மாநில அளவில் எஸ்ஸி மற்றும் பிராமணர்களைத் தவிர கிட்டத்தட்ட அனைவரையுமே, வேறுவேறு பெயர்களில் MBC பட்டியலில் கலைஞர் கருணாநிதி, கொண்டு வந்து விட்டார்.//

  மன்னிக்க தி.தமிழ் இளங்கோ, உங்கள் comment தவறுதலாக நீக்கப் பட்டு விட்டது...

  சைவப்பிள்ளை, கோமுட்டிசெட்டி, ஆரியவைசியர் உள்ளிட்ட பலதும் இன்னும் F.C யில் தான் உள்ளது

  ReplyDelete
 9. ஐயகோ ... நெய்யை நெருப்பில் போட்டால் ஆக்சிஜன் வரும் என்ற உண்மையை அறியாமல் இதனை நாள் அதை சாம்பார் சாதத்தில் போட்டு ஸ்வாஹா செய்து விட்டேனே . ஒ ஜோன் ஒட்டிக்கும் நானே காரணமாகிவிட்டேனே .. ஐயகோ .. ஐயகோ...

  ReplyDelete
  Replies
  1. தங்கத்துல ஒரு பசுவ செஞ்சு தானமா அவாளுக்கு கொடுத்தேள்ன்னா பாவத்தையும் தொலைச்சிண்டுடலாம், ஆக்சிஜனையும் மீட்டுண்டலாம்!!

   Delete