Monday, 6 June 2016

கொங்குநாட்டு என்'கவுன்டர்' ஏகாம்பரங்கள்...

தேர்தல் முடிந்து சீமானையும், வைகோவையும், கேப்டனையும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ ஓட்டி facebook, twitter, insta, extra மற்றும் இன்னபிற வலைதள ஒறவுகள் சற்றே இளைப்பாறி அடுத்த இரைக்காக காத்திருந்த அந்த அற்புத தருணத்தில் தானாகவே வந்து சிக்கின கொங்குநாட்டு ஒறவுகள்.

சாம்பிள் 1:
வெண்ணீராடை மூர்த்தி சொல்றாப்பல "பாத்த உடனேயே சும்மா குபீர்னு கெளப்பிக்கிட்டு வரும்"..... சிரிப்பு...!!
அதுவும் ஒரு கரீபியனை ஊரு, கிராமம், சாதி உட்பிரிவு முதற்கொண்டு போட்ட இந்த பூகோள புல்பாயில ஏதோ போனா போகுதுன்னு மூத்திர சந்துல வெச்சு ஒரு முப்பது பேரு மூணு நாளு மட்டும் வெச்சிருந்து அடிச்சிட்டு விட்டுட்டாங்க...  ஆனா அது எவ்ளோ பெரிய தப்புன்னு அப்புறந்தான் தெரிஞ்சது...

சாம்பிள்:2
வள்ளல் வம்சம்ன்றதக் கூட ஏதோ காட்டை வித்து கள்ளு குடிச்ச பரம்பரைன்னு பெருமையா சொல்லிக்கிறாங்களேன்னு சோடாவையும் ஜெலுசிலையும் சேத்து சாப்பிட்டு ஜீரணிச்சுக்கலாம்... ஆனா, திருப்பதில சந்திரபாபுநாயுடு லட்டுக்கு பதிலா ஜாங்கிரி குடுத்த கணக்கா, வெள்ளைக்காரனே வங்கியில "counter"ன்னு பேரு வெச்சான்னு வுட்டாங்க பாருங்க...

ஆதலால் ஒறவுகளே..., பரத்வெயிட் மற்றும் வங்கிக் கவுன்ட்டர் வரலாற்று உண்மைகளைத் தொடர்ந்து, கொங்கு மண்டல வருங்கால சந்ததியினருக்கு மேலும் பல சரித்திர ஆராய்ச்சிகளுக்கான குறியீடுகள்...!!

 • counteract - கவுண்டர்கள் நடிப்பில் சிறந்து விளங்கியதால் உருவான சொல்...
 • counterassault - அசால்ட்டாக காட்டை வித்து கள்ளு குடிச்ச கவுண்டன பாத்து சொன்ன வார்த்தை...
 • counterattack - புலியை முறத்தால் தாக்கிய கவுண்டப் பெண்மணியின் வீரம் செறிந்த குறிப்பேடு...
 • counterweight - டமில்நாட்ல எங்க போனாலும் கவுண்டன் தான் வெயிட்டு...
 • counterview - கவுண்டனின் பார்வையில்...!!
 • counterpart - பார்ட் பார்ட்டா வேல பாக்குறது கவுண்டர் மட்டுந்தான்...!!
 •  countercheck - கண்டறியும் கவுண்டர்கள்... 
 • counterfires - தீயா வேலை செய்யும் கவுண்டர்ஸ்...!! 
 • counters - கவுண்டர்கள்... 
 • counterpunch - பஞ்ச் டயலாக் பேச கவுண்டன விட்டா ஆள் கிடையாது...
 • counterplay - சின்னகவுண்டர் பம்பரம் தொடங்கி அனைத்து விளையாட்டிலும் சிறந்தவர்கள் கவுண்டர்களே...!!
 • counterfoil - புல்பாயில், ஆப்பாயில், கவுண்டர்பாயில்  அல்லாத்தையும் கண்டுபுடிச்சது கவுண்டர் தான் கண்ணு...
 • countersign - அந்தா தெரியுது பாரு, அதான் நம்ம கவுண்டரு கைகாட்டி...
 •  counterpose - சுபாஷ் சந்திர போஸ் கவுதாரி குல கவுண்டர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! 
 • counterpoint - ஹி... ஹி....!!


"எம் பேரு ஏகாம்பரம், எனக்கு இன்னொரு பேரு இருக்கு..., என்"கவுன்ட்டர்" ஏகாம்பரம்...!!

இது போன்ற மேலும் பல சுவையான அரிய தகவல்களுக்கு சுட்டவும்  வீரம்டா, மானம்டா, சாதிடா...!!10 comments :

 1. இந்த பதிவில் கவுண்டரா?
  நடக்கட்டும்!
  நல்லது எப்ப நடந்தா என்ன?

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றதப் பாத்தா, நான் வாரம் ஒரு க்ரூப்ப போட்டுத் தாக்குற மாதிரியில்ல இருக்கு...!!

   Delete
 2. "யாருடா மகேஷ்" படம் பார்த்தீங்களா?
  அதே மாதிரி...
  "யாருடா கவுண்டர்" என்று நீங்கள் படம் எடுக்கலாம்! அந்த அளவுக்கு உங்களுக்கு கவுண்டர் பத்திய அறிவு இருக்கு!

  இவ்வளவு தானா? இல்லை இன்னும் வருமா?

  ____________________
  counteract - கவுண்டர்கள் நடிப்பில் சிறந்து விளங்கியதால் உருவான சொல்...
  counterassault - அசால்ட்டாக காட்டை வித்து கள்ளு குடிச்ச கவுண்டன பாத்து சொன்ன வார்த்தை...
  counterattack - புலியை முறத்தால் தாக்கிய கவுண்டப் பெண்மணியின் வீரம் செறிந்த குறிப்பேடு...
  counterweight - டமில்நாட்ல எங்க போனாலும் கவுண்டன் தான் வெயிட்டு...
  counterview - கவுண்டனின் பார்வையில்...!!
  counterpart - பார்ட் பார்ட்டா வேல பாக்குறது கவுண்டர் மட்டுந்தான்...!!
  countercheck - கண்டறியும் கவுண்டர்கள்...
  counterfires - தீயா வேலை செய்யும் கவுண்டர்ஸ்...!!
  counters - கவுண்டர்கள்...
  counterpunch - பஞ்ச் டயலாக் பேச கவுண்டன விட்டா ஆள் கிடையாது...
  counterplay - சின்னகவுண்டர் பம்பரம் தொடங்கி அனைத்து விளையாட்டிலும் சிறந்தவர்கள் கவுண்டர்களே...!!
  counterfoil - புல்பாயில், ஆப்பாயில், கவுண்டர்பாயில் அல்லாத்தையும் கண்டுபுடிச்சது கவுண்டர் தான் கண்ணு...
  countersign - அந்தா தெரியுது பாரு, அதான் நம்ம கவுண்டரு கைகாட்டி...
  counterpose - சுபாஷ் சந்திர போஸ் கவுதாரி குல கவுண்டர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?!
  counterpoint - ஹி... ஹி....!!

  ReplyDelete
  Replies
  1. உங்க அளவுக்கு இல்ல தல,
   இருந்தாலும் இன்னும் வரும்..., ஏகப்பட்ட சாதிக கெடக்குல்ல...!!

   Delete

 3. நீங்கள் கவுண்டரை என்கவுண்டர்ல போட்டு தாக்கிட்டீங்க போல


  அருமை

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு நீங்க என்னை டைரக்டாவே சிரிப்பு போலீஸ்ன்னு சொல்லியிருக்கலாம் தமிழா

   Delete
 4. இது counter terrorism மா இல்ல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நமக்கு வன்முறைன்னா அலர்ஜிங்கோவ்...!!

   Delete
 5. மக்கள் இப்படியெல்லாமா ஃபேஸ்புக்குல போடுறாங்க....என்ன உலகமப்பா இது..டெக்னாலஜி வளர வளர என்னவோ உலகம் சுருங்குதுனு ல சொல்றாங்க..ஆனா அப்படித் தெரியலையே சாதி விரியுது போல இருக்கே

  ReplyDelete
  Replies
  1. சாதி என்னமோ அப்படியேதாங்க இருக்கு...
   சாதி வெறிதான் பரந்து விரிஞ்சுட்டே போகுது...

   Delete