Saturday 25 June 2016

தூங்கிப் போன சென்சார் தம்பி

"விபச்சார விளம்பரம் வந்தால் வியப்படையாதீர்" என சமீபத்தில் முத்துநிலவன் அவர்கள் எழுதிய பதிவில் நண்பர் விசு இட்ட மறுமொழியும், நம்பள்கி தளத்தில் அவ்வப் போது தொடர்ந்து வரும் இந்திய கலாச்சார பதிவுகளும் முன்னுரையாக...

சமீபத்துல கூட Udta Punjab படத்துக்கு சென்சார் ஏகப்பட்ட கெடுபிடி விதிச்சு அங்க வெட்டு, இங்க வெட்டுன்னு அறிவுறுத்த, கோர்ட்-லியோ "ரேட்டிங் கொடுக்கிறது மட்டுந்தான் உன் வேலை, வெட்டு-குத்து எல்லாம் நாங்க பாத்துக்குறோம்"ன்னு தீர்ப்பளித்து ஒரு வழியா படம் வெளிய வந்துடுச்சு.  படத்தையும் பாத்தாச்சு.   படத்தில் சகட்டுமேனிக்கு வரும் கெட்ட வார்த்தைகளுக்காகவும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் போதை மருந்து உட்கொள்வதை காட்டியதற்காகவும் "A" ரேட்டிங் கொடுக்கப் பட்டிருக்கலாம்.  ஆம்... 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு இப்படம் உகந்ததல்ல தான்.

இதே சென்சார் போர்டுதான் 1983-ல தூங்காதே தம்பி தூங்காதே-ன்னு ஒரு படத்த குழந்தை முதல் குடுகுடு கிழவி வரை அனைவரும் குடும்பத்துடன் கண்டு களிக்கலாம் என அனுமதி கொடுத்துள்ளது.  படத்தில் "சும்மா நிக்காதீங்க, நான் சொல்லும் படி வெக்காதீங்க..."ன்னு நீளமான ஆழமான கருத்துள்ள ஒரு பாடல்.  முதல்ல அதை ஒரு தபா நல்லா பாத்துருவோம்.
பாட்டுல நாயகனும் நாயகியும் குடுக்கிற மூவ்மென்ட், 'மானாட மயிலாட' 'சோடி நம்பரு' எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுருச்சு..., அதுலயும் குறிப்பா ஒளிஞ்சிருந்து பாக்கும் நாயகியின் தோழிகள் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்வது கலாச்சரத்தின் உச்சம்.

அப்போ சினிமா தியேட்டருக்கு போய் தான் இந்த குடும்ப நாட்டியத்தை பார்த்து பரவச நிலையை அடைய வேண்டிய சூழல் இருந்தது.  ஆனா இப்போ அப்பப்போ ஏதாவதொரு ம்யூசிக் சேன்னல்ல அடிக்கடி போட்டுறாங்க, அதுவும் மிட்நைட் மசாலாவுல எல்லாம் இல்லாம நினைச்ச நேரத்துல ஓட்டி விடுறாங்க... அனைத்தும் சென்சார் அனுமதியுடன்...

இவங்கதான் Udta Punjab-ம், ஆரண்ய காண்டமும், புதுப்பேட்டையும் சமூகச் சீரழிவை தூக்கிப் பிடிக்கின்றனன்னு, வெட்டுக்களும், 'A" ரேட்டிங்கும் தருகிறவர்கள்.

சிறுவயதில் "ராணி"யோ, "குங்கும"மோ ஏதோவொரு பத்திரிக்கையில் நடிகை ஸ்ரீப்ரியாவின் ஒரு பேட்டியை படித்த போது அதிலொரு கேள்வி,
"ஐரோப்பாவில் உங்களை வெட்கப் பட வைத்த விஷயம்?"
அவரின் பதில், "தெருவில் முத்தமிடுவது...!!"
ம்ஹ்ம்... வெள்ளைக்காரன் இந்தப் பாட்ட பாத்திருந்தான்னா நம்மாளுகளுக்கு விஸா குடுக்கிறதுக்கு ரொம்ப யோசித்திருப்பான்...!!  பின்ன பட்டப்பகல்ல சின்ன புள்ளைங்க வந்து போற பார்க்குல ஜலபுலஜன்க்ஸ் பண்றவங்க நம்மூருக்கு வந்தா நம்ம கலாச்சாரம் என்ன ஆகித் தொலையுமோன்னு அவன் யோசித்திருப்பான்ல...!!

பைனல் பஞ்ச்:  "ஆனா ஒன்னு... தூங்காதே தம்பி தூங்காதே..."ன்னு கரெக்ட்டா பேரு வெச்சுருக்கான்யா..."

சப்போர்டிவ் டாக்குமென்ட் :
 
 



6 comments :

  1. தூங்காதே தம்பி தூங்காதே...
    ஆம்! 'தம்பி' தூங்குனா எல்லாமே அம்புடு தான்!

    ReplyDelete
    Replies
    1. தமிழ்நாட்டு வாலிபர்கள், பேராண்டிகள் பலரும் சக்தியை வீணடிச்சு நாசமா போறது இதுனாலதான்

      Delete
  2. உண்மைதான் நண்பரே அந்தப்பாடல் வரிகள் மட்டுமல்ல அங்க அசைவுகளும் கீழ்த்தரமாகத்தான் உள்ளது இதை தொடங்கி வைத்தது எம்.ஜி.ஆர் என்றும் சொல்லலாம் அன்றே ''உறங்கிய'' தமிழன் இன்னும் ''எழ''வில்லை

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க கில்லர்ஜீ..., அவரு பண்ண முதலும் கடைசியுமான ஒரே புர்ர்ச்சி அதான்...!!

      Delete
  3. இந்தப் பாட்டு மட்டுமில்லைங்க மலர் இன்னும் நிறைய இருக்கிறதே. சொல்லிக் கொண்டே போகலாமே...நேத்து ராத்திரி யம்மா லருந்து, எம்புட்டோ இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. "பாடல்கள் ஆபாசமா இருக்கு"ன்றது மேட்டர் இல்லீங்க..., அதுக்கு நம்ம கத்தரி போர்டு குடுக்கிற ரேட்டிங் தான் கடுப்ப கெளப்புது.
      அசிங்கமான எஸ்எஸ்.சந்திரன் ஜோக்கை ஆதித்யா சேன்னல்ல நடுவீட்ல உக்கார்ந்து எல்லாரும் பாக்கலாமாம்!! ஆனா "குற்றப்பத்திரிக்கை", "Firaaq" போன்ற படங்களையெல்லாம் அனுமதித்தால் இறையாண்மைக்கு இழுக்கு வந்திருமாம்...

      1944ல வந்த ஹரிதாஸ் படத்துல வர்ற இந்த பாடலை பாருங்க,
      https://www.youtube.com/watch?v=xGBXi_DRvhk
      அதுவும் 02:28ல இருந்து 02.32 வரைக்கும், ஆதி காலத்து அனுராதா கணக்கா!!

      Delete