Saturday, 2 July 2016

2016 ஜுன் விருதுகள்

ரெண்டு மாசமா எலெக்சன் மும்முரத்துல எந்த சேனலும் யாருக்கும் விருது குடுக்காததுனால ஜுன்2016 மாசத்துக்குண்டான விருதுகளை நாமளே குடுத்துடலாம்னு முடிவு பண்ணி...

சிறந்த பேட்டி முதல்வன் அர்ஜுன் விருது: அறுணா கோயிந்தசாமி (லீக் ஆன ஆன்ஸர் பேப்பர்ல இருந்து கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணதுக்கு)


சிறந்த மனிதநேய அன்னை தெரஸா விருது:  அமித் ஷா & டமில் மீசிக் சவுண்டு (தலித் வீடுகளுக்கு சென்று சாப்பிடுங்கள் என கூவினத்துக்கு)


சிறந்த ராஜதந்திரி சாணக்யா விருது: வைகோ (இதை அவரே கேட்டுக் கொண்டதிற்கு இணங்க..)


சிறந்த கைதட்டல் அதுஇதுஎது மா.க.ப. விருது: மேடிசன் ஸ்க்கொயர் மக்கள் (35 நிமிசத்துல 72 தபா எழுந்து எழுந்து தட்டினத்துக்காக)


சிறந்த மிரட்டல் புலிகேசி விருது:  மோடிஜீ ("30-ம் தேதிக்குள்ள கருப்புப் பணம் வெளிய வரலைன்னா...________" )


சிறந்த யோகா குரு துரோணாச்சாரி விருது:  பிபாஷா பாஸு (ஜஸ்ட் ஒன்ர அவர்ல ஒன்ர கோடி)


சிறந்த மாணவன் அர்ஜுனா விருது: பிபாஷா பாஸுக்கு பின்னாடி  உட்கார்ந்திருந்தவர்.


சிறந்த ஆராய்ச்சியாளர் மேன்Vsவைல்ட் விருது:  கா.வி.க.கு.பரம்பரை (வள்ளல் வம்சம் என்பதால்தான் வெள்ளைக்காரனே வங்கியில் கவுன்ட்டர் என பெயரிட்டான்)


சிறந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு விருது:  பாபா ராம்தேவ் (மாட்டு மூத்திரத்தில் 24 காரட் தங்கம் கண்டு பிடிப்பு)


சிறந்த ஹிந்தி பிரச்சார சுனா சானா விருது: எஸ்.வீ.சேகர் (ஹிந்தி தெரிஞ்சா தான் தோசை சாப்பிட முடியும் moment)


சிறந்த துப்பு துலக்கி ஷெர்லக் ஹோம்ஸ் விருது:  why.ஜி.மகேந்திரன்


சிறந்த ஒசந்த ஜாதி காஞ்சிபுரம் காமகோட்டியான் விருது: why.ஜி.மகேந்திரன்

  

சிறந்த ஒளிப்பதிவு ராஜ பார்வை விருது:  நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் CCTV (இருக்கு ஆனா இல்ல...)


சிறந்த போலீஸ் எஸ்.பி.சவுத்ரி விருது:  நுங்கம்பாக்கம் ரயில்வே போலீஸ்


சிறந்த கொள்கைப் போராளி கத்தி கதிரேசன் விருது:  செந்தமிழன் சீமான் (நுங்கம்பாக்கம் சிலோன் எல்லைக்குள்ள வராது ஒறவுகளே)

8 comments :

 1. இம்புட்டு விருதா... எனக்கு இல்ல .. எனக்கு இல்லனு தருமி பாணியில் புலம்ப வச்சிடீங்களே...

  ReplyDelete
  Replies
  1. அடுத்த மாசம் உங்களையும் லிஸ்ட்ல சேர்த்திடவா?!

   Delete
 2. why.ஜி.மகேந்திரனுக்கு விருதா ?why ரீசன் ,விளக்கம் தந்தால் நலம் :)

  ReplyDelete
  Replies
  1. போனவாரம் வெள்ளிக்கு கிழமையிலிருந்து செவ்வாய் கிரகத்துல இருந்தீர்களா?!

   Delete
 3. இது அனியாயம் அக்கிரமம்....இரண்டு விருதுகள் குறித்து இந்தக் கண்டனம்.

  முதலில் அந்த பிபாஷா பாசுவிற்குக் கொடுத்த விருது ஹும் அவங்கள விட நான் ரொம்ப நல்லா யோகா பண்ணுவேன்...இங்க அவங்க படத்துல காட்டியிருக்கற போஸ் ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை...ஹுக்கும்...எனக்குத் தர வேண்டிய விருதை அவங்களுக்குக் கொடுத்ததுக்கு இந்தக் கீதாவிடமிருந்து கண்டனம் ஆர்பாட்டம் விரவில் ஹிஹிஹி..

  ஷெர்லாக் ஹோம்ஸ் விருதுனு டாகி படம் போடு அதுவும் வொய்ஜி க்குப் போடுக் நம்ம டாகிய கேவலப்படுத்திட்டீங்களே ...ஒரு பஞ்ச் வாங்கிக்கங்க மலர்....ஹிஹிஹி

  ReplyDelete
  Replies
  1. பிப்ஸுக்கு குடுத்தது ஒன்னரை கோடியாம்...!!
   நமக்கு சிப்ஸு கூட கெடைக்காது...

   Delete
  2. இன்னாது 1 1/2 கோடியா...நான் மயக்காசனத்துல போய்ட்டேன்...

   கீதா

   Delete
 4. அடடா மூணு கண்டனம்..மூணாவது....தலைவர் மிஸ்டர் பீன்ஸ போட்டதுக்கு......ஹஹஹ

  கீதா

  ReplyDelete