Monday 15 August 2016

2020-Toyko-ல ச்சும்மா தங்கமா அள்ளுறோம்

100 வருடங்களாக விளையாட்டை ரொம்ம்ப விளையாட்டாக எடுத்துக் கொண்ட படியால் வெறுமையும் பொறுமையுமே எஞ்சிய நிலையில், போதும் பொங்கி எழுவோம் என உத்தேசித்து, வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கங்களை சந்தையில் அள்ளுவது போல் நம்மாளுகள் அள்ளிவர அரசு மேற்கொள்ள சில திட்ட ஆலோசனைகள்:

வீரர்கள் அனைவருக்கும் தத்தம் விளையாட்டில் பயிற்சி தரப் போகிறோமோ இல்லையோ கட்டாயம் யோகா கற்றுத் தரப்படும்.  குறிப்பாக தடகள வீரர்களுக்கு டிராக்கில் குத்த வெச்சு யோகா செய்தல், நீச்சல் வீரர்களுக்கு தண்ணீரில் குப்புற மிதந்தபடி யோகா செய்தல் போன்றவை... இதற்காக பாபாராம்தேவ் தலைமையில் 5000 கோடி செலவில் யோகா பண்ணை அமைக்கப்பட்டு பிபாசா பாசு, ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோரை வைத்து பயிற்சி தரப்படும்.


வீரர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவது முற்றிலும் தடை செய்யப் படும்.  மீறி சாப்பிட்டாலோ, வைத்திருந்தாலோ, மாட்டுக் கறியை வேடிக்கை பார்த்தாலோ, சாப்பிடுவது போல கனவு கண்டாலோ, டிவியில் பார்த்தாலோ உடனடியாக பயிற்சியிலிருந்து நீக்கப் பட்டு, கைது செய்து FIR போடாமல், கோர்ட்டுக்கு கொண்டு போகாமல் பொதுமக்களிடம் அடி உதை வாங்கித் தரப்படும்.

சைவ உணவுடன் வீரர்களுக்கு சக்தி பானம் மற்றும் உற்சாக பானமாக பசு மூத்திரம் வேளா வேளைக்கு வழங்கப் படும்.  தங்கமும் பிளாட்டினமும் பாதரசமும் பிரித்தெடுக்காத அசல் ஒரிஜினல் மூத்திரம் கண்முன்னே பிடித்து தரப்படும்.  இம்மாடுகள் டோக்கியோவுக்கும் தனிக் கப்பலில் கொண்டு செல்லப் படும்.  வீரர்களுக்கு கன்னி கழியாத பசுக்களின் மூத்திரம் ,மட்டுமே வழங்கப் படும்.  இதற்காக ஒரு இலாகா உருவாக்கப் பட்டு அமைச்சரின் நேரடி கட்டுப் பாட்டில் இயங்கும்.


தற்போதுள்ள பயிற்சியாளர்கள் அனைவரையும் நீக்கி விட்டு துடிப்புள்ள வெறிகொண்ட பயிற்சியாளர்கள் நியமிக்கப் படுவார்கள்.  உதாரணத்திற்கு மல்யுத்தம் மற்றும் துப்பாக்கி சுடுதலுக்கு சல்மான்கான், ஹாக்கிக்கு ஷாருக்கான், பேட்மிட்டன்க்கு தீபிகா படுகோனே, பாக்ஸிங்கிற்கு மாதவன், போல் வால்ட்டுக்கு வடிவேலு (செவலை... தவ்வுடா தவ்வூ)!!


போட்டியின் போது வீரர்களை உற்சாகப் படுத்த பல நூதன முறைகள் கையாளப் படும்.  அனைத்தையும் வெளியே சொன்னால் அமெரிக்கா, சைனா உள்ளிட்ட நாடுகள் உஷாராகி விடும் என்பதால் உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று மட்டும்...
வில்-அம்பு மற்றும் துப்பாக்கி சுடும் போட்டிகளில் டார்கெட்டுக்கு பின்னே ஒருவர் சட்டையை கழட்டி நின்று கொண்டு, "சுடுவதாய் இருந்தால் என்னைச் சுடுங்கள்... என்னை சுடுங்கள்..." என குறளி வித்தை காட்டிக் கொண்டிருப்பார்.  வீரர்கள் உற்சாகம் தாள மாட்டாமல் சுட்டுத் தள்ளி விடுவார்கள்.


நம்மூரு தேர்தலில் செய்வது போல் ஒரே பெயரில் நாலு நாலு பேராக இறக்கி விட்டு பெருங் குழப்பத்தை உண்டாக்குவது..., நாலு உசைன் போல்ட், நாலு மைக்கேல் பெல்ப்ஸ் என எல்லாம் நாலு நாலு... ஒழிந்தான் எதிரி..!!

கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சி போராட்ட விளம்பரத்தை திரும்ப திரும்ப வீரர்களுக்கு போட்டுக் காட்டிட்டே இருக்கணும்.  ஒவ்வொருத்தனும் "என் தங்கம், என் பிறப்பு, என் செருப்பு, என் பருப்பு, என் உரிமை.."ன்னு தூக்கத்துல சொல்ற அளவுக்கு ரெடி பண்ணனும்...

முக்கியமா ஏ.ஆர்.ரஹ்மான் இசையில "செய்..ஹோ..", "சக்...தே...", "நெஞ்சே...எழு..." ரேஞ்சுல ஒரு தேசபக்தி பாடல் ரெடி பண்ணி,  அமிதாப் பச்சன்ல இருந்து பேபி நைனிகா வரைக்கும் எல்லா முக்கிய நடிகர்களை வைத்து அவிங்க மூஞ்சில கொடி கலர் பூசி வாழ்த்திப் பாடுற ஒரு வீடியோவை எடுத்து எல்லா சேனல்லயும் தெறிக்க திகட்ட போட்டு வெறுப்பேத்தனும்.  ரொம்ப முக்கியமா குழந்தைகள் கொடிய தூக்கிட்டு எங்கிட்டாவது காட்டுக்குள்ள ஸ்லோ மோஷன்ல ஓடணும்.  அதி முக்கியமா அதுல டெண்டுல்கர் தோன்றி வாழ்த்து சொல்லணும்..!!

இதெல்லாம் ச்சும்மா நச்சுன்னு பண்றோம்... நறுக்குன்னு போறோம்... 2020-Toyko-ல ச்சும்மா தங்கமா அள்ளுறோம்



  

7 comments :

  1. இவ்வளவு லேட்டா சொல்றீங்களே ,முன்னாடியே அமுல் படுத்தி இருந்தா ,இந்த வருசமே அள்ளியிருக்கலாமே:)

    ReplyDelete
    Replies
    1. நம்ம எப்பவுமே லேட்டு தானுங்களே!!

      Delete
  2. தெரியாமத்தான் கேக்குறேன்.. அந்த முதல் படத்தில்.. கருப்பு பணத்தையெல்லாம் நமக்கு மீட்டு தந்த அந்த சுடிதார் பாபா என்ன பண்ணின்னு இருக்கார்?

    கொஞ்சம் விசாரித்து சொல்லுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆள விட்டு விசாரிச்சாச்சு தல,
      பார்ட்டி அரணாகொடிய லூஸ் பண்ணிட்டு இருந்துச்சாம்..!!

      Delete
  3. ROFL really. Who knows all may happen if they rule till.

    ReplyDelete
  4. ஹஹஹ்ஹஹ் செம மலர். ஸோ அடுத்த ஒலிம்பிக்ல நாமதான் கொடி நாட்டப் போறோம்னு சொல்லுங்க ஹஹஹ்

    ReplyDelete