Saturday, 11 March 2017

450-லிருந்து 150 வரை...

      "உங்ககிட்ட ஆதார் அட்டை இருக்கா'ன்னு கேக்குற அளவுக்கு, "உங்களுக்கு சக்கரை வியாதி இருக்கா"ன்னு கேக்குறது ரொம்ப சாதாரணமா போயிடுச்சு...  ஆகஸ்ட் 10, 2013 அன்னைக்கு  எனக்கும் அது வந்திருந்ததை கண்டுபுடிச்சு அதுக்கப்புறம் அலோபதி, சித்தா-ன்னு மாறி மாறி ஓடிட்டு இருந்தேன்.  அப்புறமா வரக்கொத்துமல்லி காபி, பாகற்காய், கடுக்காய் என நேச்சுரோபதி கொஞ்ச நாள்...   "சீ போ..."ன்னு உதறிட்டு இஷ்டம் போல நடுவுல கொஞ்ச நாள்...

     ஆறு மாசம் முந்தி டெஸ்ட் எடுத்தா 476 இருந்துச்சு.  டாக்டர் இன்சுலின் போட சொல்லிட்டாரு, காலையில 16, ராத்திரி 16ன்னு மாத்தி மாத்தி சின்சியரா குத்திட்டு இருந்ததுல மறுபடி டெஸ்ட் பண்ண மறந்து போயி ஒரு நாள் sugar low levelக்கு போயி குத்திக்கிறத நிப்பாட்டிட்டேன்...  அப்படியே கொஞ்ச நாள் ஓடுச்சு... ரெண்டு மாசம் முந்தி எடுத்து பாத்தா 458.

     உடம்புல சக்கரை அளவு அளவுக்கு அதிகமா இருந்தா அதனோட அறிகுறிகள் பலருக்கும் பல மாதிரி  இருக்கும்... அதீத பசி மற்றும் தாகம், தலைசுற்றல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், தலைவலி, கண் மங்கலாக தெரிதல், களைப்பு, உடல் எடை குறைதல், உடலில் கரும்புள்ளிகள் தோன்றுதல், etc. இதில் எனக்கு உடலில் கரும்புள்ளிகள் லேசாக தோன்ற ஆரம்பித்தன, எடை இரு வருடங்களில் 72லிருந்து 62ஆக குறைந்தது.  வேறேதும் அறிகுறிகள் சுத்தமா இல்ல...
     ஏதாவது செய்யணுமேன்ற திரிசங்கு நிலையில facebook மூலம் paleo அறிமுகமானது.  அதையும்  பார்த்துடுவோம்ன்னு  அவங்க சொன்ன டெஸ்ட் எடுத்து upload பண்ணி நாலு நாள் வெயிட் பண்ணேன்... நீரிழிவு நோய்க்காரர்களுக்குன்னு தனி குரூப் இருக்கு அங்க போங்கன்னு டைவர்ட் பண்ணி விட்டாங்க..., அங்க போய் மேலும் நாலு நாள் வெயிட் பண்ணதுல, நீங்க முதல்ல போயி டாக்டர பாத்துட்டு உங்க சக்கரையை ஓரளவாவது குறைசிச்சுட்டு உள்ள வாங்கன்னு .சொல்லிட்டாங்க...

     ஆல்ரெடி அங்க இருந்து தான வர்றோம்னு நெனச்சுக்கிட்டே இந்த தடவ வித்தியாசமா ட்ரை பண்ணலாம்னு ஹோமியோபதி போனேன்...  ஓரளவு திருப்திகரமா இருந்தாலும் ரெண்டு மாசம் ஆகியும் ரிசல்ட் ஒன்னும் இல்ல...  பார்த்தேன்... நமக்கு நாமேன்னு தளபதி கணக்கா எறங்கி paleoல நமக்கு தெரிஞ்ச சர்வே  ரிஸர்ச் எல்லாம் பண்ணி எனக்கான உணவை முடிவு செய்து, வீட்ல அம்மணியோட கலந்துரையாடி Feb 20 திங்களன்று ஆரம்பித்தேன்...

     நீரிழிவின் மூலம் அவதிப்படும் பலரும் வெளியே சொல்லத் தயங்கும் ஓர் விஷயம் அவ்வப்போது genitals ஏற்படும் itching... நாலு பேர் கூட பேசிட்டிருக்கும் போது தான் சொல்லி வெச்சா மாதிரி நம்மள நெளிய விட்டுடும்.  உள்ளாடையைக் கழற்றி தரையில் போட்டால் அடுத்த சில மணிநேரங்களில் அதுல எறும்புகள் மொய்க்கும்...

      Feb 22ஆம் தேதி அதாவது 3ஆம் நாள் ஆறு மாசமா இருந்த அந்த "அரிமா அரிமா..." பிரச்சனை முடிவுக்கு வந்தது... .அடடா, மாற்றம் முன்னேற்றம்ன்னு சின்னையா மேல பாரத்தை போட்டுட்டு அதிக ஈடுபாட்டோட தொடர ஆரம்பிச்சேன்...  ரொம்ப சிம்பிள், அரிசி, கோதுமை, மைதா, ரவை,  பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள், பழங்கள் அனைத்தையும் ஒதுக்கி விட்டு வெண்ணெய், நெய், பன்னீர், முட்டை, கோழி, ஆடு, இவற்றை மட்டும் பெருவாரியாக எடுத்துக் கொன்டேன்...
காய்கறிகளில் வெங்காயம், முருங்கை, கேரட், முட்டைகோஸ், லெட்டூஸ், ப்ரோகோலி, குடைமிளகாய், தேங்காய் துண்டுகள்... மற்றும் தினமும் ரெண்டு கொய்யாக்காய், ரெண்டு நெல்லிக்காய்... இன்னும் சிலபல

     March 9, சரியாக 18ஆம் நாள் காலை fasting-ல் டெஸ்ட் எடுத்துப் பார்த்தேன்... 158 !!!

Paleo நல்லதா, அங்கீகரிக்கப் பட்டதா, பக்க விளைவுகள் உண்டா என்பதையெல்லாம் வல்லுநர்கள் தீர்மானிக்கட்டும்...  ஒரே விஷயம் தான், நீரிழிவு நோயால்  பாதிக்கப் பட்டு பலவகையான மருத்துவங்களை பார்த்த யாராவது "எனக்கு diabetes இருந்தது, இப்போ குணமாகி விட்டது..." என சொல்லக் கேட்டதுண்டா?  "sugar இப்போ கொஞ்சம் controlல இருக்கு.."ன்னு சொல்றதுதான் அதிகபட்ச நலம்.
எனக்கு diabetes இருந்தது, அதுவும் 476..., இப்போ இல்ல...  இனியும் வராது...
     Inspirationஆக இருந்த நண்பர்கள் தங்கராஜ், பிரபு, பாலா, சஜி & கண்ணன் அனைவருக்கும் நன்றிகள் பல...

     இவனுக்கு ருசி இல்லாம எறங்காதே என்பதனை கருதி தினமும் மூணு வேளையும் மூணு விதமாக சலிக்காமல் உணவைத் தயாரித்து அளித்த, அளிக்கும் அம்மணிக்கு அநேக ஸ்தோத்திரங்கள்...!!
புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய பல புத்தகங்களில் இன்னும் ஒன்றைக் கூட முழுதாக முடிக்கவில்லை.  அம்மணி வாங்கிய ஒரே  புத்தகம் நியாண்டர் செல்வன் எழுதிய "பேலியோ டயட்", அதையும் பலமுறை படித்து விட்டார், எனக்காக...!!

ஜெய் பேலியோ...!!

 - அன்புடன்
 - மலர்வண்ணன்

16 comments :

 1. உண்மையிலேவா...? வாழ்த்துகள்...

  எந்த diabetic மருத்துவராவது, "பேலியோ டயட் எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் (குறைபாடு) போய் விடும்" என்று சொல்லட்டும்....

  விளக்கத்தை எனக்கு அனுப்புங்க... (dindiguldhanabalan@yahoo.com / 9944345233)

  ReplyDelete
  Replies
  1. நன்றி DD,
   என்ன விளக்கம் தேவைப் படுகிறது? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்... அனுப்பி வைக்கிறேன்...

   Delete

 2. எனக்கு கடந்த 8 ஆண்டுகளாக சுகர் இருக்கிறது காலையிலும் இரவிலும் மெட்பார்மின் 500 எடுத்துவருகிறேன் எந்த வித டயட்டும் எடுப்பதில்லை ஆனால் சுகர் மிகவும் கட்டுப்பாடுக்க்குள்தான் இருக்கிறது 120 லிருந்து அதிகபட்டசமாக 150 வரைதான்

  ஒருவருடத்திற்குமுன் சோம்பேறிதனத்தால் முழுவதுமாக மருந்து எடுக்கவில்லை அந்த சமயத்தில் மட்டும் சற்று அதிகமாக 180 லிருந்து 200 வரைதான் இருந்தது

  எனது டயட் இதுதான் இரவில் சாதம் வித் குழம்பு பொறியல் அல்லது கூட்டு காலையில் தோசை /இட்லி /பிரட் அல்லது சீரியல் மதியம் மிக குறைந்த அளவு சாதம் ஈவினிங்க் சில பிஸ்கட் / மிக்ஸ்ர்/ காரச்சேவு இதுதான் என் டயட்


  வார இறுதியில் மாதம் ஒரு முறை அல்லது இரு முறை ரம் அவ்வளவுதானுங்க

  இப்படி இருந்தும் என் சுகர் கண்ட் ரோலாக இருக்க காரணம் நடைதான் என் வேலையில் உட்கார நேரம் இருக்காது அது போல வீட்டில் வந்தாலும் உட்காரமாட்டேன் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்வேன் அதுமட்டுமல்ல மூன்று வேலை நாயை வாக் அழைத்து போவேன், முக்கியமாக சுகர் இருப்பதை நினைத்து கவலைப்படுவதில்லை

  ReplyDelete
  Replies
  1. நம்ம அளவு சாப்பாடெல்லாம் இல்லீங்க... பசி தீரும் வரை சாப்பிடுறேன்... உணவு முறையை மாற்றியது எதிர்பாரா பலனைத் தந்துள்ளது... எந்த பக்க விளைவும் இல்லாமற் பக்காவா போய்ட்டு இருக்கு...
   நானும் sugar இருப்பதை நினைத்து கவலைப் பட்டதேயில்லை, இனியும் அதற்கு அவசியம் இருக்காது...
   இப்போ கவலை என்னன்னா தமிழ்நாட்டுல நல்ல quality ரம் கிடைப்பதில்லை. ராணுவத்துல வாங்கலாம்ன்னு பாத்தா ஏகப்பட்ட demand

   Delete
 3. இனி அனைத்து சோசியல் மீடியாக்களையும் ஒரே ANDROID APP-ல் பயன்படுத்தலாம் எப்படி?

  https://www.youtube.com/watch?v=cwuKJ_Tcq-o

  ReplyDelete
 4. நாங்கள் இருவருமே ச்ச்ச்ச்ச்சோ......ஸ்வூட்டுங்கோ....ஆனால் கன்ட்ரோலில்...
  துளசி : அவ்வப்போது கொஞ்சம் உயரும் ஆனால் அளவாக இருப்பதால்..

  கீதா: கழிந்த 20 வருடங்களாக ஸ்வீட் 16ஹிஹிஹீ...இருந்தாலும் நிறைய வேலை, நடை எல்லாத்துடன், உணவுக் கட்டுப்பாடு...க்ரீன் டீ, மெட்ஃபார்மின் மருந்துடன் இடையில் சர்ஜரி நடந்த போது கூட நாண்டயபடிக் (நான் டயபடிக் அல்ல ஹஹஹ்) ரேஞ்சில் ரிசல்ட் காட்டியது!!! எப்படியோ இதுவரை இப்படி ஒடுகிறது....அதைப் பற்றிச் சிந்திப்பது இல்லை...டிட்டோ மதுரைத் தமிழன் சகோவின் பதில் பொருந்தும் எனக்கும்....ரம்மைத் தவிர ஹஹஹ்ஹ

  ReplyDelete
  Replies
  1. ஓவ்... யு டூ ஸ்வீட்டீஸ்...!!
   செம கண்ட்ரோல்ல இருப்பீங்க போல... பாராட்டுக்கள்

   Delete
 5. சூப்பர் உங்கள் டயட்டினால் இப்போது குறைந்திருப்பது மிக்க மகிழ்ச்சி!!அப்படியே மெயிண்டைன் பண்ணிடுங்க மலர். என்ன டயட் ஆனாலும் நடைப்பயிற்சி செய்யுங்க மலர்.

  கீதா

  ReplyDelete