Thursday, 20 June 2013

இவாலியாவுடன் ஓர் இரவு


Nissan-ல் Evalia என்ற புது SUV-யை commercial vehicle category-யாக முன்னிலைப் படுத்தும் அறிமுகம் ஜூன்'19 அன்று சென்னை தாஜ் கொரமன்டலில் நடந்தது.  Innova-வை விட சிறந்த வண்டின்னு சொன்னதாலும், Nissan-லிருந்து என்ன்ன்னையும்... மதித்து அழைப்பிதழ் அனுப்பியிருந்ததாலும் ஜப்பான்காரன் என்னதான் செய்திருப்பான்னு  பாக்கலாம்னு போனா, ஊர்ல இருந்த அத்தனை travels-க்கும் அழைப்பிதழ்கள் போயிருக்கும் போல...  அரங்கம் நிறைந்து காணப் பட்டது.  அதில் இருந்த followed by cocktail dinner-ன்ற வாசகம் தான் நிறைய பேரை அங்கே இழுத்து வந்திருக்க வேண்டும்.

மாலை 7:30க்கு ஆரம்பிக்க வேண்டிய நிகழ்வு தவறாமல் மிகச் சரியாக இரவு 8:20க்கு ஆரம்பித்தது.  சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்ற தமிழனின் தன்னம்பிக்கைக்கு ஏற்ப Nissan-ல் வேலை பார்க்கும் வட இந்திய சேட்டு பசங்க Evalia-வின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்ல ஆரம்பிக்க, நம்ம ஆளுங்க வழக்கம் போல சொல்போனில் பிஸியானார்கள்.  Mileage மற்றும் விலையைத் தவிர Innova-வை விட Evalia ஒன்றும் சிறப்பாகத் தெரியவில்லை.  ரோட்டுக்கு வரட்டும்... பார்க்கலாம்...

Dealer-களை ஓரிரு வார்த்தைகள் பேசச் சொன்னார்கள்.  முதலில் பேச வந்த தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடை பரப்பியிருக்கும் ஒரு பிரபல dealer, "Good evening, எல்லாருக்கும் வணக்கங்க.., என் பேரு Elephant Hill..., basically நான் ***** (தன் சாதி), mortar drink-ஐச்  சேர்ந்த *******(சாதியின் உட்பிரிவு)" என்று பேச ஆரம்பித்தார்.  "இப்போல்லாம் யாருங்க சாதி பாக்குறா" என்று பேசும் அப்பாவிகளை நொந்து கொண்டேன்.  ஒரு metropolitan தலைநகரில், 5ஸ்டார் ஹோட்டலில், corporate meeting-ல், சாதி பேரைச் சொல்லி ஒட்டு பொறுக்கும் அரசியல்வாதிக்கு சற்றும் இளைக்காமல், சாதி பேரைச் சொல்லி வணிகப் பிச்சை கேட்ட  கொடுமையைக் காண நேரிட்டது.  Evalia வாங்குறனோ இல்லியோ, உங்கிட்ட கம்மர்கட் கூட வாங்கக் கூடாது என முடிவு செய்தேன்.

இரவு 9:40க்கு "bar counter-ம் buffet-ம் திறந்தாச்சு, have a nice time" என்றார்கள்.  தற்காலிகமாக நான் மதுவை ஒதுக்கியிருந்ததால் buffet ஏரியாவை நோக்கிச் சென்றேன்.  Bar counter-ஐக் கடந்து செல்லும் போது நான் கண்ட காட்சி... ஆஹா... அற்புதம்...!!  நாளை முதல் தமிழகத்தில் சாராய விற்பனை கிடையாது என்ற அறிவிப்பி
ற்கு முந்தின நாள் இரவு எப்படியிருப்பார்களோ, அப்படி இருந்தார்கள் நம் தமிழ்கூறும் நல்லுலகத்தினர்.  தீபாவளிக்கு முதல் நாள் இரவில் ரங்கநாதன் தெருவில் முட்டி மோதுபவர்கள், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் எக்கி எக்கி டிக்கெட் போடுபவர்கள்,  எழும்பூர்-சென்ட்ரலில் போராடி இடம் பிடிப்பவர்களை விட திறமையுடனும், விழிப்புடனும், நம்பிக்கையுடனும் "சிந்துபைரவி" சிவக்குமாருக்கு சவால் விடும் வகையில் கைகளில் குவளைகளை ஏந்தியபடி, ஒருவரையொருவர் முண்டியடித்தபடி இருந்தனர்.

Buffet ஏரியா காலியாக இருந்தது...  நமக்கு spoon, fork ஒத்து வராது... சரி, கை கழுவி விட்டு வருவோம் என வாஷ் ரூம் சென்று திரும்பி வந்து பார்த்தால் பந்தியில் ஒரு பெரிய படையெடுப்பு நடந்து கொண்டிருந்தது.  வரிசை கிடையாது... எதிரெதிர் திசையில் தட்டை ஏந்திக் கொண்டு வதம் செய்து கொண்டிருந்தனர்.  தட்டைக் கண்டுபிடித்தேன்.  சிக்கன் டிக்கா, மட்டன் வறுவல், மீன் குழம்பு இருந்த பாத்திரங்கள் கும்பலாக கற்பழிக்கப் பட்டுக் கொண்டிருந்தன.  Veg Salad-ம் தயிர் வடையும் மட்டுமே free-யாக இருந்தன.  அவற்றிற்கு நான் ஆதரவு தந்தேன். 

இது போன்ற புதிய automobile அறிமுகங்களின் போது தங்களிடம்  தொடர்ந்து வணிகம் செய்யும் நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ மட்டுமே அழைப்பு விடுக்கப்படும்.  மருந்து கம்பெனிகள் மருத்துவர்களுக்கு அளிக்கும் விருந்துக்கு சற்றும் குறைவில்லாமல் இவ்வகை corporate business meet இருக்கும்.  அழைப்பிதழைக் காட்டினால் மட்டுமே அனுமதிக்கப் படுவர். Toyota Fortuner அறிமுகம் Taj Fishermen's Cove-ல் வைத்து நடத்திய போது ரஷ்ய அழகிகளை, உடையவன் மட்டும் கொண்டாடும் அழகை  தடைகள் போட்டு ஆட விட்டு அழகு சேர்த்தனர். IPL cheer leaders எல்லாம் பிச்சை வாங்க வேண்டும்.

தற்போது நடந்த event-ல் யாரிடமும் அழைப்பிதழ் கேட்கப் படவில்லை.  சாப்பிட்டுக் கொண்டிருந்த பொழுது அந்த கூட்டத்திற்கு துளியும் சம்பந்தம் இல்லாத நான்கைந்து பெண்கள் தாங்கள் Pre-KG படிக்கும் போது வாங்கிய உடைகளை போட்டுக் கொண்டு அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்தனர்.  சில நிமிடங்களில் முகத்தில் வளையங்களும் உடம்பில் பச்சையும் குத்தி இருந்த சில இளைஞர்கள் அவர்களுடன் இணைந்து கொண்டனர். அவர்களின் தீர்த்தவாரி தனி ஆவர்த்தனமாக  ஆரம்பிக்க மற்றவர்களுக்கு ஊறுகாய் இல்லாத குறை தீர்ந்தது.

அப்பொழுதான் தான் கவனித்தேன், அதில் இருந்த ஒரு பெண் இதற்கு முன் ஏற்கனவே இது போன்றதொரு நிகழ்வில் தன் குழுவினருடன் தாகசாந்தி செய்து கும்மாளமிட்டது  நினைவிற்கு வந்தது.  உடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த நண்பர் அதிலிருந்த வேறு ஒரு பெண்ணைக் காட்டி அவள் பெயரையும் சொல்லி "நானும் அவளும் இதற்கு முன் ஒன்னா வேலை பார்த்தோம்.  இவளுங்களுக்கு இதே வேலை தான்..., எந்த ஹோட்டல்ல ஓசில cocktail dinner நடந்தாலும் கரெக்டா வந்துருவாளுங்க, இவளுங்க தோரணையைப் பார்த்து எவனும் கேட்கவும் மாட்டான்." என்றார்.  சிறிது நேரத்தில் பத்து பெண்களுக்கு மேல் அந்த கூட்டத்தில் இருந்தனர்.  Boys படத்தில் செந்தில் இரண்டு பாத்திரங்களைக் கொடுத்து "ஒன்னு உனக்கு, இன்னொன்னு எனக்கு" என்று சொல்லுவாரே... அது போல அந்த பசங்கள் அடிச்சு பிடிச்சு வாங்கி கொண்டு வரும் கிளாஸ்களில் ஒன்றை தங்களிடமும் மற்றொன்றை அந்த வளர்ந்த குழந்தைகளிடத்திலும் கொடுத்து அழகு பார்த்தனர்.   

ஒரு ஓரத்தில் தோசை counter கூட்டம் இல்லாமல் இருந்தது. அதை நோக்கி நடந்து சென்றேன்.  எங்கிருந்துதான் வருவானுங்களோ...!!  நான் counter-ஐ அடையும் முன் 20 பேர் அங்கிருந்தனர்.  ஒரு கணம் நாமிருப்பது எதியோப்பியா-சோமாலியாவா அல்லது சென்னையின் மிகப் பெரிய பணக்கார ஹோட்டலா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. கையைக் கழுவினேன்...

கிளம்பி வெளியே வந்த பொழுது லாபியில் எதிரில் இரு பெண்கள் வந்தனர்.  அவர்களில் ஒருத்தி "what, Nissan huh?, i "m coming..." என்று பேசிக் கொண்டே போனாள்.  அப்போது இரவு மணி 10:30.  புதுப்பேட்டையில் கொக்கி குமார், "உங்களையெல்லாம் வீட்ல தேட மாட்டங்க?" என்று கேட்கும் காட்சி கண்முன் வந்து போனது.  கெட்டாலும் மேல்தட்டு மக்கள் மேன் மக்களே..!!"

வீட்டிற்கு போகும் வழியில் டிரைவரிடம் "உங்களை சாப்பிட சொன்னேனே, சாப்பிட்டீங்கள?" என்று கேட்டேன்.  "இல்ல சார்" என்றார்.  "எங்காவது ரோட்டு கடையில நிறுத்துங்க.. ரெண்டு பேரும் சாப்பிட்டு போலாம்" என்றேன்..!!

14 comments :

 1. DEAR MALAR,

  very nice,pls keep rocking.
  I want to speak with u,pls update ur contact pls.

  Rgds

  S.Kumaravel.
  9952031465

  ReplyDelete
  Replies
  1. நன்றி குமரவேல்
   என்னுடைய தொடர்பு எண்ணை உங்களுக்கு மின்னஞ்சலிட்டுள்ளேன்...

   Delete
 2. マラルさん、
     おめでとうございます。

  ReplyDelete
 3. ஒரு நிகழ்வை சிறப்பாக விவரிக்கிறீர்கள்.பிரபல எழுத்தாளர்களின் நடையை வியந்து கொண்டிருந்தேன்.வலைப்பக்கம் வந்த பின்தான் தெரிகிறது பிரபலங்களைவிட சிறப்பாக எழுதுபவர்கள் பலர் இருக்கிறார்கள் என்று.
  அறிமுகப்படுத்திய பிலாசபி பிரபாகரனுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் சிறப்பித்தமைக்கும் நன்றி முரளிதரன்...

   Delete
 4. ஒ ஓ நிஸான் எவாலியாவா??? நான் வேற என்னமோன்னு நினைச்சேன் ஹி ஹி ஹி...

  ReplyDelete
  Replies
  1. அந்த மாதிரியெல்லாம் எழுதுவதற்கு நம்ம என்ன சாருவா, பாலகுமாரனா?

   Delete
 5. அந்த கடைசி வரி ரொம்பவும் அருமை.

  ReplyDelete
 6. எங்கிருந்துதான் வருவானுங்களோ...!! நான் counter-ஐ அடையும் முன் 20 பேர் அங்கிருந்தனர். // அதாவது பாஸு நம்மளுக்கெல்லாம் நல்ல நேரத்தை தவிர மத்ததெல்லாம் போட்டி போட்டுகிட்டு முன்னால நிக்கும்..

  ReplyDelete
 7. பார்ட்டி உங்களுக்கு எப்படி இருந்ததுன்னு தெரியல..ஆனா நீங்க எழுதின விதம் ரொம்ப நல்லாருந்தது..சுவாரசியமான பதிவு..வாழ்த்துகள்...

  ReplyDelete