Tuesday, 24 September 2013

சென்னையில் பிரியாணி - புரட்டாசி ஸ்பெஷல்

அபின், ஆல்கஹால், கிரிக்கெட், ஜிஹாத், இன்டர்நெட்  போல எனக்கு பிரியாணி.

சேலத்தில் இருந்த போது கிச்சிபாளையம் ஸ்டார் பிரியாணியும் சுக்காவும் தான் எங்கள் நண்பர் வட்டத்தின் சாய்ஸ்.  ஞாயிறு மதியம் பார்சல் கட்டிக் கொண்டு தீர்த்தத்துடன் ஏற்காடு மலையேறி விடுவோம்.  முஸ்லிம் நண்பர்களின் தயவால் மாதம் ஓரிரு முறை கல்யாண பிரியாணியையும் அட்டாக் செய்து விடுவேன்.  பொண்ணு-மாப்பிள்ளை யார்ன்னு தெரியாது, கல்யாண வீட்டுலயும் யாரையும் தெரியாது, இருந்தாலும் முதல் பந்தில உக்கார்ந்து பிரியாணியுடன் தால்ச்சாவையும் சேர்த்து அடித்து விழாவை சிறப்பித்து விட்டு வருவேன்.  அழைத்துச் செல்லும் நண்பன் தான் அமராமல் நமக்கு ரெண்டாவது ரவுண்டிற்கும் பீஸ்கள் விழுமாறு ஏற்பாடு செய்து கொண்டிருப்பான்.  இன்னி வரைக்கும் சிறுத்த சிக்கினது கிடையாது.

சென்னை வந்த பிறகு பல இடங்களில் அடித்து ஆடி செய்த பிரியாணி ரிசர்ச் தான் இந்தப் பதிவு.

அஞ்சப்பர், பொன்னுசாமி, காரைக்குடி வகையறா ஹோட்டல்களுக்குப் போவதிற்குப் பதிலாக பட்டினி கிடக்கலாம்.  விலையிலும் சுவையிலும் சாவு பயத்தைக் காட்டிடுவாங்க.
தலப்பாக் கட்டி, திண்டுக்கல் வேலு ரெண்டுலயும் ஒரே ஃபார்முலா; ஆனா பிரியாணி சாப்பிட்ட திருப்தி இருக்காது.
பெரியமேடு பிரியாணி "வில் மிக்சிங்"ன்னு ஊர்ல பாதி பேருக்குத் தெரியும்.
அல்-ரீஃப், ஆசிப் பிரதர்ஸ் பிரியாணியில் தாபா டச் இருக்கும், ஆனால் முகல் ஃபினிஷிங் இருக்காது.
கிரீம்ஸ் ரோடு ஹைதராபாத் பிரியாணி சாப்பிடுறதுக்கு பதிலா  பத்தியச் சாப்பாடு சாப்பிடலாம்.  அளவு சுத்தமா பத்தாது.      
ஹயாத், ரெயின்ட்ரீ, கோரமண்டல், மெரிடியன், அக்கார்ட், ராடிசன்  எதுலயும் ஒண்ணு பிரியாணியோ, இல்ல கிரேவியோ, சமயத்துல ரெண்டுமா விளங்காது.  குறிப்பா நல்லிய கடவாய்ல வெச்சு கடிச்சு உறிஞ்ச முடியாது.  கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாம பிரியாணிக்கு ஸ்பூன் வெச்சு தருவானுங்க..!! (Ustad Hotel படத்தில் சில 5 ஸ்டார் ஹோட்டல்களின் பிரியாணி ரகசியத்தை உடைத்திருப்பார்கள்)

 
ஜார்ஜ் டவுன் மூர் தெருவிலுள்ள கல்யாண பிரியாணிக்கு பலமுறை சென்று க்யூவில் நின்று டோக்கன் வாங்கி சாப்பிட்டிருக்கிறேன்.  சுவையாகவும் நல்ல வலுவான விருந்தாகவும் இருக்கும்.  பிறகு அவர்களே எழும்பூர், பீட்டர்ஸ் ரோடு என கிளைகளைத் திறந்து கல்லா கட்டினார்கள்.  கல்யாண பிரியாணிதான் சிறந்ததென்று நினைத்திருந்தேன் பல்லாவரம் மொஹிதீன் பிரியாணியை சுவைக்கும் வரை.

பல்லாவரம் கன்டோன்மேன்ட்டுக்குப் பின்னால் உள்ளது மொஹிதீன் பிரியாணிக் கடை.  நின்று கொண்டுதான் சாப்பிட வேண்டும்.  மதியம் சென்றால் பிரியாணி அடித்துக் கொடுக்கவும், பார்சல் கட்டவும் மட்டும் ஆறேழு பேர் இருப்பார்கள்.  அவ்வளவு கூட்டமாக இருக்கும்.  சரியாக 12:30லிருந்து 01:30க்குள் நான்கைந்து ஜீப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக சீரான நேர இடைவெளியில் வரும்.  தயாராக இருக்கும் பார்சல்களை ஜீப்கள் அள்ளியபடி சென்றுவிடும்.  ஒரு ஹோட்டலின் சுவையை காவல் துறையையன்றி வேறாரறிவார்?

மொஹிதீனுக்கு சவால் விடும் வகையில் அடையாறு சாஸ்த்ரி நகரில் ஒரு பிரியாணி ஜாயிண்ட் உள்ளது.  ஞாயிறு மாட்டும், அதுவும் பார்சல் மட்டும், அதுவும் சனிக் கிழமையே முன்பதிவு செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும்.  வீட்டிலேயே ஆட்டை அறுத்து சமைத்துத் தருகிறார்கள்.  1 பக்கெட் மட்டன் பிரியாணி ரூ.1100.  7 அல்லது 8 பேர் திருப்தியாக சாப்பிடலாம்.  12 டிக்கா அளவிலான துண்டுகள் அடங்கிய சிக்கன் வறுவல் ரூ.250.  வீட்டிக்கு விருந்தினர் வந்தால் எங்கள் சாய்ஸ் இந்த ஹோம் மேட் பிரியாணிதான்.  இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு கறி வாங்க வீட்டிலிருந்து டிபன் பாக்ஸ் கொண்டு சென்றைதைப் போன்று இதற்கும் வீட்டிலிருந்தே பாத்திரம் கொண்டு செல்ல வேண்டும்.  சில விஷயம் தெரியா விருந்தாளிகள் பிரியாணி சூப்பரா சமைக்கிறீர்கள் என்று வீட்டு அம்மணியைப் பாராட்டிச் செல்வார்கள்.

சென்னையில் இந்தப் பெயரில்லா சாஸ்த்ரி நகர் பிரியாணிக்குப் போட்டியாகவோ, இதை விடச் சிறந்ததாகவோ இன்னும் பிடிபடவில்லை.  தேடிக் கொண்டே இருக்கிறேன்.  என் பிரியாணிப் பயணம் தொடரும்....!!

- அன்புடன்
- மலர்வண்ணன் 

30 comments :

 1. ஆலந்தூர் சுக்கா பாய் உங்களை மன்னிக்கமாட்டார் எத்தனை முறை ரௌண்டு கட்டி அடித்திருப்போம்.. எனக்கு பிரியாணி என்றவுடன் நினைவுக்கு வருவது ஆலந்தூர் சுக்கா பாய்தான்...

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்க வேண்டுகிறேன் சுக்கா பாய்... சுட்டிக் காட்டியமைக்கு நன்றி Sam.
   சங்கம் தியேட்டர் பின்புறமுள்ள ஒரு மீன் பிரியாணி ஜாயிண்ட், சாந்தி தியேட்டர் அருகில் முன்பிருந்த யாத்கர் பிரியாணி ரெண்டையும் மிஸ் பண்ணிட்டேன்..!! யாத்கர்ல காலையில மூணு மணிக்குக் கூட சுடச் சுட பிரியாணி கிடைக்கும்; இப்போ இல்ல..!!

   Delete
 2. நம்மஊருபராசக்திஹேட்டல்பிரியானிபற்றிசொல்லவேஇல்லையே

  ReplyDelete
  Replies
  1. ஓ... நீங்க நம்மூரா..!! மிக்க மகிழ்ச்சி நண்பரே..!!
   பராசக்தியின் குருமாவிற்கும், பிச்சுப் போட்ட சிக்கன் வருவலுக்கும் அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் வரும் அசோகன் மாதிரி நான். பிரியாணி above average...

   Delete
 3. சென்னை 600028, to 600020, to 600090, to 600041...ஏரியா முழுவதும் எங்க கால் பட்ட புண்ணியபூமி.. இப்ப பிரியாணி கீழ் கண்ட அடையார் ஹோட்டலில் என்ன விலை?
  Runs
  Coronet,
  Topsee

  ReplyDelete
  Replies
  1. போஸ்ட்மேன் கணக்கா சுத்தியிருக்கீங்க போல..!!
   Top See-லயும் Runs-லயும் மல்லு மணம் அடிக்கும்.
   Runs - CB-140; MB-150
   Coronet - CB-140; MB-155
   Top See - CB-120; MB-130

   Delete
 4. Try e sait, east tambaram, taste and quantity is awesome, family can go,

  ReplyDelete
 5. Replies
  1. வாங்க சார்...
   ஏதோ நம்மால முடிஞ்சது...!!

   Delete
 6. சார்மினார் பிரியாணி, ஐஸ் ஹவுஸ்

  நவாஸ் தர்பார் 100 அடி ரோடு, வேளச்சேரி

  இங்கேயும் ட்ரை பண்ணுங்க

  ReplyDelete
  Replies
  1. Hi All,

   Please try Vadapalani Ambur star briyani (Opp side to Murugan Temple).


   Delete
 7. படிக்கும்போதே வாய் ஊறுதே.... ஆனா கடை இருக்கற தூரம்... அடேயப்பா... பாப்போம் அந்த பக்கம் போறப்ப பாக்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜோ
   தூரம் பாத்தா ருசி கிடைக்காது. 90-களில் நாங்கெல்லாம் மீன் வருவலுக்கு ஒகேனக்கல்லுக்கும், மட்டன் வருவலுக்கு சங்ககிரி மாயாபஜாருக்கும், தலப்பாக்கட்டி பிரியாணிக்கு திண்டுக்கல்லுக்கும், இஞ்சி குழம்பு-கோழி மிளகு வருவலுக்கு மேட்டுப்பட்டி அன்பு மெஸ்சுக்கும் கூச்சப் படாம பைக்ல போயிட்டு வருவோம்.

   Delete
 8. சேலத்தில் இருந்த போது கிச்சிபாளையம் ஸ்டார் பிரியாணி

  Im In salem. I know Mangalm Hotel , Rakshas Hotel biriyani. I dont know about it. Give the correct location.

  ReplyDelete
  Replies
  1. from VOC market to bazar street, take a left before Ragavendra Jewellers; on the way to Kailash theater you can find this spot on your right. I don't know whether this joint is still exist, coz year 2001 was the last time i've been there

   Delete
 9. சின்ன பிள்ளைகளை சாக்லேட், பொம்மை கொடுத்து கடத்துவது போல, ஒரு பொட்டலம் பிர்ர்ர்ர்ரியாணி கொடுத்து உங்களை கிட்நாப் செஞ்சுடலாம் போல இருக்கே!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜி
   கிட்நாப் செய்யிற அளவுக்கெல்லாம் நான் வொர்த் இல்லீங்க...

   Delete
 10. Can you share the details of that Adayar Shasthri Nagar - Biriyani Joint - Phone number & Address pls !

  ReplyDelete
 11. 044 - 24918581
  bought a full 3 weeks back, not as tasty as in the previous times, but good...
  try your luck

  ReplyDelete
 12. entha sastri nagar birayani point enga irrukku

  ReplyDelete
  Replies
  1. பதிவில் இருக்கும் google வரைபடைத்தை க்ளிக்கினால் விளங்கிக் கொள்ளலாம்.

   Delete
 13. entha sastri nagar birayani point enga irrukku

  ReplyDelete
 14. Go to Hotel Deccan near purasawalkam... You would get t he biryani which you would never leave out... The best I've had so far... They are from 1950's

  ReplyDelete
  Replies
  1. Thanks for the lead Vathsalya, will try at the earliest.
   Today tried with Ice House Charminor as suggested by Raja
   It was really delicious....

   Delete
 15. Kakka bai Aalandur address or landmark please

  ReplyDelete
 16. How is this Adyar Joint now a days ?

  ReplyDelete