Tuesday, 24 December 2013

2013 - டாப் 10 காமெடிகள்: (என் பார்வையில்)

10.  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் IPL சூதாட்டத்தில் என் குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் எந்த ஒட்டுமில்ல, உறவுமில்ல  - சிமெண்ட் மூட்டை சீனிவாசன்.

09.  நம்ம மான்புமிகு முதல்வர் அம்மாஆ அவர்கள் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமா ஆக்க பாடுபடுறாங்க - டாகுடர் விஜய் (தலைவா ரிலீசுக்காக)

08.  ஆஸ் ஐ ஆம் சஃப்பரிங் ஃப்ரம் ஃபீவர் ஐ ஆம் அநேபிள் டு கமிங் டு காமன்வெல்த் இஸ்கூல் - Letter from மண்நுமோகன்ஜி to ராசபக்ச


07.  ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறோம் - சோனியா காங்கிரஸ்


06.  பாரத ரத்னா (வாழ்த்துக்கள் சச்சின்)


05.  அவர் ஒரு பெண், அவரிடம் ஆயுதம் ஏதும் இல்லை, ஆனாலும் கை விலங்கிட்டு நிர்வாணப் படுத்தியிருக்கிறார்கள், தேவயானியை மீட்காமல் ஓய மாட்டேன் - சல்மான் குர்ஷித்


04.  டெல்லி சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க. தனித்துப் போட்டி


03.  விஸ்வரூபம் ஒலகம் முழுக்க ரிலீஸ் பண்றோம், அமெரிக்கா அனுப்புறோம், கொறஞ்சது பத்து ஆஸ்காரவது அள்றோம் - ஒலக நாயகனின் அடிபொடிகள்


02.  கூடன்குளத்திலிருந்து உற்பத்தி செய்யப் படும் 4000 மெகாவாட் மின்சாரத்திலிருந்து தமிழகத்திற்கு கனிசமான அளவு வழங்கப்படும் - all அமைச்சர்ஸ் from சென்ட்ரல் கவர்மென்ட்


*

 
*

*

01.  பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி

23 comments :

 1. ஒண்ணுக்கும் இரண்டுக்கும் எது முதலில் என்று போட்டி!
  தமிழ்மணம்+1

  ReplyDelete
  Replies
  1. வாங்க.... கருத்துக்கும் +1க்கும் நன்றி

   Delete
 2. 9வது காமெடிக்கு படம் சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜி...
   மேலிருந்து கீழ் ஒன்பதாவது படமா?
   கீழிருந்து மேல் ஒன்பதாவது படமா?

   Delete
 3. இது டாப் 50 காமெடியா இருந்தா இன்னும் நல்லா இருக்கும். கொஞ்சம் முயற்சி ப்ண்ணுங்களேன்.

  கோபாலன்


  எல்லோரும் சிரித்து வாழ எனது பங்கு இதில் : kgopaalan.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபாலன்...
   டாப் 50 பண்ணியிருந்தா கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.
   அடுத்த ஆண்டு சிறப்பா பண்ணிடுவோம். காமெடிக்கா பஞ்சம்?!

   Delete
 4. 9,8 சூப்பர்!! டாப் 1 இருக்கே எல்லாத்தையும் மிஞ்சிவிட்டது!!

  ஓட்டு மெஷின் எங்கே? ஓட்டு மெஷின் இல்லாம எப்படி ஓட்டுப் போடறதாம்?!!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ அய்யா... கருத்துக்கு நன்றி...
   அந்த ஓட்டு மெஷினை எப்படி உருவாக்கறதுன்னு சொன்னீங்கன்னா வெச்சுடலாம்...
   I.T.-ல நான் ரொம்ம்ம்ப வீக்...

   Delete
  2. என்னா துளசி! ஏன்னா மலர்!
   வோட்டு மெஷின் தான் மேலே இருக்கே! நான் +1 போட்டிருக்கேன்..
   அது தெரியவில்லை என்றால் வேற browser-இல் மாற்றிப் பாருங்கள்!

   Delete
  3. நம்பள்கி மாமா! எங்களுக்கு மலர் வண்ணன் blog ல தமிழ்மணத்துல submit பண்ணற பட்டைதான் தெரியறது!! browser மாத்தறது ....நடக்குமான்னு தெரியலை!

   மலர் வண்ணன் நாங்களும் எங்கள் தளத்தில் ஓட்டுப்பட்டை இணைக்க முற்சி செய்து, முடியாமல், பகவான்ஜி, திண்டுக்கல் தனபாலனைக் கைகாட்ட, DD எங்களுக்கு பேஷா இணைச்சுக் கொடுத்தார்! DD try பண்ணி பாருங்கோளேன்!!

   நன்றி!!

   Delete
  4. துளசி சொல்வதை நான் வழிமொழிகிறேன்... browser மாத்தியும் பாத்துட்டேன், ஓட்டுப்பட்டை தெரியல...
   இன்னைக்கு லீவு தானே, முயற்சி பண்ணி தெளிய தெரிய வெச்சிருவோம்...!!

   Delete
 5. பழைய இரும்பு ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம் ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. வாங்க சக்கர,
   ரொம்ப நாளா காணோம்....!!

   Delete
 6. கடைசி படத்தைப் பார்த்ததும் மோடி மீது இருந்த அபிப்பிராயம் மாறிவிட்டது !
  நல்ல தொகுப்பு !

  ReplyDelete
  Replies
  1. வாங்க பகவான்ஜி
   7-ம் மற்றும் 3-ம் இடத்திலுள்ள படங்கள் மட்டுமே ஒட்டு வேலை செய்யப் பட்டவை

   Delete
 7. மோடி கமடி சூப்பர் அண்ணாச்சி.

  ReplyDelete
 8. இது உங்கள் இடுகையின் ID:1297150
  அதன் லிங்க்:
  http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1297150
  _________________
  யார் ஓட்டுப் போட்டது?
  http://tamilmanam.net/who_voted.php?id=1297150

  நான்தான்! ஒரே ஒரு ஆள் தான்!
  கீழே காப்பி பேஸ்ட் செய்தது!

  thamizmanam

  இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்

  namblki

  சன்னலை மூடு
  _____________

  ReplyDelete
  Replies
  1. யார் ஒட்டு போட்டது என்ற அட்ரெஸ்-ஐ காப்பி பேஸ்ட் செய்து பாருங்கள்!

   Delete
  2. புடிச்சாச்சு....
   நன்றி

   Delete
 9. அனைத்தும் அருமை..... :)

  கடைசி படம் - டாப் க்ளாஸ்!

  ReplyDelete
 10. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்!!

  துளசிதரன், கீதா

  ReplyDelete