Friday, 21 February 2014

தங்கமணியுடன் தங்கம் வாங்கயில...

முகநூலில் முன்பு நான் எழுதிய  தங்கம் வாங்கிய கதை பதிவாக....
"தங்கம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவை" என விதிமுறைகளை அறிவுறுத்தும் பதிவல்ல இது... அப்படி எதிர்பார்த்து வந்து யாரும் ஏமாற வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மிச்சம் மீதி கொஞ்சம் காசு கையில இருந்தாலும் இவன் எங்கேயாவது டூர் அடிக்க கெளம்பிருவான்ட்டு தங்கம் வாங்கலாம்னு தங்கமணி நம்மள  11.11.12 அன்று சென்னை தாம்பரம் சானிடோரியத்திலுள்ள GRT நகைக் கடைக்கு கூட்டிட்டு போனாங்க...  "இனிமே எங்கூட கடைக்கு வருவியா"ன்னு நமக்கு தோணுற வரைக்கும் தேடிக்கிட்டே இருந்தாங்க... "கடை என்ன விலை"ன்னு கேக்காதது ஒன்னு தான் பாக்கி.  இறுதியா 7 கிராம் எடையுள்ள தோடு ஒரு ஜோடிய ஒருவழியா புடிச்சிட்டாங்க. எனக்குள்ள ஜன்லோக்பல்லே நிறைவேறிய திருப்தி.
நாம போன வேலை இனிமேதானே ஆரம்பம்.  கடைக்காரங்க மதிப்பை ஒரு துண்டு சீட்டில் கிராம் ஒன்றுக்கு ரூ.2891, 7 கிராம் ரூ.20237, சேதாரம் 18% ரூ.3642 , மொத்தம் ரூ.23879 என அச்சடித்துக் கொடுத்தார்கள்.  "இன்னைக்கு இவங்களா"ன்னு மனசுக்குள்ள சிரிச்சுக்கிட்டே  "18% எல்லாம் கொடுக்க முடியாது, பாத்து செய்ங்க" என மெதுவாக ஆரம்பித்தேன்..
"மேனேஜர் கிட்ட பேசிப் பாருங்க" என்றார்கள்..
"நீங்களே பேசிக்கோங்க, இல்லாட்டி மேனேஜரை இங்க வரச் சொல்லுங்க" என்றேன்...

உலகவங்கி ஓனரு உகாண்டாவுக்கு கடன் குடுக்கிற ரேஞ்சுக்கு முகத்தில் பல சுருக்கங்கள் விழ அவர் கால்குலேட்டரை மீண்டும் மீண்டும் லொடலொடவென தட்டி சேதாரத்தை 15% ஆக குறைத்துக் காட்டி, "இவ்ளோ தான் சார் முடியும்"ன்னார்.  "சேதாரம் 18% அல்ல, 25% கூடப் போடுங்கள், தரத் தயாராயிருக்கிறேன், ஆனால் சேதாரம் ஆன தங்கத்தை என்னிடமே கொடுத்து விடுங்கள், ஏனென்றால் அதற்கும் சேர்த்துத்தானே என்னிடம் வசூலிக்கப் போகிறீர்கள்...  அந்தத் தங்கம் என்ன நிலையில் இருந்தாலும் நான் எடுத்துக் கொள்கிறேன், உமியோடு இருந்தாலும் சரி, திரவமாக இருந்தாலும் சரி, செம்புடன் கலந்திருந்தாலும் சரி, நான் கொடுத்த காசுக்கு என் தங்கம் என்னிடம் வர வேண்டும், அதை நான் என்னமோ செய்து கொள்கிறேன், என் தங்கம் எனது உரிமை..!! தம்பி கொஞ்சம் தண்ணி கொடு..." என்றேன்.

அவர் சீட்டை எடுத்துக் கொண்டு எங்கோ போனார், சிறிது நேரம் கழித்து சரவணபவன் சூப்பர்வைசர் போல் ரெண்டு பேரை உடன் கூட்டி வந்தார்.  அவர்கள் சற்றே தோரணையுடன் "அப்படியெல்லாம் செய்ய முடியாது சார்" என்றார்கள்.
"எதை செய்ய முடியாது?"
"நீங்க கேக்கிற மாதிரி சேதாரத்தை குறைச்சு போடவோ, சேதாரத் தங்கத்தை கொடுக்கவோ முடியாது.."

"வெல்... உங்களுக்கு மூன்று options தருகிறேன்...
1. செய்கூலி, சேதாரம் இரண்டிற்கும் சேர்த்து 5% தருகிறேன்..
2. 18% தருகிறேன், ஆனால் அதற்கு நீங்கள் எனக்கு சேதாரம் ஆன தங்கத்தை தர வேண்டும், அல்லது ஏன் தர இயலாது என்ற  விளக்கத்தை உங்கள் பில்லுடன் சேர்த்து எழுத்து மூலம் தர வேண்டும்..
3. எனக்கு தங்கம் விற்பனை செய்ய முடியாது என்று உங்கள் வாயாலே சொல்லிவிடுங்கள், நான் சென்று விடுகிறேன்"
என்று சொன்னேன்.

அம்மணி, நம்மள பாத்து "எழவக் கூட்டிட்டியா..?! 10% கேட்டா கொடுத்திடுவாங்க, முடிச்சிட்டு வா, போலாம்"ன்னு சொல்ல,
"இது உங்கம்மா வீட்டுல புள்ளைக்கு குடுக்கிற சீதனமா இருந்தா பரவாயில்ல,.. நம்ம வாங்கறதாச்சே... அதுவுமில்லாம செலக்ட் பண்ண நீ எடுத்த நேரத்துல பத்துல ஒரு பங்குதான் நான் எடுக்கப் போறேன், காத்திரு" என்றேன்.
"எனக்குத் தெரியாது, எனக்கு அந்தத் தோடு வேணும்..." என கட்டளையிட அடிவயிற்றில் பேப்பர் வெயிட் ஒன்று உருண்டது.

அவர்கள் அங்குமிங்கும் நடந்தார்கள், யாராரிடமோ பேசினார்கள், என்னை தனியே அழைத்தார்கள், வர முடியாது என சொல்லிவிட்டு சர்விலன்ஸ் கேமராவில் முகம் நன்கு தெரியுமாறு உட்கார்ந்து கொண்டேன்.  மனதில் பல ஐடியாக்கள் ஓடின.  நண்பர்களில் மனித உரிமை ஆர்வலர், வக்கீல் போன்றோரது நம்பர்கள் செல்போனில் இருக்கிறதா என பார்த்துக் கொண்டேன்.

சரியான காரணத்தை விளக்காமல் நுகர்வோருக்கு பொருளை விற்பனை செய்ய முடியாது என்று யாராலும் சொல்ல இயலாது, சொல்லவும் கூடாது; விற்க மறுத்தால் சரியான காரணம் சொல்லாமல் என்னை தட்டிக் கழித்தது, நுகர்வோருக்கு பொருள் விற்பனை செய்ய மறுத்தது, வெகுநேரம் என்னை அங்கு அமரச் செய்தது என பல காரணங்களுக்காக எனக்கு அவர்கள் தண்டம் அழ வேண்டியிருக்கும்; அங்கிருந்த பிற வாடிக்கையாளர்களும், சர்விலன்ஸ் கேமராவுமே சாட்சிகள், வாடிக்கையாளர் சட்டத்திற்கு புறம்பாகவோ, வரம்பு மீறியோ நடந்தால் மட்டுமே வெளியேற்றப் படலாம் போன்றவை மனதில் ஓடிக் கொண்டே இருந்தன...

இதனிடையே, "பாத்தீங்களா அநியாயத்தை.." என துணைக்கு சில என்னைப் போன்ற அப்பாவி கணவன்களையும் அழைத்துக் கொண்டேன்.   இறுதியாக 6% ஆக குறைத்து எடுத்து வந்தார்கள்.  திருப்தியாக  வாங்கிக் கொண்டு, திண்டுக்கல் வேலு ஹோட்டலில் மட்டன் பிரியாணியும் மூளை வருவலும் சாப்பிட்டு வந்தோம்.

 
- அன்புடன்
- மலர்வண்ணன்

Thursday, 13 February 2014

இது கதிர்வேல் "மகன்" காதல்

தலைப்பில் உள்ள கதிர்வேலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னா, அந்தப் பெயர் கொண்ட அப்பாவிதான் என்னைப் பெற்ற அப்பா...

அப்போ காதல்..!?
திருப்பித் திருப்பி யோசித்தாலும் திருப்பு முனையில் திரும்ப, திருப்ப முடியாத அந்தக் காவியத்தைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்... கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்...

சாம்பிளுக்குச் சில... ட்ரையிலர் மாதிரின்னு வெச்சுக்கோங்க..!!

"gift பிடிச்சிருந்ததா..?"
"ம்ம்... ரொம்ப.."
"எவ்ளோ பிடிச்சிருந்தது?"
"அதான், ரொம்ப.."
"என்னை..!?"
...டொக்...


"தம் அடிக்கிறியே, அதுல அப்படி என்னதான் வருது?"
"தெரியலியா, புகை..!!"
"****, என்ன திருப்தி கிடைக்குது?"
"இந்தா, அடிச்சு பாரு..!!"


"என்னடா, வாத்தியார் பொண்ணை டாவடிக்கிறியாமே?"
"ஆமா..., அதுக்கென்ன?"
"அண்ணன் ரெண்டு தட்டு தட்டிட்டு வரச் சொன்னாரு..."
"தட்டித்தான் பாரேன்..!"


"இங்க பாருப்பா... இன்னொருத்தனுக்கு நிச்சயம் பண்ண பொண்ணு, சர்ச்ல ஒரு ஓலை விட்டாச்சு, இத்தோட விட்ரு..."
"அத பொண்ணு சொல்லட்டும்..., போயிட்டே இருக்கேன்..."


"நீ இவனைத்தான் கட்டிக்கிறதுன்னு முடிவோட இருக்கியாமா?"
"ஆமா..."
"ஆர் யூ ஷ்யூர்..?"
"101%..."
"ம்ஹூம்..., இவனுக்கு எவன் பொண்ணு குடுப்பான், எப்படி தேடுறதுன்னு இருந்தேன், நீயா வந்து மாட்டிக்கிட்ட, பாத்தா ரொம்ப  நல்ல பொண்ணு மாதிரி இருக்க, கடைசியா warn பண்றேன், தப்பிச்சிக்கோ..."


"ஒன்னு மட்டும் மறந்துடாத மச்சி..., லவ்வுன்றது.... ...."
"நீ மூடிட்டு மொதல்ல இங்கிருந்து போறியா?"


"நாம பிரியறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்.."
"யாருக்கு...?"


உண்மை நிகழ்வை மையைப்படுத்தி உருவாகிக் கொண்டிருக்கிறது ஒரு பிங்க் (எவ்ளோ நாளைக்குத் தான் கறுப்பு, சிவப்புன்னு சொல்றது) காதல் சரித்திரம்..!! எதிர் பார்க்கிறீர்களோ  இல்லையோ, விரைவில் வெளிவரும்...!!

- அன்புடன்
- மலர்வண்ணன்


இந்த ஆர்ட்டின்க்கு நடுவுல அம்புக்குறி வுடுற டிசைனை எவன் கண்டுபுடிச்சான்னு தெரியல..!! பிஞ்சுல பழுத்த வயசுல நாங்க அதை ஏதோ கெட்டவார்தைன்னு நெனைச்சதுண்டு...!!
உலகெங்குமுள்ள காதலர்க்கு (கள்ளக்காதலர் நீங்கலாக) காதலர் தின வாழ்த்துக்கள்...!! 


 

Feb-13 உலக ரேடியோ தினத்தை முன்னிட்டு...

இன்று உலக ரேடியோ தினத்தை முன்னிட்டு, எனது பழைய ஈஸ்ட்மென் பதிவான "ரேடியோவும் நானும்" புத்தம் புதிய கலராக உங்கள் பார்வைக்கு...


ரேடியோவைப் பார்த்தது போதும், பதிவைப் படிக்க கீழுள்ள link-ஐ க்ளிக்கவும்

http://www.malarinninaivugal.blogspot.com/2012/07/blog-post_26.html

"The World Radio Day on 13th Feb of every year to celebrate Radio as medium, to improve international cooperation between broadcasters, and to encourage major networks and community Radio alike to promote access to information, freedom of expression and gender equality over the airwaves" - UNESCO http://www.worldradioday.org/ 


- அன்புடன்
- மலர்வண்ணன்


13 February is World Radio Day — a day to celebrate radio as a medium; to improve international cooperation between broadcasters; and to encourage major networks and community radio alike to promote access to information, freedom of expression and gender equality over the airwaves. - See more at: http://www.unesco.org/new/en/world-radio-day#sthash.7qPNlbWD.dpuf
13 February is World Radio Day — a day to celebrate radio as a medium; to improve international cooperation between broadcasters; and to encourage major networks and community radio alike to promote access to information, freedom of expression and gender equality over the airwaves. - See more at: http://www.unesco.org/new/en/world-radio-day#sthash.7qPNlbWD.dpuf
13 February is World Radio Day — a day to celebrate radio as a medium; to improve international cooperation between broadcasters; and to encourage major networks and community radio alike to promote access to information, freedom of expression and gender equality over the airwaves. - See more at: http://www.unesco.org/new/en/world-radio-day#sthash.7qPNlbWD.dpuf
13 February is World Radio Day — a day to celebrate radio as a medium; to improve international cooperation between broadcasters; and to encourage major networks and community radio alike to promote access to information, freedom of expression and gender equality over the airwaves. - See more at: http://www.unesco.org/new/en/world-radio-day#sthash.neuB3Y4z.dpuf
13 February is World Radio Day — a day to celebrate radio as a medium; to improve international cooperation between broadcasters; and to encourage major networks and community radio alike to promote access to information, freedom of expression and gender equality over the airwaves. - See more at: http://www.unesco.org/new/en/world-radio-day#sthash.neuB3Y4z.dpuf

Tuesday, 11 February 2014

இனி, திண்டுக்கல்லுனா தனபாலன்தான்...

ஒரு தனிமனிதனால் தமிழ்ப் பதிவர்களை இப்படி ஊக்குவிக்க முடியுமா? தினமும் பதிவேற்றப் படும் நூற்றுக்கணக்கான பதிவுகளையும் எப்படி படிக்க முடிகிறது?  அனைத்திற்கும் எப்படி பாசிடிவான கமெண்ட் போட முடிகிறது?  வியக்கிறேன், நம்மால் செல்லமாக DD என அழைக்கப் படும் திண்டுக்கல் தனபாலனைக் கண்டு..!!
நம்பள்கி, சேட்டைக்காரன், பிலாசபி, பக்கி லீக்ஸ் போன்றோரது பதிவுகளைக் கண்டால் லொடக்கென்று திறந்து படிக்க ஆரம்பித்து விடுவேன், சிரிப்பிற்கு மினிமம் கியாரண்டி... கருந்தேள், உ.சி.ரசிகன், ஹா.பாலா, ஜாக்கி போன்றோறதையும் மிஸ் பண்ணாமல் படித்து விடுவேன் உலக சினிமா மேல் உள்ள ஆர்வத்தால். அதேபோல, DD, கவியாழி, துளசியார், தமிழ்வாசி, வெ.நாகராஜ் (லிஸ்டில் விட்டுப் போனவர்கள் மன்னிச்சூ..) மற்றும் பலரது பதிவுகளையும் படித்துவிடுவேன் அவர்கள் தொடர்ந்து என் பதிவுகளையும் படிப்பதால்...  பல பதிவுகளின் தலைப்பு கவராவிட்டால் படிக்க ஆர்வமில்லாமல் அடுத்தவற்றிற்கு தாவிச் சென்று விடுவேன்.

ஆனால் நம்ம DD, சான்சே இல்ல... ஒவ்வொரு பதிவுக்கும் கமென்ட் போடுறாரே, ஏதும் சும்மான்னாச்சுக்கும் "எழுத்துநடை அருமை, தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், இன்று என் தளத்தில் www.xxxxxxxxxxx..." என்று ஜல்லியடிக்காமல் சீரியசாகவே பதிவு முழுவதையும் படித்து கமென்ட் போடுவார்.  சில மொக்கையான பதிவுகளுக்குக் கூட, "ஹா.. ஹா.. ஹா..." என்று கமென்ட் போடுவார், அர்த்தம் DD-க்கே வெளிச்சம்..!!

இரண்டு நாட்களுக்கு முன்பு எனது blog-ல் தமிழ்மணத்தின் ஓட்டுப் பெட்டி வருமாறு அமைத்துக் கொடுக்க DD-க்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.  உடனடியாக சில டெக்னிக்கல் சமாச்சாரங்களை இணைத்து பதில் அனுப்பினார், அவருடைய செல்பேசி நம்பருடன்... microsoft-ன் பரம மக்கான என் அறிவுக்கு எட்டிய வரை முயற்ச்சித்து வர வைத்து விட்டேன், ஆனால் ஒரு புதிய சிக்கலுடன்... 
 
நேற்று மாலை ஏழரை மணியளவில் DD-யை தொலைபேசியில் அழைத்து அவருக்கு ஏழரையை கூட்டினேன்.  "DD, நான் மலர்வண்ணன், மலரின் நினைவுகள்..." என்று சொன்னவுடன், சிறு வயதில் ஓடிப்போன தாய்மாமாவை பெரியவனானதும் கண்ட வாஞ்சையுடன் பேசத் தொடங்கினார்.  பேச்சில் அன்பின் வெளிப்பாடு தெரிய மிகுந்த மகிழ்ச்சியுடன் உரையாடினோம், என் டெக்க் பிரச்சனையை சொன்னேன், அடுத்த பத்து நிமிடங்களில் அவரே சரி செய்து கொடுத்தார்.  நான் சொல்லாத சில சமாச்சாரங்களையும் அவரே கண்டு நிவர்த்தி செய்து மெருகேற்றினார்.  சும்மா சொல்லக் கூடாது, அவருடைய் பேச்சில் அப்படியொரு மரியாதை... இத்தனைக்கும் அவரை விட நான் முப்பது வருடங்கள் இளையவன்...!!

இரவு ஒன்பதரை மணிக்கு இன்னொரு டவுட்டு வர, ஏழரையைக் கூட்டலாமா வேண்டாமா என யோசித்து, அட, நம்ம DD தானே என்று கூப்பிட்டே விட்டேன்.  அதே உபசரிப்பு, அவரு வீட்டம்மணி வேறு ராதிகா சீரியல் பார்த்துக் கொண்டிருப்பதால் தான் ரொம்ம்ம்ப சும்மாவே இருப்பதாகச் சொன்னார்.  மறுபடியும் அதே அன்பு, பண்பு, பாசத்துடன் தன் கடமையே இது தான் என்பது போல் சரி செய்து கொடுத்தார்.  "DD, ஒரு அர்ஜென்ட் செலவு, நாளைக்கு ஒரு இருபதாயிரம் வேணும்"னு சொல்லியிருந்தா.. உடனே DD, DD எடுத்து அனுப்பி விடுவார் போல..!!

பலரும் இதுபோல் அன்புத் தொல்லைகள் கொடுப்பதால் டெக்னிக்கலா பதிவு எழுதுவது எப்படின்னு ஒரு பதிவு எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.  காத்திருக்கிறோம் DD. 
google images-ல் திண்டுக்கல் தனபாலன் என தட்டச்சு செய்யும் போது வந்த படங்கள்... முதலிடத்தில் நம்ம DD.  திண்டுக்கல்லுன்னா இனி பூட்டோ, தலப்பாக்கட்டியோ அல்ல..., நம் தனபாலன்...!!
 
- அன்புடன்
- மலர்வண்ணன்

Sunday, 9 February 2014

உலு(ரு)க்கும் பாடல்கள் - பாகம் 4

கடந்த மூன்று பாகங்களில் என்னை உ(லு)ருக்கிய  ராஜாவின் இசை மழையிலிருந்து ஓரிரு துளிகள் பார்த்தோம்.
பார்க்காதவர்க்கு...
உ(லு)ருக்கும் பாடல்கள் - பாகம் 1
உ(லு)ருக்கும் பாடல்கள் - பாகம் 2 
உ(லு)ருக்கும் பாடல்கள் - பாகம் 3 

ராஜாவின் ஆளுமையைப் பற்றி சலிக்காமல் எழுதிக் கொண்டே போகலாம் என்பதால், பிறிதொரு சமயம் தொடர்வோம்.  எவன் எந்தக் கட்சி என தெரியாமல் அரசியல்  பேசுவதைப் போல, ஆள்பவன் தெரியாமல் வோட்டுப் போடுவதைப் போல, இங்கிலீஷ் தெரியாமல் ஜேம்ஸ்பான்ட்  படம் பார்ப்பதைப் போல இப்பாகத்தில் என்னை இசையால் உள்ளிழுத்துக் கொண்ட ஆங்கிலப் பாடல்களைப் பற்றி...., எல்லாம் ஒரு மனதைரியம் தான்...!!

நான் முன்னமே சொன்னது போல் எமது வீட்டில் நான் +2 முடிக்கும் வரையிலும் 2-in-1, tape recorder வாங்கப் படவேயில்லை.  தமிழ்ப் பாடல்களை ரேடியோவிலும், பொது ஸ்பீக்கர்களிலும், ஆங்கிலப் பாடல்களை நண்பர் வீட்டில் ஏதோ பெருசா புரிஞ்ச மாதிரி தலையாட்டிக் கேட்பேன்.

வருடம் 85 இருக்கலாம், உறவினர் ஒருவர் சேலத்தில் லாட்ஜில் தங்கியிருந்தவர் பணி மாற்றம் காரணமாக தன்னுடைய உடமைகளை சில நாட்கள் நமது வீட்டில் போட்டு வைத்திருந்தார், அவருடைய டேப் ரெக்கார்டர் உட்பட.  அப்பொழுதெல்லாம் கடைகளில் ரெக்கார்ட் செய்யப் படும் கேசட்டுகளில் முடிவில் சில நிமிடங்கள் இடமிருந்தால் ஆங்கிலப் பாடல்களை அந்தக் காலியிடத்தில் பதிவு செய்து தருவார்கள்.  அதுபோல ஒரு கேசட்டில் நான் கேட்ட பாடலிது...  ஆரம்பமே அசத்தலாக ஹெவி மெடல் கிடார் மற்றும் ட்ரம்ஸ்ஸுடன் ஆரம்பித்து ஒரு அதிரடியான கோரஸுடன் பிக்கப் எடுத்து நரம்புகளை புடைக்கச் செய்யும்.  பாட்டின் அடிநாதமே அந்த கோரஸ் தான்...  ஒரு வாரமாக திரும்பத் திரும்ப அப் பாடலைக் கேட்டும் பாடலின் ஒரு வார்த்தை கூட அப்போது எனக்குப் புரியவில்லை.

தொடர்ந்து சில வருடங்களாக அந்த கோரஸ் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.  வருடம் 86 அல்லது 87 என நினைக்கிறேன், தூர்தர்ஷனில் ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப் பட்டு வந்த Eurotops என்ற நிகழ்ச்சியை பக்கத்து வீட்டில் ஓசியில் ரெகுலராக பார்த்து விடுவேன்.  இதுல கொடுமை என்னன்னா அந்த நிகழ்ச்சியை அவர்கள் வீட்டில் யாரும் விரும்பிப் பார்க்க மாட்டார்கள்.  எனக்காக மட்டுமே ஓடும்.  ஒரு ஞாயிறு அன்று அப்பாடலை காணக் கிடைக்க தரிசித்தேன்.  இம்முறை jungle life, sunny afternoon பாடலின் பாடலின் ஓரிரு வார்த்தைகள் புரிந்தன..., மேலும் சொல்லத் தேவையில்லை... 1985 -ல் வெளிவந்த Baltimora-வின் Tarzan Boy பாடல் தான் அது.
பின்னாளில் இணையத்தில் புழங்க ஆரம்பித்த பிறகு தெரிய வந்த விபரங்கள், Baltimora இத்தாலியர், இப்பாடல் 93 மற்றும் 98-ம் வருடங்களில் மீண்டும் ரெக்கார்ட் செய்யப்பட்டது.  இந்த ஒரே பாடலின் மூலம் Baltimora,  European Top 20, Billboard Top 1௦௦ என புகழின் உச்சிக்கு சென்றார், பின் அவராலேயே அந்த இடத்தை சில வருடங்கள் தக்க வைத்துக் கொள்ளவோ, மீண்டும் தொடவோ முடியவில்லை.

அப்பொழுதெல்லாம் பல வீடுகளில் டேப் ரெக்கார்டர் இருந்தாலும் ஒரு சில வீடுகளில் மட்டுமே ஆங்கிலப் பாடல்கள் அடங்கிய கேசட் இருக்கும்.  Agnetha, Benny, Björn மற்றும் Anni-Frid அடங்கிய Swedish நால்வர் குழுவான ABBAவின் ஆல்பம் இல்லாது போகாது. அவர்களுடைய எட்டு ஆல்பங்களில் ஒன்றான Voulez-Vous வரும் Chiquitita பாடல் எனது all time favorites-ல் ஒன்று.  பாடல் ஒலித்து முடிக்கும் வரை கேசட் கவரையே உத்து உத்து பார்த்துக் கொண்டிருப்பேன்... நம்மளால முடிஞ்சது அது மட்டுந்தானே...!!  என்னன்னே தெரியாது, ஆல்பத்திலுள்ள அனைத்துப் பாடல்களும் முடியும் வரை கவரை இருபுறமும் மாற்றி மாற்றி உற்றுப் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.

சென்னையில் கல்லூரியில் படிக்கும் போது மவுன்ட் ரோடு ரிச்சி ஸ்ட்ரீட்லுள்ள ஸ்டீரியோ விஷனுக்கு குறைந்தது வாரம் ஒரு முறையாவது சென்று விடுவேன்.  அங்கிருக்கும் ஆங்கில கேசட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தடவிப் பார்ப்பதே தனி சுகம் தான்.  நாம் விரும்பும் பாடலைக் கேட்டால் ஓட விட்டும் காட்டுவார்கள். மாதம் நாலு முறை சென்றாலும் ஒரு முறைதான் ஒன்று அல்லது அதிக பட்சமாக இரண்டு கேசட் வாங்குவேன், வீட்டில் தரும் காசில் அவ்வளவுதான் மிச்சம் பிடித்து வாங்க முடியும்.  Faith(George Michael), Dangerous(MJ), Erotica(Madonna), MCMXCa.d(Enigma), Ready for Romance(Modern Talking) என ஸ்டீரியோ விஷனில் நான் வாங்கிக் குவித்த ஆல்பங்கள் ஏராளம்.

90களில் Magna Sound நிறுவனம், "Everlasting Love Songs" என ஏழெட்டு series விட்டார்கள்.  அனைத்தையும் வாங்கினேன்.  மொத்தப் பாடல்களிலும் என்னாலும், உடனிருந்த நண்பர்களாலும் ஏகோபித்த, ஒகோபித்த சிறந்த பாடல் 85-ல் வந்த George Benson-னின் "nothing's gonna change my love for you"  யப்பா...!!  கல்லுக்கும் காதல் வரவைக்கும் பாடல்... தென்றலைப் போல ஆரம்பித்து, மனமெங்கும் வருடி, உள்ளுக்குள் காட்டாற்றைப் போல நுழைந்து, புயலைப் போல் கொள்ளையடித்து வெளியேறும் பாடல்.  ஒருநூறு காதல் தோல்விகள் இருந்தாலும் இப்பாடலைக் கேட்டால் மீண்டும் மனம் காதலுக்காக எங்க ஆரம்பித்து விடும்.  "Our dreams are young and we both know, they'll take us where we want to go, Hold me now, touch me now, I don't want to live without you..." என இப்பொழுதும் வீட்டு அம்மணியுடன் காதலுடன் பாடுவதுண்டு...!!
ஸ்டீரியோ விஷன் இன்றும் அதே இடத்தில் சீண்டுவாரின்றி அமைதியாக தன காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது.

அடுத்தப் பாடலைப் பற்றி எழுதவில்லைஎன்றால் இப்பதிவு நிறைவு பெறாது.  76ம் வருடத்தின் சிறந்த ஆல்பம், சிறந்த பாடல், 35மில்லியன் ரெக்கார்டுகளும் கேசட்டுகளும் விற்பனை, ஆல்பத்தின் இரண்டு பாடல்களுக்கு Grammy விருதுகள்.  Billboard-ல் முதலிடம், Kent Music-ல் முதலிடம்... இன்னும் பல....
அந்த artist - Eagles, அந்த ஆல்பம்/பாடல் - Hotel California...!!   இப்போது கேட்டாலும் புதிதாகக் கேட்பது போல் இருக்கும் காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான single.  சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு  resto bar-ல் karoke-வில் இப்பாடலை நான் பாடி கைத்தட்டல்களையும், சில அனைப்புகளையும்,  சில கை குலுக்கல்களையும் பெற்ற கொடுமையான சம்பவத்தை இங்கே நினைவு படுத்த கடமைப் பட்டுள்ளேன்.

என்னோட இசை ஞானத்திற்கு பாடலா, வசனமா எந்த வகையில் சேர்த்தி என்றொரு பாடல், rap அல்ல... ஆனால் பக்கா melody..!!  Lionel Richie-யின், All night long, Say you say me, Stuck on you, Truly, My love, Penney Lover  போன்ற பாடல்கள் செம வெயிட்டான மரண ஹிட்டுகள் என்றாலும் இவையனைத்தும் அவருடைய "Hello..." பாடலின் முன் நிற்க முடியாது.  பள்ளிப் பருவத்தில் இப்பாடலைக் கேட்கும் போது இதில் வரும் hello..., மற்றும் i love you... என்ற வார்த்தைகள் மட்டுமே புரியும்.  கல்லூரிக் காலத்தில் ஒரு நாள் கூட்டாக உட்கார்ந்து இப்பாடலின் வரிகளை எழுதி பாடிக் கொண்டு திரிந்தோம்... Lionel Richie ஒரு நடிகன் என்பதாலும் இப்பாடலின் வீடியோவில் அருமையாக வரிகளுக்கேற்ப முகபாவனைகளை வெளிப் படுத்தியிருப்பார்.  பாட்டின் ஹை லைட்டே பாடகன் காதலுக்காக கெஞ்சுறானா, கொஞ்சுறானான்னே தெரியாது...!!
இன்னும் என்னை வசீகரித்த MJ, Michael Learns to Rock, Bryan Adams, George Michael, Madonna, Tina Turner, Whitney Houston என பெரிய  பட்டாளமே  உள்ளது...  அடுத்த  பதிவில் சந்திப்போம்

- அன்புடன்
- மலர்வண்ணன