Sunday, 9 February 2014

உலு(ரு)க்கும் பாடல்கள் - பாகம் 4

கடந்த மூன்று பாகங்களில் என்னை உ(லு)ருக்கிய  ராஜாவின் இசை மழையிலிருந்து ஓரிரு துளிகள் பார்த்தோம்.
பார்க்காதவர்க்கு...
உ(லு)ருக்கும் பாடல்கள் - பாகம் 1
உ(லு)ருக்கும் பாடல்கள் - பாகம் 2 
உ(லு)ருக்கும் பாடல்கள் - பாகம் 3 

ராஜாவின் ஆளுமையைப் பற்றி சலிக்காமல் எழுதிக் கொண்டே போகலாம் என்பதால், பிறிதொரு சமயம் தொடர்வோம்.  எவன் எந்தக் கட்சி என தெரியாமல் அரசியல்  பேசுவதைப் போல, ஆள்பவன் தெரியாமல் வோட்டுப் போடுவதைப் போல, இங்கிலீஷ் தெரியாமல் ஜேம்ஸ்பான்ட்  படம் பார்ப்பதைப் போல இப்பாகத்தில் என்னை இசையால் உள்ளிழுத்துக் கொண்ட ஆங்கிலப் பாடல்களைப் பற்றி...., எல்லாம் ஒரு மனதைரியம் தான்...!!

நான் முன்னமே சொன்னது போல் எமது வீட்டில் நான் +2 முடிக்கும் வரையிலும் 2-in-1, tape recorder வாங்கப் படவேயில்லை.  தமிழ்ப் பாடல்களை ரேடியோவிலும், பொது ஸ்பீக்கர்களிலும், ஆங்கிலப் பாடல்களை நண்பர் வீட்டில் ஏதோ பெருசா புரிஞ்ச மாதிரி தலையாட்டிக் கேட்பேன்.

வருடம் 85 இருக்கலாம், உறவினர் ஒருவர் சேலத்தில் லாட்ஜில் தங்கியிருந்தவர் பணி மாற்றம் காரணமாக தன்னுடைய உடமைகளை சில நாட்கள் நமது வீட்டில் போட்டு வைத்திருந்தார், அவருடைய டேப் ரெக்கார்டர் உட்பட.  அப்பொழுதெல்லாம் கடைகளில் ரெக்கார்ட் செய்யப் படும் கேசட்டுகளில் முடிவில் சில நிமிடங்கள் இடமிருந்தால் ஆங்கிலப் பாடல்களை அந்தக் காலியிடத்தில் பதிவு செய்து தருவார்கள்.  அதுபோல ஒரு கேசட்டில் நான் கேட்ட பாடலிது...  ஆரம்பமே அசத்தலாக ஹெவி மெடல் கிடார் மற்றும் ட்ரம்ஸ்ஸுடன் ஆரம்பித்து ஒரு அதிரடியான கோரஸுடன் பிக்கப் எடுத்து நரம்புகளை புடைக்கச் செய்யும்.  பாட்டின் அடிநாதமே அந்த கோரஸ் தான்...  ஒரு வாரமாக திரும்பத் திரும்ப அப் பாடலைக் கேட்டும் பாடலின் ஒரு வார்த்தை கூட அப்போது எனக்குப் புரியவில்லை.

தொடர்ந்து சில வருடங்களாக அந்த கோரஸ் என் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது.  வருடம் 86 அல்லது 87 என நினைக்கிறேன், தூர்தர்ஷனில் ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப் பட்டு வந்த Eurotops என்ற நிகழ்ச்சியை பக்கத்து வீட்டில் ஓசியில் ரெகுலராக பார்த்து விடுவேன்.  இதுல கொடுமை என்னன்னா அந்த நிகழ்ச்சியை அவர்கள் வீட்டில் யாரும் விரும்பிப் பார்க்க மாட்டார்கள்.  எனக்காக மட்டுமே ஓடும்.  ஒரு ஞாயிறு அன்று அப்பாடலை காணக் கிடைக்க தரிசித்தேன்.  இம்முறை jungle life, sunny afternoon பாடலின் பாடலின் ஓரிரு வார்த்தைகள் புரிந்தன..., மேலும் சொல்லத் தேவையில்லை... 1985 -ல் வெளிவந்த Baltimora-வின் Tarzan Boy பாடல் தான் அது.
பின்னாளில் இணையத்தில் புழங்க ஆரம்பித்த பிறகு தெரிய வந்த விபரங்கள், Baltimora இத்தாலியர், இப்பாடல் 93 மற்றும் 98-ம் வருடங்களில் மீண்டும் ரெக்கார்ட் செய்யப்பட்டது.  இந்த ஒரே பாடலின் மூலம் Baltimora,  European Top 20, Billboard Top 1௦௦ என புகழின் உச்சிக்கு சென்றார், பின் அவராலேயே அந்த இடத்தை சில வருடங்கள் தக்க வைத்துக் கொள்ளவோ, மீண்டும் தொடவோ முடியவில்லை.

அப்பொழுதெல்லாம் பல வீடுகளில் டேப் ரெக்கார்டர் இருந்தாலும் ஒரு சில வீடுகளில் மட்டுமே ஆங்கிலப் பாடல்கள் அடங்கிய கேசட் இருக்கும்.  Agnetha, Benny, Björn மற்றும் Anni-Frid அடங்கிய Swedish நால்வர் குழுவான ABBAவின் ஆல்பம் இல்லாது போகாது. அவர்களுடைய எட்டு ஆல்பங்களில் ஒன்றான Voulez-Vous வரும் Chiquitita பாடல் எனது all time favorites-ல் ஒன்று.  பாடல் ஒலித்து முடிக்கும் வரை கேசட் கவரையே உத்து உத்து பார்த்துக் கொண்டிருப்பேன்... நம்மளால முடிஞ்சது அது மட்டுந்தானே...!!  என்னன்னே தெரியாது, ஆல்பத்திலுள்ள அனைத்துப் பாடல்களும் முடியும் வரை கவரை இருபுறமும் மாற்றி மாற்றி உற்றுப் பார்த்துக் கொண்டேயிருப்பேன்.

சென்னையில் கல்லூரியில் படிக்கும் போது மவுன்ட் ரோடு ரிச்சி ஸ்ட்ரீட்லுள்ள ஸ்டீரியோ விஷனுக்கு குறைந்தது வாரம் ஒரு முறையாவது சென்று விடுவேன்.  அங்கிருக்கும் ஆங்கில கேசட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து தடவிப் பார்ப்பதே தனி சுகம் தான்.  நாம் விரும்பும் பாடலைக் கேட்டால் ஓட விட்டும் காட்டுவார்கள். மாதம் நாலு முறை சென்றாலும் ஒரு முறைதான் ஒன்று அல்லது அதிக பட்சமாக இரண்டு கேசட் வாங்குவேன், வீட்டில் தரும் காசில் அவ்வளவுதான் மிச்சம் பிடித்து வாங்க முடியும்.  Faith(George Michael), Dangerous(MJ), Erotica(Madonna), MCMXCa.d(Enigma), Ready for Romance(Modern Talking) என ஸ்டீரியோ விஷனில் நான் வாங்கிக் குவித்த ஆல்பங்கள் ஏராளம்.

90களில் Magna Sound நிறுவனம், "Everlasting Love Songs" என ஏழெட்டு series விட்டார்கள்.  அனைத்தையும் வாங்கினேன்.  மொத்தப் பாடல்களிலும் என்னாலும், உடனிருந்த நண்பர்களாலும் ஏகோபித்த, ஒகோபித்த சிறந்த பாடல் 85-ல் வந்த George Benson-னின் "nothing's gonna change my love for you"  யப்பா...!!  கல்லுக்கும் காதல் வரவைக்கும் பாடல்... தென்றலைப் போல ஆரம்பித்து, மனமெங்கும் வருடி, உள்ளுக்குள் காட்டாற்றைப் போல நுழைந்து, புயலைப் போல் கொள்ளையடித்து வெளியேறும் பாடல்.  ஒருநூறு காதல் தோல்விகள் இருந்தாலும் இப்பாடலைக் கேட்டால் மீண்டும் மனம் காதலுக்காக எங்க ஆரம்பித்து விடும்.  "Our dreams are young and we both know, they'll take us where we want to go, Hold me now, touch me now, I don't want to live without you..." என இப்பொழுதும் வீட்டு அம்மணியுடன் காதலுடன் பாடுவதுண்டு...!!
ஸ்டீரியோ விஷன் இன்றும் அதே இடத்தில் சீண்டுவாரின்றி அமைதியாக தன காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறது.

அடுத்தப் பாடலைப் பற்றி எழுதவில்லைஎன்றால் இப்பதிவு நிறைவு பெறாது.  76ம் வருடத்தின் சிறந்த ஆல்பம், சிறந்த பாடல், 35மில்லியன் ரெக்கார்டுகளும் கேசட்டுகளும் விற்பனை, ஆல்பத்தின் இரண்டு பாடல்களுக்கு Grammy விருதுகள்.  Billboard-ல் முதலிடம், Kent Music-ல் முதலிடம்... இன்னும் பல....
அந்த artist - Eagles, அந்த ஆல்பம்/பாடல் - Hotel California...!!   இப்போது கேட்டாலும் புதிதாகக் கேட்பது போல் இருக்கும் காலத்தால் அழிக்க முடியாத அற்புதமான single.  சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு  resto bar-ல் karoke-வில் இப்பாடலை நான் பாடி கைத்தட்டல்களையும், சில அனைப்புகளையும்,  சில கை குலுக்கல்களையும் பெற்ற கொடுமையான சம்பவத்தை இங்கே நினைவு படுத்த கடமைப் பட்டுள்ளேன்.

என்னோட இசை ஞானத்திற்கு பாடலா, வசனமா எந்த வகையில் சேர்த்தி என்றொரு பாடல், rap அல்ல... ஆனால் பக்கா melody..!!  Lionel Richie-யின், All night long, Say you say me, Stuck on you, Truly, My love, Penney Lover  போன்ற பாடல்கள் செம வெயிட்டான மரண ஹிட்டுகள் என்றாலும் இவையனைத்தும் அவருடைய "Hello..." பாடலின் முன் நிற்க முடியாது.  பள்ளிப் பருவத்தில் இப்பாடலைக் கேட்கும் போது இதில் வரும் hello..., மற்றும் i love you... என்ற வார்த்தைகள் மட்டுமே புரியும்.  கல்லூரிக் காலத்தில் ஒரு நாள் கூட்டாக உட்கார்ந்து இப்பாடலின் வரிகளை எழுதி பாடிக் கொண்டு திரிந்தோம்... Lionel Richie ஒரு நடிகன் என்பதாலும் இப்பாடலின் வீடியோவில் அருமையாக வரிகளுக்கேற்ப முகபாவனைகளை வெளிப் படுத்தியிருப்பார்.  பாட்டின் ஹை லைட்டே பாடகன் காதலுக்காக கெஞ்சுறானா, கொஞ்சுறானான்னே தெரியாது...!!
இன்னும் என்னை வசீகரித்த MJ, Michael Learns to Rock, Bryan Adams, George Michael, Madonna, Tina Turner, Whitney Houston என பெரிய  பட்டாளமே  உள்ளது...  அடுத்த  பதிவில் சந்திப்போம்

- அன்புடன்
- மலர்வண்ணன

13 comments :

 1. இசைக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம் அதிகம் மேற்கத்திய இசை ஆல்பங்கள் சுத்தமாக அறிமுகம் இல்லை. மைக்கேல் ஜாக்சனின் சில ஆல்பங்களின் பெயர்கள் மட்டுமே தெரியும். நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மேலே நான் குறிப்பிட்டிருக்கும் பாடல்களை முழுவதுமாக கேட்டுப் பாருங்கள்..., மேலும் இதுபோன்று பல பாடல்களை என்னிடம் கேட்டுப் பெறுவீர்கள்.

   Delete
 2. கல்லூரி நாட்கள் ஞாபகம் வந்தது... அப்போது தான் இவைகள் எல்லாம்...

  இப்போதெல்லாம் ம்...

  ரசனைக்கு பாராட்டுக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ரசனைக்கு காலமேது DD
   இவையெல்லாம் எனது all time favorites... இப்போதும் கேட்கிறேன்

   Delete
 3. //எவன் எந்தக் கட்சி என தெரியாமல் அரசியல் பேசுவதைப் போல, ஆள்பவன் தெரியாமல் வோட்டுப் போடுவதைப் போல, இங்கிலீஷ் தெரியாமல் ஜேம்ஸ்பான்ட் படம் பார்ப்பதைப் போல இப்பாகத்தில் என்னை இசையால் உள்ளிழுத்துக் கொண்ட ஆங்கிலப் பாடல்களைப் பற்றி...., எல்லாம் ஒரு மனதைரியம் தான்...!!// ரசித்தோம்....

  நல்ல பகிர்வு! தமிழ் பாடல்கள் தான், அதுவுமே கல்லூரி காலத்தில் தடைகள் கூடுதல்....என்றாலும் இலங்கை வானொலி மூலம் கேட்ட பாடல்கள் அதிகம்......கல்லூரியில் அந்த சமயத்து தாங்கள் பகிர்ந்திருக்கும் ஒரு சில பாடல்கள் கேட்டு ரசித்தது உண்டு.....இசை கேட்பதற்கு தடையேதும் இல்லைதான்...ஆனாலும்.....தற்போது பல காரணங்களால் குறைந்திருக்கிறது...தங்கள் பதிவில் உள்ள பாடல்களைக் கேட்டபின் திரும்பவும் பழயது நினைவுக்கு வந்து உயிர்ப்பித்து விட்டுள்ளது......ராஜாவின் பாடல்கள் எப்போதுமே அருமை.....சொல்லி மாளாதுதான்.....how to name it....ஆல்பம்.....பல விஷயங்களைச் சொல்லும்.....ஏன் அப்படி ஒரு பெயர் வைத்தார் என்று தெரிய வில்லை....

  ReplyDelete
 4. நன்றி துளசியாரே...
  என்னைப் பொறுத்தவரை தான் இசையைக் கேட்டு ரசிப்பது அதிகரித்துள்ளது...
  "nothing but wind"-இல் எப்படி காற்றி ஆரம்பித்து காற்றில் முடிப்பாரோ அது போல "how to name it"-லும் ஏதாவது குறியீடு இருக்கும்... ஞானிகளுக்கே வெளிச்சம்..
  முடிந்தால் ராஜாவின் "india 24 hours " மற்றும் "குரு ரமண கீதம்" ஆல்பங்களை கேட்டு ரசிக்கவும்...!!

  ReplyDelete
  Replies
  1. அதுவும் சரிதான்! ஞானிகளுக்கே வெளிச்சம்! நீங்கள் சொல்லியிருக்கும் அல்பங்களைக் கேட்டு ரசிக்கிறோம்!

   நன்றி!

   Delete
  2. அய்யா.., "அல்பம்"னா அர்த்தம் மாறுது...

   Delete
 5. தங்கள் ரசனைக்கு வாழ்த்துக்கள்! இன்று இரவு இப்பாடல்களைக் கேட்கப்போகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க செ.யா...
   முடிந்தால் நான்கு பாகங்களிலும் உள்ள பாடல்களை கேட்க முயற்சி செய்து பாருங்கள்...!!

   Delete
 6. Nice..Great taste.. and good songs.. "Nothings gonna a change my love for you.. " is a lovely number and so is Hotel California of Eagle...

  I grew up listening to great Music.. and my favs are Motown.... CCR, Phil COllins, Eagles, Bruce Sprinsteen..... And the one and only DIRE STRAITS.
  Dude.. I am hunting for Raavodu raavaa.. and ended up here.
  You have encouraged me to do a similar blog...

  ReplyDelete
 7. Nice..Great taste.. and good songs.. "Nothings gonna a change my love for you.. " is a lovely number and so is Hotel California of Eagle...

  I grew up listening to great Music.. and my favs are Motown.... CCR, Phil COllins, Eagles, Bruce Sprinsteen..... And the one and only DIRE STRAITS.
  Dude.. I am hunting for Raavodu raavaa.. and ended up here.
  You have encouraged me to do a similar blog...

  ReplyDelete