Tuesday, 11 February 2014

இனி, திண்டுக்கல்லுனா தனபாலன்தான்...

ஒரு தனிமனிதனால் தமிழ்ப் பதிவர்களை இப்படி ஊக்குவிக்க முடியுமா? தினமும் பதிவேற்றப் படும் நூற்றுக்கணக்கான பதிவுகளையும் எப்படி படிக்க முடிகிறது?  அனைத்திற்கும் எப்படி பாசிடிவான கமெண்ட் போட முடிகிறது?  வியக்கிறேன், நம்மால் செல்லமாக DD என அழைக்கப் படும் திண்டுக்கல் தனபாலனைக் கண்டு..!!
நம்பள்கி, சேட்டைக்காரன், பிலாசபி, பக்கி லீக்ஸ் போன்றோரது பதிவுகளைக் கண்டால் லொடக்கென்று திறந்து படிக்க ஆரம்பித்து விடுவேன், சிரிப்பிற்கு மினிமம் கியாரண்டி... கருந்தேள், உ.சி.ரசிகன், ஹா.பாலா, ஜாக்கி போன்றோறதையும் மிஸ் பண்ணாமல் படித்து விடுவேன் உலக சினிமா மேல் உள்ள ஆர்வத்தால். அதேபோல, DD, கவியாழி, துளசியார், தமிழ்வாசி, வெ.நாகராஜ் (லிஸ்டில் விட்டுப் போனவர்கள் மன்னிச்சூ..) மற்றும் பலரது பதிவுகளையும் படித்துவிடுவேன் அவர்கள் தொடர்ந்து என் பதிவுகளையும் படிப்பதால்...  பல பதிவுகளின் தலைப்பு கவராவிட்டால் படிக்க ஆர்வமில்லாமல் அடுத்தவற்றிற்கு தாவிச் சென்று விடுவேன்.

ஆனால் நம்ம DD, சான்சே இல்ல... ஒவ்வொரு பதிவுக்கும் கமென்ட் போடுறாரே, ஏதும் சும்மான்னாச்சுக்கும் "எழுத்துநடை அருமை, தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், இன்று என் தளத்தில் www.xxxxxxxxxxx..." என்று ஜல்லியடிக்காமல் சீரியசாகவே பதிவு முழுவதையும் படித்து கமென்ட் போடுவார்.  சில மொக்கையான பதிவுகளுக்குக் கூட, "ஹா.. ஹா.. ஹா..." என்று கமென்ட் போடுவார், அர்த்தம் DD-க்கே வெளிச்சம்..!!

இரண்டு நாட்களுக்கு முன்பு எனது blog-ல் தமிழ்மணத்தின் ஓட்டுப் பெட்டி வருமாறு அமைத்துக் கொடுக்க DD-க்கு மின்னஞ்சல் அனுப்பினேன்.  உடனடியாக சில டெக்னிக்கல் சமாச்சாரங்களை இணைத்து பதில் அனுப்பினார், அவருடைய செல்பேசி நம்பருடன்... microsoft-ன் பரம மக்கான என் அறிவுக்கு எட்டிய வரை முயற்ச்சித்து வர வைத்து விட்டேன், ஆனால் ஒரு புதிய சிக்கலுடன்... 
 
நேற்று மாலை ஏழரை மணியளவில் DD-யை தொலைபேசியில் அழைத்து அவருக்கு ஏழரையை கூட்டினேன்.  "DD, நான் மலர்வண்ணன், மலரின் நினைவுகள்..." என்று சொன்னவுடன், சிறு வயதில் ஓடிப்போன தாய்மாமாவை பெரியவனானதும் கண்ட வாஞ்சையுடன் பேசத் தொடங்கினார்.  பேச்சில் அன்பின் வெளிப்பாடு தெரிய மிகுந்த மகிழ்ச்சியுடன் உரையாடினோம், என் டெக்க் பிரச்சனையை சொன்னேன், அடுத்த பத்து நிமிடங்களில் அவரே சரி செய்து கொடுத்தார்.  நான் சொல்லாத சில சமாச்சாரங்களையும் அவரே கண்டு நிவர்த்தி செய்து மெருகேற்றினார்.  சும்மா சொல்லக் கூடாது, அவருடைய் பேச்சில் அப்படியொரு மரியாதை... இத்தனைக்கும் அவரை விட நான் முப்பது வருடங்கள் இளையவன்...!!

இரவு ஒன்பதரை மணிக்கு இன்னொரு டவுட்டு வர, ஏழரையைக் கூட்டலாமா வேண்டாமா என யோசித்து, அட, நம்ம DD தானே என்று கூப்பிட்டே விட்டேன்.  அதே உபசரிப்பு, அவரு வீட்டம்மணி வேறு ராதிகா சீரியல் பார்த்துக் கொண்டிருப்பதால் தான் ரொம்ம்ம்ப சும்மாவே இருப்பதாகச் சொன்னார்.  மறுபடியும் அதே அன்பு, பண்பு, பாசத்துடன் தன் கடமையே இது தான் என்பது போல் சரி செய்து கொடுத்தார்.  "DD, ஒரு அர்ஜென்ட் செலவு, நாளைக்கு ஒரு இருபதாயிரம் வேணும்"னு சொல்லியிருந்தா.. உடனே DD, DD எடுத்து அனுப்பி விடுவார் போல..!!

பலரும் இதுபோல் அன்புத் தொல்லைகள் கொடுப்பதால் டெக்னிக்கலா பதிவு எழுதுவது எப்படின்னு ஒரு பதிவு எழுதிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.  காத்திருக்கிறோம் DD. 
google images-ல் திண்டுக்கல் தனபாலன் என தட்டச்சு செய்யும் போது வந்த படங்கள்... முதலிடத்தில் நம்ம DD.  திண்டுக்கல்லுன்னா இனி பூட்டோ, தலப்பாக்கட்டியோ அல்ல..., நம் தனபாலன்...!!
 
- அன்புடன்
- மலர்வண்ணன்

44 comments :

 1. ஆகா அருமை நண்பரே, நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். அவர் எப்படி ஒரே நாளில் இத்தனை வலைப்பக்கங்களிலும் சென்று பின்னூட்டம் இடுகிறார் என்று எனக்கும் வியப்புத்தான். நானும் உங்களைப் போல் அவ்வப்போது அவரைத் தொந்தரவு செய்வதுண்டு. ஆனால் மனுசன் சலித்துக்கொள்ளவில்லையே! அசராமல் பேசினார்..பேசுகிறார்! அதனால்தான் நம்ம கரந்தை ஜெயக்குமார் டிடிக்கு “வலைச்சித்தர்”னு ஒரு பட்டமே குடுத்தார், நானும் உடனே வழிமொழிந்திருக்கிறேன். வாழ்க வ.சி.! (அவர் பேரைப்பார்த்துத்தான் நானும் உங்கள் தளத்திற்கு முதன்முதலாக வந்தேன். சுவாரசியமாக எழுதுகிறீர்கள் - ”சிறு வயதில் ஓடிப்போன தாய்மாமாவை பெரியவனானதும் கண்ட வாஞ்சையுடன் பேசத் தொடங்கினார்.” என்றெழுதிய உங்களுக்குள் ஒரு சிறுகதை ஆசிரியர் ஒளிந்திருக்கிறார்.. அவரை வெளியே எடுத்து விடுங்கள் சாமி. வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. என்னது... கதாசிரியரா?
   உள்ளுக்குள் உறங்கிக் கிடந்தவனை உறுமச் சொல்லிட்டீங்களே அய்யா..
   பார்ப்போம்... ஒரு ஞானபீடமோ, சாகித்ய அகாடமியோ, புக்கரோ நமக்கு கிடக்காமாலா போயிடும்..!?

   Delete
 2. [[இத்தனைக்கும் அவரை விட நான் முப்பது வருடங்கள் இளையவன்...!!]]
  நம்ம கண்ணுக்கு இதான் முதலில் படுது!
  அப்ப உங்களுக்கு வயது என்ன பத்தா?

  ReplyDelete
  Replies
  1. ஒரு flow-ல எழுதறதுதான் வாத்யாரே..!!
   நல்ல வேளை, DD-க்கு 70-ஆன்னு கேக்கலியே...!!

   Delete
 3. திண்டுக்கல் தனபாலன் சார் நிச்சயம் தமிழ் வலைப்பதிவில் கவனிக்கத் தக்கவர், நாம் எல்லாம் பதிவுகளை மேய்ந்து விட்டு மேலோட்டமாக வாசித்து சிலவற்றை மட்டுமே ஆழமாக வாசிப்போம். ஆனால் அவரு தினமும் வெளியாகும் சாதா பதிவு முதல் சிறப்பு பதிவு வரை படித்து கருத்துப் போட்டு விடுகின்றார். சில சமயங்களில் நம்மை பற்றி வேறு எங்காவது தகவல் வெளியானால் அதனையும் எடுத்து சொல்லிவிடுகின்றார். சமயங்களில் இவர் மனிதரா அல்லது ரோபோவா என டவுட்டும் வருகின்றது. உண்மையில் பெரிய விடயம் தான். :)

  ReplyDelete
  Replies
  1. //இவர் மனிதரா அல்லது ரோபோவா//

   எனக்கும் அதே டவுட்டு தான்..!!

   Delete
 4. நீங்க சொன்னது அனைத்தும் உண்மைதான் போல! பின்னூட்டம் இட்டு ஊக்கு விப்பதில் அவருக்குத்தான் முதலிடம்.
  டிடி என்று விளிக்காமல் நான் நீட்டி முழக்கி திண்டுக்கல் தனபாலன் என்று எழுதுவதை இனி மாற்றத்தான் வேணும்.

  ReplyDelete
  Replies
  1. தீ.. தீ.. என விளித்தாலும் தகும்..!!
   தீயா வேலை செய்யுறாரே..!!

   Delete
 5. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. அவருடைய பின்னூட்டங்கள் பதிவு எழுதுவதற்கு ஒரு புதிய உற்சாகத்தைக் கொடுக்கிறது. நன்றி தனபாலன்!

  ReplyDelete
 6. நீங்கள் சகோ ddயை பற்றி சொன்னதெல்லாம் உண்மை .எனக்கும் பலமுறை உதவியுள்ளார் !த ம 4

  ReplyDelete
  Replies
  1. போலிஸ்னா 100, ஆம்புலன்ஸ்னா 108,
   blog-ல பிரச்சனையா DD

   Delete
  2. நல்ல apt பதில்! ரசிக்க வைத்தது இந்த டைம்லி பதில்! என்னம்மா எல்லாரும் இப்படி பிச்சு உதறுகின்றீர்கள்பா.....

   Delete
 7. முற்றுமுழுவதும் உண்மைதான் தோழா. என்னுடைய மிகப்பெரிய பிரச்சினையை, அவரும் கஷ்டப்பட்டு தீர்த்து வைத்தார். திண்டுக்கல் என்றால் தனபாலன் அல்ல. வலைப்பதிவர்கள் என்றால் தனபாலன்.

  ReplyDelete
  Replies
  1. அதாவதுண்னே... பூவ பூன்னும் சொல்லாம்னே, புய்பம்ன்னும் சொல்லலாம்னே, நீங்க சொல்றா மாதிரியும் சொல்லலாம்னே...

   Delete
 8. தங்கள் பதிவு முற்றிலும் உண்மையே!

  ReplyDelete
 9. மிகச்சரியான நன்றியைத் தெரிவித்திருக்கிறீர்கள். பிரபலமானவர், புதியவர் என்ற பாரபட்சம் பார்க்காமல் அனைத்து வதிவுகளுக்கும் சென்று படித்து பின்னூட்டமிட்டு தளத்தில் ஏதாவது பிரச்னை என்றால் சரிசெய்துகொடுத்தும் வாய்ப்பே இல்லை. இன்னொரு திண்டுக்கல் தனபாலனை பதிவுலகத்தில் காணமுடியாது. அதுவம் எந்த தளத்திற்குப் போனாலும் முதல் பின்னூட்டமே அவருடையதாகத்தான் இருக்கும். இது எப்படி சாத்தியம் என்றுதான் தெரியவில்லை!?

  ReplyDelete
  Replies
  1. சாத்தியமா என்பதை சரித்திரமாக்கியவர்

   Delete
 10. பின்னூட்டம் இட்டு ஊக்கு விப்பதில் முதலிடம் வகிக்கும்
  திண்டுக்கல் தனபாலன் அவர்களைப்பற்றிய பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி....
   என் பதிவுக்கு வந்த ஹிட்ஸ்களுக்காக, தனபாலனுக்கு...

   Delete
 11. மலர் உள்ளம் கொண்ட நண்பருக்கு : அப்படியே ஓடிப் போயிருவேன் ஹிஹி...

  நன்றி... நன்றி...

  இதெல்லாம் ஓர் உதவியா...? உங்களின் படம் Favicon-ல் இணைத்தோமே ஏன் வரவில்லை என்று நேற்று கூட உங்கள் தளத்திற்கு வந்தேன்... இப்போது வந்து விட்டது...

  நீங்கள் சொன்ன மாதிரி பதிவில் இணைப்பைக் கொடுப்பது போல் கருத்துரையிலும் இணைப்புக் கொடுத்தேன்... (இப்போதும் புதிய பதிவர்களுக்குச் சொல்வதும் அதுவே...) அப்போது தான் பல "நல்ல" பதிவர்களை அறிய முடி(யும்)ந்தது... ஹா... ஹா...!

  மேலே நம்ம முத்துநிலவன் ஐயாவின் ஊக்கத்தை விடவா...? ஐயாவை சந்திக்கும் முன் பல மூத்த பதிவர்கள் தான் எனக்கு வழிகாட்டி... அதில் முக்கியமாக ஊக்குவிப்பதில் ரமணி ஐயா முதலிடம்...

  முத்துநிலவன் ஐயா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புதுக் கோட்டையில் ஒரு கணினிப் பயிற்சி நடந்தது... பல திறமைகள் உள்ள 40 தமிழ் ஆசிரியர்களின் நட்பு கிடைத்தது... அவர்களின் அனுபவங்களை வெளிக் கொணர வேண்டும்... 2 தொழில் நுட்ப பதிவுகள் தான் எழுதி உள்ளேன்... (அதில் முதல் பதிவு (அதான் எனக்குத் தெரியுமே-பூரி மசால்...! (வே.வி.1) வேகத்திற்கான காரணங்கள் சில உள்ளது) நான் நினைத்த தொழில் வேறு... அமைந்தது வேறு... இணையத்தில் இருப்பது திடீரென்று மாறலாம்... எதுவும் கடந்து போகும்...! அதற்குள் நாற்பதும் நமதே... பகிரப் போகும் ஆசிரியர்களை சொல்கிறேன்... ஹிஹி...

  இன்னும் நிறையப் பேசுவோம் வரும் தொழில் நுட்ப பதிவுகளில்...

  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. //அப்படியே ஓடிப் போயிருவேன்//
   தனியாத் தானே..!!

   //நம்ம முத்துநிலவன் ஐயாவின் ஊக்கத்தை விடவா...?'//
   அவசரத்துல "தூக்கத்தை"ன்னு படிச்சுட்டேன்..!!

   சரி DD, டெம்பொவெல்லாம் வெச்சு தூக்கியிருக்கோம்... எதுனா பாத்து செய்ங்க...!! (ச்ச்ச்ச்சும்ம்ம்ம்மா...!!)

   Delete
 12. மலர்வண்ணா முதலில் உங்களுக்கு ! ஒரு ஷொட்டு! இந்தப் பதிவர் சூப்பர் மேன் பற்றி எழுதியதற்கு!!!!!

  [இத்தனைக்கும் அவரை விட நான் முப்பது வருடங்கள் இளையவன்...!!]]
  நம்ம கண்ணுக்கு இதான் முதலில் படுது! நம்பள்கியின் இதே வரிகள்..... எங்கள் கண்களையும் பறித்தது! கூடவே நீங்களும் நம்பள்கியின் சிஷ்யரோ ! என்றும் விவாதித்தோம்!

  சத்தியமாக நாங்கள், DDயை ப் பற்றி அதிகமாகப் பேசுவோம், எப்படி நம்பள்கி, ஜோக்காளி, விவரணம் நீலவண்ணன், மதுரைத் தமிழன், ராயசெல்லப்பா, ரமணி, கவியாழி, குடந்தியிரார்..உங்கள் இடுகை என்று இப்படி .... நாங்கள் அதிகம் பேசுவோமோ அது போல.....

  நாங்கள் ஒரு இடுகை போடுவதாக இருந்தோம்......எழுதி கூட வைத்துள்ளோம்! ஆனால் கடைசியில் தான் அது யார் என்ற குட்டு உடையும்! ஐயொ உடைத்து விட்டோமோ!? பரவாயில்லை! அவரது ஃபோட்டோ கூட போடாமல் போட நினைத்தோம்! ரகசியமாக!

  மூன்று நாட்கள் முன்புதான் அவருடன் பேசினோம்! அவரிடம் கேட்ட கேள்வி. "எந்தப் பதிவுக்குப் போனாலும் உங்கள் அங்கு முதல் ஆளாக பெரும்பாலும், காண முடிகிறதே DD! எப்படி இப்படி இத்தனை பதிவுகளுக்கு, எனர்ஜடிக்காக, வேகமாக பதில் போடுகின்றீர்கள்! ஊக்கம் தருகின்றீர்கள்! அதன் ரகசியம் என்ன?" பெரும்பாலும் எங்கள் இடுகைக்கு காலையில் 5 மனி. 5.30 க்குள் வந்துவிடும்......(ஃபீட் ஜிட்டிலேயே தெரிந்து விடும்.....DD வந்தாச்சு......நம்பள்கி வந்தாச்சு.....ஜோக்காளி வந்தாச்சு என்று.......)

  அவரெ அதற்கு அழகான ஒரு பதில் ....அதுல ஒண்ணும் இல்ல ....ஒரு டெக்னிக்தான்....நான் என்ன பண்ணுவேன்...புதுசா வர இடுகைகளை முதல் வேலையா ஒரு 10 ஒபன் பண்ணிக்குவேன்....சரி இப்ப நீங்க என்ன பண்ணுங்க உங்க ப்லொக் இடுகைக்கு போங்க....மேல அந்த வலைத்த்ள அட்ரெஸ் ல right arrow key press பண்ணி கடைசில போயி.?M=1 போடுங்க....இப்ப என்ன மாற்றம் வருதுனு பாருங்க....அந்த இடுகை மாத்திரம்தான் வரும்....சைட் "டிஷ்" ஒண்ணும் வராது..ஸோ நெட் சீக்கிரம் வந்துடும்.....அப்ப்படினு எங்களையே செய்ய வைத்துக் காட்டினார்....இப்படித்தாங்க முதல்ல தமிழ் மனம் ஓட்டு போட்டுடு அப்புறம் அந்த இடுகை எல்லாம் வாசிச்சு முடிச்சுட்டு பதில் ...இவளவுதாங்க டெக்னிக்....."

  அப்புறம் எங்கள் வலைபூவை க்ளிக்கினால் பழிய இடுகை வருது....என்று சொல்லி "நான் உங்கள் ஆர்க்கிவிஸ் போய் புதுசு பார்த்தேன் ஆனா மத்தவங்க வாசிக்காம போய்டுவாங்க..சோ ஆர்கிவ்ஸ்ல அத மாத்திடுங்க...நு சொல்லி செய்ய வைச்சாரு...எங்கள் தமிழ் மண ப் பட்டைக்கு உதவியவரும் அவர்தான்....இப்படி பலருக்கு டெக்னிகல் மற்ற உதவி என்று மனிதர் சூப்பர்மேன் மனிதர்.....அவர் என்ன இடுகைகள் போடப் போகின்றார் என்ரு அன்று சொன்னார்....இங்கு சொல்லியிருக்கிறாரே அதுதான்.....பதிவுலக டெக்னிகல் ஜாம்பவான் எனலாம்...அதை மற்றவர்களுக்கு சொல்லியும் கொடுக்கிறார்....நாங்களும் ஒரு சில டெக்னிகல் விஷயங்களை கூகுளில் தேடிக் கண்டுதான் உபயோகப் பௌத்தினோம். அதாவது DD அறிமுகம் ஆகும் முன் -இவர் அறி முகம் ஆவதற்கு காரணம் ஜோக்காளி பகவான் ஜி தான் - ...அவரிடம் பேசிய பின் எங்களுக்கும் ஒரு ஆர்வம் வந்து விட்டது எனலாம்....டெக்னிகல் விஷயங்கள் தெரிந்து கொள்ள...பார்ப்போம்....இல்லை என்றால் DD என்று தொலைகூவினால் போச்சு!!!

  நீங்கள் சொல்லியிருந்த அத்தனைப் பண்புகளும் நிறைந்த மனிதர்! அவர் முகத்தைப் பாருங்களேன்! ..அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்...அது இவர் விஷயத்தில் மிகவும் உண்மை!!!!!

  எதுவாக இருந்தாலும் உங்கள் வலைப்பூவில் போடுங்கள் அதுதான் சிறப்பு! உங்களுக்கு மட்டுமல்ல நீங்கள் யாரைக் குறிப்பிடுகின்றீர்களோ அவர்களுக்கும் மகிழ்சியாகவும், சந்தோஷமாகவும், பெருமைப் படுத்துவது போல இருக்கும்!!! என்பார். இப்போது உங்கள் பதிவு அவருக்கு, நம் எல்லோருக்குமே சந்தோஷமாகவும், அவரைப் பெருமைப் படுத்துவதாகவும் இருக்கிரது! எங்கள் வேலையை நீங்களும் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி! உங்கள் வலைப் பூவின் மூலம் எங்கள் கருத்துக்களையும் சொல்ல வாய்ப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

  நல்ல பதிவு!. வாழ்த்துக்கள்!

  DD க்கும் வாழ்த்துக்கள்! அவரது இந்த எனர்ஜி எப்போதும் நிறைந்த்திருக்க பதிவர்கள் எல்லோரது சார்பிலும் வாழ்த்தி, இறைவனை வேண்டுகிறோம்!

  ReplyDelete
  Replies
  1. ஏன் சார் இத்தனை பெரிய பின்னூ போடுறதுக்கு பதிலாக்கா ஒரு பதிவே போட்டிருக்கலாமே!!

   சந்திரன்

   Delete
  2. சந்திரன் சார் அதுதான் நம்ம நண்பர் மலர் போட்டு விட்டாரே! அப்புறம் என்ன! யார் போட்டால் என்ன?

   நாங்கள் டிடி யின் பெயர் போடாமல் ஒரு சஸ்பென்ஸ் போல போட்டு பின்னர் குட்டை உடைக்கலாம் என்றிருந்தோம்தான்.....ஆனால் நம்ம நண்பரி இப்படி அருமையாக எழுதி எங்கள் வேலையை மிச்சப் படுத்த்யதால் அதை இங்கு பின்னூட்டமாகப் போட்டோம் அவ்வளவுதான்!

   Delete
  3. //கூடவே நீங்களும் நம்பள்கியின் சிஷ்யரோ//
   ஏகலைவன் மாதிரின்னு வெச்சுக்கோங்க... நான் கூட அவரை செல்லமா வாத்யாரே, வசிஷ்டரே என அழைப்பது வழக்கம்...

   //DD என்று தொலைகூவினால் போச்சு//
   என் கடன் bloggerகளுக்கு பணி செய்து கிடப்பதே...

   //நம்ம நண்பரி இப்படி அருமையாக எழுதி எங்கள் வேலையை மிச்சப் படுத்த்யதால்//
   வெறும் பதினைந்தே நிமிடத்தில் எழுதி பதினைந்து நிமிடம் proof பார்த்து நான் வெளியிட்ட மின்னல் வேகப் பதிவு இது.
   அது, DD-யை நெனைக்க அருவி மாதிரி கொட்டிடுச்சி, இந்த எழுத்து, வார்த்தை...

   Delete
 13. பதிவுலகின் தவிர்க்க இயலா மனிதன்.எல்லோருக்குமே உதவி செய்யும் இக்கால வள்ளல்

  ReplyDelete
 14. இவரின் கருத்துக்கள் பல சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தார் போல இருக்கும். கவியாழி சார் கவிதைக்கு நான் அடிமை என்றால் டிடியின் ஐஎஸோ9002 பதிவுகளுக்கு நான் ரசிகன்.

  பாக்யமணி
  பள்ளிக்கரனை

  ReplyDelete
  Replies
  1. மன்றம் ஆரம்பிச்சிடுவோம்...!!

   Delete

 15. உண்மைதான். திண்டுக்கல் என்றால் தனபாலன் தான்.உங்கள் கருத்தை நான் வழி மொழிகின்றேன்.
  எனக்கும் அவர் பலமுறை தொழில் நுட்ப கோளாறை சரி செய்ய உதவியிருக்கிறார். இந்த பின்னூட்டம் மூலம் அவருக்கு நன்றி தெரிவிக்கின்றேன். ! அவரைப்பற்றி பதிவிட்ட உங்களுக்கும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உடுக்கைக்கு எப்படி இடுக்கண்ணோ...
   பிளாக்கர்க்கு நம்ம தனபாலன்...!!

   Delete
 16. 'திண்டுக்கல் என்றால் தனபாலன் தான்' என்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். "தனபாலன் தான் திண்டுக்கல்" என்று சொன்னால்தான் அவருக்கு நாம் தரும் மரியாதை!

  ( எத்தனையோ வலைத்தளச் சிக்கல்களிலிருந்து எனக்கும் அவர் வழிகாட்டியிருக்கிறார் என்பதைப் பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.).

  நீடூழி வாழ்க அவர்தம் நட்பும் அன்பும் பெருந்தகைமையும்!

  ReplyDelete
  Replies
  1. செ..யா.. அவர்களின் கமெண்ட்டைப் பாராட்டி அவரைத் தெம்பூட்டும் விதமாக "அய்யா" படத்தில் வரும் "அய்யாத் தொர..." பாடல் dedicated செய்யப் படுகிறது...
   http://www.youtube.com/watch?v=dwoTeFAgvS0&list=PL83E0DCDB723E5AD6

   Delete
 17. பதிவுலக நண்பர்களை ஊக்குவிக்கும் திண்டுக்கல் தனபாலனின் பணி மகத்தனது.சொந்தப்பதிவுக்கு போட்ட பின்னூட்டத்துக்கே பதிலளிக்கபஞ்சிப்படும் என் போன்றவர்களின் மத்தியில் இவர் எப்படி செயற்படிகிறார் என்பதை நினைக்க ஆச்சரியமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. இதை நான் வன்மையாக வழிமொழிகிறேன்...

   Delete
 18. வணக்கம் !
  தங்களின் தளமும் இன்று தங்களால் பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்த நல் மனத்தால் எனக்கும் தெரிய வந்தது .உங்களுடன் சேர்ந்து நானும் அன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களை வாழ்த்துவதில் பெருமை கொள்கின்றேன் .மிக்க நன்றி சகோதரா பகிர்விகும் பாராட்டிற்கும் .

  ReplyDelete
  Replies
  1. நெல்லுக்குப் பாயுறதுல கொஞ்சம் புல்லுக்கும் பாயற மாதிரி, DD-க்கு போற பாராட்டுல எனக்கும் கொஞ்சம் வந்து சேருது... ஐ.. ஜாலி...!!

   Delete
 19. உண்மையான பதிவு. எனக்கும் தேவைப்பட்ட பொழுது திண்டுக்கல் தனபாலன் உதவியிருக்கிறார். தங்களுக்கும் D.D -க்கும் வாழ்த்துக்கள். நன்றி.

  ReplyDelete
 20. திண்டுக்கல் தனபாலன் புகழ்பாடும் பதிவு! :))) நிச்சயம் அவர் பாராட்டுக்குரியவர் தான்.....

  நான் படிக்கும் பல தளங்களில் அவரது கருத்துரை நிச்சயம் இருக்கும்..... அவர் படிக்காத தளம் என்பதை இன்னும் தெரிந்துகொள்ள முடியவில்லை!

  ReplyDelete