Thursday 13 February 2014

இது கதிர்வேல் "மகன்" காதல்

தலைப்பில் உள்ள கதிர்வேலுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்னா, அந்தப் பெயர் கொண்ட அப்பாவிதான் என்னைப் பெற்ற அப்பா...

அப்போ காதல்..!?
திருப்பித் திருப்பி யோசித்தாலும் திருப்பு முனையில் திரும்ப, திருப்ப முடியாத அந்தக் காவியத்தைத்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன்... கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்...

சாம்பிளுக்குச் சில... ட்ரையிலர் மாதிரின்னு வெச்சுக்கோங்க..!!

"gift பிடிச்சிருந்ததா..?"
"ம்ம்... ரொம்ப.."
"எவ்ளோ பிடிச்சிருந்தது?"
"அதான், ரொம்ப.."
"என்னை..!?"
...டொக்...


"தம் அடிக்கிறியே, அதுல அப்படி என்னதான் வருது?"
"தெரியலியா, புகை..!!"
"****, என்ன திருப்தி கிடைக்குது?"
"இந்தா, அடிச்சு பாரு..!!"


"என்னடா, வாத்தியார் பொண்ணை டாவடிக்கிறியாமே?"
"ஆமா..., அதுக்கென்ன?"
"அண்ணன் ரெண்டு தட்டு தட்டிட்டு வரச் சொன்னாரு..."
"தட்டித்தான் பாரேன்..!"


"இங்க பாருப்பா... இன்னொருத்தனுக்கு நிச்சயம் பண்ண பொண்ணு, சர்ச்ல ஒரு ஓலை விட்டாச்சு, இத்தோட விட்ரு..."
"அத பொண்ணு சொல்லட்டும்..., போயிட்டே இருக்கேன்..."


"நீ இவனைத்தான் கட்டிக்கிறதுன்னு முடிவோட இருக்கியாமா?"
"ஆமா..."
"ஆர் யூ ஷ்யூர்..?"
"101%..."
"ம்ஹூம்..., இவனுக்கு எவன் பொண்ணு குடுப்பான், எப்படி தேடுறதுன்னு இருந்தேன், நீயா வந்து மாட்டிக்கிட்ட, பாத்தா ரொம்ப  நல்ல பொண்ணு மாதிரி இருக்க, கடைசியா warn பண்றேன், தப்பிச்சிக்கோ..."


"ஒன்னு மட்டும் மறந்துடாத மச்சி..., லவ்வுன்றது.... ...."
"நீ மூடிட்டு மொதல்ல இங்கிருந்து போறியா?"


"நாம பிரியறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்.."
"யாருக்கு...?"


உண்மை நிகழ்வை மையைப்படுத்தி உருவாகிக் கொண்டிருக்கிறது ஒரு பிங்க் (எவ்ளோ நாளைக்குத் தான் கறுப்பு, சிவப்புன்னு சொல்றது) காதல் சரித்திரம்..!! எதிர் பார்க்கிறீர்களோ  இல்லையோ, விரைவில் வெளிவரும்...!!

- அன்புடன்
- மலர்வண்ணன்


இந்த ஆர்ட்டின்க்கு நடுவுல அம்புக்குறி வுடுற டிசைனை எவன் கண்டுபுடிச்சான்னு தெரியல..!! பிஞ்சுல பழுத்த வயசுல நாங்க அதை ஏதோ கெட்டவார்தைன்னு நெனைச்சதுண்டு...!!
உலகெங்குமுள்ள காதலர்க்கு (கள்ளக்காதலர் நீங்கலாக) காதலர் தின வாழ்த்துக்கள்...!! 


 

21 comments :

  1. "இந்தா, அடிச்சு பாரு..!!" - உங்களுக்கே இது ஓவரா தெரியலே...?

    "தப்பிச்சிக்கோ..." - இது ரொம்ப பிடிச்சிருக்கு...! ஹா... ஹா... ஹா... ஹா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. //"தப்பிச்சிக்கோ..."//
      எந்த அப்பாவாவது தன் மகன் கட்டிக்கப் போற பொண்ணப் பாத்து இப்படிச் சொல்லுவாரா?! ஆனா எங்கப்பா சொன்னாரு..!!

      Delete
  2. வணக்கம்
    ஆகா.... ஆகா... நல்ல புத்தி சாலித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும்

    இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. //நல்ல புத்தி சாலித்தனம்//

      எனக்கா, எங்கப்பாவுக்கா?

      Delete
  3. சூப்பரா இருக்குங்க.....எப்ப வெளியிடப்போறீங்க? come on man...சீக்கிரம்....இந்த மாதிரி...சினிமாக்கு ad போடறா மாதிரி அருமையா போட்டுட்டீங்க...உங்கள் பொன்னான வலைப்பூவில்......காத்திருக்கிறோம்! வேறு என்ன செய்ய...?!!

    ReplyDelete
    Replies
    1. //உங்கள் பொன்னான வலைப்பூவில்//
      சார், இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா?

      //எப்ப வெளியிடப்போறீங்க?//
      எழுத எழுத வளர்ந்துட்டே இருக்கு துளசியாரே, ஒரு நாவல் போல்... சொந்தக் கதை, சோகக் கதைக்கு முடிவே இருக்காதா!!

      Delete
  4. இது மலரின் நினைவுகளா ,முள்ளின் நினைவுகளா ?
    தம 3

    ReplyDelete
    Replies
    1. வாக்கிற்கு நன்றி...
      முட்களைப் பிடுங்கி எறிந்து போயிட்டே இருந்த "மலர்"ப் பாதையின் நினைவுகள்...!!

      Delete
  5. Rely nice very interesting who all are waiting i don't no but rely am waiting for your won love story sire please share the story so soon.

    ReplyDelete
    Replies
    1. என் சொந்தக் கதையைத் தெரிஞ்சுக்கறதுல அம்புட்டு ஆர்வமா Javeed?!

      Delete
  6. இது , ஒரு மலரும் நினைவுகள்!

    ReplyDelete
  7. காதலில் கள்ளம் இருந்தால் அதுக் காதலே அல்ல....

    ReplyDelete
  8. நீங்கள் 'களவுக்' காதலை தப்பாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள் அதனைக் கள்ளக் காதல் என்று அறிந்து இருக்கிறீர்கள் நண்பரே இரண்டுக்கும் வித்தியாசமுண்டு

    ReplyDelete
    Replies
    1. தினத்தந்தியில "கள்ளக் காதல" படிச்சு வளந்த புள்ளைங்க யாரு..!!
      நம்ம பயலுகதேன்...
      இனி திருத்திக்கிறோமப்பு...!!

      Delete
  9. [[[//"தப்பிச்சிக்கோ..."//
    எந்த அப்பாவாவது தன் மகன் கட்டிக்கப் போற பொண்ணப் பாத்து இப்படிச் சொல்லுவாரா?! ஆனா எங்கப்பா சொன்னாரு..!!]]

    ஊடல் வரும்போது...உங்க மனைவி கட்டாயம் "உங்க அப்பா பேச்சை அன்னிக்கே கேட்டு இருக்கணும்; கேட்கலை..அதான்..அனுபவிக்கிறேன்" என்று அடிக்கடி சொல்லியிருப்பார்களே!,
    தமிழ்மணம்+1
    ___________________
    பின்குறிப்பு:
    அனுபவம் பேசுகிறது!

    ReplyDelete
    Replies
    1. வாத்யாரே...!!
      இதுக்கு பேரு தான் சும்மா கிடந்த சங்கை ஊதுறது..!!
      எனக்கு இதெல்லாம் சாதாரணம், எங்க அம்மணி இன்னும் ஜோரா கழுவி ஊத்துவாங்க...!!

      Delete
  10. க்ழுவி ஊத்துவாங்க எங்க? முகத்துலயா? பேஷ்! மதுரைத் தமிழனுக்குப் பூரிக்கட்டை..... உங்களுக்கு பக்கெட்டா.....அது இப்ப...கலயாணத்துக்கு முன்ன காதலிக்கும் போது?!!!!!......ஓ ஸாரி அது கதைல வரும்ல.....

    ஹலோ இதுல நாங்க ரெண்டு பேரும்...அதன் தோழி கீதாவும் சேர்ந்துதான் கமென்ட் அடிக்கிறாங்க....நோட் த பாயின்ட்....

    ReplyDelete
    Replies
    1. அடடா.. என்னவொரு ஆனந்தம் ரெண்டு பேருக்கும்..!!

      Delete
  11. பின்ங் சரித்திரம்..... :))) விரைவில் வரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. இறுதிகட்ட தயாரிப்பில் உள்ளது...!!

      Delete