Saturday, 29 August 2015

தட் "பிரபல" மொமென்ட்...

பிரபல வலைப்பதிவர், பிரபல facebook போராளி, பிரபல கவிஞர்ன்னு தனக்குத்தானே சொல்லிக்கிறவங்க எல்லாம் உண்மையிலயே என்னதான் எழுதுறாங்கன்னு செஞ்ச ஆராய்ச்சியில  சில சாம்பிள்கள்:

பிரபல எழுத்தாளர் என கூவிக் கொண்டு திரியும் சிலரின் facebook மற்றும் blog பக்கம் போனீங்கனா...

"மிக நெருங்கிய தோழி ஒருவர், எந்த அளவுக்கு நெருக்கம் என்றால் என்னை அவரது fantasyயாக பல நேரங்களில் நினைத்துக் கொள்வாராம், இது அவருடைய கணவருக்கும் தெரியுமாம்...!!
நேற்று வழக்கம் போல் சாட்டில் வந்தார்...
உண்டாகியிருக்கேன் என்றார் சற்றே நாணத்துடன்...
சிறப்பு கண்ணே..., அப்பா யார் என கேட்டேன் எனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன்...
அதற்கு என்னை unfriend பண்ணியிருந்தால் கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன்..., ஆனால் ஆள் வைத்து அடித்தார்.  அப்பல்லோவில் அட்மிட் ஆகியிருக்கேன்..., இதோ, இப்போதும் என்னுடைய எழுத்துக்களை சுவாசமாக ஜீவிக்கும் ஒரு தோழி தான் உரித்து உரித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார், ஆரஞ்சு சுளைகளை..."
--------------------------------------------------------------------------------------------------------------------------

பெண்ணியம், ஆணாதிக்கம், பொறுத்தது போதும் என பொங்கும் சில கவிதாயினிகள் மற்றும் அவர்களின் அல்லக்கைஸ்களின் கவிதைகள்:

"உன் குறி நுழைவதற்கும்
உன் பிள்ளையை பெறுவதற்கும்
மட்டுமே உள்ளதென்று நினைத்தாயடா
என் யோனியை..."___________
- இதே ரேஞ்சில் அறுப்பேன், நசுக்குவேன், காக்காவுக்குப் போடுவேன் என அனாடமியை குறி வைத்தே தொடர்ந்து செல்லும்...
--------------------------------------------------------------------------------------------------------------------------

பிரபலங்களை குறி வைத்து தாக்கி பிரபலமடையத் துடிக்கும் ஹிப்பொக்ரைட்ஸ்

"ஏவிஎம் தனது இரண்டு ரஜினி படங்களுக்கும் சந்திரபோசையே இசையமைப்பாளராக உறுதி செய்ய, பாடல்களும் முச்சந்தியெங்கும் ஹிட்டடிக்க, பயத்திலும் பதட்டத்திலும் இளையராஜாவும் கங்கைஅமரனும் சேர்ந்து சந்திரபோஸை அமுக்க திட்டம் தீட்டினர்...  சதியாலோசனையின் ஒரு பகுதியாக சந்திரபோஸின் ஆர்மோனியத்தின் ஆறாவது கட்டை ஆள் வைத்து பிடுங்கப் பட்டது.  கவிஞர் வைரமுத்துவுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் இது.  ட்யூன் போட சந்திரபோஸ் மிகவும் கஷ்டப்பட்ட இந்த சமயத்தில் சிம்பொனி என்ற மாயையை உருவாக்கி தமிழ் ரசிகர்களை திசை திருப்பினர்.  அநியாங்களை பார்த்துக் கொண்டு சும்மாயிருப்பானா கடவுள்?!  புயலென உள்ளே நுழைந்தான் ரஹ்மான் எனும் சிறுவன்..."
--------------------------------------------------------------------------------------------------------------------------

புனைப்பெயர் கவிஞர்கள்:

சலகை(ஜலகண்டாபுரம் என்பதன் சுருக்கம்) வேந்தன், எர்னஸ்டோ ட்ரஸ்ட்வோயிஸ்கி, மண்டேலா தாசன், வாசமற்றவள், மற்றும் பலர்..., கவிதைகளில் அனல் பறக்கும்...

"சுடுவேனென்று தெரிந்தும் எனைத் தீண்டிநாயே கள்வளே...."
"முறையறிந்து சொல்ல நான் பாரதியல்ல, முகத்திலறைந்து சொல்லும் பார்றா தீ..."
"மார்பைத் திருகியெரியும் கண்ணகியல்லடா நான் மானுடனே..."
--------------------------------------------------------------------------------------------------------------------------

காப்பியடிக்கப் படமென்றால் கழுவி ஊத்துவதோடு நிறுத்தாமல் அதையும் இதையும் கம்பேர் பண்ணும் ஒலக சினிமா விமர்சகர்கள்:...

"ஒரு படம் ஆரம்பித்து ஒன்பதாவது நிமிடத்தில் க்ளைமாக்ஸை நோக்கி செல்ல வேண்டும்.  எல்லா கொரியன் படங்களும் இதைத்தான் செய்கின்றன.  நம்மூரில் க்ளைமாக்ஸிற்க்கென்று தனியாக 20 நிமிடம் ஒதுக்கி வேஸ்ட் செய்கிறார்கள்...
 "திரைமொழி, உடல்மொழி, உயிர்மொழி, மயிர்மொழி எல்லாம் மெக்சிகன் படங்களில் ஆளுமையுடன் கையாளப் பட்டிருக்கும், இங்கு தமிழ்மொழி மட்டுமே மிஞ்சியிருக்கின்றது, Disgusting...!!!"
"ரே, அடூர், பெனெகல் போன்றோரை  தவிர்த்து பார்த்தால் இங்கு வெறும் வெறுமையே .மிஞ்சுகிறது..."
--------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday, 8 August 2015

ஒலக சினிமா விமர்சகர்களுக்கு ஓர் வேண்டுகோள்

ஒலக சினிமாக்களை உட்கார்ந்த எடத்துல இருந்து பார்த்து, பார்த்த கையோட விமர்சனங்களை அடிச்சு தெறிக்க விடும் தமிழ் இணைய ஒலக சினிமா விமர்சன ஜாம்பாவான்களுக்கு,

நீங்க விமர்சனம் செய்த பல படங்களை Torrentடிட்டு கண்டுகளித்த பலரில் நானும் ஒருவன்...
எந்தத் தமிழ்ப் படம் எந்த உலக சினிமாவிலிருந்து சுடப்பட்டு எடுத்தது என நீங்க முந்தித் தரும் தகவலை facebook-ல் போட்டு அழகு பார்க்கும் பலரில் நானும் ஒருவன்...
தலைப்பிலயே 18+ என போட்டு உசுப்பேத்தி எப்படியாவது உங்கள் விமர்சனத்தை வாசகர்களை படிக்க வைக்க நீங்கள் படும் பாட்டை அறிந்தவர்களில் நானும் ஒருவன்...
ஹிட்ச்காக், கிம்கிடுக், டொராண்டினோ, அகிரா, ச.ரே தவிர வேறு எந்த மயிராண்டியும் டைரக்டரே அல்ல என நீங்கள் பொங்கும் போது புல்லரித்தவர்களில் நானும் ஒருவன்...
இதுபோக அவ்வப்போது உலக இசை மற்றும் நடனங்களை நீங்கள் விமர்சிக்கும் அழகை ரசித்தவர்களில் நானும் ஒருவன்...


உங்களிடம் கோடான கோடி வாசகர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளும் ஒரே கோரிக்கை என்னன்னா...
தயவு செய்து, விமர்சனத்தை தட்டச்சு செய்து வாசிப்பிற்காக மட்டும் வெளியிடுங்கள்...
மூஞ்சிக்கு நேரா கேமராவை வைத்து உங்க விமரசனத்தை வீடியோவாக வெளியிடாதீர்கள்...
முடியல...
தப்பா எடுத்துக்கலன்னா ஒன்னே ஒன்னு கடைசியா சொல்லிக்கிறேன்..., நீங்க அதுக்கு சரிப்பட்டு வரல...!!!

Cheers...!!!
மலர்வண்ணன்
Thursday, 6 August 2015

ஒசாமாவுடைய சாவின் அதிர்ச்சியூட்டும் பின்னணி..!!

பல சாம்ராஜ்யங்களில் தற்கொலை தாக்குதல் நடத்தி பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஒசாமா கொல்லப் பட்டது எப்படி..?!

தலைக்கு விலையாக பல கோடிகளை அமெரிக்கா தர வந்தும் யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒசாமா கொல்லப் பட்டது எப்படி..?!

22வது வயதிலேயே புனிதப் போர் என்று துப்பாக்கி ஏந்திய ஒசாமா கொல்லப் பட்டது எப்படி..?!

அமெரிக்காவிடம் இருந்தே கோடி, கோடியாக பணம், பயிற்சி, ஆயுதம் என்று வாங்கி குவித்த ஒசாமா கொல்லப் பட்டது எப்படி..?!

சமீபத்தில் கிடைத்த அதிர்ச்சியூட்டும், நெஞ்சைப் பதற வைக்கும் அந்த காட்சி கீழே...

|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|


ஒசாமா கொல்லப் படவில்லை..., தற்கொலை செய்து கொண்டார்...!!

- அன்புடன்
மலர்வண்ணன்