Saturday, 29 August 2015

தட் "பிரபல" மொமென்ட்...

பிரபல வலைப்பதிவர், பிரபல facebook போராளி, பிரபல கவிஞர்ன்னு தனக்குத்தானே சொல்லிக்கிறவங்க எல்லாம் உண்மையிலயே என்னதான் எழுதுறாங்கன்னு செஞ்ச ஆராய்ச்சியில  சில சாம்பிள்கள்:

பிரபல எழுத்தாளர் என கூவிக் கொண்டு திரியும் சிலரின் facebook மற்றும் blog பக்கம் போனீங்கனா...

"மிக நெருங்கிய தோழி ஒருவர், எந்த அளவுக்கு நெருக்கம் என்றால் என்னை அவரது fantasyயாக பல நேரங்களில் நினைத்துக் கொள்வாராம், இது அவருடைய கணவருக்கும் தெரியுமாம்...!!
நேற்று வழக்கம் போல் சாட்டில் வந்தார்...
உண்டாகியிருக்கேன் என்றார் சற்றே நாணத்துடன்...
சிறப்பு கண்ணே..., அப்பா யார் என கேட்டேன் எனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன்...
அதற்கு என்னை unfriend பண்ணியிருந்தால் கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன்..., ஆனால் ஆள் வைத்து அடித்தார்.  அப்பல்லோவில் அட்மிட் ஆகியிருக்கேன்..., இதோ, இப்போதும் என்னுடைய எழுத்துக்களை சுவாசமாக ஜீவிக்கும் ஒரு தோழி தான் உரித்து உரித்து கொடுத்துக் கொண்டிருக்கிறார், ஆரஞ்சு சுளைகளை..."
--------------------------------------------------------------------------------------------------------------------------

பெண்ணியம், ஆணாதிக்கம், பொறுத்தது போதும் என பொங்கும் சில கவிதாயினிகள் மற்றும் அவர்களின் அல்லக்கைஸ்களின் கவிதைகள்:

"உன் குறி நுழைவதற்கும்
உன் பிள்ளையை பெறுவதற்கும்
மட்டுமே உள்ளதென்று நினைத்தாயடா
என் யோனியை..."___________
- இதே ரேஞ்சில் அறுப்பேன், நசுக்குவேன், காக்காவுக்குப் போடுவேன் என அனாடமியை குறி வைத்தே தொடர்ந்து செல்லும்...
--------------------------------------------------------------------------------------------------------------------------

பிரபலங்களை குறி வைத்து தாக்கி பிரபலமடையத் துடிக்கும் ஹிப்பொக்ரைட்ஸ்

"ஏவிஎம் தனது இரண்டு ரஜினி படங்களுக்கும் சந்திரபோசையே இசையமைப்பாளராக உறுதி செய்ய, பாடல்களும் முச்சந்தியெங்கும் ஹிட்டடிக்க, பயத்திலும் பதட்டத்திலும் இளையராஜாவும் கங்கைஅமரனும் சேர்ந்து சந்திரபோஸை அமுக்க திட்டம் தீட்டினர்...  சதியாலோசனையின் ஒரு பகுதியாக சந்திரபோஸின் ஆர்மோனியத்தின் ஆறாவது கட்டை ஆள் வைத்து பிடுங்கப் பட்டது.  கவிஞர் வைரமுத்துவுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் இது.  ட்யூன் போட சந்திரபோஸ் மிகவும் கஷ்டப்பட்ட இந்த சமயத்தில் சிம்பொனி என்ற மாயையை உருவாக்கி தமிழ் ரசிகர்களை திசை திருப்பினர்.  அநியாங்களை பார்த்துக் கொண்டு சும்மாயிருப்பானா கடவுள்?!  புயலென உள்ளே நுழைந்தான் ரஹ்மான் எனும் சிறுவன்..."
--------------------------------------------------------------------------------------------------------------------------

புனைப்பெயர் கவிஞர்கள்:

சலகை(ஜலகண்டாபுரம் என்பதன் சுருக்கம்) வேந்தன், எர்னஸ்டோ ட்ரஸ்ட்வோயிஸ்கி, மண்டேலா தாசன், வாசமற்றவள், மற்றும் பலர்..., கவிதைகளில் அனல் பறக்கும்...

"சுடுவேனென்று தெரிந்தும் எனைத் தீண்டிநாயே கள்வளே...."
"முறையறிந்து சொல்ல நான் பாரதியல்ல, முகத்திலறைந்து சொல்லும் பார்றா தீ..."
"மார்பைத் திருகியெரியும் கண்ணகியல்லடா நான் மானுடனே..."
--------------------------------------------------------------------------------------------------------------------------

காப்பியடிக்கப் படமென்றால் கழுவி ஊத்துவதோடு நிறுத்தாமல் அதையும் இதையும் கம்பேர் பண்ணும் ஒலக சினிமா விமர்சகர்கள்:...

"ஒரு படம் ஆரம்பித்து ஒன்பதாவது நிமிடத்தில் க்ளைமாக்ஸை நோக்கி செல்ல வேண்டும்.  எல்லா கொரியன் படங்களும் இதைத்தான் செய்கின்றன.  நம்மூரில் க்ளைமாக்ஸிற்க்கென்று தனியாக 20 நிமிடம் ஒதுக்கி வேஸ்ட் செய்கிறார்கள்...
 "திரைமொழி, உடல்மொழி, உயிர்மொழி, மயிர்மொழி எல்லாம் மெக்சிகன் படங்களில் ஆளுமையுடன் கையாளப் பட்டிருக்கும், இங்கு தமிழ்மொழி மட்டுமே மிஞ்சியிருக்கின்றது, Disgusting...!!!"
"ரே, அடூர், பெனெகல் போன்றோரை  தவிர்த்து பார்த்தால் இங்கு வெறும் வெறுமையே .மிஞ்சுகிறது..."
--------------------------------------------------------------------------------------------------------------------------

16 comments :

 1. ஹஹ்ஹ நல்லாவே உதார் விடுறாங்கப்பா.,...

  ReplyDelete
  Replies
  1. நானும் ரவுடியா பார்ம் ஆகிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..

   Delete
 2. வாங்க வாங்க ரொம்ப நாளைக்கப்புறம் ரீ என்ட்ரி! ரிட்டர்ன் ஆஃப் தெ "ட்ராகன்"??!!!!!

  ReplyDelete
  Replies
  1. இல்லையே... இந்த மாசம் இது மூணாவது வாட்டி..., நீங்க சரியா கவனிக்கலையோ என்னமோ..!!

   Delete
 3. பேர் சொல்லு தம்பி!
  கிசு கிசுன்னாலம் ஆள், ஊர் பேர் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அது என்ன கிசு கிசு!

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு category-லயும் நாலு பேரு வருவாங்க தலைவரே..., அதான் பொத்தாம் பொதுவா அடிச்சு விட்டாச்சு...

   Delete
 4. வைரமுத்து அவ்வபோது ஏதாவது உளறுவதுண்டு
  நவீன எழுத்தாளர்கள் என்றால் பாலியல் வறட்சி பற்றி எழுதவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அட ஆமால்ல...!! அந்த பாயிண்ட விட்டுட்டேனே...

   Delete
 5. Replies
  1. நாமளும் எவ்ளோ நாளைக்குதான் காமெடியனாவே இருக்கிறது, வில்லனாகிறதுன்னு எறங்கிட்டேன்..

   Delete

 6. ***"மிக நெருங்கிய தோழி ஒருவர், எந்த அளவுக்கு நெருக்கம் என்றால் என்னை அவரது fantasyயாக பல நேரங்களில் நினைத்துக் கொள்வாராம், இது அவருடைய கணவருக்கும் தெரியுமாம்...!!***

  I think this "big shot" must be having a "limp dick", he can do well only in fantasies! he can do nothing for real! LOL

  All these guys who have a BIG MOUTH and bragging like this, all have a "limp dick". They fuck around only with their big mouth like he does here. Trust me it is a "proven theory"!

  BTW, Honestly I dont have a clue who the fuck that guy really is! Does it really matter? :)

  ReplyDelete
  Replies
  1. ha..ha..ha...
   let them relish with what they have, a stagger or dodder...
   Well, this is not about a single bugger, there are few of them

   Delete
 7. பின் நவீனத்துவம்,முன்நவீனத்துவம்னு ஏதோ சொல்றாங்களே,அந்த ரகமோ?

  ReplyDelete
  Replies
  1. ஆனாலும் உங்களுக்கு அநியாய குசும்பு பித்தன் சாரே...!!

   Delete