Sunday, 20 September 2015

இதுல என் கம்பெனிக்கு என்னங்க லாபம்?!

உண்மையிலயே மரியாதைக்குரிய நண்பர், ஒரு கார்பரேட்டில் நல்ல பதவியில் உள்ளவர், வணிக விஷயமாக அவரே வரச் சொன்னார். நானும் ஆவலோட போய் உக்காந்து நம்ம அருமை பெருமை எல்லாம் ஆர்வத்தோட எடுத்து விட, பத்து நிமிசம் பொறுமையா கேட்டுட்டு அவர் ஆரம்பிச்சார்.

"நம்ம கம்பெனியில ஒரு Event நடத்துறோம்.., சென்னையின் பல கம்பெனியில இருந்தும் பெரிய ஆளுங்கெல்லாம் வருவாங்க.., உங்க கம்பெனிய ஸ்பான்சர் பண்ண சொல்லுங்களேன்.."ன்னு ஆரம்பிச்சார்.

"Event ல என்ன பண்ணுவீங்க"?!


"கார்பரேட்ல உயர் பதவியில இருக்கும் முடிவெட்டி, காட்டன் சாரி கட்டி, அளவான லிப்ஸ்டிக்குடன இருக்கும் ஒரு மிடில்ஏஜ் அம்மிணிய நாலு பெங்களூர் மாடல்ஸ் சூழ குத்துவிளக்கு கொழுத்துறோம்..."


"ஓ..."


"Meteorological Science in the Human Kind Revolution with the Programme of Java in the Element of Kabali Rajnikanth" ன்ற தலைப்புல நாலைஞ்சு அப்பாட்டக்கருங்கள வெச்சு ஒரு டிஸ்கஷன்.."


"ஊ.."


"எங்க industry-ல நல்லா perform பண்ணவங்களுக்கு மெடல், கப், அவார்டு குடுப்போம்..."


"ஆஹாங்... அப்புறம்...!?"


"selfie & groupie session ..."


"வாவ்... மைண்ட் ப்ளோயிங்..., அப்புறம்?!"


"வேறென்ன டின்னர் வித் காக்டெயில் தான்..."


"இதுல என் கம்பெனிக்கு என்னங்க லாபம்..?!"


"என்ன தல இப்படி கேட்டுட்டுடீங்க, எவ்ளோ பெரிய ஆளுங்க எல்லாம் வர்றாங்க, நீங்க இஷ்டப் படி விளம்பரம் செய்துக்கலாம். ப்ரோக்ராம் நடுவுல உங்களோட promotional-க்கு 10 நிமிசம் slot தருவோம்..." (என் காசுல எனக்கேவா!!)


"எங்க கம்பெனி விளம்பரம் எங்கேயாவது பாத்திருக்கீங்களா?!"


"இல்லையே..."


"அதுக்கு தான் எனக்கு சம்பளம் குடுக்குறாங்க..."


மேற்கொண்டு அதைப் பற்றி இருவருமே பேசிக்கொள்ளவில்லை.ஈயம் பூசுறவன் கேரக்டர்ல கவுண்டமணி ஒரு வசனம் சொல்லுவார், "நீ வெச்சிருக்கிறதே இந்த ஒரு குண்டான் தான், அதையும் பிச்சை எடுக்க வெச்சிருக்க..., அதுல ஈயம் பூசித்தான் பிச்சை எடுப்பியா..?!"


பாவம், மரியாதையை இழந்துட்டார்...

Thursday, 17 September 2015

ஐய்யகோ... நம்பள்கியின் தளம் முடக்கப் பட்டதா?

இன்னைக்கு காலையில கூட நல்ல தானே இருந்திச்சு...

பெரியாருக்கும் புள்ளையாருக்கும் வாழ்த்து சொல்லி இருந்தாரே...
திருக்குறள் எல்லாம் போட்டு விளக்கம் குடுத்திருந்தாரே...


இந்த வேலையைப் பண்ணினது CIA-வா, RAW-வா, ISI-யா?!
ஒருவேளை பாரதி, ராசாசி, சின்னைய்யா என அடித்து ஆடியதில் ஆட்டம் கண்ட RSS VHP PMK கோஷ்டிகளா?!


கி.ரா.வின் கதைகளை மேலும் சுவாரசியமாக இனி என்று படிப்பேன்?!
கிளுகிளு சமையலை இனி என்று சுவைப்பேன்?!
அமெரிக்க சட்டங்களை இனி எப்படி அறிவேன்?!


தமிழ்மணத்தில் இந்த LOGOவை இனி என்று காண்பேன்?!
என்னை ஆசையாக சிஷ்யா என்றழைத்த எழுத்துக்களை காண எங்கு போவேன்?சைதை தமிழரசி தாக்கப் பட்டார்களா?!
எங்கே தாக்கப் பட்டார்கள்?!
எதால் தாக்கப் பட்டார்கள்?!
எப்படி தாக்கப் பட்டார்கள்?!
பிரச்சார பீரங்கி, பேச்சுப் புயல், சைதை தொகுதி தலைவி தாக்கப் பட்டார், கண்ணீர் இல்லையா? கம்பலை இல்லையா? கடையடைப்பு இல்லையா?

Saturday, 12 September 2015

பேர மாத்துறியா? சாதிய மாத்துறியா!?

பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு:

அப்பாவின் ஆபீஸில் இருந்த ஒருவர் தனது இரண்டு மகன்களுக்கு சாதிச் சான்றிதழ் வாங்கப் போன எடத்துல தாசில்தார் நல்லா திட்டி திருப்பி அனுப்பி விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார்.  அப்பா அப்போ யூனியன்ல செம பவர் உள்ள ஒரு ஆள்.., எந்த அளவுக்கு பவர்ன்னா, தன்னுடைய ஜி.எம்.ஆன ஒரு பாலக்காட்டு நாராயண ஸ்வாமியை தரக் குறைவாக பேசிவிட்டார் என்பதற்காக பாதிக்கப் பட்டவர் முன்னிலையில் வைத்து அந்த பா.கா.நா.ஸ்வா-யை தலையில் செருப்பால் அடித்தவர்.  பிறிதொரு சமயம் அதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

தாசில்தார என்னன்னு பாத்துருவோம்ன்னு அப்பா அந்த பார்ட்டிக்கு தைரியம் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார்.

ஆக்சுவலா என்ன நடந்துச்சுன்னா...
இவர் கொடுத்த அப்ப்ளிகேஷன பாத்த தாசில்தார் சொன்னது ரொம்ப சிம்பிள்..., "நீ கேட்டிருக்கிற சாதிக்கும் உன் பசங்களுக்கு நீ வெச்சிருக்கிற பேருக்கும் சம்பந்தமே கிடையாது, ஒன்னு உன் பசங்க பேரை மாத்து, இல்லன்னா சாதிய மாத்து"ன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டார்.

பசங்க பேரு... ரத்தீஷ் ஷர்மா, சத்தீஷ் ஷர்மா...!!!

தாசில்தாரை விட பல மடங்கு தடித்த வார்த்தைகளில் அப்பா அவரை திட்டி அனுப்பிட்டார். 

இது மாதிரி கூறு கெட்ட அடிவருடிகள் இருக்கிறதுனால தான் நம்ம மேல ஏறி உக்காந்து "ஹிந்தி கத்துக்கோ, ராஷ்டிர பாஷா, ஆப் கா ஹிந்துஸ்தானி"ன்னு அப்பப்போ நம்ம லங்கோட்டாவ அவுக்கிறாங்க..!!!
ஹிந்தி ஹே ஹம், ஹிந்தி ஹே ஹம் ன்னு வர்ற பாடலை தேச பக்தி பாடலா சொருகுறாங்க...!!!
முடிந்தால் இச் சிறுகதையையும் வாசிக்கவும்
http://ramansnpr.blogspot.in/2015/09/blog-post.html

யட்சன் - ஒரு நுண்ணிய பார்வை

*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*யுவன் - பட்டாஸ்.., I am a Champion பாட்டு செம தெறி...
என்னது...?! படமா..?!
ரெண்டரை மணி நேரத்துக்கு ச்ச்ச்சும்மா வெச்சு வலுவா செஞ்சுட்டாங்க!!
தொங்கிட்டு இருக்கிற திரைக்கதையை அப்பப்போ லேசா தட்டி எழுப்பி விடுறது தம்பி ராமையா மட்டுந்தான்..!!

"யட்சன்" என்றால் இயக்குபவன் என அர்த்தமாம், நல்லா இயக்குனாருயா?!

இதுல, "டபுள் ஹீரோ சப்ஜக்ட்னா எனக்கு வொர்க் அவுட் ஆகும்"னு படம் முடிஞ்சப்புறம் அவரே சொல்லிக்கிறாரு..!!