Saturday 12 September 2015

பேர மாத்துறியா? சாதிய மாத்துறியா!?

பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு:

அப்பாவின் ஆபீஸில் இருந்த ஒருவர் தனது இரண்டு மகன்களுக்கு சாதிச் சான்றிதழ் வாங்கப் போன எடத்துல தாசில்தார் நல்லா திட்டி திருப்பி அனுப்பி விட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார்.  அப்பா அப்போ யூனியன்ல செம பவர் உள்ள ஒரு ஆள்.., எந்த அளவுக்கு பவர்ன்னா, தன்னுடைய ஜி.எம்.ஆன ஒரு பாலக்காட்டு நாராயண ஸ்வாமியை தரக் குறைவாக பேசிவிட்டார் என்பதற்காக பாதிக்கப் பட்டவர் முன்னிலையில் வைத்து அந்த பா.கா.நா.ஸ்வா-யை தலையில் செருப்பால் அடித்தவர்.  பிறிதொரு சமயம் அதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

தாசில்தார என்னன்னு பாத்துருவோம்ன்னு அப்பா அந்த பார்ட்டிக்கு தைரியம் கொடுத்து பேசிக் கொண்டிருந்தார்.

ஆக்சுவலா என்ன நடந்துச்சுன்னா...
இவர் கொடுத்த அப்ப்ளிகேஷன பாத்த தாசில்தார் சொன்னது ரொம்ப சிம்பிள்..., "நீ கேட்டிருக்கிற சாதிக்கும் உன் பசங்களுக்கு நீ வெச்சிருக்கிற பேருக்கும் சம்பந்தமே கிடையாது, ஒன்னு உன் பசங்க பேரை மாத்து, இல்லன்னா சாதிய மாத்து"ன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டார்.

பசங்க பேரு... ரத்தீஷ் ஷர்மா, சத்தீஷ் ஷர்மா...!!!

தாசில்தாரை விட பல மடங்கு தடித்த வார்த்தைகளில் அப்பா அவரை திட்டி அனுப்பிட்டார். 

இது மாதிரி கூறு கெட்ட அடிவருடிகள் இருக்கிறதுனால தான் நம்ம மேல ஏறி உக்காந்து "ஹிந்தி கத்துக்கோ, ராஷ்டிர பாஷா, ஆப் கா ஹிந்துஸ்தானி"ன்னு அப்பப்போ நம்ம லங்கோட்டாவ அவுக்கிறாங்க..!!!
ஹிந்தி ஹே ஹம், ஹிந்தி ஹே ஹம் ன்னு வர்ற பாடலை தேச பக்தி பாடலா சொருகுறாங்க...!!!












முடிந்தால் இச் சிறுகதையையும் வாசிக்கவும்
http://ramansnpr.blogspot.in/2015/09/blog-post.html

19 comments :

  1. அடீங் ! இவ்வளவு கேவலமான ஆட்களிடம் பேசுவதே கேவலம். ஷர்மான்னு பேரு வைக்கிற ஆளுக்கு என்ன --- க்கு ஜாதி வேணுமாம். உங்க அப்பா மேல தனி மரியாதை வருகிறது

    ReplyDelete
    Replies
    1. அந்தாளுக்கு அடிப்படையிலே "ஷர்மா"ன்னா என்னன்னு தெரியல. அதான் பிரச்சினையே...!!
      "ஷ்"ல பேரு வெச்சு அழகு பாக்கணும்னு ஆசைப் பட்ட கொடுமைதான் இது...!!
      ராகேஷ் ஷர்மா, சேட்டன் ஷர்மான்னு பாத்து அதே மாதிரி வெக்கனும்னு எடுத்த முடிவு போல...

      Delete
  2. இந்தி படிக்காததால் நாம் பின்தங்கி விட்டதாக சொல்வது அப்பட்டமான கள்ளப்பரப்புரை.இது பற்றிய எனது பதிவு ஒன்று.

    இந்தி படிக்காததால் தமிழினம் இழந்தது என்ன.

    http://thippuindia.blogspot.in/2011/07/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. ஹைதராபாத்ல தெலுங்கு இல்ல, பெங்களூர்ல கன்னடம் இல்ல, அதே நிலைமை சென்னைக்கும் வரணும்ன்ற முயற்சி தான் இது...

      Delete
  3. மலர்!
    ஏன் அவர் ஷர்மா என்ற பெயரை மாற்றி சாஸ்திரி இல்லை பண்டிட் என்று வைத்துக்கொள்ளவேண்டியது தானே!

    என்ன அகம்பாவம்?
    என்ன நான் சொல்வது சரியா?

    ReplyDelete
    Replies
    1. பார்ப்பான்தான் உயர்ந்தவன்ற எண்ணம் என்னைக்கு சூத்திரனோட ஆழ் மனசுலருந்து வெளியேருதோ அப்போ தான் இதுமாதிரி கூத்துக்கள் முடிவுக்கு வரும். அது வரைக்கும் தன்னை போலியாக உயர்த்திக்க உண்டான முயற்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். விரதம், வெஜிடேரியன், குழந்தைகளுக்கு சம்ஸ்கிருத பெயர்கள் வைத்தல், குடுமி வெச்சவன "சாஸ்திரிகள்"ன்னு கூப்பிடறது என பலவற்றை சொல்லலாம்...

      சேலத்துல கந்தாசிரமம் என்ற இடத்தில குன்றின் மேல் ஒரு முருகன் கோயில் உண்டு. ஸ்கூலுக்கு கட் அடிச்சிட்டு சினிமா போக காசு இல்லன்னா அங்க தான் போவோம். நம்ம பயலுவ அத இப்போ நம்ம கிட்டேயே "ஸ்கந்தாஷ்ரம்" என ஸ்டைல் மயிரா சொல்றானுங்க..!!

      Delete
  4. அட! என்னப்பா இது எப்ப இந்த சாதிப் பெயரை பெயரு பின்னாடி போடற பழக்கம் மாறப்போகுதோ...ஒழியப் போகுதோ...இந்தாளு வேணா தெரியாம வைச்சுருக்கலாம்....ஒருவேளை கிரிக்கெட் ரசிகரோ..அஹ்ஹஹ்

    ReplyDelete
    Replies
    1. அவரு இந்தப் பெயர் வெச்ச காலகட்டத்துல ராகேஷ் ஷர்மான்னு ஒருத்தரு ராக்கெட்ல போனாரு..., சேடன் ஷர்மான்னு ஒருத்தரு கிரிக்கெட்ல இருந்தாரு... ஆனா அப்போல்லாம் பேருல "ஷ்" வர்றனும்ன்றது ரொம்ம்ம்ம்ப முக்கியம்.

      Delete
  5. ஷர்மா''னு ப்ரு வச்சா என்னய்யா குத்தோம் ?

    ReplyDelete
    Replies
    1. குற்றமேதுமில்லை சகோதரரே! அது சாதிப் பெயர், ஷர்மா பெயரைப் பார்த்ததும் அவரைப் பிராமணர் என எண்ணுவார்கள். அவ்வளவே!
      ஜேம்ஸ் எனில் கத்தோலிக்கர், இஸ்மயில் எனில் இஸ்லாமியர், சிவகுமார் எனில் இந்து ஆனால் சிவகுமார் சைவன் (இந்து) ஆனால் சிவகுமார் சர்மா பிராமணன்.
      இலங்கையில் இந்த ஷர்மாவை, சர்மா எனவே எழுதுவார்கள்.

      Delete
    2. தமிழ்நாட்டில் சிவகுமார் என்ற பெயரை பார்ப்பனர்கள் வைத்துக் கொள்ள மாட்டார்கள். மாறாக சிவசுப்பிரமணியன் என வைத்துக் கொள்வதுண்டு. இங்கு சாதிப் பெயரை பின்னால் சேர்த்துக் கொள்ளவில்லை என்றாலும் அவாளை பெரும்பாலும் பெயரைக் கொண்டே அடையாளம் காணலாம். ரங்கபாஷ்யம், வரதராஜன், பத்மநாபன், கோவிந்தாச்சாரி... இவ்வாறு

      Delete
    3. சரிதான்....சிவகுமார் என்று வைத்துக் கொள்கின்றார்கள் மலர்...

      Delete
    4. சான்சே இல்லை துளசியாரே..., சிவகுமார், சரவணன், முருகன், கந்தன், கதிர்வேலன், ஆறுமுகம், குமரன், வேலன் போன்ற பெயர்களை அவாள் வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

      அங்க எப்படி இருக்கும்னா (சிவ)(பால)சுப்ரமன்யன், விஷாகன், கார்த்திக், குஹன், மனோஹரன்...

      Delete
  6. சாரி பேரு என்பது ப்ரு என்று வந்து விட்டது
    தளத்தில் இணைந்து விட்டேன் நண்பா..

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இன்னும் சரியா வெளங்கல போல...
      ஷர்மான்றது பேரு இல்ல ப்ரோ, அது ஒரு சாதி...
      அந்தப் பேர வெச்சுக்கிட்டு எனக்கு வேற சாதிச் சான்றிதழ் கொடுன்னு கேட்டா காண்டாவுமா ஆவாதா?!

      Delete
  7. இலங்கையில் பெரும்பாலும் பிராமணக் குழந்தைகளுக்கு சர்மா எனும் முடிவுடனே பெயர் இருக்கும் - இந்திய பிராமணர்களில் உள்ள வேறுபாடான சாஸ்திரி, தீட்சிதர், சதுர்வேதி மற்றும் எதும் கேட்டறியேன். இந்தச் சர்மாக்கள் பெரியவர்களானதும், குருக்கள் பட்டம் என ஒன்று கொடுத்து குருக்கள் என விளிக்கப்படுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. மேலே நம்பளிகிக்கு போட்ட பதிலே உங்கள் கம்மெண்ட்டுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன் யோகன்...
      நன்றி...

      Delete
    2. ஹலோ! மலர்!

      சும்மா நக்கலுக்கு சொன்னேன் சிஷ்யா! நேக்கு தெரியாதா ஷர்மா, சாஸ்த்ரி, பண்டிட், மாமிசம் சாப்பிடும்---கர் என்று முடியும் ஜாதிகள்--உதாரணாம--டெண்டுல்கர், வீர சாவர்கர், கவாசாஸ்கர் எல்லாம் பிராமணர்கள் என்று.

      யோகன் பாரீஸ்- சர்மா தமிழ்நாட்டில் இன்றும் உண்டு!
      எப்படி தெரியும் என்று கேட்காதேள்--நேக்கு நன்னா தெரியும்.

      Any name that ends with 'kar' s a Brahminical name!

      இன்றைக்கு பழனி கோவிலில் கூட...சுப்ரமண்யா தான்! முருகன் என்ற பேர் சூத்திரப் பசங்குளுக்கே ஆகாது.


      என்ன புண்ணாக்கு சமசக்ரித்த பேர் வைத்தாலும்..ஒரு சவுண்டி (பிணம் தூக்கும் பாவங்களை ஏற்றுக் கொள்ளும் "உயர்ந்த பிராமணன் ") பிராமணணன் கூட உன்னிடம் சம்பந்தம் வைத்துக் கொள்ளமாட்டான்.

      Delete
    3. உங்களுக்குத் தெரியாததா மாஸ்டர்ஜி!!
      இப்போ சரவணன் கூட ஷ்ரவன் ஆகிடுச்சு... கருமம்...

      Delete