Thursday 17 September 2015

ஐய்யகோ... நம்பள்கியின் தளம் முடக்கப் பட்டதா?

இன்னைக்கு காலையில கூட நல்ல தானே இருந்திச்சு...

பெரியாருக்கும் புள்ளையாருக்கும் வாழ்த்து சொல்லி இருந்தாரே...
திருக்குறள் எல்லாம் போட்டு விளக்கம் குடுத்திருந்தாரே...


இந்த வேலையைப் பண்ணினது CIA-வா, RAW-வா, ISI-யா?!
ஒருவேளை பாரதி, ராசாசி, சின்னைய்யா என அடித்து ஆடியதில் ஆட்டம் கண்ட RSS VHP PMK கோஷ்டிகளா?!


கி.ரா.வின் கதைகளை மேலும் சுவாரசியமாக இனி என்று படிப்பேன்?!
கிளுகிளு சமையலை இனி என்று சுவைப்பேன்?!
அமெரிக்க சட்டங்களை இனி எப்படி அறிவேன்?!


தமிழ்மணத்தில் இந்த LOGOவை இனி என்று காண்பேன்?!
என்னை ஆசையாக சிஷ்யா என்றழைத்த எழுத்துக்களை காண எங்கு போவேன்?



சைதை தமிழரசி தாக்கப் பட்டார்களா?!
எங்கே தாக்கப் பட்டார்கள்?!
எதால் தாக்கப் பட்டார்கள்?!
எப்படி தாக்கப் பட்டார்கள்?!
பிரச்சார பீரங்கி, பேச்சுப் புயல், சைதை தொகுதி தலைவி தாக்கப் பட்டார், கண்ணீர் இல்லையா? கம்பலை இல்லையா? கடையடைப்பு இல்லையா?

38 comments :

  1. என்ன நண்பரே திடீரென இப்படி சொல்றீங்க....

    ReplyDelete
    Replies
    1. கேள்விப்பட்டதிலிருந்து தூக்கமே வரல ஜி...

      Delete
  2. உண்மையாகவா ஜீ)))

    ReplyDelete
  3. உண்மையாகவா ஜீ)))

    ReplyDelete
    Replies
    1. இப்போ வரைக்கும் முடங்கி தான் இருக்கு ஜி...
      இப்போ வரைக்கும் முடங்கி தான் இருக்கு ஜி...

      Delete
  4. நம்பல் கிட்டே என்னா பவர் இருக்கு, உனக்கு தெரியாதா ? ஐஞ்சு வர்ஷம் நம்பலே ஆட்ட முடியாது !!!!!

    உண்மையா சொல்றே இரு இரு இன்னம் இருக்கு வச்சுக்கிறேன் !!!!

    ReplyDelete
    Replies
    1. நிம்பள் ஹேக் பண்ணா நம்பள் ஹேங் பண்ணுது...
      நம்பள்கி மறுபடி வர்றா...

      Delete
  5. nethu night nanum kavanichen...
    naa avaroda domain expire aaki irukkalamnu ninaichu vitutten.
    ninga eluthiya pirakuthaan hackers kitta maatte irukkalamnu yosichen.


    avare vanthu pathil sonnaalthaan theriyum.

    avarinmithu anpil pathivu ezuthiyamaikkku nandri.

    ReplyDelete
    Replies
    1. ஆம்... சரியா சொன்னீங்க...
      அவரின் மீதுள்ள அனிபினால் எழுதியதுதான்...
      நன்றி...

      Delete
  6. ஏற்கனவே ஒரு முறை அவரே வனவாசம் சென்றார் ,நிச்சயம் திரும்பி வருவார் :)

    ReplyDelete
    Replies
    1. வனவாசமா?! அப்போ இன்னும் பல வருசம் காத்திருக்கணுமா?

      Delete
  7. மலர் இது முடக்கப்பட்டதாகத் தெரியவில்லை....முன்பு ஒரு முறை அவரே தனது தளத்தை மூடியதுண்டு...மீண்டும் வந்தார். அதனால் இப்போதும் அப்படித்தான் இருக்கும் மலர்வண்ணன் அப்படித்தான் நாங்கள் நினைக்கின்றோம்....அவர் வருவார் பாருங்க...

    சே ஒரு 3 நாள் வலைத்தளம் வராத இந்த சைக்கிள் காப்ல என்னல்லாம் நடக்குதுப்பா..இங்க....

    ReplyDelete
    Replies
    1. அவர் பதிவு ஆரம்பித்து மூன்று வருடம் தான் ஆகிறது. மூன்று முறை அவர் வலையை முடக்கி வைத்து ஒவ்வொரு முறைடயும் ஆறு மாதம் விடுப்பில் சென்று விட்டார்.. இந்த தமிழ்மன ரேன்ங் இதில் எல்லாம் அவருக்கு நம்பிக்கையில்லை, வருவார்! மறுபடியும் வருவார்.

      அவரை எவனும் முடக்கியைருக்காமாட்டான்-அது உங்க கணிப்பு.வலையை முடக்கும் அளவிற்கு அவர் என்ன செய்தகார்...அவர் எழுத்திய எல்லற்றிக்கும் ஆதாரம் சான்றுகள் கொடுத்து உள்ளார்..எல்லாமே ஆராய்ச்சி கட்டுரை மாத்ரி; சான்றுகளில் இருந்து எடுத்தவைகள்..

      மேலும், வினவு தளத்தையே முடக்கவில்ல்லை. """"இவனுங்க****செய்த அந்த கால, இந்த கால, அநியாங்கள், கோல்மால்கள்'''' எல்லாம் ஆணித்தரமாக வினவு தளம் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சாமியார்கள் எல்லோரும் வினவு தளத்திடம் கொத்துக்கறி யாகிரார்கள். அகவே தற்காலிகமாக இருக்கலாம்,

      Delete
    2. Anonymous-ஆ வந்து நீங்க சொல்றத வெச்சுப் பார்க்கும் போது நீங்க தான் நம்பள்கியோன்னு மைல்டா ஒரு டவுட்டு..!!

      Delete
    3. மூடப் பட்டிருக்க வாய்ப்பு இல்லை... ச்ச்ச்சும்ம்ம்மா...
      நம்பள்கிக்கு hype create பண்ணலாம்னு தான்...!! யாருக்குத் தெரியும்?! வருங்கால அமெரிக்க ஜனாதிபதியா கூட ஆகலாம்?

      Delete
    4. மலர் அவரு தள்ம்தான் மூடியிருக்கிறார். ஆனால் அவர் தளங்களைப் பார்க்கிறார் நிச்சயமாக.... மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என்பதுதான் ஹஹஹஹ்

      Delete
    5. ஒருவேளை நம்ம ரியாக்சன் என்னன்னு பார்க்கிறாரோ என்னமோ?!

      Delete
  8. நம்பள்கி விவரம் தெரிந்தவர் அவரது வலைதளத்தை ஹேக் செய்திருக்க வாய்ப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னது!! விபரம் தெரிந்தவரா?!!
      அவர் ஒரு விபரத் திலகம்..., விபர விற்பன்னர்..., அவ்வளவு விபரம்...

      Delete
  9. Anonymous comment டாக்டர் எழுத்து நடையில் இருக்கு!
    --அதனை அவரே எழுதியதா; அவரைப்போல யாராவது எழுதியதா சொல்ல முடியாது!!!
    சொல்ல வந்த தகவல் யோசிக்க வைத்தது..

    ஸோ அவர் மீண்டும் சில நாட்கள் ஓய்விர்க்கு அடுத்து அகேன் பெக் டூ பதிவுலகம்.
    நம்புவோம்..

    ReplyDelete
  10. அதானே எங்கே போய்ட்டார்?

    nambalki.com site expire on 05-mar-2016, so... it may be hacked or kept in silence..

    dear nambalki.com,

    we are regular reader visitor fan ac everything on your thoughts... please do write more :)

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை "கபாலி" வரும் போது வருவாரோ என்னமோ?!
      back with a bang

      Delete
  11. பெரியோர்களே! தங்கள் நண்பர் நம்பள்கியின் தளம் முடக்கப்படவெல்லாம் இல்லை. அவர் கடையை இழுத்துமூடிவிட்டு மறைந்து நின்று பார்ப்பதன் மர்மத்தை உங்களுக்கு நான் உரைக்கிறேன். சமீபத்தில் "கலாம் பெயரை அவுரங்கசீப் ரோடிற்கு வைத்த இந்துவதா அரசியல்!" எனும் பெயரில் அவர் வெளியிட்ட பதிவு தங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என நம்புகிறேன். அப்பதிவில் எனக்கும் அவருக்கும் நடைபெற்ற மிக நீண்ட, கம்பனை மையமாகக் கொண்ட விவாதத்தையும் நீங்கள் கண்டிருக்க வாய்ப்புண்டு. அவ்விவாதம் எங்கள் இருவருக்குமே மனநிறைவைத் தருவதாக அமைந்ததென்றே நம்புகிறேன்.

    ஆனால் அன்னார் அதைத் தொடர்ந்து எழுதிய பதிவில், சுமார் நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு சாரு என்பவர் வெளியேற்றிய கழிவை கிண்டிக் கிளறி ஆராய்ந்திருந்தார். அவருடைய வாசகர்களைத் திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். அதில் எனக்கு எந்த ஆட்சேபனமும் இருக்கவில்லை. ஆனால் அவர் சம்மந்தம் ஏதும் இல்லாமல் அனாவசியமாக அந்த நபரை கம்பனுடன் ஒப்பிட்டு இருந்தது என்னை சீண்டியதாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இருந்தும் நான் என் எதிர்ப்பை பதிவு செய்து பொறுமையுடன் கடந்து செல்லவே விரும்பினேன். எனவே என்னுடைய பின்னூட்டங்களை அழித்து விலகிச் சென்றேன். சில நாட்கள் கழித்து, என் நண்பர் ஒருவர் கூறுகையில் "நீ நம்பள்கியின் தளத்தை இப்போ பாக்குறது இல்லையா? He has delivered couple of posts about Bharathi (நான் பாரதியின் வரிகளை எங்களின் விவாதத்தில் பயன்படுத்தி இருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது) just to provoke you." என்றார். சீவகசிந்தாமணியை விமர்சிக்கவே அவர் திட்டமிட்டிருந்தார் என நான் அறிவேன். நான் சென்று படிக்கையில், அப்பதிவுகள் என்னைக் குறிவைத்தே எழுதப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. (என்னுடனான விவாதத்தை அவர் விரும்பி இருக்கலாம். என்னுடைய பின்னூட்டங்களைத் தான் வரவேற்பதாகவே அவர் கூறி இருந்தார். ஆனால் நல்ல தரமான எழுத்தே தரமான வாசகர்களைத் தரமுடியும் எனும் எளிய உண்மை புரியவில்லையே அவருக்கு!) இவரின் இச்செயல் அடுத்தவரை சீண்டி பொழுதுபோக்கும் செயலாகவே எனக்குப் பட்டது. அதுவரை என் பாணியில் பேசிய நான், அவர் பாணியில் ஆனால் எல்லை மீறாது நறுக்கென நாலு கேள்விகளைக் (அவற்றை அறிந்துகொள்ள ஆர்வமா நண்பர்களே! தங்கள் நண்பர் வெளியிட விரும்பாததை நான் பகிர்ந்தால் நாகரிகம் ஆகாது எனும் எண்ணமே என்னைத் தடுக்கிறது. மன்னிக்கவும்.) கேட்டிருந்தேன். அவர் நாக்கைப் பிடிங்கிக்கொள்வார் என எதிர்பார்த்தால், தளத்தின் நாவை பிடிங்கிச் சென்றுவிட்டார். (note my lord, he did not publish my that specific comment alone. It also seems to be his strategy to create hype.)

    நண்பர்! பாரதியைப் பற்றிய பதிவுகளுக்கும் நான் பதிலளிப்பேன் என யூகித்திருக்க வேண்டும், அதான் கடையை காலி செய்து ஓடிவிட்டார். (அவர் மொழியில் சொன்னால் "அப்பீட்டாகிவிட்டார்") இப்பொழுதும் அவரின் பதிவுகளுக்கு (பாரதியைப் பற்றிய) பதிலளிக்க நான் தயார். உங்கள் நண்பரை எங்கேனும் கண்டீர்கள் எனில் இதைத் தெரியப்படுத்தவும். மேலும் அவருக்கு பின்னூட்டமாக எழுதி, அனுப்பாது விட்டுப்போன இந்த தகவலையும் சொல்லிவிடுங்கள்.

    "மன்னிக்கவும். தங்களின் மதச்சார்பின்மை எனும் முகச்சாயத்திற்கு வண்ணம் தீட்ட எழுதிய 'பத்து கட்டளைகள்' எனும் இடைச்செருகளை பாராட்ட மறந்தமைக்கு. என் கருத்திற்கு தாங்கள் செவி சாய்தமைதே உண்மையெனில், வாழ்த்துகள் + நன்றி."

    தளத்தை மூடிச்சென்றால், நான் என் வழி சென்றுவிடுவேன் என்று நினைத்திருப்பார். தன் நண்பர் குழுமம் வரை பின்தொடர்ந்து வந்து பதிலளிப்பேன் என எதிர்பார்த்திருக்கமாட்டார்! என் சார்பாகவும் சற்று ஆறுதலும் கூறிவிடுங்கள். வருகிறேன் தோழர்களே!

    ReplyDelete
    Replies
    1. நித்யா...,

      நம்பள்கியைப் போன்று தமிழ் வலைப் பதிவர்கள் பலரையும் ரசிப்பவன் நான்.., இங்கு மேலே பின்னூட்டமிட்ட பலரும் அப்படித்தான்..., தமிழும், நக்கலும், நய்யாண்டியும், அன்பும் மட்டுமே நல்ல ஆரோக்கியமான இணைப்பில் நம்மை வைத்திருக்கிறது.

      பொழுது போகாமல் ஜாலிக்கு எதையாவது எழுதித் தொலைக்கலாம் என்பதாலும், நம்பள்கியை கலாய்க்க வேண்டும் என்பதாலும் மட்டுமே இப்பதிவு எழுதப் பட்டது. உங்களுக்கும் அவருக்கும் உள்ள கருத்துப் பரிமாறல்களை இங்கே வந்து குமுறுவதால் ஆகப் போவது என்ன?! ஆனால் நீங்கள் இட்ட இப்பின்னூட்டம் நிச்சயமாக உங்களுக்கு ஒரு relief தந்திருக்கும்.

      Delete
    2. This is NOT with reference to you Malar!
      This is with ref. to RSS activist!

      Delete
  12. ஆகப்போவது என்ன? என்ன! மந்தையில் மறைந்து நிற்கும் அந்த ஒரு வெள்ளை.... இல்லை... இல்லை... கருப்பு ஆட்டிற்கு என் செய்தி சென்று சேர்ந்திருக்கும். so mission completed. வேறு என்ன?! by the way, தாங்கள் அறியாது செய்த உதவிக்கு thanks, தங்களின் அனுமதி இன்றி தளத்தைப் பயன்படுத்தி தருமசங்கடத்தில் ஆழ்த்தியமைக்கு sorry. :) விடைபெறுகிறேன்!

    ReplyDelete
  13. மலர்:
    இவர், நித்யா என்ற பேரில் இருக்கும் ஆண், [aka, RSS. Activist], தனது வாதம் கொத்து கைமா ஆகும் பொது, அவர் எழுதிய எல்லா பின்னூடங்களையும் அழித்து விடுவார்! அதற்கு நம்ப முடியாத காரணனும் ஒன்று. சொல்வார்! எல்லாவர்த்ரையும் இங்கே நான் இட்டதிற்க்கு ஒரே காரணம்---நாளை அவர் எழுதிய பின்னூட்டத்தை அவரே அளித்து விட்டு முட்டாளாக்குவார்..அதான் தான் இந்து காப்பி மற்றும் பேஸ்ட்!
    _____________________
    Nithya23 September 2015 at 02:40

    பெரியோர்களே! தங்கள் நண்பர் நம்பள்கியின் தளம் முடக்கப்படவெல்லாம் இல்லை. அவர் கடையை இழுத்துமூடிவிட்டு மறைந்து நின்று பார்ப்பதன் மர்மத்தை உங்களுக்கு நான் உரைக்கிறேன். சமீபத்தில் "கலாம் பெயரை அவுரங்கசீப் ரோடிற்கு வைத்த இந்துவதா அரசியல்!" எனும் பெயரில் அவர் வெளியிட்ட பதிவு தங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும் என நம்புகிறேன். அப்பதிவில் எனக்கும் அவருக்கும் நடைபெற்ற மிக நீண்ட, கம்பனை மையமாகக் கொண்ட விவாதத்தையும் நீங்கள் கண்டிருக்க வாய்ப்புண்டு. அவ்விவாதம் எங்கள் இருவருக்குமே மனநிறைவைத் தருவதாக அமைந்ததென்றே நம்புகிறேன்.

    ஆனால் அன்னார் அதைத் தொடர்ந்து எழுதிய பதிவில், சுமார் நான்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு சாரு என்பவர் வெளியேற்றிய கழிவை கிண்டிக் கிளறி ஆராய்ந்திருந்தார். அவருடைய வாசகர்களைத் திருப்திப்படுத்த எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். அதில் எனக்கு எந்த ஆட்சேபனமும் இருக்கவில்லை. ஆனால் அவர் சம்மந்தம் ஏதும் இல்லாமல் அனாவசியமாக அந்த நபரை கம்பனுடன் ஒப்பிட்டு இருந்தது என்னை சீண்டியதாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். இருந்தும் நான் என் எதிர்ப்பை பதிவு செய்து பொறுமையுடன் கடந்து செல்லவே விரும்பினேன். எனவே என்னுடைய பின்னூட்டங்களை அழித்து விலகிச் சென்றேன். சில நாட்கள் கழித்து, என் நண்பர் ஒருவர் கூறுகையில் "நீ நம்பள்கியின் தளத்தை இப்போ பாக்குறது இல்லையா? He has delivered couple of posts about Bharathi (நான் பாரதியின் வரிகளை எங்களின் விவாதத்தில் பயன்படுத்தி இருந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது) just to provoke you." என்றார். சீவகசிந்தாமணியை விமர்சிக்கவே அவர் திட்டமிட்டிருந்தார் என நான் அறிவேன். நான் சென்று படிக்கையில், அப்பதிவுகள் என்னைக் குறிவைத்தே எழுதப்பட்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. (என்னுடனான விவாதத்தை அவர் விரும்பி இருக்கலாம். என்னுடைய பின்னூட்டங்களைத் தான் வரவேற்பதாகவே அவர் கூறி இருந்தார். ஆனால் நல்ல தரமான எழுத்தே தரமான வாசகர்களைத் தரமுடியும் எனும் எளிய உண்மை புரியவில்லையே அவருக்கு!) இவரின் இச்செயல் அடுத்தவரை சீண்டி பொழுதுபோக்கும் செயலாகவே எனக்குப் பட்டது. அதுவரை என் பாணியில் பேசிய நான், அவர் பாணியில் ஆனால் எல்லை மீறாது நறுக்கென நாலு கேள்விகளைக் (அவற்றை அறிந்துகொள்ள ஆர்வமா நண்பர்களே! தங்கள் நண்பர் வெளியிட விரும்பாததை நான் பகிர்ந்தால் நாகரிகம் ஆகாது எனும் எண்ணமே என்னைத் தடுக்கிறது. மன்னிக்கவும்.) கேட்டிருந்தேன். அவர் நாக்கைப் பிடிங்கிக்கொள்வார் என எதிர்பார்த்தால், தளத்தின் நாவை பிடிங்கிச் சென்றுவிட்டார். (note my lord, he did not publish my that specific comment alone. It also seems to be his strategy to create hype.)

    நண்பர்! பாரதியைப் பற்றிய பதிவுகளுக்கும் நான் பதிலளிப்பேன் என யூகித்திருக்க வேண்டும், அதான் கடையை காலி செய்து ஓடிவிட்டார். (அவர் மொழியில் சொன்னால் "அப்பீட்டாகிவிட்டார்") இப்பொழுதும் அவரின் பதிவுகளுக்கு (பாரதியைப் பற்றிய) பதிலளிக்க நான் தயார். உங்கள் நண்பரை எங்கேனும் கண்டீர்கள் எனில் இதைத் தெரியப்படுத்தவும். மேலும் அவருக்கு பின்னூட்டமாக எழுதி, அனுப்பாது விட்டுப்போன இந்த தகவலையும் சொல்லிவிடுங்கள்.

    "மன்னிக்கவும். தங்களின் மதச்சார்பின்மை எனும் முகச்சாயத்திற்கு வண்ணம் தீட்ட எழுதிய 'பத்து கட்டளைகள்' எனும் இடைச்செருகளை பாராட்ட மறந்தமைக்கு. என் கருத்திற்கு தாங்கள் செவி சாய்தமைதே உண்மையெனில், வாழ்த்துகள் + நன்றி."

    தளத்தை மூடிச்சென்றால், நான் என் வழி சென்றுவிடுவேன் என்று நினைத்திருப்பார். தன் நண்பர் குழுமம் வரை பின்தொடர்ந்து வந்து பதிலளிப்பேன் என எதிர்பார்த்திருக்கமாட்டார்! என் சார்பாகவும் சற்று ஆறுதலும் கூறிவிடுங்கள். வருகிறேன் தோழர்களே!

    ReplyDelete
  14. மலர்:
    அவர் அவர் பின்னூட்டத்தை அழித்தாலும், நீங்கள் மேலே உள்ளதை அழிக்காதீர்கள்!

    ReplyDelete
  15. மலர் அந்த பெரியவர், RSS activist, இதையும் அழிப்பார். அதானல தான் இப்படி--once bitten twice shy; you want proof go to ny site to read all the [delted] comments in my post on August 30, 2015, titled, "
    கலாம் பெயரை அவுரங்கசீப் ரோடிற்கு வைத்த இந்துவதா அரசியல்! :"

    அந்த அய்யா RSS activist--எல்லா பின்னூட்டங்களையும் நீக்கி வீட்டு உங்கள் தளத்தில் வந்து ஒப்பாரி வைக்கிறார். நான் என் தளைத்தை மூடுவது இது நான்காவது தடவை..இதற்க்கு பதில்...விரைவில் வரும் என் பதிவில்'
    ____________________
    Nithya24 September 2015 at 20:32

    ஆகப்போவது என்ன? என்ன! மந்தையில் மறைந்து நிற்கும் அந்த ஒரு வெள்ளை.... இல்லை... இல்லை... கருப்பு ஆட்டிற்கு என் செய்தி சென்று சேர்ந்திருக்கும். so mission completed. வேறு என்ன?! by the way, தாங்கள் அறியாது செய்த உதவிக்கு thanks, தங்களின் அனுமதி இன்றி தளத்தைப் பயன்படுத்தி தருமசங்கடத்தில் ஆழ்த்தியமைக்கு sorry. :) விடைபெறுகிறேன்!
    Reply
    Replies

    Anonymous5 October 2015 at 08:05

    Utter Nonsense!

    ReplyDelete
  16. சிஷ்யா!
    ஒரு கடைசி வேண்டுகோள்: எக்கரானதைக் கொண்டும் என் பின்னூட்டத்தை நீக்க வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. Welcome back தல...,
      வேண்டுகோள் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளப் பட்டது.

      Delete
  17. //தமிழும், நக்கலும், நய்யாண்டியும், அன்பும் மட்டுமே நல்ல ஆரோக்கியமான இணைப்பில் நம்மை வைத்திருக்கிறது.//

    தங்களை எல்லாம் இணைப்பில் வைத்திருந்தது தமிழும் (அந்த நபர் எழுதியது ஒரு தமிழ்!? கடவுளே! பொருட்ச்செரிவை விட்டொழியுங்கள், சேர்ந்தார் போல் நான்கு வார்த்தைகளைப் பிழை இன்றி எழுதத் தெரியாதவன் தமிழ் உங்களை எல்லாம் இணைத்தது! அதை நாங்களும் நம்ப வேண்டும்! கலியுகம்டா சாமி!), நக்கலும், நய்யாண்டிகளும், அன்பும் அல்ல, வேறு ஏதோ ஒன்று என்பது இப்போது துலர்ந்து போய்விட்டது. அதுவெல்லாம் போகட்டும், எதை மறைக்க எதை உபயோகிப்பது என்று ஒரு விவஸ்தை வேண்டாமா தோழர்களே! வக்கிர எண்ணங்களை மறைக்கப் பகுத்தறிவுப் பசுத்தோல்! அதை இனம் கண்டறிந்து முளையிலேயே கிள்ளி எறியாது வளர்த்தெடுத்த உங்களின் சபலத்தை மறைப்பதற்குத் தமிழ், அன்பு! பாவம் தமிழ், அவனை (அவனை?!? எழுத்துப் பிழை என்று ஐயம் கொள்ள வேண்டாம்! தமிழைப் பெண்ணாக உருவகிப்பதாலோ என்னவோ எடுத்த எல்லாவற்றிற்கும் அவள் கையைப் பிடித்து இழுக்கிறீர்கள். அது தான் ஆண் வேசமிட்டுப் பார்ப்போமே என்ற நப்பாசை) விட்டு விடுங்களேன்! மிகத் தொன்மையானக் கிழவன்! வாழ்ந்து கெட்டவன். அவன் ஆற்றிய பராக்கிரமங்கள் ஏராளம். அவன் மேல் அன்பு பாராட்டாது போனாலும், சற்றேனும் கருணைக் காட்டுங்களேன். Please! அவனது அந்திமக் காலத்தை கௌரவமானதாக்க, சற்று விலகியாவது நிற்போமே!

    சரி, வந்த விடயத்தைச் சொல்லிவிடுகிறேன். எல்லை தாண்டப்படும் போதாவது தாங்கள் அனைவரும் காட்டிய புறக்கணிப்பு மற்றும் எதிர்ப்பிற்கு (? இருந்திருக்கும் என நம்புகிறேன்) உங்கள் வீட்டுப் பெண்களின் சார்பாகவும் நன்றி செலுத்தவே இந்த மறு அவதரிப்பு! இன்னும் சொல்லப்போனால், என் சகோதரனையும், தந்தையையும், சிற்றப்பனையும், பெரியப்பனையும், மாமனையும், மகனையும், கணவனையும், நண்பர்களையும் என் வாழ்வின் எஞ்சிய காலம் முற்றும் சந்தேகக் கண்களுடனேயே பார்த்துச் சாகும் பெரும் சாபத்திலிருந்து விமோசனம் அளித்தீர்கள். நன்றிகள் பல கோடி உரித்தாகுக!

    பின்குறிப்பு: இதற்கெல்லாம் பதிலளிப்பது கடினம் என்பது நான் அறிந்ததே. எனவே பதிலேதும் எதிர்பார்க்கவில்லை. இவ்வரிகள் தங்கள் அனைவரின் சிந்தனைக்கு மட்டுமே.

    வேண்டுகோள்: வலைத்தளங்களிலேனும் எங்கள் கருத்துக்களையும், சிந்தனைகளையும் பகிரும் சுழலும், வாய்ப்பும் அளியுங்கள். அதற்கான அக்கறையும், பொறுப்பும் நமதாகுக! (சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வர என்கிறீர்களா? அதுவும் சரிதான்!)

    பரிந்துரை: தங்களின் வலை தளங்கள்/பதிப்புகள் எந்த வகையினது என்பதை தெரிவிக்கும் பொருட்டு தமிழ்/பகுத்தறிவு/மதம்/சமயம்/அரசியல் என சாயமேதும் பூசாது தெளிவானதொருப் பெயர்ப் பலகை வைப்பீர்களே எனில், நம் அனைவருக்குமே அது பயனுள்ளதாய் அமையும்.

    ReplyDelete
    Replies
    1. //அதை இனம் கண்டறிந்து முளையிலேயே கிள்ளி எறியாது வளர்த்தெடுத்த உங்களின் சபலத்தை மறைப்பதற்குத் தமிழ்//
      சபலப் பட்டு சப்போர்ட் பண்ற அளவுக்கு நான் கூமூட்டை கிடையாது...

      //எல்லாவற்றிற்கும் அவள் கையைப் பிடித்து இழுக்கிறீர்கள். அது தான் ஆண் வேசமிட்டுப் பார்ப்போமே என்ற நப்பாசை//
      ஆனாலும் ஒரு மனுஷனுக்கு இம்புட்டு அறிவு இருக்கப் பிடாது...

      //உங்கள் வீட்டுப் பெண்களின் சார்பாகவும் நன்றி செலுத்தவே இந்த மறு அவதரிப்பு//
      "என்னை அறிந்தால்' படத்துல அஜித் இதே சிச்சுவேஷனுக்கு சொல்ற வசனம் தான் ஞாபகம் வருது, தெரியலன்னா கேட்டோ, பாத்தோ தெரிந்து கொள்ளவும்...

      //இதற்கெல்லாம் பதிலளிப்பது கடினம் என்பது நான் அறிந்ததே//
      ஆம், உளறல்களுக்கு பதில் அழிப்பது சற்று கடினமாகத்தான் உள்ளது...

      //சாயமேதும் பூசாது தெளிவானதொருப் பெயர்ப் பலகை வைப்பீர்களே//
      நாலைஞ்சு கோட்டிங் பூசுனா மாதிரி உங்களுக்கு தெரியுதா?!

      Delete
    2. மலர்:
      iஇதைப் பார்த்ததும் நம்ம அம்பி, அதான் தமிழ் புலவர், தான் நியாபகம் வந்தார் ...அதான...
      பசி பரமிசிவம் அவர்களின் பதிவில் " அவாளின்" தமிழைப்பற்றி . அவர் எழுதியதை...கீழே லிங்க்...
      http://malarinninaivugal.blogspot.com/2015/09/blog-post_17.html
      ________________________

      நம்ம தமிழை கிண்டல் செய்யும் இவாlளை...பெண் போர்வையில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ்.அம்பியை கேட்போம்...கீழே காணப்படும் மொழிக்கு என்ன பேர் சொல்வது என்று! இது தமிழாம்! அட கண்றாவியே! இந்த அழகில் இவர் தமிழ் பத்திரிக்கைகையாளறாம். பத்திரிக்கையாளர் பவிஷு இப்படியா?. இவரை அங்கே போய் கேள்வி கேக்க சொல்லும்!

      Copy pasted from pasi Parsmasivam' blog!
      _____________________________________
      ‘இந்து தர்மம்’ காப்போர் கவனத்திற்கு!
      ‘காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டவரால் சொல்லப்பட்ட இந்துமதம் பற்றிய கருத்துகளைத் ‘தெய்வத்தின் குரல்’[5000 பக்கங்கள்] என்னும் தலைப்பில் வெளியிட்டது வானதி பதிப்பகம். அதன் சாரத்தை, 256 பக்கங்களாகச் சுருக்கினார் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான ‘சோ’ இராமசாமி. ‘இந்து தர்மம்’ என்னும் தலைப்பில் அது நூலாக வெளியானது.

      மேற்கண்ட இரு நூல்களுமே தமிழில் எழுதப்பட்டவை.

      இவர்கள் சமஸ்கிருதத்தைத் ‘தேவ பாஷை’ என்று போற்றுபவர்கள். தமிழ் ‘நீச பாஷை!

      இந்து தர்மத்தைக் காப்பதற்கு இவர்களுக்கு இந்த நீச பாஷை தேவைப்படுகிறது. ஆனால், இதை மதித்துப் போற்றும் குணம் இவர்களுக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இவர்களின் கைகளில் சிக்கித் தமிழ் படும்பாடு சொல்லி மாளாது. படிக்கப்படிக்க மனம் பதைபதைக்கிறது.
      எடுத்துக்காட்டாக, ‘இந்து தர்மம்’ நூலிலிருந்து ஒரு சிறு பகுதி.

      #குருவைத் தேடிக்கொண்டு புறப்பட்ட ஆச்சார்யாள் வடக்காக வெகுதூரம் போய் நர்மதைக் கரையை அடைந்தார். அங்கே கோவிந்த பகவத் பாதர் நிஷ்டையில் இருந்தார். சாஸ்த்ர ப்ரகாரம் ஆசார்யாளுக்கு அவர் சந்நியாஸ ஆசரமம் கொடுத்து உபதேசம் பண்ணினார். கோவிந்த பகவத்பாதான் ஆசார்யாளிடம் வ்யாஸா ஆஜ்ஞைப் படியே தாம் வந்து உபதேசம் பண்ணியதாகச் சொன்னார். வ்யாஸருடைய ப்ரஹ்மஸூத்ரத்தின் ஸரியான தாத்பர்யத்தை விளக்கி ஆசார்யாள் பாஷ்யம் பண்ணி சுத்த வைதிகத்தையும் கத்தாத்வைதத்தையும் ப்ரகாசப்படுத்த வேண்டும் என்ற ஆஜ்ஞையையும் தெரிவித்தார். ஆசார்யாள் வ்யாஸருடைய சூத்திரத்தின் தாத்பர்யமெல்லாம் ப்ரகாசிக்கும்படியாக பாஷ்யம் பண்ணி குருவின் சரணத்தில் வைத்து அவருக்கு நிரம்பக் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு சில காலம் கூட இருந்தார். எந்நாளும் ஸனாதன தர்மத்தில் நிற்பதற்கான பாஷ்யங்களை........

      ஆசார்யாள்......தாமே ஸொந்தமாக எழுதிய ஞான நூல்களான ‘ப்ரகர்ண’ங்களில் ஸித்தாந்த வாதமாக .....

      ஆசார்யாள் வாஸம் செய்துகொண்டு இருந்தபோதே.... அவருக்குப் பதினாறு வயஸ்கூடப் பூர்த்தியாகாத ஸமயம். லோகத்தில் உள்ளவர்களுக்கெல்லாம் ஆசார்யாளுடைய ஸூத்ரபாஷ்யத்தின் பெருமையைத் தெரியப் பண்ணவேண்டும் என்று ஸூத்ரகர்த்தாவான வ்யாஸர் நினைத்தார்.........#

      ‘இந்து தர்மம்’ 2010ஆம் ஆண்டில் பதினான்காம் பதிப்பைக் கண்டிருக்கிறது. இயன்றவரை நல்ல தமிழில் இதைப் பதிப்பிக்கவேண்டும் என்ற நல்லெண்ணம் இந்நாள்வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு இல்லாமல்போனது ஏன்?

      ‘தமிழ் இருந்தாலென்ன, அழிந்தாலென்ன; இந்து தர்மம் காப்பதே நம் கடமை’ என்று எண்ணுகிறார்களோ?!

      Delete
    3. லூஸுல விடுங்க தல...
      வழக்கம் போல நம்ம ட்ராக்ல போயிட்டே இருப்போம்...
      எவா குறுக்கா வந்தா குறுக்க காட்டியே மிதிங்க..

      Delete