Sunday, 20 September 2015

இதுல என் கம்பெனிக்கு என்னங்க லாபம்?!

உண்மையிலயே மரியாதைக்குரிய நண்பர், ஒரு கார்பரேட்டில் நல்ல பதவியில் உள்ளவர், வணிக விஷயமாக அவரே வரச் சொன்னார். நானும் ஆவலோட போய் உக்காந்து நம்ம அருமை பெருமை எல்லாம் ஆர்வத்தோட எடுத்து விட, பத்து நிமிசம் பொறுமையா கேட்டுட்டு அவர் ஆரம்பிச்சார்.

"நம்ம கம்பெனியில ஒரு Event நடத்துறோம்.., சென்னையின் பல கம்பெனியில இருந்தும் பெரிய ஆளுங்கெல்லாம் வருவாங்க.., உங்க கம்பெனிய ஸ்பான்சர் பண்ண சொல்லுங்களேன்.."ன்னு ஆரம்பிச்சார்.

"Event ல என்ன பண்ணுவீங்க"?!


"கார்பரேட்ல உயர் பதவியில இருக்கும் முடிவெட்டி, காட்டன் சாரி கட்டி, அளவான லிப்ஸ்டிக்குடன இருக்கும் ஒரு மிடில்ஏஜ் அம்மிணிய நாலு பெங்களூர் மாடல்ஸ் சூழ குத்துவிளக்கு கொழுத்துறோம்..."


"ஓ..."


"Meteorological Science in the Human Kind Revolution with the Programme of Java in the Element of Kabali Rajnikanth" ன்ற தலைப்புல நாலைஞ்சு அப்பாட்டக்கருங்கள வெச்சு ஒரு டிஸ்கஷன்.."


"ஊ.."


"எங்க industry-ல நல்லா perform பண்ணவங்களுக்கு மெடல், கப், அவார்டு குடுப்போம்..."


"ஆஹாங்... அப்புறம்...!?"


"selfie & groupie session ..."


"வாவ்... மைண்ட் ப்ளோயிங்..., அப்புறம்?!"


"வேறென்ன டின்னர் வித் காக்டெயில் தான்..."


"இதுல என் கம்பெனிக்கு என்னங்க லாபம்..?!"


"என்ன தல இப்படி கேட்டுட்டுடீங்க, எவ்ளோ பெரிய ஆளுங்க எல்லாம் வர்றாங்க, நீங்க இஷ்டப் படி விளம்பரம் செய்துக்கலாம். ப்ரோக்ராம் நடுவுல உங்களோட promotional-க்கு 10 நிமிசம் slot தருவோம்..." (என் காசுல எனக்கேவா!!)


"எங்க கம்பெனி விளம்பரம் எங்கேயாவது பாத்திருக்கீங்களா?!"


"இல்லையே..."


"அதுக்கு தான் எனக்கு சம்பளம் குடுக்குறாங்க..."


மேற்கொண்டு அதைப் பற்றி இருவருமே பேசிக்கொள்ளவில்லை.ஈயம் பூசுறவன் கேரக்டர்ல கவுண்டமணி ஒரு வசனம் சொல்லுவார், "நீ வெச்சிருக்கிறதே இந்த ஒரு குண்டான் தான், அதையும் பிச்சை எடுக்க வெச்சிருக்க..., அதுல ஈயம் பூசித்தான் பிச்சை எடுப்பியா..?!"


பாவம், மரியாதையை இழந்துட்டார்...

25 comments :

 1. அடுத்தவன் காசில் மஞ்சக் குளிக்க ,இப்படிநிறைய பேர் இருக்காங்க :)

  ReplyDelete
  Replies
  1. ஆமா ஜி, அவங்க குளிக்க நமக்கு உப்பு மொளகா தேய்ச்சு விடுவாங்க...

   Delete
 2. இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்

  ReplyDelete
 3. எல்லோருமே இப்படித்தானே...

  ReplyDelete
 4. ஹஹஹா மிகவும் ரசித்தேன். அதிலும், "Meteorological Science in the Human Kind Revolution with the Programme of Java in the Element of Kabali Rajnikanth"..பிரமாதம் :)

  ReplyDelete
  Replies
  1. நன்றி... இல.வி
   இதுபோல் நிறைய சம்பவங்கள்..., தொடர்ந்து எழுதுவோம்

   முடிஞ்சா, இதையும் படிங்க...
   http://malarinninaivugal.blogspot.com/2015/07/blog-post.html

   Delete
  2. படித்தேன் சிஷ்யா!

   Delete
 5. ஹஹாஹ்ஹ பெரும்பான்மையான கம்பெனிங்க இப்படித்தான் காலத்த ஓட்டறாங்க...தெரியும்ல.....

  ReplyDelete
  Replies
  1. நீங்க எந்த கம்பெனின்னு கொஞ்சம் விபரமா சொல்லுங்க...!!
   என்னோடதா? நண்பரோடதா?!

   Delete
 6. ''கூழு குடிக்க வேணா வாரேன், குடுக்குறதுக்கு ஒன்னும் இல்ல''' வடிவேலு காமெடி மாதிரில்ல இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. அட்லீஸ்ட், சரக்கு உன்னது சைட்டிஷ் என்னுதுன்னு சொல்லியிருந்தா கூட பரவாலீங்க... அம்புட்டையும் நாமளே அவுத்து குடுக்கணுமாம்..

   Delete
  2. இப்பெல்லாம் சரக்கைவிட சைடு டிஷ் தான் விலை அதிகம். அதுவும் என்னை மாதிரி ஆளுங்க சாப்பிடுவதரற்க்கவே சரக்கு அடிப்போம்!

   Delete
  3. நானும் கொஞ்ச வருஷத்துக்கு முன்னால அப்படித்தான் இருந்தேன்...
   இப்பெல்லாம் வெறும் ஐஸ் கட்டி மட்டும் இருந்தா போதும்...

   Delete
 7. ஆத்தாடி இப்படி கூட இருக்காங்களா...ம்ம்..ஆமா.வாஇப்பதிவர் விழாவிற்காக நாங்க ஸ்பான்சர் கேட்க போலாம்னு நினச்சோமே ...எங்களுக்கும் இதே பதில் தான் வருமோ...?பயமுறுத்திட்டீகளே..

  ReplyDelete
  Replies
  1. கேளுங்க.., யார்ட்ட கேக்குறீங்க..., நம்ம கிட்ட தானே!!
   நல்லா அடிச்சு உரிமையோட கேளுங்க...
   பயமுறுத்துற அளவுக்கா கேக்கப் போறீங்க..!!??

   Delete
  2. நிசமா!
   வந்து ரெண்டு போடு போட்டு பயமுறுத்துற அளவிற்கு இல்லாமல் துட்டே கேக்கிறேன் நைனா!

   Delete
  3. ம்ம்ம்ம்... என்னையும் மதிச்சு.... கேக்க வர்றீங்களே!!
   உங்க தன்நம்பிக்கைய பாராட்டுறேன்..

   Delete
 8. உங்க கம்பெனிக்கு ஒன்னும் லாபம் இல்லை என்று தெரியும்!, உங்களுக்கு தெரியாத ஒன்று. ஒரு பிரபல பதிவர் தமிழ் விக்கிபீடியாவில் போட்ட பதிவை ஒரு 'காப்பி பேஸ்ட் ' என்று ஒட்டு மொத்தமாக நீக்கி விட்டார்களாம். ஓர் துப்பு. இதுலே இவர் ஒரு ஒய்வு பெற்ற முனிவர் ஆசிரியாரம்.. எல்லாமே தமாஷ்!

  ReplyDelete
  Replies
  1. யாருப்பா அந்த முனைவர்? ப்ளாக் எழுதறதோட நிறுத்திக்கணும்.
   எதுக்கு போய் விக்கிபீடியா எல்லாம். அதுவும் அங்கு ஒரிஜினல் சரக்கு தான் வேகும், அது என்ன ப்ளாக்ககா என்ன வேணா கிறுக்க/

   Delete
  2. முனைவர்னா முடிஞ்சத மட்டும் பண்ணனும்...
   முனிவர் ரேஞ்சுக்கு அடிச்சு விட்டா இப்படித்தான்...

   Delete