Thursday 5 November 2015

பரமக்குடி பகவலன் ஒலகப் புரவலன்

//சகிப்புத்தன்மை அப்போதே இல்லாமல் போனதால்தான் இந்தியா - பாகிஸ்தான் பிளவு ஏற்பட்டது. இல்லையென்றால் நாம் ஒரே பெரிய நாடாக ஒன்றாக இருந்து, பல துறைகளில் சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டிருக்கலாம்//
- இதை அப்படியே தஞ்சாவூர் _____ ____ ____ ____ பின்னாடி வர்ற சந்ததிகள் _____ ____ _____ _____
 //சகிப்புத்தன்மை குறித்த விவாதம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேவை. நான் சகிப்பின்மைக்கு எதிரானவன்//
- அண்ணன் எலக்சன தான் சொல்றாப்ல போல...


//நாத்திகவாதியாக இருந்தாலும் எல்லா மதங்களையும் சகித்துக் கொள்கிறேன்//
- கமல என்பதை கமல்-ன்னு நியுமராலஜி படி மாத்துறதும் நாத்திகம் தான்... 



  //கடவுள் பக்தி இல்லையென்றாலும் எந்த மதத்தையும், அதன் பழக்க வழக்கங்களையும் எதிர்த்ததில்லை. நான் பின்பற்ற மாட்டேன்//
- ஆமாமா, அன்பேசிவம், தசாவதாரம், விஸ்வரூபம், ஹேராம் ன்னு பேரு மட்டும் வெச்சு அழகு பாத்துக்க வேண்டியதுதான்... 


//விருதுகளை திருப்பித் தருவதன் மூலம் அரசாங்கத்தையும், நம்மை மதித்து விருது தந்து நேசிக்கும் மக்களையும் நாம் அவமதிக்கின்றோம். அப்படி தருவதன் மூலம் கவனம் கிடைக்கும். கவனத்தை ஈர்க்க இதை விட பல வழிகள் உள்ளன//
- என்ன பண்றது? 'நாட்டை விட்டு ஓடிப் போறேன்'னு ஓன்னு ஒப்பாரி வெச்சு போராட்டம் பண்ணத் தெரியாத மான ரோசமுள்ளவங்களா போயிட்டாங்க..!!



//விருதுகளை திருப்பி அளிப்பவர்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்காக அவ்வாறு செய்கின்றனர் என்பதை புரிந்து கொள்கிறேன். அவர்களது இந்தச் செயலை நான் காயப்படுத்த மாட்டேன்//
- அப்போ இது வரைக்கும் சொன்னது என்னவாம்?



//நான் எந்த ஒரு விருதையும் திருப்பி அளிக்க மாட்டேன். என்னால் இத்தனை ஆண்டுகள் சினிமாவினால் சம்பாதித்த பணத்தை திருப்பி அளிக்க முடியாது போகலாம்.//
- யார்றாது? ஒலகத்து கிட்ட திருப்பிக் கேட்டது?


 //படைப்பு பூர்வமான மனிதர்களுக்கு அவர்களது படைப்புகளை அங்கீகரித்து நடுவர்கள் வழங்குவதே விருது. இதற்கும் அரசுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை//
- தக்காளி, ஆஸ்கார் வாங்கியே ஆகணும்..!!



//படைப்பு... மனம் மத எல்லைகளுக்கு அப்பாற்பட்டது//
- ஓ... அதான், பிரெஞ்சு, இங்கிலீஷ், கொரியன்ன்னு வளைச்சு வளைச்சு அடிச்சு விடறீங்களா?!


 //கே.பாலச்சந்தர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று நாங்கள் பார்ப்பதில்லை//
- ஆனா, அவரு உங்கள நல்லா வெச்சு அயகு பாத்தாரே..!!



//எனக்கு தவறிழைத்தவர்கள் வேறுவகையான பிரிவைச் சேர்ந்தவர்கள். அதனை நான் தனியாக எதிர்கொள்வேன்//
- ராஜ்தாக்கரே மீட்டிங்க்ல டீல் ஓகே ஆகிடுச்சு போல...!!


Sunday 1 November 2015

அறிந்தும் அறியாமலும்...

கடந்த ஒரு வாரத்தில் மூன்று  முறை நண்பர்களுடன் குழந்தை வளர்ப்பு, பாலியல் கல்வி, சமூகச் சூழல் குறித்து ஏகப்பட்ட பேச்சுகள், கருத்துக்கள், விவாதங்கள், விமர்சனங்கள்...  பகிர்ந்தால் என்ன என தோன்றியது!! மாத்ருபூதம், காமராஜ், ஷாலினி, நாரயனரெட்டி அளவுக்கு நம்மால விளக்கமா சொல்ல முடியாது என்றாலும், முடிந்த வரை...

நண்பர்களுடைய ஒட்டுமொத்த கருத்தும் இதுதான்.  "உலக மக்கள் தொகையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் இந்தியர்களுக்கு பாலியல் பற்றிய விழிப்புணர்வை நாம் சொல்லிக் கொடுத்து ஏற்படுத்தத் தேவையில்லை.  நாம் எப்படி கற்றுக் கொண்டோமோ அதேபோல் நம் குழந்தைகளும்  கற்றுக் கொள்வார்கள்...",
"முள்ளு மேல சேலை விழுந்தாலும்...",
"கண்ணாடி வீட்டுக்குள்ள இருந்து கல்லை விட்டா...",
"ஒரு ஆண் தப்பு பண்ணா அது அவனோட போயுடும், ஆனா ஒரு பொண்ணு..."
- இதே ரேஞ்சுல இன்னும் நிறைய...  பேசாம ப்ரண்ட்ஷிப்ப கட் பண்ணிடலாமான்னு கூட சில நொடிகள் தோணிச்சு.

"உங்கள்ள எத்தனை பேருக்கு வீட்டுல பாத்து பண்ணி வெச்ச கல்யாணம்?"
பாதிப் பேரு ஆமான்னு சொல்ல,
முதல்ல ஒருத்தர பாத்து கேட்டேன்.  "நிச்சயதார்த்தம் முடிஞ்சு கல்யாணம் பண்ண எவ்ளோ நாள் ஆச்சு?"
"மூணு மாசம்.."
"மூணு மாசத்துல உங்க மனைவி கூட பேசினீங்களா?"
"ம்ம்.. பேசினோம்"
"வெளிய எங்கேயாவது கூட்டிட்டு போனீங்களா?"
"எங்க இதுல அதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க..!!"
"உன் சாதி மயிர பத்தி கேக்குல, ரெண்டு பேரும் ஒண்ணா வெளிய போயிருக்கீங்களா இல்லையா?
"ரெண்டு பேரு வீட்டுக்கும் தெரியாம ரெண்டுமூணு தடவ வெளிய போயிருக்கோம்.."
"எங்க?"
"கோவிலுக்கு... அப்புறம் துணிக் கடைக்கு.."
"போன்ல பேசும் போது என்ன பேசுவீங்க?"
"பொதுவா பேசுவோம்.."
"இந்தியப் பொருளாதாரம் பத்தியா..!?, செக்ஸ் பத்தி பேசினது உண்டா?"
"ச்சே.. ச்சே.., இல்ல.."

அடுத்த ஆள்...
"நிச்சயதார்த்தம் முடிஞ்சபிறகு மனைவிய வெளிய கூட்டிட்டு போயிருக்கீங்களா?"
"கல்யாணத்துக்கு ஒரு வாரம் முன்னாடி தான் பொண்ணை பாத்தேன்..."

"சரி, அந்த ஒரு வாரத்துல என்ன பண்ணீங்க..?"
"கல்யாண வேலையா அலைஞ்சதுல மனைவி கூட அதிகமா பேசல..."

இருவரிடமும் பொதுவாக கேட்டேன்...
"முதலிரவு அன்னைக்கு என்ன பண்ணீங்க..?"
"எல்லாரும் என்ன பண்ணுவாங்களோ, அதைத்தான்..."
"எல்லாரும் பண்ணது இருக்கட்டும், நீ என்ன பண்ண..?"
"எப்படின்னு சொல்லத் தெரியல, ஆனா நல்லபடியா முடிஞ்சது!!"
"மேட்டர் பண்றது எப்படின்னு உனக்கு எப்படி தெரியும்?
1.வாத்தியார், பெற்றோர் சொல்லிக் கொடுத்தாங்களா?
2.நண்பர்கள் மூலம் தெரிஞ்சுதா?
3.மஞ்சள் பத்திரிக்கை, நீலப் படங்கள் மூலமா?
4.உடலுறவைப் பற்றிய தெளிவான மருத்துவப் புத்தகங்கள் மூலமா?"
"2 & 3.."
"இந்த ரெண்டு வழியுமே சரியானது அல்ல, தெளிவான விடை கிடைக்காதுன்னு தெரியுமா?"
"ஆமா..., ஆனா ஒன்னும் பிரச்சனை இல்லையே"

"முதலிரவுல உங்க மனைவி வெட்கப் பட்டாங்களா?, என்ன பண்றதுன்னு தெரியாம முழிசாங்களா?"
"மாப்ள கிட்ட பாத்து பக்குவமா நடந்துக்கோன்னு சொல்லி அனுப்பியிருந்தாங்க.."
"அதாவது புருசன் எது பண்ணாலும் பொறுத்துக்கோ, போகப் போக(!) சரியாயிடும்ன்னு சொல்லி அனுபியிருக்காங்க..!!"
"கிட்ட தட்ட அப்படித்தான்.."
"நீங்களும் அவுத்து போட்டு ரேப் பண்ணியிருக்கீங்க..?!
"?? !! ?? !! ?? !!.."


"உங்களுக்குத் தான் ஒரு எழவும் தெரியல, நம்ம குழந்தைகளுக்காவது உடற்கூறு, பாலியல் சம்பந்தப் பட்ட விஷயங்களை அவர்கள் வயதுக்கு ஏற்ற மாதிரி சொல்லிக் கொடுப்போம்னு தோனியிருக்கா?"
"நம்ம ஏன் சொல்லிக் கொடுக்கணும்? அவங்களா தெரிஞ்சுக்கப் போறாங்க.."
"ஆண், பெண் குழந்தைகளுக்கு எதிரா நடக்கிற பாலியில் வன்முறைகளைப் பற்றி தினமும் கேள்விப் படுறோம், நம்ம குழந்தைகளுக்கு பாதுகாப்பா இருக்கிறது எப்படின்னு யார் சொல்லிக் கொடுப்பா?"
"அதெல்லாம் நல்லபடியாதானே பாத்துக்கிறோம்..."

"சரி போகட்டும்... குழந்தைகள் வளர வளர உடலுறுப்புகளை சொல்லித் தர்றோம் இல்ல, கண், காத்து, மூக்கு, தலை, நாக்கு- ன்னு... அதுபோல எல்லா உறுப்புகளின் சரியான பெயர்களையும் சொல்லித் தந்து இருக்கீங்களா?"
"இல்ல..."
"ஏன்?, பெயரை சொல்லித் தருவதில் என்ன தயக்கம்?, போகட்டும்... மூத்திரம், மலம் என்பதை எப்படி சொல்லித் தருகிறீர்கள்?"
"உச்சா, சூசூ, ஆய், கக்கா..."
"ஏன், சரியான பெயரைச் சொல்லி தருவதில் அப்படி என்ன அசிங்கம், வெட்கம்?"
"அது, அப்படியே சொல்லி பழகிடுச்சி..."
"சரி, தமிழ்ல சொல்ல கூச்சமா இருந்தா, கௌரவமா(!) இங்கிலீஷ்லியாவது சொல்லித் தரலாமில்ல?!, ​_ த்தா, ங்கொம்மா ன்னு சொல்ல கூச்சம் இல்ல, ஆனா இதச் சொல்ல கூச்சமா இருக்கு.."

முடிஞ்சா "குற்றம் கடிதல்" படம் பாருங்க... அதுல வர்ற ஒரு டீச்சர் புள்ளைங்களுக்கு குழந்தை பிறப்பைப் பற்றிய பாடத்தை எடுக்கும் முன்பு ஒரு மாணவனிடம் "உனக்கு அம்மா பிடிக்குமா?" எனக் கேட்டு ஆரம்பித்து, "இப்படித்தான் இந்த உலகில் நாம் எல்லாம் அழகழகா வந்து பிறக்கிறோம்.."ன்னு சொல்லி முடிப்பார்.  ரொம்ப அழகா இருக்கும்.

சில வாரங்களுக்கு முன் Paul Walker நடித்த Running Scared படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  ஒரு தேடுதலுக்காக 11 வயது நிரம்பிய தன மகனை அழைத்துக் கொண்டு செல்வார்.  வழியில் ஒரு நிர்வாண க்ளப்பில் சென்று பார்க்க எத்தனிக்கையில், மகன் கேட்பான், "இங்கு உண்மையிலேயே நிர்வாணமாக இருப்பார்களா?"
"ஆம், 21 வயசுக்கு மேல நீ வந்து பாக்கலாம்..."
"நான் அம்மாவை நிர்வாணமாக பார்த்திருக்கேன், இதெல்லாம் பெரிய விஷயமா என்ன..?"

சினிமாவை தவிர்க்க முடியாது தான்,  ஆனால் அவற்றில் zoom செய்து காட்டப் படும் cleavage-ம், தொப்புளும் உடற் பாகங்களேயன்றி வேறொன்றும் இல்லை என்ற மனநிலைக்கு கொஞ்சம் கொஞ்சமாக நம்மால் மாற்ற முடியும்.  குழந்தைகளின் வயதுக்கு ஏற்றார் போல் தொடுதல், சுய இன்பம், பீரியட்ஸ் போன்றவற்றை நாமே சொல்லிக் கொடுத்தல் நல்ல சந்ததிகளை உருவாக்கும்.

"இவ்ளோ பேசுறியே, உன் புள்ளைங்கள எப்படி வளர்க்கிற?"
"என் பெரியவளுக்கு 15 வயசாகுது..., எனக்கு போன் பண்ணி, அப்பா, வரும் போது எனக்கு நாப்கின் மறக்காம வாங்கிட்டு வந்திடுன்னு என்கிட்டே சொல்றதுக்கு அவளுக்கு எந்த கூச்சமும் இல்ல..."

நண்பர் ஒருவர், சிங்கப்பூரில் வேலை, வீட்டில் பெண் பார்த்து முடிவு செய்து விட்டனர்.  கல்யாணத்திற்கு சில நாட்கள் முன்புதான் ஊருக்கு வந்தார்.  கல்யாணமும் முடிந்தது.  மறுநாள் காலை திருமணம் செல்லாது என முடிவு செய்யப்பட்டு உறவினர் அனைவரையும் வெறுத்து, உடனடியாக சிங்கப்பூர் சென்று விட்டார் திரும்ப வரவே மாட்டேன் என்ற முடிவுடன்.  ஏனென்றால் அவருக்கு திருமணம் செய்து வைக்கப் பட்டவர் ஒரு அரவாணி!!

நெருங்கிய உறவினர், பெண் முடிவு செய்த இடம், சில பல தலைமுறைகளுக்கு முன்னே நன்கு படித்து பல பதவிகளிலும் வெளிநாடுகளிலும் சொந்தங்கள் இருக்கும் ஓர் குடும்பம்.  திருமணம் முடிந்தது, முதலிரவும் முடிந்தது... மறுநாள் புதுப் பெண் வீட்டைக் கூட்டி விட்டார்.  விசாரித்ததில், "உங்க பையனுக்கு ஒண்ணுமே தெரியல..."ன்னு புகார் செய்ய, நம்மாளுக்கு வெக்கமாகிப் போய் விட்டது.  மேற்படி விசாரணையில் நம்ம எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு எஞ்சின் ஓட்டுவது பற்றி ஒண்ணுமே தெரியல.  பிறகு மனநல மருத்துவரிடம் இருவரையும் அழைத்துச் சென்று விளங்க வைத்து அடுத்த ஓரிரு நாட்களில் தேரோட்டம் சிறப்பாக நடந்தேறி விட்டது.

மேற்சொன்ன ரெண்டு நிகழ்வுகளிலும் மேலோங்கி நிற்பது பெற்றோரின் அலட்சியமன்றி வேறேதுமில்லை.

குறைந்தபட்சம் மேஜர் ஆன பிள்ளைகள் உடலுறவு, பாதுகாப்பு, கர்ப்பம், கருத்தடை, பாலியல் நோய்கள், கருக்கலைப்பு, ஆணுறை, லூப், Morning-After Pill, குழந்தை பிறத்தல் போன்ற விபரங்களை தெளிவாக அறிந்திருத்தல் அவர்களுக்கான அதிக பாதுக்காப்பையும் தைரியத்தையுமே தரும்.

கீழே உள்ள நடிகை கஸ்தூரியின் படத்தை உங்கள் குழந்தையிடம் காட்டுங்கள்.  தாராளமாக காட்டலாம்.  அவர்களுக்கு இது ஆபாசமாக தெரியவில்லை என்றால் நீங்கள் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.  அவர்கள் "அய்யேய்யே..." என முகம் சுழித்தால் வழிகாட்டல் நிச்சயம் அவசியம். 

















அன்புடன் 
- மலர்வண்ணன்