Wednesday 16 December 2015

எனது அரசு உங்கள் அரசாக மாறிய அற்புதம்: நன்றி யேசப்பா

"வணக்கம், உங்கள் அன்பு சகோதரி பேசுகிறேன்"
- என்னது!! அன்புச் சகோதரின்ற அடைமொழிக்கு ராமதாஸ் காப்பி ரைட்ஸ் குடுத்துட்டாரா?!

"கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன்."
- பச்ச போர்டு வெச்ச கடையெல்லாம் தொறந்து தானே இருந்துச்சி..!!

"கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள்."
- குமாரசாமிகள் ஓய்வதில்லை..!!

"உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப்பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி."
- to சீமான் & வைகோ, வேற வசனம் ரெடி பண்ணவும்..!!

"போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் புணரமைப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன்.."
- கணக்கு வழக்கு எல்லாம் நம்ம கடலூர் கலெக்டர் தானே பாக்குறாரு..!?

"அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும், முப்படையினரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் அயராது தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் அயராது உழைத்தார்கள்."
- வளர்மதியக்கா சாம்பிள் ஒன்னு போதுமே...!!

"உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்..."
- ஸ்தோத்ரம் ஆண்டவரே... அல்லேலூயா....!!

"எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்."
- சசிகலான்னா, மாருகோ மாருகோ பாட்டுக்கு வருமே அந்த புள்ள தானே..!! கமலை விட நல்லா ஆடுச்சுப்பா..!!

"என் பெயரை மறந்து போகும் அளவுக்கு, நீங்கள் அழைக்கின்ற அம்மா என்கின்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன்.."
- சூப்பர் ஸ்டார் யோசிச்சு வெச்சிருந்த வசனம், பாத்ரூம்ல சொல்லிப் பாத்துட்டு இருக்கும் போது எப்படியோ லீக் ஆகிடுச்சி..., அந்த beepப் பயல வீட்டுப் பக்கம் சேக்காத தல..

"இந்த அரசு இயற்கைப் பேரிடர்களை வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நன்றி!"
- சோலி முடிஞ்ச்சி.., ஏம்பா கொடநாடுக்கு கொசுமருந்து அடிச்சாச்சா..!?


14 comments :

  1. இப்படியா சிரிக்க வைப்பது?!!!!

    வயிற்றைப் புண்ணாக்கிவிட்டது நண்பரே!

    வாழ்க அண்ணா..நாமம்.

    ReplyDelete
  2. Ha ha. Last one is punch. Ha ha

    ReplyDelete
  3. ஹாஹாஹா கடைசி ஸூப்பர் நண்பரே...

    ReplyDelete
  4. ஹாஹாஹா கடைசி ஸூப்பர் நண்பரே...

    ReplyDelete
  5. ஹஹஹ்ஹஹ்ஹஹ் ஐயையோ.. இந்த மலரின் கிச்சுக்கிச்சு மூட்டலுக்கு அளவே இல்லையா....சே என்ன மலர் நாங்கள்லாம் இலவசத்துலயே வாழ்ந்து பழகிட்டவங்க உங்க பதிவோட சேர்த்து ஒரு ஆயின்ட்மென்ட் இலவசமா அனுப்பிருக்கலாம்ல....புண்ணாகிடுச்சுப்பா..

    என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான்."// இன்னாதுப்பா புச்சா கீது சாரிபா தமிழகமே என் உள்ளத்தின் இல்லத்துல இருக்கறதுனாலதான் நான் கீழ இறங்கறதே இல்ல....

    ஏன்மா உங்க இல்லத்திலும் உள்ளத்திலும் இருக்குல்ல அப்ப தண்ணில மொதந்தவங்கள்ல உங்க இல்லத்துக்குள்ள வைச்சுருக்கலாம்ல..

    சிரிச்சு முடிலப்பா...மலரு..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசியாரே...
      ஏதோ நம்மால முடிஞ்ச வெ(உ)ள்ள நிவாரணம்...

      //தண்ணில மொதந்தவங்கள்ல உங்க இல்லத்துக்குள்ள வைச்சுருக்கலாம்ல..//
      ரசித்தோம்

      Delete
  6. மலர் நல்லாருக்குல்ல கடித இலக்கியம்!!!

    ReplyDelete