Wednesday, 21 December 2016

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே...

இன்னைக்கு காலையில புள்ளைங்கள ஸ்கூல்ல விட போகையில வீட்டு முன்ன விழுந்து கிடந்த மரத்தை ஒரு 65 வயசு பெரியவர் வெட்டிட்டு இருந்தாரு... அவரோட போன்ல,
//பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே...//

பாட்டு பாடிட்டு இருந்துச்சு...

திரும்பி வரும் போதும் அவரோட போன்ல அதே பாட்டு...
அம்மணி கடைக்கு போகணும்னு சொல்ல, அதே பாட்டு...
கடைக்கு போயிட்டு வரயிலயும் அதே பாட்டு...
ஆபீஸ் கெளம்பி போகும் போதும் அதே பாட்டு...

"என்னங்க, ஒரே பாட்ட திரும்பத் திரும்ப கேட்டுட்டு இருக்கீங்க?"
"அது அப்படித்தாங்க, பழகிடுச்சி..."
"ஏன், வேற பாட்டு கேட்க மாட்டீங்களா?"
"இந்த ஒரு பாட்டு மட்டுந்தான் வெச்சிருக்கேன்..."

//ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே...
ஆலயமணியின் இன்னிசை நீயே//


"எவ்ளோ நாளா இதே பாட்டை கேட்டுட்டு இருக்கீங்க?"
"என் பொஞ்சாதி செத்ததிலிருந்து..."
"எப்போ தவறினாங்க?"
"அஞ்சு வருசமாச்சு...."


//இந்த மனமும் இந்த உறவும்
என்றும் வேண்டும் என்னுயிரே//


"தொடர்ந்து கேட்டுட்டே இருப்பீங்களா?"
"காலையில எழுந்ததும் கேட்க ஆரம்பிச்சுடுவேன், மதியமா பேட்டரி தீந்துடும், சாயங்காலம் வீட்டுக்கு போனதும் சார்ஜ் போட்டு கேட்க ஆரம்பிச்சுடுவேன்..."
"ராத்திரி முழுசுமா?"
"அப்படியே பாட்டை கேட்டுட்டே தூங்கிருவேன்..."


//ஆல மரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே...//


"குடிப்பீங்களா?"
"அவ செத்ததும் நிறுத்திட்டேன்..."
"வேற பாட்டு கேட்க மாட்டீங்களா?"
"ஏன், இது நல்லாத்தானே இருக்கு..."
"மத்தவங்க ஏதும் சொல்ல மாட்டாங்களா?"
"எனக்கு புடிச்சிருக்கு, எம் பாட்டுல நான் கேட்டுட்டு போறேன்..."


//உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே//- அன்புடன்  
- மலர்வண்ணன் 

Saturday, 10 September 2016

ராஜாவும் விமர்சக வித்துவான்களும்

குற்றமே தண்டனை படத்தில் இளையராஜாவின் பின்னணி இசை சுத்த மோசம் என ஒரு சில இசை வித்துவான்கள் கடந்த சில நாட்களாக 80-களில் டைப்ரைட்டிங்கில் லோயர் பாஸ் பண்ண ஒரே காரணத்தால் கீபோர்டில் தட்டி தீர்க்கின்றனர். அதுக்கு இவர்கள் சொல்லும் முக்கிய காரணம் இசை சர்வதேச தரத்தில் இல்லையாம்...!!

ஹாடின், ச்கோவ்ஸ்கி, மொசார்ட், பாக், ப்ராம்ஹ்ஸ், பீத்தோவன் இசையைக் கேட்டே வளர்ந்த புள்ளைங்க போல, ராஜாவின் இசையை சகித்துக் கொள்ள முடியலயாம்... நாம ஏதாவது கமெண்ட் போட்டா, "ஒரு வித்துவான பார்த்து கேக்குற கேள்வியாடா இது?!"ன்னு திருப்பி கேக்குறாங்க!!


அதுக்கு நாலு பேர் சம்பந்தமே இல்லாம "Chunhyang-ல Kim Jung-gil சும்மா உருக்கியிருப்பாரு"ன்னு ஒருத்தர் கமெண்ட் போட, இன்னொருத்தர், "ப்ரோ, Blanche Neige-வ விட்டுட்டீங்களே, Gustav Mahler பிரிச்சிருப்பாரு"ன்னு எச பாட்டு பாடுவாரு... வெரி டேஞ்சரஸ் மெடீரியல்ஸ்!!

இளையராஜாவின் முரட்டு பக்தர் கூட்டம் ஒரு பக்கம், "டாய்..."ன்னு சுறாவுல விஜய்ண்ணா ஓப்பனிங்க்ல வர்றா மாதிரி வந்து பதிவாளரையும் அவருடைய பரம்பரையின் கல்தோன்றா காலத்தின் மூத்த குடி வரை இழுத்து வசை பாடுவார்கள்... டாஸ்மாக் டயபாலிக்ஸ்!!

அடுத்து வருவது புள்ளிராஜா கூட்டம், ராஜாவின் பாடல்களுக்காகவே ஓடிய படங்கள் என டவுசர்ராமராஜன், மைக்மோகன் படங்களா எடுத்து குடுத்து, ரமணா விஜயகாந்தே காண்டாகி லிஸ்ட் போட்டு தூக்குற அளவுக்கு புள்ளி வெவரம் அடிச்சு விடுவார்கள்... ஹார்ம்லெஸ் பீப்புள்!!

நம்ம லோயர் பாஸ் கீபோர்டு வித்துவான்கள் அப்படியே மேலே போவது போல மதப்பில் மிதப்பார்கள். ஆக்சுவலி இது ஒரு வகையான உளவியல் சிக்கல். இவர்கள் ஒரு டைப்பான maniacs . நட்பு வட்டத்தில் ஒரு ரெண்டு மூவாயிரம் பேரை சேர்த்துக் கொண்டு அவர்களை தினமும் மகிழ்விப்பதாக நினைத்துக் கொண்டு கண்டதையும் போட்டு கும்மி அடிப்பவர்கள். கமெண்ட்டுகளில் தங்களுக்கு வரும் வசவுகளையும், ஒரு சிலர் அடித்துக் கொள்வதையும் டைம் டேபிள் போட்டு ரசிப்பவர்கள்... க்ரேசி லூனாட்டிக்ஸ்!!
 ரெண்டு நாள் கழிச்சு,
"இப்படி நான் ஆனதில்லை...
புத்தி மாறிப் போனதில்லை...
முன்னபின்ன நேர்ந்ததில்ல...
மூக்குநுனி வேர்த்ததில்ல..."
"ஆஹா ராஜா சார், கொன்னுட்டாரு, பின்னிட்டாரு.."ன்னு ஒரு ஸ்டேட்டஸ் போடுவாங்க. அதே முரட்டு பக்தர் கூட்டம் இம்முறை தூக்கி வைத்துக் கொண்டாடும். ரெண்டு நாள் கழிச்சு ரிப்பீட்டு, இம்முறை ரஜினியோ, ரஹ்மானாவோ இருக்கலாம்!! ஆனா சீரான இடைவெளியில் இவர்களின் பதிவுகளில் இளையராஜா இருந்து கொண்டே இருப்பார்.

"இவ்ளோ பேசுறியே, உனக்கு இசையைப் பத்தி என்ன தெரியும்? சங்கதி தெரியுமா? கர்நாடகா தெரியுமா? காவேரி தெரியுமா? சுதியை ஏத்தி இறக்க தெரியுமா?"ன்னு எந்த வித்துவானாவது கேட்டா அதுக்கு என்னோட ஒரே பதில்,
"ஆமா, எனக்கு இசையைப் பத்தி ஒரு கூந்தலும் தெரியாது, ஆனா இளையராஜாவோட இசை இல்லன்னா ஒரு வேளை நான் பாலா பட ஹீரோ மாதிரியோ, பெண்ணா இருந்தா பாலச்சந்தர் பட ஹீரோயின் மாதிரியோ ஆகியிருக்கலாம்..."Sunday, 4 September 2016

பெண்குட்டிகள், ப்ரேமம் மற்றும் dr.ராமதாஸ்

பாமக தலைமையில் சமீபத்தில் தலித்துகள் அல்லோதார் கூட்டத்தின் கருத்தரங்கின்(!) முடிவில் எடுக்கப்பட்ட அவங்களே சொல்லிக்கிற தீர்மானங்கள், தஞ்சாவூர் மட்டுமன்றி அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல், மொஹஞ்சதாரோ, ஹரப்பா, பிரமிட், சீனப் பெருஞ்சுவர், கொலோசியம், ஈபில் டவர்  உள்ளிட்ட அனைத்து கல்வெட்டுகளிலும் பொறிக்கப்பட வேண்டியவை...

1.கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து முடித்த பின்னர் தான் காதலிக்க அனுமதி கொடுக்க வேண்டும்.
 - சூப்பரப்பு... அப்புறமா இவுங்களே கட்சி செலவுல லவ் பண்றதுக்குண்டான எல்லா வசதியும் பண்ணி குடுத்து, சீர் செனத்தி எல்லாம் செஞ்சு கல்யாணம் பண்ணி வெப்பாங்க..!!

2.தமிழக அரசு இரு பாலர் கல்வி முறையை ஒழித்து விட்டு பெண் பாலினத்திற்கு தனி கல்வி நிலையங்களும், ஆண் பாலினத்திற்கு தனி கல்வி நிறுவனங்களையும் அமைக்க வேண்டும்.
 - இதுக்கு பதிலா சாதி வாரியான பள்ளிக்கூடங்களை தொறந்து வெச்சுட்டா எந்தப் பிரச்னையும் இருக்காதே!! இஸ்கூலுக்கு அனுப்பினா மாதிரியும் ஆச்சு, வரன் பாத்தா மாதிரியும் ஆச்சு..

3.ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் பி.சி.ஆர்., சட்டம் என்று இருக்கிறதாம்.  நாம் அனைவரும் சேர்ந்து பி.சி.ஆர். சட்டத்தை விட பெரிய சட்டத்தை கொண்டு வர வேண்டும்.
 - ஆமாமா... நல்லா பெருசா 300-க்கு 300 அடியில பெரிய சட்டமா செஞ்சு வைங்க... பாக்குறவன் ச்சும்மா மிரளணும்..!!

4.காதலால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 1 கோடி வழங்கவேண்டும்.
 - பெண்களுக்குண்டான சுய வேலை வாய்ப்பை இத்திட்டம் வெகுவாக நிறைவு செய்யும்.  பணத்தை பட்டுவாடா செய்ய ஒவ்வொரு பெண்ணுக்கும் 11 பேர் கொண்டு குழு அமைக்கப் படும்.

5.பத்திரிக்கைகள் ஒரு தலை காதல் என்று எழுத கூடாது, பெண்கள் மீதான வன்முறை என்று தான் எழுத வேண்டும்.
 - நல்லா கேட்டுக்கோங்க பத்திரிக்கைகளே..., இனிமே வன்முறை, ஒரு தலை வன்முறை, கூடா வன்முறை, கள்ள வன்முறை, மச்சினி மேல் வன்முறை, பக்கத்து வீட்டு வன்முறை-ன்னு தான் எழுதணும்.  இது மக்கள் தொலைக்காட்சியில் உடனடியாக நடைமுறை படுத்தப் படும்.  தலைவர் டமில்குடிடாங்கி வீட்ல கூட வன்முறை திருமணம் நடந்துச்சாமே, மெய்யாலுமா..?!

6.பெண்களுக்கு தனி பள்ளி, தனி போக்குவரத்து வசதி, பாதுகாப்பான பொது இடம் அமைத்து தர வேண்டும்.
 - அப்படியே பெண்களுக்கான தனி கோயில், தனி சினிமா தியேட்டர், தனி கல்யாண மண்டபம், தனி விமானம்-கப்பல், தனி ஷாப்பிங் மால், தனி டாஸ்மாக் அனைத்தும் அமைத்துத் தரப்பட வேண்டும்.  கழிப்பிடம் பாதுகாப்பற்றது என்பதால் அடக்கிக் கொண்டு வீட்டில் மட்டுமே உபயோகப் படுத்த வேண்டும்.

7.பெண்களுக்கு எதிரான பிரச்சாரத்தை ஒடுக்க வேண்டும்.
 - ஆம்... மரக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும், பத்தலன்னா கா.வெ.கு. தலைமையில் ஹைவேயில் மிச்சம் மீதி உள்ள மரங்கள் வெட்டப்பட்டு உபயோகப் படுத்தப் படும்.

8.பெண் குழந்தைகளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை தடை செய்ய வேண்டும்.
 - அது கான்டியும் பத்தாது, பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் செல்போன், டெலிபோன், கிராமபோன், இயர்போன், ஹெட்போன், மெகாபோன், சாக்ஸோபோன், ஸ்பீக்கர்போன், பாலிபோன், மைக்ரோபோன் உள்ளிட்ட அனைத்து வகையான போன்களையும் தடை செய்ய வேண்டும்.  பொம்மை சைனா போன் கூட வாங்கித் தரக் கூடாது.

9.பெண்கள் வைத்திருக்கும் செல்போன்களை பெற்றோர்கள் கண்காணிப்பதோடு செக் பண்ண வேண்டும்.
 - இதற்காக ஏரியா வாரியாக தனித் தனிக் குழுக்கள் அமைக்கப் பட்டு அவர்கள் பெண்கள் வைத்திருக்கும் செல்போன்களையே எந்நேரமும் வெறிக்க வெறிக்க கண்காணிப்பார்கள்..  அவ்வப்போது செல்போனை பிடுங்கி சிக்னல், பேட்டரி, பேலன்ஸ் எல்லாம் சரியா உள்ளதா என செக் பண்ணுவார்கள்..!!

லேகியம் விக்கிறவனாட்டம் காதுல ஒரு மிசின மாட்டிக்கிட்டு விட்டத்த பாத்துக்கிட்டே "மாற்றம்-முன்னேற்றம்",  "மொத நாள், மொதா கையெழுத்து", "அன்புமணியாகிய நான்..."ன்னு அபிராமியை பாத்த குணா கணக்கா இருந்தவரை குணமாக்கிட்டு பழைய பன்னீர்செல்வமா திரும்பி வந்து அன்பு சகோதரியே, திராவிடத் தலைவரே, இளைஞர்களை கெடுக்கும் ரஜினியே-ன்னு அடுத்த ஆட்டத்தை ஆரம்பிங்க டாக்டர் சாரே...!!

எங்களுக்கும் பொழுது போகணும்ல...!!

குற்றமே தண்டனை

ஆரஞ்சுமிட்டாய், விசாரணை படங்களைத் தொடர்ந்து பாடல்கள் இல்லாமல் இரண்டு மணி நேரத்திற்கும் குறைவாக நறுக்கென்று ஒரு படம்.
ஒரு பெண் கொலை செய்யப் படுகிறாள், இருவர் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள், விசாரணை நடக்கிறது, சம்பந்தப் பட்டவர்களை தன்னுடைய சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒருவன், கொஞ்சம் கொஞ்சமாக பிடி இறுகுகிறது, தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையின் இறுதியில் ஒரு எதிர்பாரா ட்விஸ்ட் மற்றும் குற்றமே தண்டனை...

பார்வைக் குறைபாடால் பாதிக்கப்பட்டு அதை வெளியே தெரியாமல் மறைக்க இயல்பாகத் தடுமாறும் விதார்த்,
மகனின் பிரிவால் விதார்த்திடம் பரிவுடன் இருக்கும் நாசர்,
கூர்மையான பார்வையுடன் விசாரணை செய்யும் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து,
வெறும் பார்வையிலேயே அள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ்,
பயத்தை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு கம்பீரமாக இருப்பது போல் காட்டிக் கொள்ளும் ரஹ்மான்,
குறிப்பாக "ஜி.., ஜி..." எனப் பேரம் பேசும் சோமசுந்தரம்!! பின்னிட்டாங்க...

இயல்பான சுருக் வசனங்கள்!!

"எது தேவையோ அது தர்மம்..."(ஆ.கா.ரிப்பீட்டு)

"ஒண்ணும் தெரியாதுன்றங்க, ஆனா வரும் போதே வக்கீலோட வந்துடுறாங்க.."

"பக்கத்து வீட்ல இடியே விழுந்தாலும், டிவில நீயா நானா பாத்துகிட்டிருந்தோம்னுதான் சொல்லுவாங்க..."

"நம்ம ரேட்டை நாம தான் முடிவு பண்ணனும்..."

"உன்னை யாரு அந்தப் பையனை அடையாளம் காட்ட சொன்னா?"
"ஆக்சுவலா, உங்களைப் போட்டுக் கொடுக்கத்தான் போனேன்..."

"அவன் ஜீ.. போட்டு பேசுறத கேட்டாலே எரிச்சலா வருது..." இதற்கு கட்டாயம் குரு சோமசுந்தரத்தை பாராட்டியே ஆக வேண்டும். பார்க்கிற நமக்கே வெறுப்பாகிறது. காளையன், ஜோக்கர் தொடர்ந்து மீண்டும் இதில் ஒரு negative mediator கேரக்டராகவே வாழ்கிறார்.

க்ரைம் த்ரில்லர் என நிச்சயமாக வரையறுக்க முடியாது. ஒவ்வொரு பாத்திரங்களின் எண்ணத்தில் உள்ள வெறி, ஆசை, இரக்கம், குரூரம், பயம், அன்பு, காமம், தேவை உள்ளிட்ட உணர்வுகளை உள்ளது உள்ளபடி காட்டும் முயற்சி. இதில் இயக்குனர் வெற்றி பெற்று விட்டார். மிஷ்கின் அளவிற்கு இல்லையென்றாலும் மணிகண்டன் இதில் ஆங்காங்கே சில குறியீடுகளை சிதற விட்டிருப்பார்.

அயர்ன் கடை வைத்திருக்கும் 'பசி' சத்யா விதார்த்திடம், 'உங்களை அந்தப் பக்கம் பார்த்த மாதிரி இருந்துச்சு' என சொல்லி விட்டுப் போவது...,
கூண்டுப் பறவைகளின் சத்தம் விதார்த்திற்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுப்பது...,
பின்னாளில் அப்பறவைகள் செத்துக் கிடப்பது...,
"இனிமேல் நீ இங்க வராதே.." என நாசர் சொல்வது...
விதார்த் சுவற்றில் வரைந்து வைத்திருக்கும் வட்டங்கள்...

பின்னணிக்கு சவால் விடும் படம் என்றாலும் ராஜா ச்ச்சும்மா கலக்கிவிட்டார். குருட்டுப் பெண்ணை ரோடு க்ராஸ் செய்து விடுகையில், பறவைகளின் சத்தம் விதார்த் மண்டையில் ஓடும் இடத்தில், மற்றும் கோர்ட்டிலிருந்து விதார்த் வெளியேறி இறுதிக்கு காட்சியில் பூஜாவுடன் நடந்து செல்லும் வரை வெறும் விஷுவலாக காட்டிய காட்சிகளின் உயிருக்கு உயிரூட்டிய பின்னணி - முன்னணி..!!

மிகவும் நேர்த்தியான ஒளிப்பதிவு... விதார்த்தின் tunnel vision-ஐ பைப் வழியே பார்ப்பது போல் பார்வையாளனுக்கு தேவையான இடங்களில் மட்டும் காட்டியதில் மணிகண்டன் முத்திரையிடுகிறார்.

உலகத் தரத்தில் மீண்டும் ஒரு தமிழ்ப் படம்... இதுபோல் நிறைய வர வேண்டும்... படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்...!! சினிமா பிரியர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம்...

--------------------------------------------------------------------------------------------------

ஸ்வாதி கொலையை சம்பந்தப் படுத்தி எடுத்த படம்னு சில பேரு ஏன் ஜல்லியடிச்சிட்டு இருக்காங்கன்னு சத்தியமா புரியல..!!

- மலர்வண்ணன்

Monday, 15 August 2016

2020-Toyko-ல ச்சும்மா தங்கமா அள்ளுறோம்

100 வருடங்களாக விளையாட்டை ரொம்ம்ப விளையாட்டாக எடுத்துக் கொண்ட படியால் வெறுமையும் பொறுமையுமே எஞ்சிய நிலையில், போதும் பொங்கி எழுவோம் என உத்தேசித்து, வரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கங்களை சந்தையில் அள்ளுவது போல் நம்மாளுகள் அள்ளிவர அரசு மேற்கொள்ள சில திட்ட ஆலோசனைகள்:

வீரர்கள் அனைவருக்கும் தத்தம் விளையாட்டில் பயிற்சி தரப் போகிறோமோ இல்லையோ கட்டாயம் யோகா கற்றுத் தரப்படும்.  குறிப்பாக தடகள வீரர்களுக்கு டிராக்கில் குத்த வெச்சு யோகா செய்தல், நீச்சல் வீரர்களுக்கு தண்ணீரில் குப்புற மிதந்தபடி யோகா செய்தல் போன்றவை... இதற்காக பாபாராம்தேவ் தலைமையில் 5000 கோடி செலவில் யோகா பண்ணை அமைக்கப்பட்டு பிபாசா பாசு, ஷில்பா ஷெட்டி உள்ளிட்டோரை வைத்து பயிற்சி தரப்படும்.


வீரர்கள் மாட்டுக்கறி சாப்பிடுவது முற்றிலும் தடை செய்யப் படும்.  மீறி சாப்பிட்டாலோ, வைத்திருந்தாலோ, மாட்டுக் கறியை வேடிக்கை பார்த்தாலோ, சாப்பிடுவது போல கனவு கண்டாலோ, டிவியில் பார்த்தாலோ உடனடியாக பயிற்சியிலிருந்து நீக்கப் பட்டு, கைது செய்து FIR போடாமல், கோர்ட்டுக்கு கொண்டு போகாமல் பொதுமக்களிடம் அடி உதை வாங்கித் தரப்படும்.

சைவ உணவுடன் வீரர்களுக்கு சக்தி பானம் மற்றும் உற்சாக பானமாக பசு மூத்திரம் வேளா வேளைக்கு வழங்கப் படும்.  தங்கமும் பிளாட்டினமும் பாதரசமும் பிரித்தெடுக்காத அசல் ஒரிஜினல் மூத்திரம் கண்முன்னே பிடித்து தரப்படும்.  இம்மாடுகள் டோக்கியோவுக்கும் தனிக் கப்பலில் கொண்டு செல்லப் படும்.  வீரர்களுக்கு கன்னி கழியாத பசுக்களின் மூத்திரம் ,மட்டுமே வழங்கப் படும்.  இதற்காக ஒரு இலாகா உருவாக்கப் பட்டு அமைச்சரின் நேரடி கட்டுப் பாட்டில் இயங்கும்.


தற்போதுள்ள பயிற்சியாளர்கள் அனைவரையும் நீக்கி விட்டு துடிப்புள்ள வெறிகொண்ட பயிற்சியாளர்கள் நியமிக்கப் படுவார்கள்.  உதாரணத்திற்கு மல்யுத்தம் மற்றும் துப்பாக்கி சுடுதலுக்கு சல்மான்கான், ஹாக்கிக்கு ஷாருக்கான், பேட்மிட்டன்க்கு தீபிகா படுகோனே, பாக்ஸிங்கிற்கு மாதவன், போல் வால்ட்டுக்கு வடிவேலு (செவலை... தவ்வுடா தவ்வூ)!!


போட்டியின் போது வீரர்களை உற்சாகப் படுத்த பல நூதன முறைகள் கையாளப் படும்.  அனைத்தையும் வெளியே சொன்னால் அமெரிக்கா, சைனா உள்ளிட்ட நாடுகள் உஷாராகி விடும் என்பதால் உதாரணத்திற்கு ஒன்றே ஒன்று மட்டும்...
வில்-அம்பு மற்றும் துப்பாக்கி சுடும் போட்டிகளில் டார்கெட்டுக்கு பின்னே ஒருவர் சட்டையை கழட்டி நின்று கொண்டு, "சுடுவதாய் இருந்தால் என்னைச் சுடுங்கள்... என்னை சுடுங்கள்..." என குறளி வித்தை காட்டிக் கொண்டிருப்பார்.  வீரர்கள் உற்சாகம் தாள மாட்டாமல் சுட்டுத் தள்ளி விடுவார்கள்.


நம்மூரு தேர்தலில் செய்வது போல் ஒரே பெயரில் நாலு நாலு பேராக இறக்கி விட்டு பெருங் குழப்பத்தை உண்டாக்குவது..., நாலு உசைன் போல்ட், நாலு மைக்கேல் பெல்ப்ஸ் என எல்லாம் நாலு நாலு... ஒழிந்தான் எதிரி..!!

கல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சி போராட்ட விளம்பரத்தை திரும்ப திரும்ப வீரர்களுக்கு போட்டுக் காட்டிட்டே இருக்கணும்.  ஒவ்வொருத்தனும் "என் தங்கம், என் பிறப்பு, என் செருப்பு, என் பருப்பு, என் உரிமை.."ன்னு தூக்கத்துல சொல்ற அளவுக்கு ரெடி பண்ணனும்...

முக்கியமா ஏ.ஆர்.ரஹ்மான் இசையில "செய்..ஹோ..", "சக்...தே...", "நெஞ்சே...எழு..." ரேஞ்சுல ஒரு தேசபக்தி பாடல் ரெடி பண்ணி,  அமிதாப் பச்சன்ல இருந்து பேபி நைனிகா வரைக்கும் எல்லா முக்கிய நடிகர்களை வைத்து அவிங்க மூஞ்சில கொடி கலர் பூசி வாழ்த்திப் பாடுற ஒரு வீடியோவை எடுத்து எல்லா சேனல்லயும் தெறிக்க திகட்ட போட்டு வெறுப்பேத்தனும்.  ரொம்ப முக்கியமா குழந்தைகள் கொடிய தூக்கிட்டு எங்கிட்டாவது காட்டுக்குள்ள ஸ்லோ மோஷன்ல ஓடணும்.  அதி முக்கியமா அதுல டெண்டுல்கர் தோன்றி வாழ்த்து சொல்லணும்..!!

இதெல்லாம் ச்சும்மா நச்சுன்னு பண்றோம்... நறுக்குன்னு போறோம்... 2020-Toyko-ல ச்சும்மா தங்கமா அள்ளுறோம்  

Wednesday, 27 July 2016

மானும் Khan-ம்: பிரபல bloggers பார்வையில்

மான் வேட்டை கேசுல, அந்த மானே காதல் தோல்வி காரணமா லெட்டர் எழுதி வெச்சிட்டு தும்பை பூவுல தூக்கு மாட்டி தற்கொலை பண்ணிக்கிடுச்சின்னு தீர்ப்பாகி சல்மான் விடுதலையான மேட்டர்,  நம்ம பிரபல bloggers பார்வையில்:

thillaiakathuchronicles கீதா & துளசிதரன்:
நான் கூகிளில் தேடியவரை சல்மான்கான் மானைக் கொன்றதாக எங்குமே தகவல் இல்லை.  நண்பர் ஒருவருடைய தளத்தில் மட்டும் அது மான் தோல் போர்த்திய நாய் என்று பதிவிட்டிருந்தார்.  எப்படிப் பார்த்தாலும் அந்த நாய்க்கு ஒரு மான் தோல் தேவைப் பட்டதால் அந்த மான் வேட்டையாடப் பட்டிருக்கலாம்.  பலவருடங்கள் இயற்கையுடனான வாழ்வில் காடுகளில் கழித்திருக்கிறேன்.  அப்போதெல்லாம் துள்ளித் திரியும் மான்களைப் பார்க்கும் போது  பின்னாட்களில் இப்படி அநியாயமாக வேட்டையாடப் படும் என உணர்ந்ததில்லை.  தவறு யார் செய்திருப்பினும் அவர்கள் சட்டப் படி திருத்தப் பட வேண்டும்.  மான்கள் இனம் காப்பாற்றப் பட வேண்டும்.


killergee தேவகோட்டை
மானே, தேனே என கொஞ்சிவிட்டு எப்படி வேட்டையாட மனசு வந்தது?  துப்பாக்கியும் கையுமாக வாட்ச்மேனிடம் பிடிபட்ட பிறகும் எப்படி தப்பிக்க முடிந்தது?  எனக்கும் அவ்வப்போது ஆசைகள் தோன்றும்.  மான்கள் இல்லா ஊரில் வசிக்க ஆசை.  மாட்டுறவன் கைய நசுக்க ஆசை.  கி.மு.85இல் வந்ததைப் போன்ற புரட்சியொன்று மீண்டும் வரவேண்டும்.  ரத்தமின்றி, யுத்தமின்றி மான்கள் சுவாசிக்க யாசிக்கிறேன்.  கான்களை தண்டிக்க யோசிக்கிறேன்..


jokkaali - ஜோக்காளி 
யாருக்கு யாரோ: ):
மான்: அந்த மான் இந்த மானுக்கு தான் சொந்தம்
கான்: அந்த மான் இந்த மேனுக்கு தான் சொந்தம


venkatnagaraj - வெங்கட் நாகராஜ்
மான் தான் மான் தான் எல்லாம் மான் தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்...
மீண்டும் சந்திப்போம்...
நட்புடன்.
வெங்கட் .
புது டெல்லியிலிருந்து...


kummacchionline - கும்மாச்சி
ஜட்ஜ்: சொல்லுப்பா என்ன பாத்த?
ரேஞ்சர்: அது வந்துயா...
கான்: ம்ம்.. சொல்றா... தைரியமா சொல்லு...
ஜட்ஜ்: ஏம்பா, கேக்குறோம்ல!!
ரேஞ்சர்: அது வந்துயா, மான் ஒன்னு....
கான்: டேய், ஒரு பெரிய மனுசன் கேட்டுகிட்டு இருக்காரு, வந்து போயின்னு...
ஜட்ஜ்: ஏம்பா கானு, கம்முன்னு கெட
கான்: இல்லீங்கய்யா, அவனுக்கும் 2 பொண்டாட்டி 5 புள்ள இருக்குல்ல, அந்த பயம் இருக்குமில்ல...
ரேஞ்சர்: அது ஒண்ணுமில்லீங்க, காட்டுல ஒரு மான் லவ் பண்ணி இன்னொரு மானை இழுத்துட்டு ஓடிச்சிருங்க...
கான்: ஆங்.. ஆங்.. கெளம்பு... கெளம்பு... போ... போ... 


vishcornelius - விசுAWESOME
மானுக்கொரு நீதி, கானுக்கொரு நீதி
"நெஞ்சு பொறுக்குதில்லையே..."
என்ன வனத்துறை?  என்ன காவல்துறை?  என்ன நீதித்துறை? எல்லாமே தண்டம்..
"கூப்பிட்டியா வாத்யாரே...!?"


nambalki - என் வாழ்க்கை அனுபவங்கள்
பொதுவாக  நான் படங்கள் பார்ப்பது கிடையாது, அதுவும் "ஷோலே"வுக்குப் பிறகு ஹிந்திப் படங்கள் பக்கமே போனதில்லை.  என் மனைவிக்கு 5 மொழிகள் நன்றாக எழுத பேச படிக்கத் தெரியும் என்பதால் நகைச்சுவை காட்சிகளை மட்டும் தொகுத்துத் தருவார்.  ஆதலால் சல்மான் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்.
இங்கெல்லாம் மான் வேட்டை அல்ல, மானின் ஒரு மயிரைப் புடுங்கினால் கூட கடும் தண்டனை உண்டு, அது ப்ரெசிடெண்ட்டாக இருந்தாலும்... அது டாம் க்ரூஸோ, பிராட் பிட்டோ... நிரூபிக்கப் பட்டால் ஜெயில் உறுதி.
மான்தோலையும் புலித்தோலையும் போட்டு அமர்ந்து அருள் வாக்கு சொல்லும் சாமியார்கள் இருக்கும் ஊரின் காவிகளின் ஆட்சியில் இதெல்லாம் நடக்கவில்லையென்றால் தான் ஆச்சர்யம்..!!


பி.கு:
மேற்சொன்ன யாவும் நகைக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல, என disclaimer எல்லாம் போட மாட்டேன்.  ஏன்னா, நீங்க ரசிப்பீங்கன்ற ஒரு நம்பிக்கை தான்.


அன்புடன்
மலர்வண்ணன்


Friday, 22 July 2016

காளி, வித்யாசாகர், சூர்யா-வைத் தொடர்ந்து கபாலி

தனியா சினிமாக்கு போக ஆரம்பிச்சு முதன்முதலா முதல்நாள் முதல்காட்சிக்கு (இப்போ சுருக்கமா FDFS ன்னு சொல்றாங்கோ) போன படம் கவிதாலயாவின் அமீர்ஜான் இயக்கத்தில் ரஜினி நடித்த "சிவா".  காலைக்காட்சிக்கு சென்று வரிசையில் நின்று டிக்கெட் தீர்ந்து விட,  கவுன்ட்டரை (அந்தக் கவுண்டர் இல்லீங்கோவ்...) விட்டு வெளியே வர இயலாமல்  அடுத்த காட்சிக்கு நின்று டிக்கெட் வாங்கி சட்டையைப் புழிஞ்சு தோள்ல போட்டுட்டு போய் உக்காந்தா, அய்யய்யோ அதுவொரு துன்பியல் சம்பவம்.  இளையராஜாதான்  காப்பாற்றினார்.  அதன்பின்னர் குசேலன், லிங்கா நீங்கலாக அனைத்து ரஜினி படங்களும் FDFS தான்...
Over to Kabali...

பூசணிக்காயை தலையில உடைக்கிறது, சண்டைல பலபேரை ஒட்டுக்கா பறக்க விடறது, ஒரே பாட்டுல குபேரனாவது போன்ற கார்ட்டூனிஸ தனங்களை விடுத்து, தளபதிக்கு பிறகு, அதாவது 25 வருசத்துக்கு அப்புறமா அப்டியே திரும்பி வந்திருக்காரு ரஜினி.

Mass Opening , எதிரிகளின் தேடல், Gang War எனச் செல்லும் காட்சிகளுனூடே இழந்த மனைவியின் ஞாபகங்களை பரிதவிப்புடன் பார்வையால் ஏக்கத்துடன் கடந்து செல்வது செம ரஜினி.

தன் மகளைத் தேடிக் கொண்டிருக்கையில் துப்பாக்கி முனையில் கூலிப் படையினரால் மடக்கப்பட்டு, அடுத்து என்ன நடக்கும் என்ற நிலையில் அதன் தலைவி "அப்பா..." என உரக்க அழைத்து ரஜினியை நோக்கி ஒரு துப்பாக்கியை வீச, தன் மகளைக் கண்டு கொண்ட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நொடிக்குள் இரு கண்களால் மகளை பார்த்துக் கொண்டே ஒரு கையால் தன்னை நோக்கி வரும் துப்பாக்கியைப் பிடிக்கும் காட்சி..., வாவ்... காலையில 03:30க்கு அலாரம் வெச்சு எழுந்தது worth தான்..

ஒவ்வொரு முறை "மகிழ்ச்சி" சொல்லும் போதும் அந்தந்த சிச்சுவேஷனுக்கு ஏற்றார்போல் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் அற்புதம். 

"வீரத் துறந்திரன்.." பாட்டில் ரஜினி மயிரைக் கோதி நடப்பது முதல் தலைவனாக உருவெடுப்பது வரை உள்ள காட்சிகள் ரணகளம்...

பிரிந்த அப்பா-மகள் சேர்ந்ததை பக்கம் பக்கமான வசனங்கள் இல்லாமல் கைகளைப் பற்றிக் கொள்வதில் உணர்த்தியது அடுத்த கட்டம்..

வழக்கமான அரைலூசு நாயகிகள் போலல்லாமல் ராதிகா ஆப்தே, ரித்விகா, தன்ஷிகா-ன்னு மூவருமே அமர்க்களப் படுத்தியுள்ளனர்...

வசனங்களின்றி "அட்டகத்தி"தினேஷ், ரோபோவைப் போன்ற கேரக்டர், கண்ணாடி பாட்டில்களால் தாக்கப்படும் வரை...

பில்லா படத்துல அஜித்த கோட்டு-கூலர்ஸோட சுத்தவிட்டா மாதிரி இதுல ரஜினியை சுத்த விட்டிருந்தாலும் அதற்குண்டான காரணத்தை ரஜினி விளக்குவது பக்கா.

என்னதான் ரஜினி, ரஜினின்னு சொன்னாலும் இது ரஞ்சித் படம்.  காம்ப்ரமைஸ் செய்யாமல் எடுத்திருப்பார் போல் தான் தோன்றுகிறது.  படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்களுக்குண்டான முக்கியத்துவத்துடன் கட்டமைத்து அளித்தது சிறப்பு.  வசனங்களில் "ரஞ்சித் வாடை"யை கொஞ்சம் அதிகமாகவே தூவியிருக்கிறார்.

"காந்தி சட்டையை கழட்டியத்துக்கும், அம்பேத்கர் கோட்டு போட்டதுக்கும் நெறய வித்தியாசம் இருக்கு.."

"நாங்கெல்லாம் மெட்றாஸ்காரங்க..., நம்புங்க..."


"சோற்றுக்கே வழி இல்லாமல் தாண்டா இருந்தோம், ஆனால் இப்ப நாங்க முன்னேறி வருவது, நல்லா படிக்கிறது, உடுத்துறது உங்க கண்ணை உறுத்துதுன்னா , ஆமாண்டா அப்படித்தான் போடுவோம்.."


"நான் மேல வருவேண்டா, முன்னேறுவேண்டா, கோட்டும் சூட்டும் போட்டுக்கிட்டு உங்க முன்னாடி கால்மேல கால் போட்டு உட்காருவேண்டா... பிடிக்கலேன்னா சாவுங்கடா..."


"நீ ஆண்ட பரம்பரைன்ன.., நான் ஆளப் பொறந்த பரம்பரைடா...."


"நாம எப்படி ட்ரெஸ் பண்ணனும்னு முடிவு பண்றதுக்கு அவங்க யாரு..."


"உன் கருப்பு கலரை அப்டியே எடுத்து என் உடம்பு முழுதும் பூசிக்கணும்..."


குமுதவல்லிக்கான தேடலில் ஒரு theme-ம் எதிரிகளுக்கான வேட்டையில் ஒரு theme-ம் வைத்து கலக்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயண்.  க்ளைமாக்ஸ் சண்டைக்கு காட்சிக்கு "நெருப்புடா" பாடல் தெறிக்க விடுகிறது.

Gang War படமென்றாலே ச்சும்மா அனல் பறந்திருக்க வேண்டாமா?!

தேடல்கள், துரத்தல்கள், தப்பித்தல்கள், பழிவாங்குதல், சஸ்பென்ஸ் என பார்வையாளனை ஒரு நொடி கூட சீட்டில் சாயவிடாமல் செய்திருக்க வேண்டிய கான்செப்ட்.

திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால் மரண மாஸாக வந்திருக்க வேண்டிய படம் கபாலி.

வெற்றிமாறன் அளவிற்கு நடிகர் கிஷோரை ரஞ்சித் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது தனிப்பட்ட வருத்தம்.

டைகரிடம் (மெட்ராஸ் பட ஜானி) போலீஸ் துப்பாக்கி குடுத்து அனுப்புவது கபாலியின் பாதுகாப்புக்கா, போட்டுத்தள்ளவா?!

கபாலி - ஒரு தெளிந்த நீரோடையைப் போன்ற அளவான வேகத்தில் செல்லும் ரஞ்சித் படம்.  ரஜினிக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

பரட்டை, காளி, வித்யாசாகர், சக்ரவர்த்தி, டேவிட் பில்லா, காளையன், அலெக்ஸ் பாண்டியன், சூர்யா, ரோபோ சிட்டி வரிசையில் கபாலி..!!

பி.கு.
 • மலேசிய தமிழர்களின் வரலாறு சரியாகத் தெரியாமல் ரஞ்சித்தும் ரஜினியும் மாபெரும் வரலாற்றுப் பிழையை செய்துவிட்டனர் என இன்றிலிருந்து திடீர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கிளம்பி வரலாம்.
 •  
 •  "படத்தில் சில குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டும்" என சிலபல லெட்டர் pad கட்சிகள் போராட்டம் நடத்தி இலவச விளம்பரம் பெற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

Saturday, 16 July 2016

பிரித்து வைத்து புணர்ச்சி விதி கூறல்

"கோமாதா குளமாதா"ன்னு கும்மியடிக்கிறவன், சர்வலோகநிவாரணின்னு மாட்டு மூத்திரத்த குடிக்கிறவன், மாட்டு மூத்திரத்துல 24 கேரட் தங்கம் எடுக்கிறவன் அனைவருக்கும் இந்த இடுகை டெடிகேட் செய்யப் படுகிறது.

ம.செந்தமிழன், தஞ்சையைச் சேர்ந்தவர் இயற்கை வேளாண்மை, ஈழ விடுதலை, சமூகவியல் என பல்வேறு தளங்களில் ஆய்வுகளையும், செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருபவர். இளந்தமிழர் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினராக உள்ள இவர் "பாலை" திரைப்படம் மற்றும் சில ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார். 
செந்தமிழன் மாடுகள் குறித்து தனது facebook-ல் எழுதிய ஒரு பதிவை அப்படியே இங்கு பகிர்கிறேன்.

Over to Ma .Senthamizhan...

பசுவாகிய எனக்கு, புணர்வதற்குக் காளை தேவை!

உம்பளச்சேரி வகையைச் சேர்ந்த பசுவாகிய நான் ஆச்சாம்பட்டியில் உள்ள செம்மைவனத்தில் வாழ்கிறேன். ’வளத்தி’ என்று எனக்குப் பெயரிட்டிருக்கிறார்கள். வளங்களைத் தருபவள் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம்.  நான் சினையாக இருந்தபோது இங்கு வந்தேன். செம்மைவனம் வந்து ஏழு நாட்களுக்குள் கிடாரி (பசு) கன்றை ஈன்றேன். இப்போது நான் உங்களிடம் கேட்பது மிக முக்கியமான உதவி.

உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல்.  பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்துகொள்வது எனக்குத் தெரியும்.

என்னை செம்மைவனத்திற்கு வாங்கி வந்தவர் என்னிடம் பேசும் வழக்கம் கொண்டவர். மனிதர்களில் அவர் ’மூடர்கள்’ எனும் வகையைச் சேர்ந்தவர். ஆடு, மாடு, கோழி, மரம், செடி போன்ற உயிரினங்களோடு பேசுபவர்களை ‘மூடர்கள்’ என அழைப்பது நாகரிகர்களின் வழக்கம் என அவர் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

நான் கன்று ஈன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன. இன்னும் சில நாட்களில் எனக்கு உடலுறவுகொள்ள வேண்டிய தேவை உருவாகிவிடும். இப்போதே எனது முலைகளில் பால் சுரப்பு குறைகிறது, முலை மடி இறுகத் துவங்கிவிட்டது, பிறப்புறுப்பு அவ்வப்போது துடிக்கத் துவங்கிவிட்டது. இந்த அறிகுறிகளை எல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டிய நிலையில் நானும் என் போன்ற மாடுகளும் இருக்கிறோம்.

பால் சுரப்பு நிற்கும் காலத்தில் எங்கள் அடிவயிறு பிசையும் உணர்ச்சி அதிகரிக்கும். அவ்வாறான உணர்ச்சி நிலைகளில் எங்களை அறியாமல் அடி வயிற்றிலிருந்து கத்தத் துவங்குவோம். பசியில் கத்துவதற்கும் காமத்தில் கத்துவதற்கும் எங்கள் குரலில் வேறுபாடுகள் இருக்கும். காமம் மிகும்போது எங்கள் கண்கள் வெறித்து, வால் மயிர்கள் சிலிர்த்து, பிறப்புறுப்பு புடைத்து இருப்பதை உங்களில் எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்களோ தெரியவில்லை.

சில காலம் முன்புவரை இவ்வாறான அறிகுறிகளைப் பார்த்ததும் எங்களை வளர்ப்பவர்கள் எங்களை ஏதேனும் ஒரு காளையிடன் ஓட்டிச் செல்வார்கள். காமம் தீரத் தீர எங்களுக்கு புணர்ச்சி கிடைக்கும்.  காடுகளில் மேயும்போது கிடைக்கும் புணர்ச்சிகள் இன்னும் சிறப்பானவை. பசுக்களாகிய எங்கள் குரலில் எழும் காமம் மனிதர்களிடன் உதவி கேட்பதற்கானது அல்ல, காளைகளை சுண்டி இழுப்பதற்காக என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இப்போதெல்லாம் எங்களுக்குக் காமம் மிகுந்தால் காளைகளிடம் ஓட்டிச் செல்வதில்லை; மருத்துவர்களிடம் கூட்டிச் செல்கிறார்கள். மருத்துவர்கள் மெத்தப் படித்தவர்கள், அறிவாளிகள், நாகரிகம் தெரிந்தவர்கள், விலங்கியல் பயின்றவர்கள், மேதைகள். காமம் எனும் உணர்வு, கன்று போடுவதற்காக மட்டுமே தோன்றுகிறது என்ற அதி புத்திசாலித்தனமான புரிதல் மருத்துவர்களுக்கு உள்ளது.

மனிதர்களில் ஆணும் பெண்ணும் கூடுவது பிள்ளை பெறுவதற்காகத்தானோ என்ற ஐயம் எங்களுக்கு இப்போது எழுந்துள்ளது. ஒருவேளை மனிதர்களுக்குக் காமம் என்ற உணர்வே அற்று விட்டதோ என்ற குழப்பமும் சமீபகாலமாக உருவாகியுள்ளது. மருத்துவர்கள் எங்கள் காமத்தில் இரசாயனக் கழிவுகளைக் கொட்டி அழித்துவிட்டு, விந்தணுக்களை பிறப்புறுப்பில் பீச்சிவிடுகிறார்கள். காளை செய்ய வேண்டிய வேலையை மருத்துவர்கள் செய்கிறார்கள். ஆனாலும் காளையைப் போன்ற வேலையை அவர்கள் செய்வதில்லை, செய்யவும் முடியாது.

அவர்கள் பீச்சியடிக்கும் விந்தணுவுக்குச் சொந்தமான காளைகள் ஏதோ சில வெளிநாடுகளில் தோன்றியவை. அந்தக் காளைகளுக்கு பசுக்களின் யோனி மறுக்கப்படுகிறது. பசுக்களாகிய எங்களுக்கு காளைகளின் ஆண்குறிகள் மறுக்கப்படுகின்றன. இவ்வாறு ஆண்குறி, பெண்குறிகளுக்கிடையில் கூட அறிவியலைப் புகுத்தும் நாகரிக மனிதர்களின் காலத்தில் பிறந்ததை எண்ணி நானும் என் சக மாடுகளும் அவமானமும் துக்கமும் கொள்கிறோம்.

எங்கள் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டு, நீங்கள் மட்டும் நன்றாக வாழ்ந்துவிடலாம் என நம்புகிறீர்கள். உங்கள் நம்பிக்கையை நான் சிதைக்க விரும்பவில்லை. அதேவேளை, ஒரு செய்தியை உரைக்க வேண்டியுள்ளது. எங்கள் புணர்ச்சியை நீங்கள் நிராகரித்த பின்னர், நாகரிகச் சமூகத்தில் உருவாகியுள்ள மலட்டுத் தன்மையின் அளவைக் கொஞ்சம் ஆய்வு செய்து பாருங்கள். உங்களுக்குத்தான் ஆய்வுகள் என்றால் பிடிக்குமே. மலடு நீக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை எவ்வளவு பெருகியுள்ளது எனப் பாருங்கள்.

ஆண்குறி நுழையாத எங்கள் யோனிகளின் சாபம், முலைக்காம்புகளில் வழியும் பாலின் வளத்தைச் சீரழித்துக்கொண்டுள்ளது. காளையைப் புணர்ந்து பெற்ற கன்றுக்காகச் சுரக்கும் பால் வேறு, மருத்துவர் செலுத்தும் விந்துவில் பிறக்கும் கன்றுக்கான பால் வேறு.  பிறப்புறுப்பு மரத்துப் போன பசுக்களின் எண்ணிக்கைதான் இப்போது அதிகம். அவற்றின் பாலைத்தானே அருந்திக் களிக்கிறீர்கள். அவற்றில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்று ஆய்வு செய்து முடித்தாயிற்று அல்லவா. அவற்றில் உயிர் உருவாக்கும் ஆற்றல் இருக்கிறதா எனப் பாருங்கள் மேதைகளே. சத்தியமாகச் சொல்கிறேன், காய்ந்த யோனிப் பசுக்களின் பாலில் உயிராற்றல் இருக்காது.

புணர்ச்சி என்பது பிள்ளை பெறும் ‘வேலை’ அல்ல. மனங்கள் கூடிக் களித்து, உடலுக்குள் மழை பொழிந்து, கருப்பை நனைந்து, உயிர் வளரும் படைப்புத்தொழில். அந்தப் படைப்புத் தொழிலில் குறுக்கிட்டு விந்தணுக்களை பீச்சிவிட்டால் கன்று பிறக்கும். அந்தக் கன்று இயற்கையான உடல் வலுவுடன் வாழாது, அக்கன்றுக்காகச் சுரக்கும் பாலில் உயிர் ஆற்றல் இருக்காது. இவ்வாறு பிறக்கும் கன்றுகள் யாவும் மருத்துவமனைகளையும் இரசாயன தீவனங்களையும் நம்பித்தான் வாழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?  நீங்கள் எப்படி மருத்துவமனைகளையும், இரசாயனம் கலந்த உணவுகளையும் நம்பி வாழ்கிறீர்களோ அதேபோல, செயற்கைக் கன்றுகள் வாழ்கின்றன.

எங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை உங்களுக்கும் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் புத்திசாலிகள் என்பதால் உங்களுக்கு இந்தத் தகவல் வந்து சேரவில்லை. இப்போதும்கூட உங்களில் பலர் இந்தத் தகவலை நம்பப்போவதில்லை. உங்களுக்கு ஆய்வறிக்கைகள் தேவை, சோதனைகள் தேவை. எங்களுக்கோ காளைகளின் விறைத்த குறிகள் தேவை.

பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு மேதாவிக் கூட்டம் காளைகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டுள்ளது. காளைகளுடன் மனிதர்கள் ஆடும் விளையாட்டுகளைத் தடை செய்தது அக்கூட்டம். இப்போது காளைகளை வளர்ப்பது தேவையற்ற செயலாக மாறிவிட்டது.

ஒருபக்கம், விந்து ஊசிகள் மறுபக்கம் காளை விளையாட்டுகளுக்குத் தடை. எங்களை வளர்க்கும் மக்களுக்கு நாங்கள் வெற்றுச் செலவினமாக மாறிப்போனோம்.  பசு என்றால், உயிர் என்றும் பொருள். மாடு என்றால், செல்வம் என்றும் பொருள். உயிரின் ஆதி, செல்வத்தின் உருவம் நாங்கள்தான். காளை என்றால் உயிர்களின் குறியீடு. காளை மீது இறைவன் அமர்கிறான் என்பது, எல்லா உயிர்களையும் அடக்கி ஆள்பவன் என்ற விரிந்த கருத்தின் உருவகம்.

உங்களுக்கு இவையெல்லாம் தேவையற்ற சேதிகள். எந்தப் பாலில் எவ்வளவு கொழுப்பு உள்ளது என்பது உங்கள் கவலை. நாய்ப் பாலில் அதிக சத்து இருப்பதாக ஏதேனும் ஆய்வகம் அறிக்கை தந்தால், நாய்களின் முலைகளை நாசமாக்கிவிடும் நவீனர்களின் சமூகம் இது.  எல்லாவற்றிலும் சத்து, ஊட்டம், உடல்நலம், மருத்துவகுணம் இருக்க வேண்டும் என்று அலைவது நவீனத்தின் மனநோய். சக உயிர்களைப் பற்றிய அறச் சிந்தனை துளியேனும் இருந்தால் எங்களுக்கு இந்தக் கொடுமை நேர்ந்திராது.

உங்களில் மனசாட்சியை விற்றுவிடாத ஒரு சிலரை நோக்கி இக்கடிதம் வழியாக நான் உதவி கேட்கிறேன்.

காளை மாடுகள் யாவும் இப்போது இறைச்சிக்காக விற்கப்படுகின்றன.  ஏர் இழுத்த எங்கள் காளைகள், மலைமலையாகக் குவிந்த நெல்லைப் போர் அடித்த எங்கள் காளைகள், செக்குகளை இழுத்து எண்ணெய் வளம் பெருக்கிய எங்கள் காளைகள், வண்டிகளை இழுத்து கோடானு கோடி மக்களுக்கான வாகனங்களைத் தந்த எங்கள் காளைகள், ஏறு தழுவலில் ஓடி விளையாண்டு இன்புற்ற எங்கள் காளைகள், காடுகளில் எங்கள் மீது ஏறி விழுந்து தடித்த குறிகளால் எங்கள் யோனிகளை விரித்துப் புணர்ந்து பெருமழை பெய்த எங்கள் காளைகள், இப்போது கசாப்புக்கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

மாட்டிறைச்சி உண்பதும் உண்ணாததும் உங்கள் கொள்கை, உங்கள் உரிமை. பசுக்களாகிய நாங்கள் பால் கறப்பதால் தப்புகிறோம். காளைகளுக்கென வேலை ஏதும் உங்கள் நாகரிக சமூகத்தில் இல்லை. ஆகவே, ஆணாகப் பிறக்கும் எல்லா மாடுகளும் கறிக் கடைகளுக்கு மட்டுமே அனுப்பப் படுகின்றன.  ஒருகாலத்தில், உழைத்துக் களைத்து இளைத்த மாடுகளைக் கறிக்கு வெட்டினார்கள். இப்போது கொழுத்துத் திரியும் காளைகளாகத் தேடித் தேடி வெட்டுகிறார்கள்.

உங்கள் சமூகத்தின் மேதைகளுக்கு பசுக்கள் வேண்டும், காளைகள் வேண்டாம். மாடுகளாகிய எங்களுக்கோ புணர்வதற்குக் காளைகள் வேண்டும். இதில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைக்கிறீர்களா?  இன்னும் சில நாட்களில் எனக்குப் புணர்ச்சி தேவைப்படும். நான் வாழும் ஊரில் காளைகள் இல்லை, மருத்துவர்கள் இருக்கிறார்கள். எனக்குக் காளையுடன் புணரும் வேட்கை எழுகிறது, மருத்துவர்களின் விந்து ஊசிகள் மீது வெறுப்பு மிகுந்து கொண்டுள்ளது.

என்னை வளர்ப்பவர் என்னிடம் இது பற்றிப் பேசினார். எ்ப்படியாவது காளை தேடித் தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக அவர் இறையிடம் வேண்டிக் கொண்டும் இருக்கிறார். என்னைப் புணர்வதற்காகவேனும் ஒரு காளை மாட்டை விலைக்கு வாங்கவும் அவர் தயாராக இருக்கிறார்.  என்னைப் போன்ற பசுக்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கெல்லாம் புணரும் உரிமை வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தின் வழியாக நான் உரையாடுகிறேன்.

எல்லா உயிரினங்களையும் உங்கள் பயன்பாட்டுக்கானவையாகப் பார்க்கும் வெறித்தனத்திலிருந்து விடுபடவே மாட்டீர்களா? ஒரு மரத்தைப் பார்க்கும்போதுகூட, இந்த மரத்தால் என்ன பயன் எனக் கேட்கிறீர்கள். மாடுகளாகிய நாங்கள் மனிதர்களைப் பார்க்கும்போது, ‘இந்த மனிதர்களால் என்ன பயன்?’ எனக் கேட்டால் உங்களிடம் பதில் இருக்காது.  இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாத காலம் மிக அதிகம். மாடுகள் இல்லாத காலம் மிகக் குறைவு. நேரடியாகச் சொல்வதானால், பூமிக்கு மனிதர்களைவிட மாடுகளை அதிகம் பிடிக்கும்.

உங்கள் மலம் கூட புழுக்களுக்கு உணவாகாத வகையில், இரசாயனத்தில் கழுவி புதைக்கிறீர்கள். எங்கள் சாணத்தில் ஒவ்வொரு நாளும் கோடானு கோடி புழுக்கள் வாழ்ந்து மடிகின்றன.  புணராத கோழிகளிலிருந்து முட்டைகள் பெறுகிறீர்கள், மலட்டு விதைகளைத் தூவி பழங்கள் அறுக்கிறீர்கள், விதையற்ற பயிர்களை உணவாகக் கொள்கிறீர்கள். உங்களோடு பழகும் எல்லா உயிர்களிடமிருந்தும் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டீர்கள்.

எல்லா உயிரினங்களின் அடி வயிற்று சூட்டிலிருந்து கூறுகிறேன், ‘இதற்கெல்லாம் நீங்கள் அனுபவிப்பீர்கள்’.  இப்போதும் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். படும் பாடுகளுக்கெல்லாம் நாம் செய்த பாவம்தான் காரணம் என்று உணராமல், அனுபவிக்கிறீர்கள்.

இப்போதும் உங்களால் மாற முடியும். மலட்டுத் தன்மை கொண்ட எல்லா உணவுகளையும் நிராகரியுங்கள். விந்து ஊசிகளுக்கு எதிராகப் பேசுங்கள், செயலாற்றுங்கள். காளைகளைப் பாதுகாக்க ஏதேனும் செய்யுங்கள். பசுக்களை மட்டும் பாதுகாப்போரின் எண்ணிக்கை உயர்கிறது, காளைகளைக் காப்பவர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். காளைகளைப் பாதுகாப்பதற்கென கூடிப் பணியாற்றுங்கள்.

பால்வளம், வெண்மைப் புரட்சி ஆகிய சொற்களைக் கொண்டு எங்கள் வாழ்வுரிமையைப் பறிக்கும் பாவத்தை இத்துடன் நிறுத்துங்கள். உங்கள் புள்ளிவிவரங்களை விட எங்கள் உணர்ச்சிக் குமுறலுக்கு வலிமை அதிகம்.  நாங்கள் அப்படி என்ன பெரிதாகக் கேட்கிறோம்? எங்களுடன் புணர்வதற்குக் காளை வேண்டும் என்கிறோம். அந்தக் காளை எந்தப் பிறப்பாக இருந்தாலும் கவலையில்லை. கேவலம், நாங்கள் மாடுகள்தானே!

ம.செந்தமிழன் பற்றிய மேலும் தகவல்களுக்கு ம.செந்தமிழன் ta.wikipedia.org/wiki
அவருடைய இடுகைகளுக்கு http://masenthamizhan.blogspot.in/

Thursday, 7 July 2016

கண்ணுதானே போச்சு!! உசுரா போச்சு?!

கீழுள்ள ரெண்டு linkம் பார்வைக்காக...

http://tamil.thehindu.com/tamilnadu/மேட்டூர்

http://tamil.thehindu.com/india/மஹதிபட்டினம்

மேட்டூர், மஹதிப்பட்டினம் ரெண்டு சம்பவங்களிலுமே உள்ள பெரிய டவுட்டு என்னன்னா...

ஆப்பரேஷன் பண்ணதுல முறையே 19 மற்றும் 13 பேருக்கு கண்பார்வை பறி போயிருக்குன்னா இது டாக்டர்களின் கவனக் குறைவு மட்டுந்தானா?!

ஆஸ்பத்திரிக்கு வரும் மருந்துகள் முறையானதுதானா? முடிவு தேதிகளுக்கு முன்னமே உபயோகப் படுத்தப் பட்டனவா? கலப்படம் அற்றதா? அரசு ஆஸ்பத்திரியில் இருக்கும் டாக்டர் நிச்சயமா இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?!

அதெப்படி ஒரு அரசு டாக்டர் ஒரே நாள்ல தொடர்ந்து 10-க்கும்  மேற்பட்டவர்களுக்கு ஒரே மாதிரி தப்பு தப்பா பார்வை பறி போகிற அளவுக்கு ஆப்பரேஷன் பண்ணியிருப்பார்?!

அப்படியே டாக்டர் செய்திருந்தாலும் அவரை அடுத்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் செய்தால் மட்டும் எல்லாம் சரியாகிடுமா?  அடுத்த ஊர்ல போய் அவர் என்ன பஞ்சு முட்டாயா விற்பார்? அதே தொழிலைத்தான் பார்க்கப் போகிறார்!!

பாலாஜி சக்திவேல்-ன் "சாமுராய்" படம் தான் கண்முன் வந்து போகிறது...

ஆஸ்பத்திரி மருந்துகளுக்கு விடப்படும் டெண்டர், டெண்டரை எடுத்து நடத்தும் நிறுவனம்/ஆள், வாங்கப் படும் மருந்து நிறுவனங்கள், அவற்றின் முதலாளிகள், மருந்துகளின் சந்தை விலை, அரசு நிர்ணயித்த விலை, அரசின் கொள்முதல் விலை, மருந்துகள் தயாரிக்கப் படும் ஆய்வுக்கூடங்கள்/தொழிற்சாலைகள், மருந்துகள் சேமித்து வைக்கப் படும் குடோன்கள், அந்தந்த ஊர்களில் இம்மருந்துகளை அனுமதிக்கும் மருத்துவ டீன்கள், பின்னணி டீலிங்குகள் இந்த விபரமெல்லாம் மீடியாகாரங்க நோண்டி போட மாட்டாங்களா?!

அவங்கள இதுமாதிரி CBI விசாரணை பண்ணுவாங்களா?!


சுமார் பத்து வருடங்களுக்கு முன், சன் டிவி- ன்னு நெனைக்கிறேன்... லஞ்சம் புழங்குவதில் டாப் 10 துறைகளில் முதலிடத்தில் உள்ளது எது என எதிர்ப்பார்ப்புடன் ஒரு டாக்குமெண்டரி வந்தது... பலரும் போலீஸ் அல்லது RTO தான் இருக்கும் என நினைத்திருக்க முதலிடம் பிடித்ததோ மருத்துவத் துறை..!!  அந்த இடத்தை யாருக்கும் விட்டுத் தராமல் இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறதோ?!

இன்னும் எத்தனை பேருக்கு என்னவெல்லாம் போகப் போகுதோ?!

Wednesday, 6 July 2016

அறிந்தும் அறியாமலும் - Final Conflict

அறிந்தும் அறியாமலும் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு மேல் தொடர வேண்டாமென்று தான் இருந்தேன்.  இரண்டாம் பாகத்தின் இறுதி வரிகள் "குழந்தைகளுடன் நட்புடன் இருங்கள், அவர்களின் நம்பிக்கையை சம்பாதியுங்கள், குழந்தைகளை நம்புங்கள்...!!" என்றுமுடித்திருந்தேன்.

இன்று வலைதளத்தில் http://indiatoday.intoday.in/story/morphed-images-on-facebook-drive-salem-woman-to-suicide/1/702582.html இந்த செய்தியைப் பார்த்த பின் மிகுந்த வேதனையுடன் எழுதுகிறேன்.  வினுப்ரியா தற்கொலை செய்தியை கேள்விப்பட்டவுடன் முதலில் என் மனைவியிடம், "என்ன இப்பெண்ணை கொஞ்சம் கூட தைரியம் இல்லாம வளர்த்து வெச்சிருக்காங்க, இந்த மாதிரி சமயத்துல பெற்றோர் தானே ஆதரவா இருக்கணும்..., ஒரு வேளை அவங்களே இப்பெண்ணை சந்தேகப் பட்டு மனம் புண்படுற மாதிரி பேசியிருப்பாங்களோ..!!"ன்னு வருத்தப்பட்டு சொல்லிட்டு இருந்தேன்.

அதுதான் நடந்திருக்கு...


ஒருவேளை இக்கடிதம் வினுப்ரியா தான் எழுதியிருந்தார் எனும் பட்சத்தில் அவர் போட்டோவை morphing செய்து வெளியிட்ட சைக்கோ பொறம்போக்கிற்கு அடுத்த குற்றவாளிகளாய் கருதப் பட வேண்டியவர்கள் அவருடைய பெற்றோரே.

"காலேஜுக்கு போனோமா வந்தமான்னு இல்லாம கண்டவன்கிட்டயும் பல்லைக் காட்டிட்டு வந்திருப்பா.."
"இவ சும்மா ஒழுக்கமா இருந்திருந்திருந்தா இன்னைக்கு நமக்கு இப்படி ஒரு அவமானம் வந்திருக்குமா...?!"
"வெளிய தலை காட்ட முடியல, செத்துறலாம் போல இருக்கு, இதெல்லாம் பாத்துக்கிட்டு இவ மட்டும் எப்படித்தான் இருக்காளோ.."
"இனி எந்த முகரைய வெச்சிக்கிட்டு இவளுக்கு மாப்பிள்ளை தேடுறது..."
"பேசாம நம்ம எல்லாரும் குடும்பத்தோட சாவலாம், நம்ம செத்தப்புறம் இவ மட்டும் எவன் கூட வேணாலும் சந்தோஷமா இருக்கட்டும்..."

இது போன்ற அல்லது இன்னும் தரக் குறைவான வசவுகளை வினுப்ரியா அவரின் பெற்றோரிடமிருந்து பெற்றிருக்கக்  கூடும்.  ஏற்கனவே இருந்த மன உளைச்சலில் இதுவும் சேர்ந்து கொள்ள சாவது தான் ஒரே வழியென முடிவெடுத்திருக்கலாம்.

கர்ப்பிணி மனைவியை பெண் டாக்டரிடம் check up க்கு அழைத்துச் செல்லும் போது கணவனை, "நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க சார்.."ன்னு சொல்ற சமூகத்துல தான் இன்னும் வாழ்ந்திட்டு இருக்கோம்.
"என் மனைவி, அவள் கர்ப்பத்திற்கு காரணம் நான், வயிற்றில் இருக்கும் குழந்தை என்னுடையது, என்னை மீறி அப்படி உள்ளே என்ன தான் செய்வீர்கள்? நான் ஏன் வெளியே இருக்க வேண்டும்?  நான்  பார்த்திராததையா நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்..?!  என எந்த ஆணும் கேட்பதில்லை.  அது பொம்பளைங்க சமாச்சாரம் என அதற்கு சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்க வேண்டியது.

இப்படி உள்ள ஒரு சமூகத்தில் நிர்வாணம் என்பதும் ஒரு சாதாரண விஷயம், அது வெறும் anatomy மட்டுமே எனப் புரிய வைப்பது ரொம்பக் கடினம்.  குழந்தை முதலே அதைப் புரிய வைத்து பழக்கப் படுத்த வேண்டும்.

வினுப்ரியா விஷயத்தில் பெற்றோர் மட்டும் அவருக்கு ஆறுதலாக இருந்திருந்தால் அல்ப ஆயுசில் அவரை இழந்திருப்பதை தடுத்திருந்திருக்கலாம்.

"எல்லாம் தனக்கு வர்ற வரைக்கும் மட்டுந்தான், நாளைக்கு உங்க வீட்ல உள்ள ஒரு பெண்ணுக்கு இப்படி நடந்தா நீங்களும் இப்படித்தான் இருப்பீர்களா?  கோவமே வராதா?"  என ஆறாவது அறிவை கொஞ்சம் கூட உபயோகப் படுத்தாமல் யாராவது கேட்டாலும், அவர்களுக்கான பதில், "ஆம்... உயிர் முக்கியம்..."

குழந்தைகளுடன் நட்புடன் இருங்கள், அவர்களின் நம்பிக்கையை சம்பாதியுங்கள், குழந்தைகளை நம்புங்கள்...!!

 

Saturday, 2 July 2016

2016 ஜுன் விருதுகள்

ரெண்டு மாசமா எலெக்சன் மும்முரத்துல எந்த சேனலும் யாருக்கும் விருது குடுக்காததுனால ஜுன்2016 மாசத்துக்குண்டான விருதுகளை நாமளே குடுத்துடலாம்னு முடிவு பண்ணி...

சிறந்த பேட்டி முதல்வன் அர்ஜுன் விருது: அறுணா கோயிந்தசாமி (லீக் ஆன ஆன்ஸர் பேப்பர்ல இருந்து கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணதுக்கு)


சிறந்த மனிதநேய அன்னை தெரஸா விருது:  அமித் ஷா & டமில் மீசிக் சவுண்டு (தலித் வீடுகளுக்கு சென்று சாப்பிடுங்கள் என கூவினத்துக்கு)


சிறந்த ராஜதந்திரி சாணக்யா விருது: வைகோ (இதை அவரே கேட்டுக் கொண்டதிற்கு இணங்க..)


சிறந்த கைதட்டல் அதுஇதுஎது மா.க.ப. விருது: மேடிசன் ஸ்க்கொயர் மக்கள் (35 நிமிசத்துல 72 தபா எழுந்து எழுந்து தட்டினத்துக்காக)


சிறந்த மிரட்டல் புலிகேசி விருது:  மோடிஜீ ("30-ம் தேதிக்குள்ள கருப்புப் பணம் வெளிய வரலைன்னா...________" )


சிறந்த யோகா குரு துரோணாச்சாரி விருது:  பிபாஷா பாஸு (ஜஸ்ட் ஒன்ர அவர்ல ஒன்ர கோடி)


சிறந்த மாணவன் அர்ஜுனா விருது: பிபாஷா பாஸுக்கு பின்னாடி  உட்கார்ந்திருந்தவர்.


சிறந்த ஆராய்ச்சியாளர் மேன்Vsவைல்ட் விருது:  கா.வி.க.கு.பரம்பரை (வள்ளல் வம்சம் என்பதால்தான் வெள்ளைக்காரனே வங்கியில் கவுன்ட்டர் என பெயரிட்டான்)


சிறந்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு விருது:  பாபா ராம்தேவ் (மாட்டு மூத்திரத்தில் 24 காரட் தங்கம் கண்டு பிடிப்பு)


சிறந்த ஹிந்தி பிரச்சார சுனா சானா விருது: எஸ்.வீ.சேகர் (ஹிந்தி தெரிஞ்சா தான் தோசை சாப்பிட முடியும் moment)


சிறந்த துப்பு துலக்கி ஷெர்லக் ஹோம்ஸ் விருது:  why.ஜி.மகேந்திரன்


சிறந்த ஒசந்த ஜாதி காஞ்சிபுரம் காமகோட்டியான் விருது: why.ஜி.மகேந்திரன்

  

சிறந்த ஒளிப்பதிவு ராஜ பார்வை விருது:  நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் CCTV (இருக்கு ஆனா இல்ல...)


சிறந்த போலீஸ் எஸ்.பி.சவுத்ரி விருது:  நுங்கம்பாக்கம் ரயில்வே போலீஸ்


சிறந்த கொள்கைப் போராளி கத்தி கதிரேசன் விருது:  செந்தமிழன் சீமான் (நுங்கம்பாக்கம் சிலோன் எல்லைக்குள்ள வராது ஒறவுகளே)

Saturday, 25 June 2016

தூங்கிப் போன சென்சார் தம்பி

"விபச்சார விளம்பரம் வந்தால் வியப்படையாதீர்" என சமீபத்தில் முத்துநிலவன் அவர்கள் எழுதிய பதிவில் நண்பர் விசு இட்ட மறுமொழியும், நம்பள்கி தளத்தில் அவ்வப் போது தொடர்ந்து வரும் இந்திய கலாச்சார பதிவுகளும் முன்னுரையாக...

சமீபத்துல கூட Udta Punjab படத்துக்கு சென்சார் ஏகப்பட்ட கெடுபிடி விதிச்சு அங்க வெட்டு, இங்க வெட்டுன்னு அறிவுறுத்த, கோர்ட்-லியோ "ரேட்டிங் கொடுக்கிறது மட்டுந்தான் உன் வேலை, வெட்டு-குத்து எல்லாம் நாங்க பாத்துக்குறோம்"ன்னு தீர்ப்பளித்து ஒரு வழியா படம் வெளிய வந்துடுச்சு.  படத்தையும் பாத்தாச்சு.   படத்தில் சகட்டுமேனிக்கு வரும் கெட்ட வார்த்தைகளுக்காகவும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் போதை மருந்து உட்கொள்வதை காட்டியதற்காகவும் "A" ரேட்டிங் கொடுக்கப் பட்டிருக்கலாம்.  ஆம்... 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு இப்படம் உகந்ததல்ல தான்.

இதே சென்சார் போர்டுதான் 1983-ல தூங்காதே தம்பி தூங்காதே-ன்னு ஒரு படத்த குழந்தை முதல் குடுகுடு கிழவி வரை அனைவரும் குடும்பத்துடன் கண்டு களிக்கலாம் என அனுமதி கொடுத்துள்ளது.  படத்தில் "சும்மா நிக்காதீங்க, நான் சொல்லும் படி வெக்காதீங்க..."ன்னு நீளமான ஆழமான கருத்துள்ள ஒரு பாடல்.  முதல்ல அதை ஒரு தபா நல்லா பாத்துருவோம்.
பாட்டுல நாயகனும் நாயகியும் குடுக்கிற மூவ்மென்ட், 'மானாட மயிலாட' 'சோடி நம்பரு' எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுருச்சு..., அதுலயும் குறிப்பா ஒளிஞ்சிருந்து பாக்கும் நாயகியின் தோழிகள் உணர்ச்சிவசப்பட்டு ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்வது கலாச்சரத்தின் உச்சம்.

அப்போ சினிமா தியேட்டருக்கு போய் தான் இந்த குடும்ப நாட்டியத்தை பார்த்து பரவச நிலையை அடைய வேண்டிய சூழல் இருந்தது.  ஆனா இப்போ அப்பப்போ ஏதாவதொரு ம்யூசிக் சேன்னல்ல அடிக்கடி போட்டுறாங்க, அதுவும் மிட்நைட் மசாலாவுல எல்லாம் இல்லாம நினைச்ச நேரத்துல ஓட்டி விடுறாங்க... அனைத்தும் சென்சார் அனுமதியுடன்...

இவங்கதான் Udta Punjab-ம், ஆரண்ய காண்டமும், புதுப்பேட்டையும் சமூகச் சீரழிவை தூக்கிப் பிடிக்கின்றனன்னு, வெட்டுக்களும், 'A" ரேட்டிங்கும் தருகிறவர்கள்.

சிறுவயதில் "ராணி"யோ, "குங்கும"மோ ஏதோவொரு பத்திரிக்கையில் நடிகை ஸ்ரீப்ரியாவின் ஒரு பேட்டியை படித்த போது அதிலொரு கேள்வி,
"ஐரோப்பாவில் உங்களை வெட்கப் பட வைத்த விஷயம்?"
அவரின் பதில், "தெருவில் முத்தமிடுவது...!!"
ம்ஹ்ம்... வெள்ளைக்காரன் இந்தப் பாட்ட பாத்திருந்தான்னா நம்மாளுகளுக்கு விஸா குடுக்கிறதுக்கு ரொம்ப யோசித்திருப்பான்...!!  பின்ன பட்டப்பகல்ல சின்ன புள்ளைங்க வந்து போற பார்க்குல ஜலபுலஜன்க்ஸ் பண்றவங்க நம்மூருக்கு வந்தா நம்ம கலாச்சாரம் என்ன ஆகித் தொலையுமோன்னு அவன் யோசித்திருப்பான்ல...!!

பைனல் பஞ்ச்:  "ஆனா ஒன்னு... தூங்காதே தம்பி தூங்காதே..."ன்னு கரெக்ட்டா பேரு வெச்சுருக்கான்யா..."

சப்போர்டிவ் டாக்குமென்ட் :
 
 Monday, 20 June 2016

RIP சரித்திரம்

அதிர்ச்சி, கவலை, ஆத்திரம் இதெல்லாம் ஒன்னா வரணும்னா..., மேற்கொண்டு படிங்க...

பொதுவாக அந்தந்த கட்சியை அல்லது ஜாதியை சேர்ந்த பத்திரிக்கையோ, டிவியோ அவங்களுக்கு ஏத்தா மாதிரி செய்திகளை போட்டு நமக்கு நாமேன்னு சொறிஞ்சிக்கிறது இப்போ நமக்கெல்லாம் பழகிப் போச்சு.  அவங்கவங்களுக்கு புடிச்ச நாலாவது தூணை போய் கட்டி புடிசிச்சுக்கலாம்.  ஆனா குழந்தைகளோட பாடத் திட்டத்துல அநியாயத்துக்கு அடிச்சு விட்டத சமீபத்துல படிக்க நேரயில தான் சத்தியமா எந்த மாதிரி நாட்டுல வாழுறோம்னு தோணுச்சு...!!

ஆறாம் வகுப்பிற்கான CBSE பாடப் புத்தகத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் ஏமாற்றுபவர்களாகவும், பொய் சொல்பவர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும், வாக்குத் தவறுபவர்களாகவும், தீய வார்த்தைகள் பேசுபவர்களாகவும், திருடுபவர்களாகவும், வன்முறையாளர்களாகவும், பாலியில் குற்றங்கள் செய்பவர்களாகவும் இருப்பார்கள் என குறிப்பிடப் பட்டுள்ளது.  கீழுள்ள link-ஐ சுட்டிப் பார்க்கவும்.

இப்போ இந்தக் குறிப்பை எழுதுனவன், அச்சிட்டவன், வெளியிட்டவன் எல்லாம் யாருன்னு ஆராயத் தேவையில்லை, அவனுங்க யாருன்னு எல்லோருக்கும் நல்லாவே தெரியும்.  அவனுங்கள திருப்பி நாண்டுக்கிட்டு சாகிற மாதிரி நாலு இல்ல, நானூறு கேள்வி கூட கேட்க முடியும்.  ஆனா, ஒட்டு மொத்த சமூகத்தின் மேலயும் இப்படியொரு அநியாயத்தை சுமத்தும் அதிகாரத்தைக் குடுத்த இந்த சிஸ்டத்தை அல்லது ஆட்சியை தேர்ந்தெடுத்த நம்மள என்ன சொல்றது?

குஜராத்திய பாடப் புத்தகத்தில் "Internal achievements of Nazism," என்ற தலைப்பில் "Hitler lent dignity and prestige to the German government within a short time, establishing a strong administrative set-up."என சொல்லப் பட்டிருக்கிறதாம்.

செம காமெடி என்னான்னா, சைவம் மட்டுமே சாப்பிட்டு வந்து, பின் கற்பழிப்பு வழக்கில் கைதான ஜாமியார் ஆசாரம் பாபு ராஜஸ்தானின் 3-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சிறந்த புனிதர்களில் ஒருவனாக காட்டப் பட்டிருக்கிறது.  கூடவே நம்ம ஜில்பா ஜெட்டிக்கு யோகா சொல்லிக் குடுத்த பாபா ராம் தேவும்...!!

குஜராத் பாடத்திட்டத்தில் மற்றுமொரு வரலாற்றுப்(!!) பதிவு.  "கடவுள் ரொட்டி சுடும் போது முதலில் வெந்தும் வேகாமலும் பொறந்தவன் வெள்ளைக்காரனாகவும் , அடுத்ததா கருகிப் போய் பொறந்தவன் கறுப்பர்கள்ன்னும் ஆகிடுகிச்சாம்.  முதல் ரெண்டு தவறுகளுக்கு அப்புறம் கரெக்ட்டா சுட்ட ரொட்டி இந்தியர்களாம்..."

The National Council of Educational Researchன்னு ஒன்னு இருக்காம், அது என்னமோ படிச்சவங்களுக்குத் தானே தெரியும் போல, அவங்க ஒரு மேட்டர் விட்டிருக்காங்க பாருங்க.., சோனியா காந்தி, பர்வேஸ் முஷாராஃப், ஜார்ஜ் புஷ், இவிங்கெல்லாம் மிகப் பெரும் தலைவர்களாம்...!!

அடுத்தது இன்னும் பயங்கரம், வாத்ஸாயனருக்கே அடுக்காது... 
"Lesbianism is a product of "unnaturally intense friendships... where outlets for a more normal sex drive do not exist" or even a "faulty environment" and claims that the "accompanying deep love... may lead to suspicion, jealousy, suicide or murder"
இது ஏதோ இஸ்கூலு புக்ல வந்துச்சான்னு நினைக்காதீங்க, AIIMS-யுடைய சிலபஸ்ல http://www.aiims.edu/aiims/academic/aiims-syllabus/Syllabus%20-%20MBBS.pdf, Forensic Medicine-ன்ற தலைப்புல இருக்கு... https://books.google.co.in/books?id=cLemGip2794C&pg=PA216&lpg=PA216&dq=tribadism+forensic+medicine+india&source=bl&ots=gS3OFioVZi&sig=PXrb6mnfQD-GZyiHqN4_hUAAd0I&hl=en&sa=X&ei=U5KSVb7AD8mwuATSk4DwAQ&ved=0CC8Q6AEwAw#v=onepage&q=tribadism%20forensic%20medicine%20india&f=true

மேலும் இதுபோன்ற தரித்திர, ஸ்லிப் ஆகிடுச்சு, சரித்திர நிகழ்வுகளுக்கு இந்த link-ல http://www.scoopwhoop.com/inothernews/indian-school-textbooks-contained-really-disturbing-things/ போய் பார்க்கலாம்.  கல்கி, சாண்டில்யனை எல்லாம் கலங்கடிக்கும் பல வரலாற்று குறிப்புகளை கண்டு குமுறலாம்...

இதில் பலதும் பழைய செய்திகள் என்றாலும் ஒட்டுமொத்தமாக தற்போது பார்க்க நேர்ந்ததால் இப்பதிவு.  அஞ்சு வருச ஆட்சி முடியங்காட்டியும், IAS, BSRB, கோன் பனேகா க்ரோர்பதி, LKG எல்லாத்துக்கும் இருந்துதான் கேள்விகள் கேப்பாய்ங்க போல..!!


Sunday, 12 June 2016

அறிந்தும் அறியாமலும் - 2

சில மாதங்களுக்கு முன் அறிந்தும் அறியாமலும் என்றொரு பதிவை எழுதியிருந்தேன்.  அதைப் படித்த சகபயணி என்ற பதிவர் ஓர் அழகிய நீண்ட பின்னூட்டமிட்டிருந்தார்.  மேலும் பாலியல் குறித்த தனது பதின்வயது அறியாமையையும் அனுபவங்களையும் அருமையாக  ஒரு பதிவாகவே எழுதியிருந்தார்.  என்ன காரணத்தாலோ அதை நீக்கி விட்டார்.  தொடர்ந்து மேலும் எழுதலாம் என எண்ணியதே காயத்ரி எழுதிய பீரியட்ஸ், மற்றும் சுய இன்பம் குறித்த இரண்டு பதிவுகளும் தான்.  அவசியம் படிக்கவும்.

வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நானும் மனைவியும் இது குறித்த எமது சிறுவயது நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தாலும், "அறிந்தும் அறியாமலும்" முதல் பாகத்தை படித்த பிறகு அம்மணி தன்னுடைய அனுபவங்களை ஒரே கோர்வையாக மீண்டும் விவரித்த போது..., பாட்டாவே படிச்சிடலாமான்னு தோன்றியதன் விளைவே இந்த 2-ம் பாகம்.

பருவமடைவது தொடர்பாக அவருக்கு எந்தவித அறிவூட்டல்களும் பெற்றோரோ, தோழிகளோ, ஆசிரியர்களோ சொல்லித் தரவில்லை.  பாட்டி மட்டும் அவ்வப்போது ஏதாவது கேட்டு வைக்க புரிந்தும் புரியாமலும் இருந்துத் தொலைத்திருக்கிறது.  உடன் படிப்பவர்கள் திடீரென நாலைந்து நாட்கள் லீவுக்குப் பிறகு வந்தால் மற்றவர்கள் குசுகுசுவென "யே.. அவ வயசுக்கு வந்துட்டாடி.." என்ற பேச்சைத் தவிர வேறேதும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.

ஒரு விடுமுறை நாளில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உள்ளாடை நனைய திகீரென்றாயிருக்கிறது.  முதலில் பயம்.., பின் ரத்தம் எங்கிருந்து வருகிறது என்ற குழப்பம்.., அது தெரிந்ததும் மேலும் அதிக பயம்..!!

வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லத் தயங்கி தானே கழுவி சுத்தம் செய்து உள்ளாடையை குப்பையில் வீசியிருக்கிறார்.  மனதில் பல சந்தேகங்கள்...
பூச்சி ஏதும் கடித்திருக்குமா?
புற்று நோயாக இருக்குமோ? (அதுக்கு வாயில தானே ரத்தம் வரும்!!)
உடலில் சாத்தான் புகுந்திருக்குமோ! (இயேசுவின் ரத்தம் ஜெயம்!!)
தொடர்ந்து ரத்தம் வெளியேறினால் செத்துப் போய் விடுவோமோ?!
வயிற்று வலியினூடே அரைத்தூக்கத்தில் இரவு கழிந்து விடிந்து பார்த்தால் மீண்டும் உடையெல்லாம் ரத்தம்... மறுபடியும் துணியை குப்பையில் வீசியிருக்கிறார்.

இரண்டு நாட்களில் உபத்திரவம் தொலைந்தாலும் பயம், பதட்டம் எல்லாம் நீங்கி சகஜ நிலைக்குத் திரும்ப ஒரு வாரம் ஆகியிருக்கிறது.  மீண்டும் பள்ளி, தோழிகள், விளையாட்டு எனக் கழிய சரியாக 28 நாட்கள் கழித்து மீண்டும் அதே அனுபவம்.  இம்முறை அழுக்குத்  துணியோடு சேர்த்துப் போடப்பட்ட ரத்தக்கறை துணியை வேலைக்காரம்மா பார்த்து விட, தினத்தந்தியில் போடாதது ஒன்று தான் குறை.

கவனிப்புன்னா சும்மா அப்படியொரு கவனிப்பு அடுத்து மூன்று நாட்களுக்கு.., அத்தைகள், சித்திகள், பெரியம்மாக்கள், அக்காள்கள் என ஆளாளுக்கு லீவு போட்டுட்டு கண்டதையும் திங்கடிக்க செய்திருக்கிறார்கள்.  இதனிடையே அவருக்கு கொடுக்கப் பட்ட விளக்கம், "நீ பெரியவளாயிட்ட, இனி மாசா மாசம் இப்படித்தான் ஆகும், அதுக்கு நாப்கின் வாங்கி வெச்சுக்கணும்.., அந்த நாள் வந்துச்சினா ஸ்கூலுக்கு கையோட நாப்கின்ன கொண்டு போயிடணும், பசங்களோட விளயடாக் கூடாது, ரோட்ல பசங்களோட நின்னு பேசக் கூடாது"ன்னு பல உபதேசங்கள் இருந்தாலும் ஜெர்க் ஆன ஒரே விஷயம், "இந்த கொடுமை மாதமொருமுறை  நடக்கும்" என்பது தான்.

வீட்ல திருவிழா முடிஞ்சு ஒரு வாரம் கழித்து ஸ்கூலுக்கு போகும் போதே வெட்கம் பிடுங்கித் தின்றிருக்கிறது.  நமட்டுச் சிரிப்புடன் மிஸ் அனுமதிக்க, வயசுக்கு வந்த புள்ளைகள் வெல்கம் டு த க்ளப் என்பது போல் பார்க்க, வராத புள்ளைகள் "யே... அவ வயசுக்கு வந்துட்டாடி.."  என குசுகுசுப்பைத் தொடர்ந்தனர்.

பின்னாளில் ஒரு நாள் தன்னுடைய கல்லூரிக் காலத்தில் ஒரு மாலை வேளையில் என்னைச் சந்திக்க நேர்ந்து (அது ஒரு தனிக்கதை) பின்பு மையலுக்கும் உடன்போக்கிற்கும் இடைப் பட்ட ஒரு காலத்தில் தன் அக்காவிடம் சென்று, "முத்தமிட்டால் குழந்தை பிறக்குமா?" எனக் கேட்டுள்ளார்.
google-ம் நண்பர்களும் நமக்கு சொல்லாத, ஆனால் மிக அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் sex.  குழந்தை பெற்றுக் கொண்டு மீசையை முறுக்கி விட்டு சந்ததியை உருவாக்க மட்டுமன்றி மனமும் உடலும் நலமாக நார்மலாக இருக்க முறையான sex தேவைப் படுகிறது.  தம்பதிகள் சராசரியாக  வாரம் ஒரு முறையாவது வைத்துக் கொள்வது அவசியமாகிறது, அதிகபட்சமாக எத்தனை முறை வைத்துக் கொள்ளலாம் என்பது அவரவர் சொந்த விருப்பம், உடல் தகுதி பொறுத்து அமையும்.  சேலம் சி.சி.வைத்தியர் சொல்வது போல எந்த சக்தியும் விரயமாகப் போவதில்லை...

கருவுருதலை இன்னமும் பலர் கடவுளின் செயல் என நினைத்துக் கொண்டிருப்பதும், குழந்தை வரம் என அதை புனிதமாக்குவதும், தாமதமானால் சொந்தக்காரர்களின் கேள்விகளை எதிர்கொள்ள தயங்குவதும் போன்ற அபத்தங்களை உடனடியாக தூக்கி கடாசி விட்டு உடலுறவு, கருவுறுதல், குழந்தை பெறுதல் அனைத்தும் அறிவியல் சார்ந்த விஷயங்கள் என்ற mind set நமக்கு ஏற்படுத்திக் கொள்வதோடன்றி குழந்தைகளுக்கும் காலப் போக்கில் சொல்லித் தருதல் அவசியப் படுகிறது.

நல்ல ஆரோக்கியமான திருப்தியான உடலுறவுக்கு அர்னால்ட், ஏஞ்சலினா போல் இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல.  உடலை ரொம்ப போட்டு வருத்திக் கொள்வதோ வருந்திக் கொள்வதோ தேவையல்ல.  நல்ல உணவு, கொஞ்சம் உடற்பயிற்சி மற்றும் நல்ல தூக்கம் இருந்தால் போதுமானது.  படுக்கையில் தேவைக்கேற்றபடி, விருப்பத்திற்கேற்றபடி மாறிக் கொள்வதோ ஏற்றுக் கொள்வதோ மிக நன்று.  உடலுறவு என்பது சுத்தத்தைப் பற்றியது அல்ல, பிறப்புறுப்பில் உள்ள கிருமிகளைவிட பலமடங்கு மோசமான அதிகமான கிருமிகள் நமது வாயில் உள்ளன.  இருப்பினும் குளித்துவிட்டு மெலிதான deo spray போட்டுக் கொண்டு மெல்லிய வெளிச்சத்தில் ஈடுபடுவது நலம்.  ஐம்புலன்களும் திருப்தி அடைய வேண்டுமல்லவா..!!

ஆரம்பிக்கும் முன் உணர வேண்டிய முதல் சமாச்சாரம் சாதாரண தொடுதலுக்கும் கலவிக்குண்டான சீண்டலுக்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்திருக்க வேண்டும்.  சிலருக்கு பிடித்திருக்கும், சிலருக்கு பிடிக்காது.  உடற்கூற்றின் படி ஆண்களை விட பெண்களுக்கு அந்த நேரத்தில் சீண்டல்கள் நிரம்பப் பிடிக்கும்.  வருந்தத் தக்க ஒரு விஷயம் என்னன்னா பெரும்பாலான தம்பதிகள் உடலுறவைப் பற்றி நிறைய பேசுவதே இல்லை.  இந்த மேட்டர்ல நேரான நேர்மையான விருப்பு வெறுப்புக்களை பேசலானா வேற எதுல பெருசா பேசித் தீத்துடுவீங்க..!?

திருமணம் ஆகாதவர்கள் என்றால் உங்கள் பார்ட்னரை sex-க்கு வற்புறுத்துவதோ, அவர்களை உணர்வுப் பூர்வமாக blackmail செய்வதோ வேண்டாம்.  அது உங்களைப் பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.  நீங்கள் ஒரு அன்புக்குரியவராக அல்லாமல் அலைச்சல் பார்ட்டியாக அர்த்தம் கொள்ளப் படலாம்.  எல்லாவற்றிலும் போல sex-லும் அடுத்தவர்களின் உணர்வுக்கே முதலிடம் அளிக்கப்பட வேண்டும்.

உங்கள் பார்ட்னர் பொறாமைப் படவேண்டும் என்பதற்காக அடுத்தவர்களைப் பார்த்து கமென்ட் அடிக்க வேண்டாம், மிக முட்டாள்த்தனமான செயல் அது.  sex-ம், உறவும் சேர்ந்திருத்தலும் அவரவர் அணுகுமுறையைப் பொருத்தது.  உங்கள் திருப்தியையும் உங்கள் பார்ட்னரின் ஆசைகளையும் செயலில் இறங்கும் முன் பேசி, புரிந்து தீர்த்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுது இதைப் பற்றி நாம் நம் குழந்தைகளிடம் பேசப் போகிறோம்? அவர்களுடைய வயதையும் பக்குவத்தையும் பொருத்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் பேசுவோம்.  எடுத்த எடுப்பில் அனைத்தையும் கொட்டிவிடப் போவதில்லை, சிறு சிறு விஷயங்களில் இருந்து ஆரம்பிக்கலாம்..!!
 தீவிரவாதம், குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்முறை, இன்டர்நெட் பலான படங்கள் போன்றவற்றை ஒரே நாளில் ஒழித்துவிட முடியாது.  குழந்தைகளை பாதுகாப்பாக இருக்கச் சொல்லி கற்றுத் தருவதுதான் பெற்றோர் கடமை.  அதற்காக ஒன்னுமே தெரியாமல் வளர்ப்பதும் ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது.  அப்பாவியாக இருந்து விடாமல் அந்தந்த பருவ வயதிற்கேற்ற விளையாட்டு, வேடிக்கைகளுடன் அவர்கள் வளர்வதே சிறந்தது.

உங்கள் பதின்ம வயது மகனோ மகளோ நண்பர்களுடன் வெளியே செல்கிறேன் என்றால், அனுமதியுங்கள்.  இளவயதில் நாலு இடம் போய் வந்து பழகுவது பின்னாளில் அவர்களுக்கு வரும் எந்தவொரு சங்கடத்தையும் சமாளிக்க உதவும்.  தேவையான அளவு பணம் கொடுத்து பாதுகாப்பாக இருக்கச் சொல்லி அறிவுறுத்தி அனுப்பி வைக்கலாம்.  அதை விடுத்து "உன்னுடன் யார் யாரெல்லாம் வர்றாங்க, அதுல எத்தன பசங்க, எத்தன பொண்ணுங்க" இது மாதிரியெல்லாம் கேட்டா அவர்களின் மூளை உடனடியாக தற்காப்பு mode-ல் வேலை செய்து பொய் பேசி சமாளிக்கலாம்.  அல்லது பெற்றோர் நம்மை நம்பவில்லையோ என்ற எண்ணம் தோன்றலாம்..!!

குழந்தைகளை நம்புங்கள், அவர்கள் தன்னம்பிக்கையுடன் வளர்வார்கள்.  குழந்தைகளுக்கு நாம் அருகில் இருத்தல் பிடிக்கும் அவர்களை நாம் ஊடுருவவது தெரியாமல் இருக்கும் வரை...!!  ஒவ்வொரு குழந்தைக்கும் "தான், தன், சுய" என ஒன்று தேவைப் படுகிறது.  பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் பெற்றோர் தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று அலுத்துக் கொள்வது இதற்காகத்தான்.  தலைமுறை இடைவெளி என்பதை மாற்ற இயலாது.  உதாரணமாக அவர்களுக்கு வரும் பார்சலை பிரித்தல், அவர்கள் போனை எடுத்து நோண்டுதல் போன்ற வேலைகளை செய்தால் நம்மை தாண்டிச் செல்ல என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.  குழந்தைகளுடன் நட்புடன் இருங்கள், அவர்களின் நம்பிக்கையை சம்பாதியுங்கள், குழந்தைகளை நம்புங்கள்...!!

முடிந்தால் பிறிதொரு சமயம் "அறிந்தும் அறியாமலும் -3"ல் சந்திக்கலாம்.

அன்புடன்
மலர்வண்ணன்

Monday, 6 June 2016

கொங்குநாட்டு என்'கவுன்டர்' ஏகாம்பரங்கள்...

தேர்தல் முடிந்து சீமானையும், வைகோவையும், கேப்டனையும் எவ்ளோ முடியுமோ அவ்ளோ ஓட்டி facebook, twitter, insta, extra மற்றும் இன்னபிற வலைதள ஒறவுகள் சற்றே இளைப்பாறி அடுத்த இரைக்காக காத்திருந்த அந்த அற்புத தருணத்தில் தானாகவே வந்து சிக்கின கொங்குநாட்டு ஒறவுகள்.

சாம்பிள் 1:
வெண்ணீராடை மூர்த்தி சொல்றாப்பல "பாத்த உடனேயே சும்மா குபீர்னு கெளப்பிக்கிட்டு வரும்"..... சிரிப்பு...!!
அதுவும் ஒரு கரீபியனை ஊரு, கிராமம், சாதி உட்பிரிவு முதற்கொண்டு போட்ட இந்த பூகோள புல்பாயில ஏதோ போனா போகுதுன்னு மூத்திர சந்துல வெச்சு ஒரு முப்பது பேரு மூணு நாளு மட்டும் வெச்சிருந்து அடிச்சிட்டு விட்டுட்டாங்க...  ஆனா அது எவ்ளோ பெரிய தப்புன்னு அப்புறந்தான் தெரிஞ்சது...

சாம்பிள்:2
வள்ளல் வம்சம்ன்றதக் கூட ஏதோ காட்டை வித்து கள்ளு குடிச்ச பரம்பரைன்னு பெருமையா சொல்லிக்கிறாங்களேன்னு சோடாவையும் ஜெலுசிலையும் சேத்து சாப்பிட்டு ஜீரணிச்சுக்கலாம்... ஆனா, திருப்பதில சந்திரபாபுநாயுடு லட்டுக்கு பதிலா ஜாங்கிரி குடுத்த கணக்கா, வெள்ளைக்காரனே வங்கியில "counter"ன்னு பேரு வெச்சான்னு வுட்டாங்க பாருங்க...

ஆதலால் ஒறவுகளே..., பரத்வெயிட் மற்றும் வங்கிக் கவுன்ட்டர் வரலாற்று உண்மைகளைத் தொடர்ந்து, கொங்கு மண்டல வருங்கால சந்ததியினருக்கு மேலும் பல சரித்திர ஆராய்ச்சிகளுக்கான குறியீடுகள்...!!

 • counteract - கவுண்டர்கள் நடிப்பில் சிறந்து விளங்கியதால் உருவான சொல்...
 • counterassault - அசால்ட்டாக காட்டை வித்து கள்ளு குடிச்ச கவுண்டன பாத்து சொன்ன வார்த்தை...
 • counterattack - புலியை முறத்தால் தாக்கிய கவுண்டப் பெண்மணியின் வீரம் செறிந்த குறிப்பேடு...
 • counterweight - டமில்நாட்ல எங்க போனாலும் கவுண்டன் தான் வெயிட்டு...
 • counterview - கவுண்டனின் பார்வையில்...!!
 • counterpart - பார்ட் பார்ட்டா வேல பாக்குறது கவுண்டர் மட்டுந்தான்...!!
 •  countercheck - கண்டறியும் கவுண்டர்கள்... 
 • counterfires - தீயா வேலை செய்யும் கவுண்டர்ஸ்...!! 
 • counters - கவுண்டர்கள்... 
 • counterpunch - பஞ்ச் டயலாக் பேச கவுண்டன விட்டா ஆள் கிடையாது...
 • counterplay - சின்னகவுண்டர் பம்பரம் தொடங்கி அனைத்து விளையாட்டிலும் சிறந்தவர்கள் கவுண்டர்களே...!!
 • counterfoil - புல்பாயில், ஆப்பாயில், கவுண்டர்பாயில்  அல்லாத்தையும் கண்டுபுடிச்சது கவுண்டர் தான் கண்ணு...
 • countersign - அந்தா தெரியுது பாரு, அதான் நம்ம கவுண்டரு கைகாட்டி...
 •  counterpose - சுபாஷ் சந்திர போஸ் கவுதாரி குல கவுண்டர் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?! 
 • counterpoint - ஹி... ஹி....!!


"எம் பேரு ஏகாம்பரம், எனக்கு இன்னொரு பேரு இருக்கு..., என்"கவுன்ட்டர்" ஏகாம்பரம்...!!

இது போன்ற மேலும் பல சுவையான அரிய தகவல்களுக்கு சுட்டவும்  வீரம்டா, மானம்டா, சாதிடா...!!Saturday, 26 March 2016

விசுAwesome - பதிவுகளைக் கடந்த பாசம்

கலாய்க்கப் போவது யாருன்னு உலகளாவிய மாபெரும் கார்ட்டூன் வசன போட்டியை பதிவர் விசுAwesome 03.03.2016 அன்று தனது blog-ல்அறிவித்து தமிழ் வலைப்பதிவர் உலகில் பெரும் பரபரப்பை(!) ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்ததே..!!

துளசிதரன் அவர்கள், முத்துநிலவன் அவர்கள், மதுரை தமிழன், பகவான்ஜி, ஸ்ரீராம், மூங்கில்காற்று மற்றும் பலரும் நகைச்சுவையுடனும் நய்யாண்டியுடனும் தங்கள் கமெண்ட்டுகளை அளித்தனர்.  ஆகோபித்த ஏகோபித்த ஒரு மனதாக அடியேன் போட்ட கமெண்ட்டுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து பிரசுரித்தார்.  கார்ட்டூனும் கமெண்ட்டும் கீழே பார்வைக்கு...
 
முடிவுகளை வெளியிட்ட லிங்க் http://vishcornelius.blogspot.com/2016/03/blog-post_9.html      

பின்பு என்னைத் தொடர்பு கொண்டு எனக்குப் பிடித்த ஹோட்டலில், தான் அறிவித்த பரிசுக்குண்டான couponகளை வாங்கி எனக்கு விரைவில் கிடைக்கப் பெறச் செய்தார்.

மீன், இறால், கோழி, மட்டன், காளான், பன்னீர், அன்னாசி, உருளை, மற்றும்பல என grilled starterகள் அணிவகுக்க வேட்டை தொடங்கியது Barbeque Nation-ல்...

ராசாத்திகள் இருவரும் எதையும் ஒதுக்காமல் அனைத்திலும் படையெடுத்தனர்.  தொடாத இரண்டே dishகள் சோறும் பருப்பும்..!! பின்னே அதை சாப்பிடவா ஹோட்டலுக்கு போகணும்?  இதுல, நான் வாங்கின Bloody Mary-யை சுவைச்சுப் பாக்கணும்னு சின்னவ பயங்கர அடம்..!!

பரிசளித்துப் பாராட்டி குடும்பத்துடன் ஓர் இரவு உணவை மகிழ்ச்சியுடன் கொண்டாட வைத்த விசுவிற்கும், வாழ்த்திய அனைத்து சக பதிவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்த்தது மீரா செல்வகுமாரின், "டேய் ...அத விடுங்கடா.. அது செத்தவங்களை உட்கார வைக்கிறதுக்கு வச்சுருக்கோம் ..."
மற்றும் பழநிவேலுவின், "அம்மாவின் ஆணை வரும் வரை நான் இப்படி பிடித்துக் கொண்டு தான் நிற்பேன். அதில் உட்கார மாட்டேன்" என்ற இரண்டு கமெண்ட்டுகளும் தான்.

விசுவின் சார்பாக பரிசுக் கூப்பன்களை பெற்று, என்னைத் தொடர்பு கொண்டு நேரில் வந்து அளித்தவர் http://thillaiakathuchronicles.blogspot.com பதிவர்களில் ஒருவரான கீதா..!!  நன்றி கீதா!! தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

மாதமொருமுறை இதைப் போன்ற போட்டிகளை நடத்தி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் குடும்பத்துடனான ஒரு மகிழ்வான தருணத்தை ஏற்படுத்தித் தரப் போவதாக விசு சொல்லியிருக்கிறார்.  பாராட்டுக்கள் விசு, you are really awesome!!

அன்புடன்
மலர்வண்ணன்