Saturday, 26 March 2016

விசுAwesome - பதிவுகளைக் கடந்த பாசம்

கலாய்க்கப் போவது யாருன்னு உலகளாவிய மாபெரும் கார்ட்டூன் வசன போட்டியை பதிவர் விசுAwesome 03.03.2016 அன்று தனது blog-ல்அறிவித்து தமிழ் வலைப்பதிவர் உலகில் பெரும் பரபரப்பை(!) ஏற்படுத்தியது நாம் அனைவரும் அறிந்ததே..!!

துளசிதரன் அவர்கள், முத்துநிலவன் அவர்கள், மதுரை தமிழன், பகவான்ஜி, ஸ்ரீராம், மூங்கில்காற்று மற்றும் பலரும் நகைச்சுவையுடனும் நய்யாண்டியுடனும் தங்கள் கமெண்ட்டுகளை அளித்தனர்.  ஆகோபித்த ஏகோபித்த ஒரு மனதாக அடியேன் போட்ட கமெண்ட்டுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்து பிரசுரித்தார்.  கார்ட்டூனும் கமெண்ட்டும் கீழே பார்வைக்கு...
 
முடிவுகளை வெளியிட்ட லிங்க் http://vishcornelius.blogspot.com/2016/03/blog-post_9.html      

பின்பு என்னைத் தொடர்பு கொண்டு எனக்குப் பிடித்த ஹோட்டலில், தான் அறிவித்த பரிசுக்குண்டான couponகளை வாங்கி எனக்கு விரைவில் கிடைக்கப் பெறச் செய்தார்.

மீன், இறால், கோழி, மட்டன், காளான், பன்னீர், அன்னாசி, உருளை, மற்றும்பல என grilled starterகள் அணிவகுக்க வேட்டை தொடங்கியது Barbeque Nation-ல்...

ராசாத்திகள் இருவரும் எதையும் ஒதுக்காமல் அனைத்திலும் படையெடுத்தனர்.  தொடாத இரண்டே dishகள் சோறும் பருப்பும்..!! பின்னே அதை சாப்பிடவா ஹோட்டலுக்கு போகணும்?  இதுல, நான் வாங்கின Bloody Mary-யை சுவைச்சுப் பாக்கணும்னு சின்னவ பயங்கர அடம்..!!

பரிசளித்துப் பாராட்டி குடும்பத்துடன் ஓர் இரவு உணவை மகிழ்ச்சியுடன் கொண்டாட வைத்த விசுவிற்கும், வாழ்த்திய அனைத்து சக பதிவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பரிசு கிடைக்கும் என நான் எதிர்பார்த்தது மீரா செல்வகுமாரின், "டேய் ...அத விடுங்கடா.. அது செத்தவங்களை உட்கார வைக்கிறதுக்கு வச்சுருக்கோம் ..."
மற்றும் பழநிவேலுவின், "அம்மாவின் ஆணை வரும் வரை நான் இப்படி பிடித்துக் கொண்டு தான் நிற்பேன். அதில் உட்கார மாட்டேன்" என்ற இரண்டு கமெண்ட்டுகளும் தான்.

விசுவின் சார்பாக பரிசுக் கூப்பன்களை பெற்று, என்னைத் தொடர்பு கொண்டு நேரில் வந்து அளித்தவர் http://thillaiakathuchronicles.blogspot.com பதிவர்களில் ஒருவரான கீதா..!!  நன்றி கீதா!! தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...

மாதமொருமுறை இதைப் போன்ற போட்டிகளை நடத்தி ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் குடும்பத்துடனான ஒரு மகிழ்வான தருணத்தை ஏற்படுத்தித் தரப் போவதாக விசு சொல்லியிருக்கிறார்.  பாராட்டுக்கள் விசு, you are really awesome!!

அன்புடன்
மலர்வண்ணன்


14 comments :

 1. வாழ்த்துக்கள் மலர். அம்மணியும் ராசாதிக்களும் தாங்களும் நல்லதோர் நேரத்தை கழித்தீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சியுட்றேன். இந்த போட்டியின் நோக்கமே அது தான். அது சரி.. பரிசு தொகை உணவிற்கு மட்டும் தானே.. "Bloody Mary" எங்கே இருந்து வந்தது. கன்புயுசன்...!

  ReplyDelete
  Replies
  1. அது ச்சும்மா ஒரு கிளுகிளுப்புக்கு... கண்ணு முன்னால சுட சுட ஏகப்பட்ட grilled varieties கண்டதும் சும்மா இருக்க முடியல!!

   Delete
 2. உங்கள் பங்களிப்பு கருத்து என்னை மிகவும் கவர்ந்தது...விசு அவர்களிடம் மனம்திறந்து சொன்னேன் மிகச்சரியான தேர்வு என...

  அப்புறம், என்னுடைய கருத்தையும் உங்கள் கவனத்தை கவர்ந்ததாய் எழுதியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி....
  அதனால் என்ன.. சென்னை வரும்போது மீண்டுமொருமுறை சாப்பிடப்போகலாம்....
  நன்றி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி...
   நீங்கள் அடுத்தமுறை சென்னை வரும்போது நிச்சயம் சந்திப்போம்

   Delete
 3. பரிசு பெற்றதும் அல்லாமல் அதையும் பதிவாக்கி தந்தமைக்கு நன்றி.. இடு போட்டி வைத்தவற்கு நிச்சயம் உற்சாகம் தரும் என்பதில் சந்தேகம் இல்லை,

  ReplyDelete
  Replies
  1. வாங்க மதுர...
   வழிமொழிகிறேன்...

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. ஹை மலர் ஸாரி ஃபார் த டிலே!! நீங்கள் சென்னையில் இருந்தும் தாங்க்ஸ் டு விசு உங்களை நேரில் சந்தித்ததற்கு மிகவும் மகிழ்ச்சி.
  நீங்கள் முதலில் ஆதம்பாக்கத்தில் இருந்ததாகச் சொன்னதும்..ஆஹா நான் எப்படி மறந்தே உங்கள் பாம்புப் பதிவை. உங்கள் விருந்தாளியாக ஆதம்பாக்கத்தில் வந்தாரே நகைச்சுவையாக எழுதிய பதிவும் அதற்கு நாங்கள் இட்ட கருத்தும் நினைவுக்கு வந்தது.

  வாழ்த்துகள் மலர். உங்கள் கருத்தை மிகவும் ரசித்தோம். இன்ஃபேக்ட் விசுகிட்ட கூட சொன்ன நினைவு...மலர் வந்தார்னா அவரு செமையா கமென்ட் அடிப்பாரு அப்படினு...ஸோ யு ப்ரூவ்ட் இட்.

  நல்லா எஞ்சாய் பண்ணீங்க போல!! சூப்பர். உங்கள் மனைவியை எங்கோ பார்த்தது போன்ற நல்ல பரிச்சயமானவராகத் தெரிகிறார். ராசாத்திகளும் நல்லா எஞ்சாய் செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

  பாராட்டுகள்! வாழ்த்துகள் மலர்!

  உங்கள் பதிவு போட்டியில் பங்கு பெறும் அனைவருக்கும் உற்சாகம் தரும். போட்டி நடத்தும் விசுவிற்கும் வாழ்த்துகள்! அவர் ரொம்ப மகிழ்ச்சியடைந்தார்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதா
   மிக்க மகிழ்ச்சி
   மீண்டும் சந்திப்போம்

   Delete
 6. இப்பரிசு ஒரு தொடக்கமாக அமைந்து, தாங்கள் மேன்மேலும் பல உயரங்கள் தொட வாழ்த்துகிறேன்.

  தொடருவேன்...

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
  http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  ReplyDelete
  Replies
  1. நன்றி...
   உமது பயணக் கட்டுரைகள் அருமை.., ரசித்தேன்

   Delete