Thursday, 17 March 2016

வீரம்டா, மானம்டா, சாதிடா...!!!

சேலத்தில் இருந்த மத்திய 90களின் காலம்... ஆதிதிராவிட நண்பனொருவன் காட்டை வித்து கள்ளு குடிச்ச சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை லவ்விக் கொண்டிருந்தான்.  அவள் கல்லூரி இரண்டாமாண்டிலும் இவன் டிகிரி முடித்து ஒரு சுமாரான வேலையிலும் இருந்தார்கள்.

வழக்கம் போல குடும்ப சர்வீசில் கை தேர்ந்த ஒரு பிரகஸ்பதி பொண்ணோட அப்பனுக்கு போட்டுக் கொடுத்து விட  பெரிய வில்லங்கமாகி பேய்மாமன், நாய்மாமன், நரிமாமன் சகிதம் பஞ்சாயத்து கூடி விட்டது.  "வீரம், மானம்,  சாதி, நாற பரம்பரை, நோண்ட பரம்பரை, நொங்கு பரம்பரை, வீச்சு, சங்கு..."ன்னு காதுல கொயியியியியிய்ன்னு சத்தம்.  பல மீசைகள் மீண்டும் மீண்டும் முறுக்கப் பட்டு தீபாவளி சங்குசக்கரம் போல் ஆகிவிட்டிருந்தன.   "பொண்ணை விட்ரு, இல்ல உசிரு இருக்காது..." என பகிரங்கமாக இவனுக்கு மிரட்டல் விடப் பட்டது.

பையன் வீட்டு பெரிசுகளும் நண்பர்களும் சேர்ந்து "காதல், உயிர், இதயம், ரோஜா, மனசு..." என பொங்கிக் கொண்டிருந்தவனின் அப்போதைய பொருளாதாரம், சமூக அந்தஸ்து, குடும்ப சூழல், திருமணத்திற்குப் பின்னான ஓட்டம் மற்றும் போராட்டம், உயிருக்குண்டான உத்திரவாதம் அனைத்தையும் எடுத்துக் கூறி "விட்ருடா..." எனக் கெஞ்ச விட்டு விட்டான்...

பொண்ணோட அப்பனும், பையனும் பஞ்சயத்துப் பெரிசுகள் சொன்னது போல எழுதிக் கொடுத்து விட்டு அண்ணாமலை ரஜினி-ராதாரவி போல் சென்றனர்.  இரு தரப்பைச் சேர்ந்த கரைவேட்டிகள் பலவும் வந்த வேலை வெற்றிகரமாக முடிந்ததையொட்டி ஒன்றாகக் கொண்டாடச் சென்றனர்.

ஓராண்டு கடந்து....

அதே பெண் மீண்டும் ஒரு காதலில் விழுந்தாள்.  இம்முறை விழுந்த இடம் ரொம்ப பெரிசு.  பையன் சேட்டு.  சேட்டு  என்றால் கூடையை தூக்கிட்டு பானி பூரி விற்கும் சேட்டோ, மிலிடரி ஹோட்டல் வாசலில் சிவப்பு துணியை வைத்து துடைத்து துடைத்து பீடா மடிக்கும் சேட்டோ இல்லை.  உயர் மற்றும் நடுத்தர வர்க்க சேலத்து மக்களில் நம்ம சேட்டோட கடைக்கு செல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.  அம்புட்டு வசதி.  இதுல நம்ம சேட்டு பயனோட சகோதரி மிக உயர்ந்த பதவியில் இருந்த அரசு அதிகாரி.

வழக்கம் போல குடும்ப சர்வீசில் கை தேர்ந்த அந்த பிரகஸ்பதி பொண்ணோட அப்பனுக்கு போட்டுக் கொடுத்து விட மீண்டும் மீசைகள் கூடின.  இம்முறை கூடிய இடம் பையனோட வீடு.  பையனின் சகோதரி நடுவில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து, "எப்போ கல்யாணம்?" என ஆரம்பித்தார்.  அதிமுக அமைச்சர்களுக்கு சற்றும் குறைவில்லாமல் பம்மிய மல்லுவேட்டிகள் தங்களுக்குள் சில நேரம் முணுமுணுத்துக் கொண்டன.  பின்னர் "ஒன்னுக்கு வருது"ன்னு சொல்லிக் கொண்டே ஒவ்வொருவராக வெளியேற ஆரம்பித்தனர்.

பையனின் சகோதரியே எல்லாவற்றையும் பேசி முடித்தார்.  "பொண்ணுக்கு நீங்க எதுவும் போட வேண்டாம், கல்யாண செலவு எல்லாத்தையும் நாங்களே பாத்துக்கிறோம், பொண்ணை மட்டும் அழைச்சிட்டு வந்தா போதும்.  பொண்ணை ஒளிச்சி வெச்சு வெளாடுறது, வேற கட்டாயக் கல்யாணம் பண்ணி வெக்கிறதுன்னு ஏதாவது நடந்துச்சினா ஒரு பய நடக்க முடியாது.."ன்னு சுருக்கமா முடிச்சிட்டார்.

"அமைதிப் படை"யில் சத்யராஜ் மணிவண்ணனின் முறுக்கு மீசையைப் பார்த்து, "ஏன்டா மணியா, கள்ளு குடிச்சி போட்டு வாய எப்படி தொடைப்ப?"ன்னு கேட்க,
அதற்கு மணிவண்ணன் தன்னுடைய மீசையை கீழ்ப்பக்கமாக நீவி விட்டு துடைத்துக் காட்டுவார்.
பின் சத்யராஜ், "இனிமே மீசைய இப்படியே வெச்சிருக்கணும், என்ன?" என சொல்ல, அதற்கு 
மண்டையை ஆட்டி விட்டு எழுந்துபோகும் மணிவண்ணனைப் போல நம்ம பெண்ணின் உறவுகள் அனைத்தையும் இறக்கி விட்டு எழுந்து சென்றனர்.

திருமணம் நடந்தது...

சேட்டு வழக்கப் படி சம்பிரதாயம், உடை, உணவு, ஆட்டம் பாட்டம் அனைத்தும்.  பெண் வீட்டார் மண்டபத்தில் வேலை செய்பவர்களைப் போல் ஆங்காங்கே ஓரிருவர் தென்பட்டனர்.  என்னதான் நகை நட்டுகளை அள்ளி போட்டுக் கொட்டு வந்திருந்தாலும் சேட்டு பெண்களின் சிவந்த நிறத்திலும் டிசைனர் புடைவைகளிலும், அவர்கள் பேசிய ஹிந்தியிலும், போட்ட ஆட்டத்திலும் இவர்கள் குறுகிப் போய் பம்மி விட்டனர்.

கை தேர்ந்த அந்த பிரகஸ்பதி எங்கேன்னு பாத்தா ஒரு ஓரமா அங்கிள் சர்விஸ் பண்ணிக் கொண்டிருந்தார்.

வீரம்டா, மானம்டா, சாதிடா...!!!!


29 comments :

 1. என்னனே எப்ப பாத்தாலும் நீட்டி எழுதுவீங்கனு பாத்தா படக்குனு முடிச்சுப்புடுறீக..

  ReplyDelete
  Replies
  1. அதான் கல்யாணம் முடிஞ்சிடுச்சே ஜானி...!!

   Delete
 2. //இந்த ஜாதி வேறுபாடும் சகிப்புத்தன்மையும் பணத்தைப் பொறுத்துதான் வேறுபடுது. இதே அந்த தலித் பையன் காரு, பங்களா பெரிய பிஸினஸ்னு பெரிய லெவல்ல இருந்துருந்தான்னா பொண்ணோட அப்பாவுக்கு அவன கொல்லனும்ங்குற எண்ணம் வந்திருக்குமான்னு சொல்ல முடியாது.// //இதையேதான் நானும் சொல்கிறேன்//
  இதையேதான் நானும் சொல்கிறேன்//
  இதையேதான் நானும் சொல்கிறேன்//
  karthik amma
  kalakarthik

  ReplyDelete
  Replies
  1. இளைச்சவன கண்டா முறுக்கிறதும்
   வலியவன கண்டா பம்முறதும் தான் வீரம்..!!

   Delete
 3. என்ன மலர்!
  நம்ம சொந்தம், ரத்தத்தின் ரத்தமான சேட்டு...காட்டை வித்து கள்ளு குடிச்ச சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டாரா!
  காதலுக்கு கண்ணில்லை என்பது தெரியும்; ஆனால், காதலுக்கு நிறம் முக்கியமாச்சே? எப்படி இந்த கலியுக தப்பு நடந்தது?

  ஒரு வேளை நம்ம சேட்டு என்ன கருப்பு சேட்டா?

  ReplyDelete
  Replies
  1. சேட்டு செவப்பு தான் வாத்யாரே..!!
   லவ்சுக்கு கலரா முக்கியம்?!

   வெறி கொண்டு வந்த புல்லட்டுகள் எஸ்டீம்களைக் கண்டு புஸ்ஸானது தான் இங்க கருப் பொருளே!!

   Delete
 4. பணத்தைக் கண்டு இந்த பிணங்களும் வாய் திறந்து கொண்டது போலிருக்கே :)

  ReplyDelete
  Replies
  1. நல்லா கவனிங்க.., வாயைப் பொளந்ததிற்கு காரணம் பணம் மட்டும் அல்ல...

   Delete
 5. நீங்க எழுதியிருப்பது உண்மையா? பிற்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்ணை, பிராமணர்களும், செட்டி பிள்ளைகளும், settu வீட்டு பிள்ளைகளும் லவ் பண்ணி கல்யாணம் செய்வதை நான் பார்த்ததே இல்லை.

  ReplyDelete
  Replies
  1. உண்மையா இருக்கப் போய் தானே எழுதினேன்...

   Delete
  2. பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண்களை கூட ஏற்றுக்கொள்வார்கள்.
   தலித் பெண்களை மற்ற ஆண்கள் காதலிப்பதே மிகவும் அரிது தான்.

   Delete
 6. இது மெய்யாலுமா மலர்??!! "ஒங்கொப்பராணை"நு சத்தியம் செய்வீங்களா மலர்..ஹஹஹஹ் ஆச்சரியம்தான்...சேட்டு வித் கள்ளுக் குடி...

  பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு பணம் என்றால் பத்தும் பறக்கும் சரி...சேட்டுகளுக்கு??!! இப்ப நல்லாருக்காங்களா மலர் அவங்க?!!

  வாழ்க வீரம் மானம் சாதி!!

  ReplyDelete
  Replies
  1. குறத்திய ஏமாற்றி காதல் நாடகம் செஞ்சு தள்ளிட்டுப் போன முப்பாட்டன் முருகன் மேல சத்தியமா நாஞ் சொல்றது உண்மைங்க சாமியோவ்..!!

   சம்பவத்துக்கு இரண்டு வருடங்கள் கழித்து நண்பன் ஒருவன் திருமணத்தில் இருவரையும் பார்த்தேன். பொண்ணு பக்கா சேட்டுவாக செட் ஆகி இருந்தார்.

   Delete
  2. [[பொண்ணு பக்கா சேட்டுவாக செட் ஆகி இருந்தார்.]]
   அபி சேட்டுக்கு கா பீபீ சுந்தர் ஹிந்தி மே போல்னா?

   Delete
  3. அச்சா ஜி... ரஹ தாத்தா ஜி...

   Delete
  4. பாயி! ரஹ தாத்தா நஹி ஹை! ஏ ரகு தாத்தா!

   Delete
  5. ப்ரணாம்..., பரந்த்து..., ஆயுஷ்மான்பவ...

   Delete
  6. சுக்லாம் பரதரம்!

   Delete
 7. சரியாகச்சொன்னீர்கள். இளைத்தவனிடம் தான் வீரம் தீரம் மானம் எல்லாம் காட்டப்படும்.
  வலுத்தவன் என்றால் எல்லாம் அடங்கிப்போய் விடும்.
  இதில் கொடுமை என்னவென்றால், மனு தர்மத்தின் படி எல்லா பயலுமே சூத்திரன் தான்.

  ReplyDelete
  Replies
  1. அந்த காலத்துல ஒரு ஊருல இருக்கிறவங்க எல்லாரும் கூடி ஒரு கூட்டம் நடத்துனாங்களாம். அப்போ அங்க இருந்த ஆண்டி ஒருத்தன் திடீர்னு ஒரு குசு விட்டானாம். அங்க இருந்த மத்தவனுங்க எல்லாம் "அடிடா, புடிடா, யார்ரா அவன்.."ன்னு அவன புடிச்சு தொரத்திட்டான்களாம்...
   கொஞ்ச நேரம் பொறுத்து பெருசா டர்ர்ர்ன்னு அரசன் ஒன்னு விட்டானாம். இவனுங்க எல்லாம் "அரோகரா... அரோகரா"ன்னு சொன்னானுங்களாம்...
   அம்புட்டுதானுங்க வீரம் தீரம் மானம் மயிரு மண்ணாங்கட்டி

   Delete
 8. நான் அறிந்தவரை எந்த பார்ப்பானும் சூத்திர பெண்ணை கல்யாணம் முடித்ததாக தெரியவில்லை. ஆனால் பணக்கார மற்றும் பதவியுலுள்ள சூத்திரனையும் பஞ்ச்சமனையும் பாப்பாத்தி கல்யாணம் செய்து கொண்டு அழகாக செட்டிலாகி விடுகின்றார்கள். அவர்கள் தெளிவாக தான் இருக்கிறார்கள் சரிதானே மலர் சார்.

  M. செய்யது
  துபாய்

  ReplyDelete
  Replies
  1. பல கேசுகளில் நீங்க சொன்னது சரிதான் பாய்...
   சில விதி-விலக்குகளும் உண்டு...

   Delete
 9. நடைமுறை உண்மைகள் நண்பரே
  தமிழ் மணம் 4

  ReplyDelete
  Replies
  1. வாக்கிற்கும் வருகைக்கும் நன்றி கில்லர்ஜி

   Delete
 10. பணம் பல குறைகளையும் நிறைவாக்கும் குணம் கொண்டது .

  ReplyDelete
  Replies
  1. இந்த நிகழ்வில் பணம் மட்டுமே பிரதான அல்ல..., நல்லா கவனிங்க

   Delete
 11. இந்த அளவுக்கு சேட்டு ஒத்துகிட்டது ஆச்சர்யமாத்தான் இருக்கு.எப்படியோ நல்ல இருந்தா சரி

  ReplyDelete
  Replies
  1. என்ன இப்படி சொல்லிப் போட்டீங்க..!?
   சேடுன்னா என்ன பெரிய ***இதா?!

   Delete