Saturday 19 March 2016

எதிர்கால இந்தியாவுக்கு கொள்ளி வைப்பது எப்படி?

பப்ளிக் ப்ராவிடண்ட் பண்ட் (PPF) என்பது பெரும்பாலான மத்திய வர்க்கம் தங்களுடைய ஒய்வு நாளுக்காக சேர்க்கும் ஒரு திட்டம். இதனுடைய வட்டி விகிதம் 8.7%. இது அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்ட நெடுநாளைய சேமிப்பு திட்டம். இதற்கு வரி விலக்கு உண்டு. நிதி ஆலோசகர்களைக் கேட்டால் ‘compounding' என்கிற ஒரு பதத்தினை சொல்லுவார்கள். அதாவது உங்களுடைய பணம் பெருகுவது என்பது ஒரு மல்டிப்ளையர் எஃபெக்ட். 

ரூ. 100க்கு 10% வருடாந்திர வட்டி என்றால்
முதல்வருடம் 100+10 = 110
இரண்டாம் வருடம்110+11 (10% of 110) = 121
மூன்றாம் வருடம் 121+12.1 = 133.1

இது தான் காம்பவுண்டிங். வட்டியும், வட்டிக்கான வட்டியும், அதற்கான வட்டியும் தொடர்ச்சியாக உங்கள் முதலீட்டினை மேலேற்றும். இதனால் தான் நெடுநாளைய திட்டங்களில் பணவரவு அதிகம்.
மத்திய தர வர்க்கத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த திட்டத்தின் வட்டி விகிதத்தை ஏப்ரலிலிருந்து 8.7%லிருந்து தடாலடியாக 8.1% ஆக குறைத்திருக்கிறது. அதாவது ஒரே ஷாட்டில் 0.6% காலி. பார்வைக்கு இது வெறும் 0.6% ஆனால் இதன் நீண்டகால பாதிப்பு அதிகம்.

மேலே சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம்.
10% என்பதற்கு பதிலாக 0.6% குறைத்து 9.4% என்று வைத்துக் கொள்வோம்.
முதல் வருடம் 100+9.4 = 109.4
இரண்டாம் வருடம் 109.4+10.28 = 119.68
மூன்றாம் வருடம் 119.68+11.24 = 130.92

133.10 வர வேண்டிய இடத்தில் 130.92 மூன்று வருடங்கள் கழித்து வரும். உங்களுடைய வாழ்நாள் சேமிப்பில் அரசாங்கம் கிட்டத்திட்ட 2.18 விழுங்கிவிட்டது. அதாவது உங்களுடைய ஆரம்பநிலை முதலீட்டில் கிட்டத்திட்ட இரண்டே கால் விழுக்காடு ஸ்வாஹா இதை 20 - 30 வருடங்களுக்கு கணக்கு போட்டால் நீங்கள் சேமிக்கும் தொகையை முன்வைத்து சில பத்து இலட்சங்களிலிருந்து பல கோடிகள் வரை காணாமல் போகும்.

இந்தியாவின் சராசரி பணவீக்கம் 6%; பாதுகாப்பான முதலீட்டின் வட்டி விகிதம் 8.1% ஆக பணவீக்கம் சாப்பிட்டது போக மிச்சமிருப்பது 2.1%. ஒரு வேளை உங்கள் முதலீடு 5 கோடிகள் இருந்தால் இந்த வித்தியாசம் வருடத்திற்கு ரூ. 10,50,000. மாதத்துக்கு ரூ. 87,500 இதை வைத்துக் கொண்டு அடுத்த 15 வருடங்கள் சென்னை மாதிரியான ஒரு பெருநகரத்தில் வாழலாம். ஆனால் எல்லோராலும் 5 கோடி முதலீடோ, சேமிப்போ செய்ய முடியாது.

அப்படியென்றால் என்ன செய்வீர்கள் ?
1 ) கடன் வாங்குவீர்கள். கடன் சுழற்சியில் வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்
2 ) அதிக இலாபம் வரும் என்று சொல்லப்படும் திட்டங்களில்முதலீடு செய்வீர்கள்.


இது ஒரு மாஸ்டர் ப்ளான். கொஞ்சம் கொஞ்சமாக அரசாங்க உறுதியளிக்கும் திட்டங்களின் வட்டி விகிதத்தினைக் குறைப்பது. பணவீக்கம் தடாலடியாக இந்தியாவில் குறையப் போவதில்லை. இந்த அரசு உறுதி திட்டங்கள் குறைவான ரிட்டர்ன் வழங்கும் போது, ஈக்விட்டி, ஸ்டாக் மார்க்கெட் என ஒரு போலி நிதி ஆலோசக கும்பல் உருவாகும்.

‘எதுக்கு சார் பிக்சட் டெபாசிட்ல போடறிங்க. ரியல் எஸ்டேட்ல போடுங்க. ஸ்டாக் மார்க்கெட்ல போடுங்க. செம்மரம் ஆஸ்திரேலியால என்ன ரேட்டு போகுது தெரியுமா, அதுல இன்வெஸ்ட் பண்ணுங்க. பெரிய கம்பெனி சார் அது. BBB+ ரேட்டிங். அதனோட கடன் பத்திரத்துல போடுங்க” 

மத்திய தரவர்க்கம் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுக்கு தெரியாத ரிஸ்க் முதலீடுகளில் காசு போட ஆரம்பிப்பார்கள். Fly by Night operatorsகளுக்கு ஜாக்பாட் அடிக்கும். போட்ட ரிஸ்க் முதலீடு முழுமையாக வராத காரணத்தினால் கடன் வாங்க ஆரம்பிப்பார்கள். 

இதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் தனியார் வங்கிகள், இடைத்தரகர்கள் வட்டியை ஏற்றுவார்கள். வாழ்நாள் முழுக்க நீங்கள் கடனாளியாகவே இருந்து, கடனாளியாகவே வாழ்ந்து, கடனாளியாகவே சாவீர்கள். ஒரு வேளை வீடு வாசல் நிலம் வாங்கி வைத்திருந்தால் அதையும் reverse mortgage செய்யுங்கள் என்று சொல்லி அதையும் பிடுங்குவார்கள். 

தனியார் முதலாளிகள் கொழிப்பார்கள். பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு நிதி முனையம் என எல்லாமும் கடை விரித்து உங்களின் கோவணத்தை கூட வாங்கிக் கொண்டு காசு கொடுப்பார்கள். சராசரி இந்தியன் வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் புழுங்கி புழுங்கி அவமானத்தில் உழன்று நிம்மதியில்லாத வாழ்க்கை வாழ்ந்து எல்லா ‘தற்காலிக சந்தோஷங்களுக்கும்’ (குடி, சீட்டு, சாராயம், போதைப் பொருள்) அடிமையாகி செத்துப் போவான். 

இது தான் உலகமெங்கிலும் நடந்தது. இப்போது இந்தியாவில் நடக்க ஆரம்பிக்கும். இந்தியா வெகு சீக்கிரத்தில் வெளிற ஆரம்பிக்கும். இந்த நாட்டின் எதிர்கால குடிமகன்கள் இந்த அரசாங்கத்தின் புண்ணியத்தில் ‘கடன்காரர்களாக மட்டுமே வாழ்ந்து’ சாவார்கள். 

புண்ணியவான் PPFல் மட்டும் கை வைக்கவில்லை. எங்கெல்லாம் எளிமையான மக்கள் வங்கிகளில் பாதுகாப்பான முதலீடாக வைப்பார்களோ அங்கெல்லாம் கை வைத்து எதிர்காலத்தினை சூன்யமாக்கி இருக்கிறார்கள்.
கிஸான் விகாஸ் பத்திரம் - 8.7% லிருந்து 7.8%
வருட டெபாசிட் (1 வருடம்) 8.4% - 7.1%
வருட டெபாசிட் (2 வருடங்கள்) 8.4% - 7.2%
வருட டெபாசிட் (3 வருடங்கள்) 8.4% - 7.4%
வருட டெபாசிட் (5 வருடங்கள்) 8.5% - 7.9%
தேசிய சேமிப்பு சான்றிதழ்கள் (5 வருடங்கள்) 8.1%
சீனியர் சிட்டிசன் திட்டம் (5 வருடங்கள்) 9.3% - 8.6%
பெண் குழந்தைகள் திட்டம் 9.2% - 8.6%
Recurring டெபாசிட் (5 வருடங்கள்) 8.4% - 7.4%


18 - 30 வயதுக்குள் என் டைம்லைனில் இருக்கும் நண்பர்களுக்கு (பையன்/ பெண்கள் வைத்திருக்கும் பெரியவர்களுக்கும்) என்னுடைய unsolicited advice.
படியுங்கள். இந்த நாட்டில் இருக்காதீர்கள். வெளியேறுங்கள். இந்த தேசம் உங்களை கசக்கிப் பிழிந்து சக்கையாக்கி, கனவுகளை சுட்டெறித்து சாம்பலாக்கி, மயிராக ஊதி விட்டு, உங்கள் எதிர்காலத்தை நாசமாக்கி விட்டு போய்க் கொண்டேயிருக்கும். 

இது மோடி அரசின் சிக்கலாக மட்டும் சொல்லவில்லை. இதை முன்னெடுத்தால் அடுத்து வரும் எந்த அரசாங்கமும் இதை மாற்ற முன்னெடுக்காது. இதில் புவி அரசியல், வல்லரசு கனவுகள், FDI கோஷங்கள் என நிறைய இருக்கிறது. அடுத்த 15 - 20 வருடங்கள் கொடுமையானதாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. 

உங்களின் இளமையை இந்த அதிகாரப்பசிக்கு பலியாக்காதீர்கள். நான் உங்களை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து வெளியேறுங்கள். இது உங்களுக்கான நாடல்ல.  இந்த தேசம் எத்தனையோ வெளிநாட்டு படையெடுப்பினையும், ஆக்ரமிப்பையும் பார்த்திருக்கிறது. ஆனால் ‘தேச பக்தர்கள்’ என்கிறப் போர்வையில் இந்த அரசு சுரண்டுவதைப் போல, ஆக்ரமிப்பதைப் போல, அழிப்பதைப் போல ஒரு நாளும் கண்டதில்லை

வயிறெரிந்து சாபமிடுகிறேன் அப்பாவி, எளிமையான, ஒன்றும் தெரியாத மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடும் உங்களை வரலாறும், இந்த தேசமும் மன்னிக்கவே மன்னிக்காது.

திரு. நரேன் ராஜகோபாலன் அவர்கள் Facebook பதிவு செய்ததை அப்படியே copy and  paste செய்திருக்கிறேன்.... அவருக்கு எமது நன்றிகள்.


22 comments :

  1. வட்டிக் காசு வரலைங்கிறதுக்காக நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறுவது என்ன நிதானம் என்று புரியவில்லை. நட்டமேயில்லை. வெளியேறுங்கள். 30 நாட்கள் அவகாசம் அளிக்கிறோம். ஒருவேளை ஏற்கனவே நீங்கள் வெளிநாடுகளில் இருந்தால், உங்கள் பதிவை அளித்துவிட்ட பிறகுதான் குடியேறல் பிரிவில் சாப்பிங் வாங்கவேண்டும். சவால். முடிந்தால் செய்து பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. ஊரு பேரு எதுவுஞ் சொல்லாம "அனானியா" வந்து பொங்குன உங்க வீரத்தைப் பாராட்டி சரோஜா தேவியோட சோப்பு டப்பாவ முதல்ல பரிசா வழங்குறோம்...

      ஒழுங்காக வரி கட்டுவதும், வங்கியில் வாங்கும் கடன்களை சரியாக கட்டுவதும் பாழாய்ப் போன இந்த நடுத்தர வர்க்கம் தான்.

      வங்கிகள் இவர்களுக்கு கொடுக்கும் கடனில் வட்டியைக் குறைக்க மாட்டார்கள், ஆனால் வயசான காலத்திற்கு சேர்த்து வைக்கும் நிதியில் வட்டியைக் குறைப்பார்கள். அருமையான திட்டம் போங்கோ...!!

      உலகமெங்கும் பெட்ரோலியப் பொருள்களின் விலை கீழே போக இங்கு மட்டும் நம் தலை மீது ஏறிக் கொண்டு போகிறது. ஆயிரம் கோடி கணக்கில் வரி ஏய்ப்பு செய்து கொண்டிருக்கும் கார்பரேட்டுகளுக்கு SEZ, காற்றாலை மின்சாரம், குறைந்த வட்டியில் கடன் போன்றவற்றின் அர்த்தம் தான் என்ன? தேசிய வங்கிகளின் தற்போதைய வராக் கடன் பட்டியலில் அதிக நிலுவை வைத்திருக்கும் முதல் இரண்டு பேர் அம்பானியும் அதானியும்.

      தாய்-தந்தையாக இருந்து வழிநடத்த வேண்டிய ஒரு நாட்டின்/மாநிலத்தின் தலைவர்கள் இப்படி கூறு போட்டு கூவிக் கூவி நாட்டையே விற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு நடுத்தர வர்கத்தின் அடுத்த தலைமுறையை நீயாவது வெளியே சென்று கௌரவமாக நிம்மதியாக வாழ்ந்து கொள் என்று சொல்வதில் என்ன தவறு?

      நிலைமை இப்படியிருக்க ஐயோ அனானி, வுட்டீங்க பாரு ஒரு சவாலு...!

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நரி...
      மேலே அனானிக்கு சொன்ன பதில் தான் உங்க கமெண்ட்டுக்கும்...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இப்பதிவின் அடிப்படை நோக்கமே உங்களுக்கு எட்டல..., விட்ருங்க ப்ளீஸ்...
      நேத்து கூட ஜார்கன்ட்ல மாடு வியாபாரம் பண்ற ரெண்டு பேரை வெட்டிக் கொன்னு போட்டு இருக்காங்க. நல்லா கவனிங்க, மாடுகளை மொத்தமா வியாபாரம் பண்றவங்க. மாட்டிறைச்சி கிடையாது.
      கமலஹாசனே "எனக்கு இந்தியாவ விட்டு போறத தவிர வேற வழியில்லையா" எனக் கேட்கவில்லையா?!

      Delete
    4. பேரு கரெக்டாதான்யா வெச்சிருக்காரு...!!
      கமெண்ட்ட கமுக்கமா டெலிட் பண்ணிட்டு எஸ்ஸாயிட்டாரு "வேகநரி"

      Delete
  3. நல்ல கட்டுரை. சிந்திக்க வைக்கும் ஒன்று பகிர்விற்கு மிக்க நன்றி கஸ்தூரி

    ReplyDelete
    Replies
    1. எல்லாஞ் சரி தான்...
      கஸ்தூரி யாரு?!

      Delete
    2. கஸ்தூரி மைன்ட் வாய்ஸ்!

      Delete
    3. Sorry very very sorry Malar. Just got confused with another blog named malartharu while reading in the mobile. Sorry very sorry again....

      Delete
    4. துளசி! இதுக்கு எதுக்கு சாரி!
      நாம எல்லோருக்கும் நடப்பது தானே!
      ஏதோ நீங்க மாட்டினீங்க கொஞ்சம் கலாய்த்தோம்--இதுக்கு போய் அலட்டிக்கலாமா!

      Delete
    5. அய்யே... எதுக்குங்க இத்தன sorry ...
      எனக்கே ரொம்ப கூச்சமா இருக்கு
      சும்மா freeயா விடுங்க...

      Delete
    6. சரிங்க நம்பள்கி, மலர்..கலாய்ங்க ரொம்பவே ரசிப்போம்..நாங்கள் இருவருமே...

      Delete
  4. வயதான பலர் வாழ்ந்து கொண்டிருப்பது இந்த ஃ பிக்சட் டிபாசிட்டில்தான்.என்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன் .என்ன நான் சும்மா இருக்க முடியாமல் ஏதோ சில பார்ட் டயம் வேலைகளைச் செய்து வருகிறேன். அது முடியாதவர்கள் பாடு கஷ்டமே

    ReplyDelete
    Replies
    1. இதச் சொன்னா நம்மள பாத்து சவாலு விடறாங்க..!!

      Delete
  5. //இது தான் உலகமெங்கிலும் நடந்தது. இப்போது இந்தியாவில் நடக்க ஆரம்பிக்கும்//உலகெங்கும் இதே தான் என்ற போது எங்கு தான் செல்வது? அமெரிக்காவிலும் இதே நிலை தான். தன் ஆயுளில் வீட்டுக் கடனை முழுமையாக அடிப்பவர்கள் மிகக் குறைவு. கடனே எளிது. கடனே வாழ்க்கை என்று இருக்கப் பழகிக் கொண்டு விட்டார்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஆரம்பத்துல கஷ்டமா இருக்கும்... அப்புறம் கஷ்டமே பழகிடும்...

      Delete
  6. நான் தீர்க்கதரிசி தான். இப்படி நடக்கும் தெரிஞ்சுதான் 23ல் வெளியேறிட்டேன். தீர்க்க "சுமை"களி பவ..Pun Intended.

    அது சரி, அடுத்தவா வயுத்துல அடிச்சி இப்படி சம்பாரிக்கிராளே.. இந்த துட்டை எல்லாம் என்ன பண்றா?

    சுனா சானாவ கொஞ்சம் கேட்டு சொல்லுங்கனா.

    ReplyDelete
    Replies
    1. நீங்க போயிட்டு க்ஷேமமா இருக்கேள்... நாங்கெல்லாம் மாட்டினுட்டோம்...
      ஆசிர்வதிக்கப் பட்ட வாழ்க்கைன்னா உங்களோடது... நன்னா இருங்கோன்னா!!

      Delete