Friday 4 March 2016

அழுக்கு ஜட்டிகளும் அரசாங்க விசாரணைகளும்

லட்சக்கணக்கில் தேங்கிக் கிடக்கும் மற்றும் கிடப்பில் போடப்பட்ட வழக்குகளுக்கு இடையில், தனது அயராத நீதி வழங்கும் பணிகளுக்கு மத்தியில் சத்தியமங்கலத்தை சேர்ந்த நீதியரசர், ஜட்டி துவைக்காமல் போன தனது வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்...
குறிப்பாணையாம்...!!
அதுவும் பச்ச இங்க்ல கையெழுத்துப் போட்டு சும்மா பளபளன்னு....!!


அதிகாரி மற்றும் அவர் "துணைவியாரை" எதிர்த்துப் பேசியதால் (நோட் திஸ் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்) கூடிய விரைவில் விசாரணக் கமிஷனோ, நடுவர் மன்றமோ, CBI-யோ, RAW-வோ, இவ் விசாரணையை எடுத்து நடத்தக் கூடிய சாத்தியக் கூறுகள் திட்டவட்டமா தெரியுது.  ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்கப் படலாம் என்பதால் முப்படை தளபதிகளின் தலையீடும் இருக்கும் போல் தெரிகிறது.

அவுத்துப் போட்ட ஜட்டியைத் துவைக்காமல் வன்முறையில் ஈடுபட்டு அதிகாரியையும் அவர்தம் "துணைவியாரை"யும் தரக் குறைவாக, கீழ்த்தரமாக, மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில், மன உளைச்சலுக்கு ஆளாகும் வகையில் எதிர்த்துப் பேசிய அந்த பயங்கரவாத, தீவிரவாத, தேசத்துரோக பெண்ணின் விளக்கம் கீழே...


இந்தியா வல்லரசு ஆகிடுச்சுடோய்...!!! 


8 comments :

  1. இனி உள்ளாடை உலகநாதன் என அனபோடு அழைக்கப்படுவார்

    ReplyDelete
    Replies
    1. ஜட்டி ஜட்ஜூ...
      உள்பாவாடை உத்தமன்...
      இன்னும் நெறைய சொல்லலாம்

      Delete
  2. ஜட்டி கப்பு தாங்கலே, அதானலே துவைக்கவில்லை என்று சொல்லி இருக்கலாம். மேலும், இப்ப ஜட்டி துவைப்பது, வீட்டு வேலை எல்லாம் இவர்களை செய்யச் சொல்வது சட்டப்படி தப்பு. வீட்டு வேலைகளை செய்ய சொல்வது அதுவும் உள்ளாடைகளை சொல்வது - in writing-தப்பு!

    ஆமாம், இந்த கடிதங்கள் எப்படி கிடைத்தது?

    ReplyDelete
    Replies
    1. //ஜட்டி கப்பு தாங்கலே, அதானலே துவைக்கவில்லை என்று சொல்லி இருக்கலாம்.//
      - கப்பு ஜட்டியை துவைப்பது கடவுளுக்கு செய்யும் சேவை என "ஹேய்ராம்" காந்தியே சொல்லிருக்காரே..!!

      //மேலும், இப்ப ஜட்டி துவைப்பது, வீட்டு வேலை எல்லாம் இவர்களை செய்யச் சொல்வது சட்டப்படி தப்பு. வீட்டு வேலைகளை செய்ய சொல்வது அதுவும் உள்ளாடைகளை சொல்வது - in writing-தப்பு!//
      - ஓ... writing-ல மட்டும் தான் தப்பா!?

      //ஆமாம், இந்த கடிதங்கள் எப்படி கிடைத்தது?//
      - எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர் இத் தகவலை தனது facebook-ல் ஆதாரத்துடன் பதிந்துள்ளார். இன்றைய நாளிழதழ்களிலும் இச் செய்தி வந்துள்ளது. மனித உரிமை ஆர்வலர்கள் வசந்தியிடம் விசாரித்ததில் அனைத்தும் உண்மை என ஒப்புக் கொண்டுள்ளார்.

      Delete
  3. அலுவலக உதவியாளர் செய்ய வேண்டிய பணியா இது ?ஓ மை லார்ட் ,இது அடுக்குமா :)

    ReplyDelete
    Replies
    1. நீங்க வேற..., இதெல்லாம் ச்சும்மா...!!
      நமது பள்ளிகளில் இன்னமும் தலித் மாணவ மாணவியர் டாய்லெட்டுகளை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப் படுகிறார்கள்...

      Delete
  4. மலர் மெய்யாலுமா? ஏம்பா ஒவ்வொரு நீதிமன்றத்திலும் ஏகப்பட்ட வன்முறை வழக்கு எல்லாம் கிடப்பில கிடக்கு அதெல்லாம் விட்டுப்புட்டு இப்படிச் ஜட்டிக்கு...ச்சீய் அசிங்கம்...மகா கேவலம்..இவங்க எல்லாம் படிச்சவங்களாப்பா...முதல்ல அவங்க போடுற உள்ளாடையை எப்படிப்பா இன்னொருத்தர் தோய்க்கறதுக்குக் கொடுக்கறாங்க...ச்சீய்..உவ்வே...கேவலமான செயல் இல்லையோ என்னதான் வீட்டு வேலைக்கு ஆள் வைத்திருந்தாலும் அதுக்குனு இப்படியா...

    ஆனா இந்தியாவுல இப்படித்தான் மக்கள் வீட்டு வேலையாட்களைத்தான் உள்ளாடைகள் துவைக்க வைப்பது அதைவிடக் கேவலமா இவங்க கழியறத (கழிவறை) வேலையாட்கள் சுத்தம் பண்ணனும் இது பெரும்பாலும் இந்தியவீடுகளில் நடப்பது. நாம் கழியற இடத்த நாம சுத்தம் பண்ணாம இன்னுருத்தர செய்யச் சொல்றது எந்தச் சட்டம்பா? இதுக்கல்லாம் மட்டும் சட்டத்துல இடம் இருக்கா? இதுவும் ஒரு அடிமைத்தனம் தானே? இதற்கு ஒரு சட்டம் கொண்டுவரணும்பா வீட்டு வேலை செய்பவர்கள் இன்ன வேலை மட்டும்தான் செய்யலாம் மீறி வேலை வாங்கப்பட்டால் புகார் கொடுத்தால், எஜமானர்களுக்குத் தண்டனை உண்டு என்று. ஆனா பாருங்க நம்ம ஆளுங்க புகார் கொடுக்க மாட்டாங்க அடிமையாவே இருந்துக்கறோம்னு இருந்துடுவாங்க. நமக்கும் அது பழகிப் போச்சே. எஜமானர்களும் பணப்பசை உள்ளவங்கனா மிரட்டித்தான் வைச்சுருப்பாங்க...இங்கயே பாருங்க அந்தப் பெண்ணின் கடிதம் ...ஹும் நம்ம் நாடு நீங்க சொல்லுவது போல் வல்ல்ல்ல்ல்ல்ல்லரசு! (ஐயையோ தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்புனு சொன்ன யாரோ நினைவுக்கு வர்ர்ர்ர்ர்ரங்கப்பா!!!) இவங்களை எல்லாம் அமெரிக்காவுக்கு அனுப்பினா என்ன செய்வாங்க? நாறிப்புடுவாங்க!!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் கீதா... link கொடுத்துள்ளேன்...

      வர்ணாசிரமத்தை வழக்கில் இருந்து முழுவதுமாக ஒழிக்காத வரையில் இது போன்ற கொடுமைகள் சட்டரீதியாகவோ(!) வன்முறையின் மூலமோ தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

      http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article8317447.ece

      http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B/article8318202.ece

      Delete