Wednesday 27 July 2016

மானும் Khan-ம்: பிரபல bloggers பார்வையில்

மான் வேட்டை கேசுல, அந்த மானே காதல் தோல்வி காரணமா லெட்டர் எழுதி வெச்சிட்டு தும்பை பூவுல தூக்கு மாட்டி தற்கொலை பண்ணிக்கிடுச்சின்னு தீர்ப்பாகி சல்மான் விடுதலையான மேட்டர்,  நம்ம பிரபல bloggers பார்வையில்:

thillaiakathuchronicles கீதா & துளசிதரன்:
நான் கூகிளில் தேடியவரை சல்மான்கான் மானைக் கொன்றதாக எங்குமே தகவல் இல்லை.  நண்பர் ஒருவருடைய தளத்தில் மட்டும் அது மான் தோல் போர்த்திய நாய் என்று பதிவிட்டிருந்தார்.  எப்படிப் பார்த்தாலும் அந்த நாய்க்கு ஒரு மான் தோல் தேவைப் பட்டதால் அந்த மான் வேட்டையாடப் பட்டிருக்கலாம்.  பலவருடங்கள் இயற்கையுடனான வாழ்வில் காடுகளில் கழித்திருக்கிறேன்.  அப்போதெல்லாம் துள்ளித் திரியும் மான்களைப் பார்க்கும் போது  பின்னாட்களில் இப்படி அநியாயமாக வேட்டையாடப் படும் என உணர்ந்ததில்லை.  தவறு யார் செய்திருப்பினும் அவர்கள் சட்டப் படி திருத்தப் பட வேண்டும்.  மான்கள் இனம் காப்பாற்றப் பட வேண்டும்.


killergee தேவகோட்டை
மானே, தேனே என கொஞ்சிவிட்டு எப்படி வேட்டையாட மனசு வந்தது?  துப்பாக்கியும் கையுமாக வாட்ச்மேனிடம் பிடிபட்ட பிறகும் எப்படி தப்பிக்க முடிந்தது?  எனக்கும் அவ்வப்போது ஆசைகள் தோன்றும்.  மான்கள் இல்லா ஊரில் வசிக்க ஆசை.  மாட்டுறவன் கைய நசுக்க ஆசை.  கி.மு.85இல் வந்ததைப் போன்ற புரட்சியொன்று மீண்டும் வரவேண்டும்.  ரத்தமின்றி, யுத்தமின்றி மான்கள் சுவாசிக்க யாசிக்கிறேன்.  கான்களை தண்டிக்க யோசிக்கிறேன்..


jokkaali - ஜோக்காளி 
யாருக்கு யாரோ: ):
மான்: அந்த மான் இந்த மானுக்கு தான் சொந்தம்
கான்: அந்த மான் இந்த மேனுக்கு தான் சொந்தம


venkatnagaraj - வெங்கட் நாகராஜ்
மான் தான் மான் தான் எல்லாம் மான் தான்
மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்...
மீண்டும் சந்திப்போம்...
நட்புடன்.
வெங்கட் .
புது டெல்லியிலிருந்து...


kummacchionline - கும்மாச்சி
ஜட்ஜ்: சொல்லுப்பா என்ன பாத்த?
ரேஞ்சர்: அது வந்துயா...
கான்: ம்ம்.. சொல்றா... தைரியமா சொல்லு...
ஜட்ஜ்: ஏம்பா, கேக்குறோம்ல!!
ரேஞ்சர்: அது வந்துயா, மான் ஒன்னு....
கான்: டேய், ஒரு பெரிய மனுசன் கேட்டுகிட்டு இருக்காரு, வந்து போயின்னு...
ஜட்ஜ்: ஏம்பா கானு, கம்முன்னு கெட
கான்: இல்லீங்கய்யா, அவனுக்கும் 2 பொண்டாட்டி 5 புள்ள இருக்குல்ல, அந்த பயம் இருக்குமில்ல...
ரேஞ்சர்: அது ஒண்ணுமில்லீங்க, காட்டுல ஒரு மான் லவ் பண்ணி இன்னொரு மானை இழுத்துட்டு ஓடிச்சிருங்க...
கான்: ஆங்.. ஆங்.. கெளம்பு... கெளம்பு... போ... போ... 


vishcornelius - விசுAWESOME
மானுக்கொரு நீதி, கானுக்கொரு நீதி
"நெஞ்சு பொறுக்குதில்லையே..."
என்ன வனத்துறை?  என்ன காவல்துறை?  என்ன நீதித்துறை? எல்லாமே தண்டம்..
"கூப்பிட்டியா வாத்யாரே...!?"


nambalki - என் வாழ்க்கை அனுபவங்கள்
பொதுவாக  நான் படங்கள் பார்ப்பது கிடையாது, அதுவும் "ஷோலே"வுக்குப் பிறகு ஹிந்திப் படங்கள் பக்கமே போனதில்லை.  என் மனைவிக்கு 5 மொழிகள் நன்றாக எழுத பேச படிக்கத் தெரியும் என்பதால் நகைச்சுவை காட்சிகளை மட்டும் தொகுத்துத் தருவார்.  ஆதலால் சல்மான் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்.
இங்கெல்லாம் மான் வேட்டை அல்ல, மானின் ஒரு மயிரைப் புடுங்கினால் கூட கடும் தண்டனை உண்டு, அது ப்ரெசிடெண்ட்டாக இருந்தாலும்... அது டாம் க்ரூஸோ, பிராட் பிட்டோ... நிரூபிக்கப் பட்டால் ஜெயில் உறுதி.
மான்தோலையும் புலித்தோலையும் போட்டு அமர்ந்து அருள் வாக்கு சொல்லும் சாமியார்கள் இருக்கும் ஊரின் காவிகளின் ஆட்சியில் இதெல்லாம் நடக்கவில்லையென்றால் தான் ஆச்சர்யம்..!!


பி.கு:
மேற்சொன்ன யாவும் நகைக்க மட்டுமே, யார் மனதையும் புண்படுத்த அல்ல, என disclaimer எல்லாம் போட மாட்டேன்.  ஏன்னா, நீங்க ரசிப்பீங்கன்ற ஒரு நம்பிக்கை தான்.


அன்புடன்
மலர்வண்ணன்


28 comments :

  1. சூப்பர்... என் மனதில் பட்டத்தை அப்படியே எழுதி உள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா... ஹா...
      இருந்தாலும் உங்க கார்ட்டூனை காப்பி ரைட்ஸ் வாங்காம உபயோகப் படுத்திட்டேன்...
      கேசு போட்டுறாதீங்க...!!

      Delete
    2. அட பாவி.. இப்ப தான் கவனிசிச்சேன்...தலைப்புல பிரபல பதிவர்ன்னு போட்டுட்டு அடியேனை வேற சேது இருக்கியே.. என்ன வைச்சி காமடி கீமை பண்ணலையே..?

      Delete
    3. இது புரிய இம்புட்டு நேரம் ஆச்சா...
      நீங்க ரொம்ப லேட்டு

      Delete
  2. முக்கியமானதை விட்டுட்டீங்களே!
    பெண்கள் சாமியார்கள் முன்பு முட்டி போட்டு வணங்கக்கூடாது என்று ரூல் போடணும்! சாமியார் பாவம்! அவன் என்ன செய்வான்? [Valley of dolls ]ஆடும் அழகை திவ்யமா பார்த்தல்...குதிரை லாயத்தில் இருந்து கிளம்பிடும்! பின்னே? காஞ்ச மாடு கம்புல...

    ReplyDelete
    Replies
    1. ஒரு டவுட்டு தல...
      தமிழ்த் திரைப் படப் பாடல்கள்ல, மேட்டர் பாட்டுக்கு சில பாடல்களில் குதிரையை ஒரு ஓரமா நிக்க வெக்கிறாங்களே... எதுக்கு?!

      Delete
    2. தேமேன்னு நிற்கும் குதிரையைப்
      பார்க்காதே! குதிரையினதைப் பார்!

      Delete
  3. போன பின்னூட்டதின் ref:
    http://www.nambalki.com/2016/07/140.html

    ReplyDelete
    Replies
    1. ஓ... பாட்டாவே படிச்ச்சுட்டீங்களா... மகிழ்ச்சி

      Delete
  4. ஹாஹாஹா நம்ம பதிவுகளை கதம்பமாக சொதப்பீப்பீ ஊதியிருக்கின்றீர்களே ..... ஹி ஹி ஹி. நன்றி
    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. சொதப்பீப்பீ
      - ரசித்தோம் நண்பரே...

      Delete
  5. சொல்ல மறந்துட்டேன்....
    சாமியார் செய்தி நம்மளை அந்தப் பக்கம் இழுத்தது. இங்கு அரசாங்க அனுமதியுடன் மானை வேட்டை ஆடலாம். அதற்கு லைசென்ஸ் வாங்கணும். சுட்டதை அரசாங்கத்திற்கு தெரியபடுத்தணும். அதற்கு என்று சில சீசன்கள் உண்டு. அவ்வளவு ஏன் அரசே மான்வேட்டையை ஊக்குவிக்கிறது.

    ஹைவேயில் செல்லும் பொது மான் படம் போட்டு பார்த்து இருப்பீர்கள். அதன் அர்த்தம் மான் வேடிக்கை பார்க்க அல்ல, மான்கள் திடீரென்று வரும்..அதனால் கார் ஓட்டுபவர்கள் கவனமாக இருக்க போட்டிருக்கும். இங்கு மான் காரில் அடிபட்டு மக்கள் இறப்பது உண்டு. இங்குள்ள மான்கள் நம்ம ஊர் குதிரை சைஸ் இருக்கும். கன் இல்லாமல் மாட்டினால் சில ஆளை குத்திக் கொன்னுடும்.

    சரி! சல்மான் கானை இங்கு அனுப்புங்கள்! இங்கு நாய் கடித்தாலும் நாயை கொண்டுவிடுவார்கள் (வீட்டு நாயாக இருந்தாலும்) அதற்கு PETA ஒன்னும் செய்யமுடியாது! மான் வேட்டையையும் சேர்த்துதான் தான்!

    ReplyDelete
    Replies
    1. சல்மானை அங்க அனுப்புறத்துல பிரச்சினை ஏதும் இருக்காது...
      ஆனா, அவன் ஆள் ஒரு மாதிரி ஆச்சே?!
      மான் மேட்டர்ல கூட அவன் மேட்டர் என்னன்னு ஒரு டவுட்டு இருக்கு...

      Delete
  6. கொண்டுவிடுவார்கள்==கொன்று விடுவார்கள்!

    ReplyDelete
    Replies
    1. என்ன தலைவரே, அந்த அளவுக்கு நான் தமிழ்ல ஊக்கையா?!
      இது கூட புரியாதா?
      இதுக்கு விளக்கம் வேற!!

      Delete
  7. அடேங்கப்பா... அது என்ன கில்லர்ஜி பகுதியில்.. ஈஸ்ட்மேன் கலர் ரேஞ்... நமக்கு மட்டும் கருப்பு வெள்ளை?

    ReplyDelete
    Replies
    1. நீங்க கில்லர்ஜீயோட பதிவுகளை பாருங்க..., சௌகார்பேட்டையில ஹோலி கொண்டாடினா மாதிரி இருக்கும்..!!

      Delete
    2. ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ் புண்ணாகிடுச்சி டோய்....

      Delete
    3. பாத்துங்க..., "விழு"ப்புண்னாகிடப் போகுது!!

      Delete
    4. ஹை விழுப்புண் செம மலர் ரொம்ப ரசித்தேன்...

      கீதா

      Delete
  8. செமையா ரசிச்சோம் மலர் சரிரீயீயீயீயீய்

    மலரு...அது இன்னா கானுப்பா....மான் கான் கோன் ஹை??!! அப்படி ஒருத்தன் நம்மூராப்பா? இருக்கான்றதே தெரியாதுபா...நம்ம நீதிபதிகளுக்கும் கான் யாருனே தெரியாதுபா..அப்புறம் எப்படிப்பா மான் தெரியும்??!!!

    ReplyDelete
    Replies
    1. மேரி ஜிந்தகி பாப் கான் ஹை...
      மேரி துனியா கோன் ஐஸ் ஹை...
      மேரி மான் சக்தி மான் ஹை...

      Delete
    2. ஹஹஹஹஹ "விழு"ப்புண்பா...

      ஆப் கா மான் சக்தி மான் ஹை ஓ உங்க மானா அது! அதான் அந்த கான் கிட்டருந்து தப்பிச்சுருச்சு போல...அதான் நீதிபதி அப்படி ஒரு தீர்ப்பு இது தெரியாம எல்லாரும் என்னென்னமோ பினாத்தரோம்பா

      கீதா

      Delete
    3. விரைவில் உங்கள் பதிவை ஹிந்தியில் எதிர்பாக்கறேன் ஹை...

      Delete
  9. ஹும் நம்ம வீட்டையும் பிரபல அப்படினு போட்டும்ம்ம்ம் என்னவோ போங்க...

    ReplyDelete
    Replies
    1. நாமெல்லாம் பிரபலம்ன்னு நாமளே சொல்லிக்கணுங்க...
      நம்மள விட்டா வேற யார் சொல்லுவா?!
      இதெல்லாம் கடமை

      Delete
  10. பிரபல பதிவர்கள் பார்வையில்!

    அட என் பெயரும் இங்கே இருக்கே.. தவறி வந்திருக்குமோ!

    ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. நாமெல்லாம் பிரபலம்ன்னு நாமளே சொல்லிக்கணுங்க...
      நம்மள விட்டா வேற யார் சொல்லுவா?!
      இதெல்லாம் கடமை

      Delete