Wednesday 21 December 2016

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே...

இன்னைக்கு காலையில புள்ளைங்கள ஸ்கூல்ல விட போகையில வீட்டு முன்ன விழுந்து கிடந்த மரத்தை ஒரு 65 வயசு பெரியவர் வெட்டிட்டு இருந்தாரு... அவரோட போன்ல,
//பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே...//

பாட்டு பாடிட்டு இருந்துச்சு...

திரும்பி வரும் போதும் அவரோட போன்ல அதே பாட்டு...
அம்மணி கடைக்கு போகணும்னு சொல்ல, அதே பாட்டு...
கடைக்கு போயிட்டு வரயிலயும் அதே பாட்டு...
ஆபீஸ் கெளம்பி போகும் போதும் அதே பாட்டு...

"என்னங்க, ஒரே பாட்ட திரும்பத் திரும்ப கேட்டுட்டு இருக்கீங்க?"
"அது அப்படித்தாங்க, பழகிடுச்சி..."
"ஏன், வேற பாட்டு கேட்க மாட்டீங்களா?"
"இந்த ஒரு பாட்டு மட்டுந்தான் வெச்சிருக்கேன்..."

//ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே...
ஆலயமணியின் இன்னிசை நீயே//


"எவ்ளோ நாளா இதே பாட்டை கேட்டுட்டு இருக்கீங்க?"
"என் பொஞ்சாதி செத்ததிலிருந்து..."
"எப்போ தவறினாங்க?"
"அஞ்சு வருசமாச்சு...."


//இந்த மனமும் இந்த உறவும்
என்றும் வேண்டும் என்னுயிரே//


"தொடர்ந்து கேட்டுட்டே இருப்பீங்களா?"
"காலையில எழுந்ததும் கேட்க ஆரம்பிச்சுடுவேன், மதியமா பேட்டரி தீந்துடும், சாயங்காலம் வீட்டுக்கு போனதும் சார்ஜ் போட்டு கேட்க ஆரம்பிச்சுடுவேன்..."
"ராத்திரி முழுசுமா?"
"அப்படியே பாட்டை கேட்டுட்டே தூங்கிருவேன்..."


//ஆல மரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே...//


"குடிப்பீங்களா?"
"அவ செத்ததும் நிறுத்திட்டேன்..."
"வேற பாட்டு கேட்க மாட்டீங்களா?"
"ஏன், இது நல்லாத்தானே இருக்கு..."
"மத்தவங்க ஏதும் சொல்ல மாட்டாங்களா?"
"எனக்கு புடிச்சிருக்கு, எம் பாட்டுல நான் கேட்டுட்டு போறேன்..."


//உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே//



- அன்புடன்  
- மலர்வண்ணன் 

5 comments :

  1. காதல் என்பது இதுதானோ?! இதுதான்...
    பெரியவர் ரொம்பவே டச்சிங்க்பா..

    ReplyDelete
    Replies
    1. ஒரு செகன்ட், பெரியவர்-ன்னு என்னைத்தான் சொல்றீங்களோன்னு ஆடிப் போயிட்டேன்...

      Delete
  2. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

    எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
    http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    ReplyDelete