Monday 1 January 2018

நான் கேட்டேனா??


காலையில எழுந்திரிச்சதுல இருந்து நைட்டு படுக்கிற வரைக்கும் கக்கூஸுல ஆரம்பிச்சு கக்கூஸுல முடியிற தினசரி வாழ்க்கையில எதிர் கொள்ளுற அனைத்திலும் ஊழலும் ஒழுங்கீனமும் மலிஞ்சு கிடக்கிற சமூகத்துல இருந்திட்டு கேட்க வேண்டியவனுங்கள கேட்காம எப்போ பாத்தாலும் இவனுங்களோட பொச்சரிப்புக்கு அந்தாளோட பொச்சுல சுக்கு வெச்சு ஊதறதே பொழப்பா வெச்சிருக்கானுங்க...

தமிழ்நாட்டுல கோடி கோடியா சம்பாதிச்சுட்டான், தமிழனுக்கு ஒண்ணுமே செய்யாம ஏமாத்திட்டான், கர்நாடகாவில் சொத்து சேத்து வெச்சிட்டான், ப்ளா ப்ளா ப்ளா..., அவன் என்ன உன் பாக்கெட்ல கைய விட்டு எடுத்தானா? உன் சொத்த ஏமாத்தி எழுதி வாங்கிட்டானா? அட அட்லீஸ்ட் , 'என் படத்தை எல்லாரும் குடும்பம் குடும்பமா வந்து திரும்பத் திரும்ப பாருங்க'ன்னு உங்ககிட்ட கெஞ்சினானா?

தன்னோட ஒவ்வொரு படம் வெளிவரும் போதும் அரசியல் பிரவேசம் குறித்து குழப்பமான ஒரு ஸ்டேட்மென்ட் விட்டு ரசிகர்களை குழப்பறதே வேலையா போச்சுன்னு சொல்லிட்டு ஒரு கூட்டம் திரியுது. அந்தாளு தன் ரசிகர்களை கூப்பிட்டு பேசுறான், பிரஸ் மீட் வெக்கிறான்; அதுல அந்த சினிமா குறித்த கேள்விகளை மட்டும் கேட்க வேண்டியது தானே... அதை விட்டுப்போட்டு என்ன எர்வாமேட்டினுக்குடா மைக்க தூக்கிட்டு அவன் மூஞ்சி மேல வெச்சு 'எப்போ அரசியலுக்கு வருவீங்கன்னு' வெட்கமே இல்லாம கேட்குறீங்க? அதுக்கு 'ஆண்டவன் பாத்துப்பான்'ன்னு தான் அவனும் சொல்லுவான்...

படத்தோட ப்ரோமோஷனுக்காகத் தான் அப்படிச் சொல்லுறான்னு கூறுகெட்ட தனமா ஒரு விளக்க கூந்தல் வேற...!! அறிவிப்பு வெளியிட்டு பூஜை போடுறதுக்கு முன்னால எல்லா ஏரியாவும் விற்றுத் தீரக் கூடிய ஒரு நடிகனின் படத்துக்கு அவ்வளவு மலிவா விளம்பரம் தேட வேண்டிய அவசியமே இல்ல… 67 வயசுலயும் தான் சார்ந்த துறையில அசைக்க முடியாத சக்தியாக, வேறவனும் நெனச்சு கூட பாக்க முடியாத உச்சத்தில இருக்க ஒருத்தன் இதையெல்லாம் செய்வானா?

21 வருசத்துக்கு முன்னால ஊடகங்களும் அனைத்து கட்சிகளும் ரெட் கார்பெட் போட்டு கூவி கூவி அழைத்த போதும் தன்னோட 46-வது வயசுல கூட தனக்கு பக்குவம் இல்லன்னு ஒதுங்கிப் போயிட்டான். சங்காத்தமே வேணாம்னு போனவனை ஒவ்வொரு முறையும் கவர் ஸ்டோரிக்காக அவன் வாயைப் புடுங்கி கற்பனையைக் கலந்து அடிச்சு கடைசியில அவனையும் அரசியல்வாதி ஆக்கிட்டானுங்க...

திராவிட கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் பலரும் 30 வயசுக்கு முன்னாலேயே அரசியலுக்கு வந்தவர்கள், திருமா, சீமான், அன்புமணி உள்ளிட்டவர்கள் கூட 40 வயசுக்கு முன்னால வந்துட்டாங்க, விஜய்காந்த் கூட 50-வது வயசுல கட்சி ஆரம்பிச்சுட்டார். இந்தாளு இப்போ தான் கட்சியை ஆரம்பிச்சு இருக்காப்புல, பேரு கூட வெக்கல... இன்னும் கொள்கை, நிர்வாகிகள், இரண்டாம் கட்ட தலைவர்கள், மாவட்டம், வட்டம், முக்கோணம், சதுரம், தொண்டர்கள்... தலையே சுத்துதுடா சாமீ...!! இதுல வேற ஆன்மிகம், செய்இந்துன்னு பெரிய குழப்பம் வேற...

சரி... ஆரம்பிச்சு தொலைச்சாச்சு, அவங்களோட நிலைப்பாடு என்னான்னு வரும் போது பாக்கலாம்... மறுபடியும் மோடிஜீ, அமித்ஜீ, ஹாட்ஸ் ஆஃப் ஜீ-ன்னு உளறினா வச்சு செஞ்சு, உனக்கு தெரிஞ்ச வேலையைப் பாருங்க சார்ன்னு வீட்டுக்கு அனுப்பி வைப்போம்...

அது வரைக்கும் அந்தாளு ட்ரீட்மென்ட்டுக்கு ஆஸ்பத்திரி போறதையோ, ரெஸ்ட் எடுக்க இமயமலை போறதையோ, சந்தோஷமா இருக்க தான் சம்பாதிச்ச காசுல கேசினோ போறதையோ, பதில் சொல்ல முடியாம அண்ணாந்து மேல பாக்குறதையோ, அவரோட குடும்பம் சார்ந்த பர்சனல் லைஃப் பத்தியோ ஷெர்லக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு துப்பாதீங்கடா... அருவெறுப்பா இருக்கு!!

2 comments :

  1. ???
    What happened Thambi?
    Why are you so angry?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோண்ணா...
      ஏது... ஆத்துப் பக்கம் ரொம்ப நாளா காணோம்..??

      Delete