Wednesday, 23 December 2015

2015 - டாப் 15 சொலவடைகள்

ஆளாளுக்கு அவார்டு குடுக்குறாங்க..., நாமும் எதையாவது போடுவோம்...
2015 - டாப் 15 சொலவடைகள்:



 
15. "இரண்டு முறை யேசுவிடம் பேசியுள்ளேன்..."
- உமாசங்கர் ஐஏசு




 
14. "சென்னை சூப்பர் கிங்ஸ் தடை செய்யப்பட்டதில் தாவூதின் பங்கு உள்ளது என்பதற்கான ஈமெயில் ஆதாரம் என்னிடம் உள்ளது...” - சுbeepசாமி



 
13. "விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் காதல் விவகாரம், தற்கொலை செய்து கொள்ளாமல் இருக்க ராஜயோகம் பழகி விதைகளின் சக்தியைக் கூட்டலாம்..."
- வேளாண்(!) அமைச்சர் ராதாமோகன் சிங்




 
12. "நான் நாத்திகன் அல்ல, பகுத்தறிவாளன்..."
- ஒலக நாயகன்




 
 11. "நேதாஜி உயிருடன் உள்ளார் என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.."
- வைகோ




 
 10. "இது அவரோட சொந்த கருத்து, அதுக்கும் BJP-க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது..."
- டமில் மீசிக் சவுன்டி




 
9. "திமுக ஆட்சிக்கு வந்தால் கமிஷன், கலெக்ஷன், கரெப்ஷன் இருக்காது.., விடியட்டும், முடியட்டும்..."
- நிரந்தர இளைஞரணி தளபதி




 
8. "குஷ்புவின் உருவில் அன்னை இந்திராவைப் பார்க்கிறேன்..."
- இ.வி.கே.எஸ்.இழ்ழங்கோவன




 
7. "மாற்றம்-முன்னேற்றம், முதல் நாள்(!) முதல் கையெழுத்து.."
- லவ் பெல்




 
6. "மா.மி.பு.த.இ.தெ.டா.அ. ஆணைக்கிணங்க தமிழகத்தில் அதிகளவு மழை பொழிந்துள்ளது..."
- சேலம் கலெக்டர் சம்பத் IAS 




 
5. "ராணுவத் தளபதி போல் செயல்பட்டார் முதல்வர்..."
- டினமழர்




 
4. "ஒன்னு குடுக்கட்டுமா..?!"
- ஏ.சி.பி. சார்




 
3. "இதுவே எனது கடைசி தேர்தலாக இருக்கலாம்.."
- டலீவர்




 
2. "கம்ம்ன்னு இருக்க மாட்டியா, தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க..."
- கேப்டன்




 
 1. "எனக்கென்று யாரும் கிடயாது, உங்கள் துன்பங்களை எல்லாம் நானே சுமக்கிறேன்.."
- ஆத்தா


4 comments :

  1. அனைத்தையும் படித்து விழுந்து வுலுண்டு சிரித்தேன் நண்பரே
    தமிழ் மணம் 2

    ReplyDelete
    Replies
    1. நாலு பேரு உருண்டு பொரண்டு சிரிச்சா எதுவுமே தப்பில்ல...

      Delete
  2. செம கலக்கல்.ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது:)

    ReplyDelete
    Replies
    1. தளத்திற்கு முதன்முதலாக வருகிறீர்கள் என நினைக்கிறேன்.
      நன்றி..

      Delete