Saturday 17 June 2017

அன்பு அறன் அரண் உடைத்து...

டிஸ்கி:
ரெண்டு பேரை ஒரே வீட்டுலயோ வேற வேற வீட்டுலயோ வெச்சு ஓட்டுற வீரப்பரம்பரைகளுக்கும், காதலியுடன் சேர்ந்து மனைவியையோ காதலனுடன் சேர்ந்து கணவனையோ போட்டுத் தள்ளும் சைக்கோக்களுக்கும், இந்த postக்கும் சம்பந்தம் இல்ல...

கல்யாணம் பண்ணி சில பல வருடங்களுக்கு அப்புறம், அது முப்பதுலயோ நாப்பதுலயோ வேற நபர் கூட நெருங்கிப் பழகக் கூடிய சூழ்நிலை உருவாகலாம். ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரியான matured wave length இருக்கலாம். நிறைய பேசப் பழக போகப் போக 'வாவ்... இதான் என் ஆளு.."ன்னு கூட தோணலாம். சில பேர் சொல்லிடலாம், பல பேர் சொல்லாம விட்டுடலாம்... உரிமை கொண்டாட முடியலைனாலும் நெறய அன்பு செலுத்தலாம்.

சின்ன வயசுல சிலேட்டுல போட்டு பழகுற நாலுபுள்ளி கோலம் போலத்தான் இந்த relationship, ஆரம்பிக்கிற இடத்துல கொஞ்ச நாள்லயோ, கொஞ்சம் வருடங்கள்லயோ வந்து நின்னுடும்.... ஆனா வெளியிருந்து பாக்கிறவங்களுக்கு எங்க ஆரம்பிச்சது, எங்க முடிஞ்சதுன்னு தெரியாது, அவங்க பார்வையில தொடர்ந்து கோலம் வரையப்பட்டு கொண்டே இருப்பது போல் தெரியும்.

கணவன் வேறொரு பெண்ணுடன் இது போன்று ஒரு relationshipல் இருப்பது மனைவிக்கு தெரிய வந்தால் அவள் முதலில் சாடும் இடம் அந்த மூன்றாம் பெண்ணின் கேரக்டரை தான், அடுத்தது குழந்தைகள், தற்கொலை என emotional blackmailகள், arranged marriage கேஸுகள் என்றால் சொல்லவே வேண்டாம், அம்மா அப்பா அண்ணன் தம்பி தாய்மாமன் என பெரிய பஞ்சாயத்தை நடத்தி கணவனை வெறிகொண்டு தாக்கி பழிவாங்குவார்கள். அவன் சந்திரமுகியுடனே பழியாக விழுந்து கிடக்கும் தேவதாஸ் போன்ற பிம்பத்தை உருவாக்கி உருவி ஓட விடுவார்கள்...

மனைவி வேறொரு ஆணுடன் relationshipல் இருந்தால் கணவனின் முதல் வார்த்தையே உடல் ரீதியாகத்தான் இருக்கும், 'இந்த வயசுல ஏன் இப்படி அடுத்தவனுக்கு அலையுற, என் கூட உனக்கு பத்தலயா, பகல்ல அவன்கூட இருந்ததுனால தான் ராத்திரி என்கூட வரமாட்ரியா' இந்த ரேஞ்சுல இன்னும் நெறய...

மனைவியைப் பொறுத்தவரை கணவனுடைய உடமை தனக்கு மட்டுமே, கணவனைப் பொறுத்தவரை மனைவியின் உடல் தனக்கு மட்டுமே சொந்தம்ன்ற எண்ணம் வழிவழியாக ஆழப் பதிய வைக்கப் பட்டதுதான் இப் பிரச்சினையை சற்றும் யோசிக்காமல் அணுகி உறவை சின்னாபின்னப் படுத்துவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

அதுவும் இந்த தமிழ் நியூஸ்பேப்பர் காரனுங்கள எவ்ளோ அசிங்கமா வேணாலும் திட்டலாம். இந்த உறவுக்கு அவனுங்க வெச்சிருக்க பேரு கள்ள காதல், அந்த பெண் ஆசை நாயகி. காதல்ல ஏதுடா நல்ல காதல் நொள்ள காதல். வெறும் தேடலும் புரிதலும் மட்டும் தான் அது.

சரியா தவறா புதிரா புனிதமான்ற சமாச்சாரத்துக்குள்ள எல்லாம் போகல. அவங்களை பொறுத்த வரைக்கும் ஒன்றாக காபி குடிப்பதும் ஒன்றாக படுக்கையில் இருப்பதும் ஒன்று தான். திருமணம்-குழந்தை-கடன்-சொந்தங்கள் போன்ற commitment அவர்களுக்கு இல்லாததால் கடைசிவரை பிரியாமல் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை.

இதான் சான்ஸ்ன்னு மன்னிக்க முடியாத குற்றம், நம்பிக்கை துரோகம், முதுகுல குத்திட்டன்ற பெரிய வார்த்தையெல்லாம் போட்டு அவங்களை வெச்சு வெளுக்கறதுக்கு பதிலா பொறுமையா உட்கார்ந்து புரிஞ்சு பேசினா ரொம்ப சுலபமா இதை தீர்த்துடலாம். அவங்களுக்குள்ள இருக்க குற்றவுணர்வே அவர்களை பறவைகள் கூடு திரும்புவது போல ரொம்ப சீக்கிரமே திரும்ப கொண்டு வந்து சேர்த்திடும்.



 - அன்புடன் 
 - மலர்வண்ணன்

4 comments :

  1. நல்லதொரு அலசல் நண்பரே... பேசித்தீர்க்கலாம்

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க... எதுவா இருந்தாலும், அது ஒன்னு தான் தீர்வு

      Delete
  2. செம ப்ரோ!!! நான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்த ஒரு சப்ஜெக்ட்....ஆனால் உங்களைப் போன்று சுவாரஸ்யமா எழுதிருப்பேனா என்று தெரியலை....ஹஹஹ அதாவது இப்படி வார்த்தைகள்...ஆனால் ஏனோ எழுதலை...மனதில் இருப்பதை அப்படியே கிடப்பிப் போட்டுவிட்டேன். ஆண் பெண் நட்பையே அதுவும் 50 தாண்டினா கூட ஏற்றுக் கொள்ள முடியாத சமுதாயம்...

    ஆண்கள் மட்டும் சொல்லுவதில்லை மலர்...பெண்களும், //'இந்த வயசுல ஏன் இப்படி அடுத்தவனுக்கு அலையுற, என் கூட உனக்கு பத்தலயா, பகல்ல அவன்கூட இருந்ததுனால தான் ராத்திரி என்கூட வரமாட்ரியா' இந்த ரேஞ்சுல இன்னும் நெறய...// இதை பெண் சொன்னால் எப்படி இருக்கும்னு ன் க்குப் பதிலா ள் சேர்த்துக்கங்க...அப்ப்டிப் பெண்களும் பேசுகிறார்கள்...

    ஆண் பெண் நட்பு என்பது இன்னும் இந்தச் சமுதாயத்தில் சரியான புரிதல் இல்லை..நாங்கள் இருவரும் வேறு வேறு இடத்தில் இருந்து கொண்டு எழுதுவதே பல சமயங்களில் பிரச்சனைகள் வருகிறதுதான்....அதையும் சமாளித்து வருகிறோம் என்பது வேறு விஷயம்.....

    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இந்த சப்ஜெக்டில் இந்த விஷயத்தில் நீங்கள் சொல்லுவது போல் பேசித் தீர்த்துவிடலாம்...சரி நான் ஏன் இந்த சப்ஜெக்ட்டை (ஆனா தலைப்பே வைக்கல என் எண்ணங்களுக்கு) எழுத நினைத்தேன்....ஆனால் எழுதவில்லை???!!!!.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பெண்கள் எப்படியெல்லாம் கேள்வி கேப்பாங்கன்னு ஒரு பெண்ணே எழுதினா நல்லாயிருக்கும் கீதா...
      எழுதுங்க..
      நினைக்கிறதோட நிறுத்தாம எழுதுங்க

      Delete