Wednesday, 6 July 2016

அறிந்தும் அறியாமலும் - Final Conflict

அறிந்தும் அறியாமலும் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களுக்கு மேல் தொடர வேண்டாமென்று தான் இருந்தேன்.  இரண்டாம் பாகத்தின் இறுதி வரிகள் "குழந்தைகளுடன் நட்புடன் இருங்கள், அவர்களின் நம்பிக்கையை சம்பாதியுங்கள், குழந்தைகளை நம்புங்கள்...!!" என்றுமுடித்திருந்தேன்.

இன்று வலைதளத்தில் http://indiatoday.intoday.in/story/morphed-images-on-facebook-drive-salem-woman-to-suicide/1/702582.html இந்த செய்தியைப் பார்த்த பின் மிகுந்த வேதனையுடன் எழுதுகிறேன்.  வினுப்ரியா தற்கொலை செய்தியை கேள்விப்பட்டவுடன் முதலில் என் மனைவியிடம், "என்ன இப்பெண்ணை கொஞ்சம் கூட தைரியம் இல்லாம வளர்த்து வெச்சிருக்காங்க, இந்த மாதிரி சமயத்துல பெற்றோர் தானே ஆதரவா இருக்கணும்..., ஒரு வேளை அவங்களே இப்பெண்ணை சந்தேகப் பட்டு மனம் புண்படுற மாதிரி பேசியிருப்பாங்களோ..!!"ன்னு வருத்தப்பட்டு சொல்லிட்டு இருந்தேன்.

அதுதான் நடந்திருக்கு...


ஒருவேளை இக்கடிதம் வினுப்ரியா தான் எழுதியிருந்தார் எனும் பட்சத்தில் அவர் போட்டோவை morphing செய்து வெளியிட்ட சைக்கோ பொறம்போக்கிற்கு அடுத்த குற்றவாளிகளாய் கருதப் பட வேண்டியவர்கள் அவருடைய பெற்றோரே.

"காலேஜுக்கு போனோமா வந்தமான்னு இல்லாம கண்டவன்கிட்டயும் பல்லைக் காட்டிட்டு வந்திருப்பா.."
"இவ சும்மா ஒழுக்கமா இருந்திருந்திருந்தா இன்னைக்கு நமக்கு இப்படி ஒரு அவமானம் வந்திருக்குமா...?!"
"வெளிய தலை காட்ட முடியல, செத்துறலாம் போல இருக்கு, இதெல்லாம் பாத்துக்கிட்டு இவ மட்டும் எப்படித்தான் இருக்காளோ.."
"இனி எந்த முகரைய வெச்சிக்கிட்டு இவளுக்கு மாப்பிள்ளை தேடுறது..."
"பேசாம நம்ம எல்லாரும் குடும்பத்தோட சாவலாம், நம்ம செத்தப்புறம் இவ மட்டும் எவன் கூட வேணாலும் சந்தோஷமா இருக்கட்டும்..."

இது போன்ற அல்லது இன்னும் தரக் குறைவான வசவுகளை வினுப்ரியா அவரின் பெற்றோரிடமிருந்து பெற்றிருக்கக்  கூடும்.  ஏற்கனவே இருந்த மன உளைச்சலில் இதுவும் சேர்ந்து கொள்ள சாவது தான் ஒரே வழியென முடிவெடுத்திருக்கலாம்.

கர்ப்பிணி மனைவியை பெண் டாக்டரிடம் check up க்கு அழைத்துச் செல்லும் போது கணவனை, "நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க சார்.."ன்னு சொல்ற சமூகத்துல தான் இன்னும் வாழ்ந்திட்டு இருக்கோம்.
"என் மனைவி, அவள் கர்ப்பத்திற்கு காரணம் நான், வயிற்றில் இருக்கும் குழந்தை என்னுடையது, என்னை மீறி அப்படி உள்ளே என்ன தான் செய்வீர்கள்? நான் ஏன் வெளியே இருக்க வேண்டும்?  நான்  பார்த்திராததையா நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்..?!  என எந்த ஆணும் கேட்பதில்லை.  அது பொம்பளைங்க சமாச்சாரம் என அதற்கு சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்க வேண்டியது.

இப்படி உள்ள ஒரு சமூகத்தில் நிர்வாணம் என்பதும் ஒரு சாதாரண விஷயம், அது வெறும் anatomy மட்டுமே எனப் புரிய வைப்பது ரொம்பக் கடினம்.  குழந்தை முதலே அதைப் புரிய வைத்து பழக்கப் படுத்த வேண்டும்.

வினுப்ரியா விஷயத்தில் பெற்றோர் மட்டும் அவருக்கு ஆறுதலாக இருந்திருந்தால் அல்ப ஆயுசில் அவரை இழந்திருப்பதை தடுத்திருந்திருக்கலாம்.

"எல்லாம் தனக்கு வர்ற வரைக்கும் மட்டுந்தான், நாளைக்கு உங்க வீட்ல உள்ள ஒரு பெண்ணுக்கு இப்படி நடந்தா நீங்களும் இப்படித்தான் இருப்பீர்களா?  கோவமே வராதா?"  என ஆறாவது அறிவை கொஞ்சம் கூட உபயோகப் படுத்தாமல் யாராவது கேட்டாலும், அவர்களுக்கான பதில், "ஆம்... உயிர் முக்கியம்..."

குழந்தைகளுடன் நட்புடன் இருங்கள், அவர்களின் நம்பிக்கையை சம்பாதியுங்கள், குழந்தைகளை நம்புங்கள்...!!

 

10 comments :

 1. முதலில் "சிறந்த பதிவு தொடருங்கள்" என்று ஒரு பின்னூட்டம் போட்டு விட்டு கிளம்பலாம் என்று இருந்தேன். பின்னர்...அது தவறல்லவா என்று என்னையே திருத்தி கொண்டு ...

  நீங்கள் சொன்ன கூற்று மிக்க உண்மையே. அதுவும் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள், தங்கள் ராசாதிக்களோடு பேசி கொண்டே இருக்க வேண்டும். 13 -18 வயது பெண் பிள்ளைகளுக்கு தங்கள் பெற்றோர்கள் பேசுவது அனைத்துமே தவறு என்பது போல் தான் தெரியும். அவர்களையும் அனுசரித்து கொண்டு... அந்த இடத்திலேயும் ஒரு மொக்கை ஜோக் ஏதாவது சொல்லி அவர்களின் சிரிப்பையும் நம்பிக்கையும் பெற வேண்டும். தகப்பன் ஸ்தானத்தில் இருப்பவர் ஓவொரு பிள்ளையிடமும் தனியாக நேரம் செலவிட வேண்டும். பிள்ளையோடு தனியாக செஸ், கேரம், தாயம், டென்னிஸ், கோல்ப் என்று தனியாக அழைத்து சென்று நேரம் செலவிடவேண்டும்.

  இப்படி எல்லாம் தான் பின்னூட்டம் எழுதலாம்னு நினைத்தேன்.. நேரம் இல்லாததால்..

  "சிறந்த பதிவு, தொடருங்கள்... "ன்னு சொல்லிட்டு கிளம்புறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி - சிறந்த பின்னூட்டம்... தொடருங்கள்

   Delete
 2. கர்ப்பிணி மனைவியை பெண் டாக்டரிடம் check up க்கு அழைத்துச் செல்லும் போது கணவனை, "நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க சார்.."ன்னு சொல்ற சமூகத்துல தான் இன்னும் வாழ்ந்திட்டு இருக்கோம்.
  "என் மனைவி, அவள் கர்ப்பத்திற்கு காரணம் நான், வயிற்றில் இருக்கும் குழந்தை என்னுடையது, என்னை மீறி அப்படி உள்ளே என்ன தான் செய்வீர்கள்? நான் ஏன் வெளியே இருக்க வேண்டும்? நான் பார்த்திராததையா நீங்கள் பார்க்கப் போகிறீர்கள்..?! என எந்த ஆணும் கேட்பதில்லை. அது பொம்பளைங்க சமாச்சாரம் என அதற்கு சம்பந்தமே இல்லாத மாதிரி இருக்க வேண்டியது.//

  மிகச் சரியான வார்த்தைகள். இது பொம்பளைங்க சமாச்சாரமா...ஹஹஹஹ சரி இதுக்கு மேல நான் ஏதாவது சொன்னா
  //இப்படி உள்ள ஒரு சமூகத்தில் நிர்வாணம் என்பதும் ஒரு சாதாரண விஷயம், அது வெறும் anatomy மட்டுமே எனப் புரிய வைப்பது ரொம்பக் கடினம். குழந்தை முதலே அதைப் புரிய வைத்து பழக்கப் படுத்த வேண்டும்.// இதுவும் ஐ ஃபுல்லி அக்ரீ. ஐ டிட் ஃபார் மை சன். பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல மலர் ஆண் குழந்தைகளுக்கும் பொருந்தும். நாம் நண்பர்கள் போல அவர்களுடன் பழக வேண்டும்
  அப்பா படம் பார்த்தீர்களா...மலர்..

  நல்ல பதிவு மலர். இன்னும் நீங்கள் எழுதலாம்.
  கீதா

  ReplyDelete
  Replies
  1. நன்றி கீதா.
   -
   சமுத்திரகனிக்கு பயந்துட்டே அப்பா படம் இன்னும் பாக்காம இருக்கேன்..
   "சாட்டை"யில அவரு பேசுனா பேச்சே இன்னும் முதுகுல வரிவரியா இருக்கு..

   Delete
 3. போட்டு தாக்கு! டாக்டர்களை போட்டுத் தாக்கு...!
  உண்மையில் தனியாக வரும் பெண்களை சோதனை செய்யும் பட்சத்தில் ஒரு லேடி நர்ஸ் வைத்துக்கொள்வது முக மிக அவசியம்! கதவை மூடும் பட்சத்தில் அவசியம் வேறு ஆள் இருக்கவேண்டும்!

  ஆமாம்! இந்த பெண்ணு என்ன வெள்ளைக்காரியா? தமிழில் எழுதத் தெரியாதா? தங்லிஷ் எழுதியுள்ளார்கள். ஆக்ஸ்போர்டு ஆங்கில பேராசிரியர் எந்தே-ஜெயமோகன் கிட்டே ஆங்கிலம் வழியா தமிழ் படித்தார்களா?
  ----என்ன கொடுமைடா! அதுவும் சாகும் போது கூட படித்த டிகிரி போடுகிறார். சாகும் போது கூட பெருமையா?

  இங்கே என் மகள் மகன் கல்யாணத்திலே பெற்றோர்கள் டிகிரியும் போடமாட்டோம். மணமகள்/மணமகன் டிகிரியும் போடமாட்டோம். கண்ணாலம் படிப்புக்கு அல்ல! ஆணுக்கும் பெண்ணுக்கும்! டாக்டர் என்று கூட போடமாட்டோம். மொட்டையா பேர் மட்டும் தான். No prefixes or suffixes at all!

  ReplyDelete
  Replies
  1. கிராமத்தில் உள்ள இங்கிலிஷ் மீடியத்தில் படித்திருக்கலாம், so தமிழில் ர ற ல ள ழ ந ன ண குழப்பங்கள் இருந்திருக்கலாம். again கிராமத்தில் பலரும் default ஆக பெயருக்குப் பின் டிகிரி போடும் பழக்கமுடையவர்கள்.

   மற்றபடி இப்பதிவில் டாக்டர்களை எல்லாம் சுரண்டவில்லையே...

   Delete
  2. மலர்!
   சென்னையிலும் ஏன் சினிமா நடிகர்கள் கூட டிகிரி போடுவார்கள். ஜெய் சங்கர் BA என்று போட்டு பார்த்து இருக்கேன்.

   அப்புறம் இந்த நடிகர்..இவருக்கு பட title-ல் டாக்டர் பட்டம் எதுக்கு? (இது தாண்டா போலீஸ் நடிகன்) அதே மாதிரி எதுக்கு இயக்குனருக்கு டிகிரி!

   இங்கு படித்த நடிகன் உதாரணமா...Tommy Lee Jones, Harvard university student (Vice-president Al. Gore's room mate என்று எவ்வளவு பேருக்கு தெரியும்?)

   Delete
  3. இம்புட்டு சொல்றிங்களே.. போன வருஷம் நடிகர் சங்க தேர்தலில் ராதிகா சரத்குமார் (அக்கா ராதிகா நாயுடு) என் கணவர் ரொம்ப படிச்சவர்.. என் சகோதரன் ராதா ரவி ரொம்ப படிச்சவர்ன்னு சொன்னாங்களே .. அதுக்கு என்ன சொல்ல போறீங்க..

   Delete
  4. மலர்!
   டாக்டர்களை நன்னா குத்துங்க எஜாமன்! நானும் சேம்-சைடு கோல் போடபோகிறேன்! நன்னா படியுங்க! நீங்க போட்ட விக்ரம்-சாமுராய் படத்தை பத்திய பதிவு--என் அந்த நாள் நியாபங்களை உசுப்பி உட்டு விட்டது!

   ஒரு டியர்...அந்த ஸ்டில்லின் வசனம்...என் நினைவில் இன்றும் உள்ளது...

   அவர்கள் கேட்ப்பார்கள்.
   பெயர் தியாகராஜன் MBBS; அப்பா பெயர் நல்லமுத்து சாமி! அம்மா பெயர் ________ காமேஸ்வரி! உங்களுக்கு என்ன வேண்டும்!

   வருகிறேன்...புது வீச்சோடு கல்லூரி நியாபகங்கள் சுமந்து கொண்டு!

   Delete
  5. சீக்கிரம் வாங்க வாத்யாரே... வெயிட்டிங்

   Delete