நான் +1 படிச்சிட்டு இருக்கையில எங்க நல்லொழுக்க (அப்படி-ன்னு ஒரு பாடம்,
வாரத்துக்கு ஒருக்கா ஒரு கிளாஸ் இருக்கும்) ஆசிரியர் சொன்ன ஒரு கிசுகிசு..

ஒருக்கா நம்ம தலீவரும், கவிஞரும் ஒரு படத்துக்கான வசனத்தையும்,
பாடல்களையும் மாடர்ன் தியேட்டர்ஸ்ல உக்காந்து முடுக்கி முடுக்கி எழுதையில,
ராவானதும் ஆளுக்கு ரெண்டு ரவுண்டு ராவா போட்டுட்டு வேட்டைக்கு
கிளம்பியிருக்காங்க..
சென்னையா
இருந்தா தலீவரு வரிசையா கொண்டு வந்து நிறுத்தியிருப்பாரு.., சேலமாச்சா,
ஒன்னும் கெடைக்கல.. ஒரு வழியா புரோக்கர புடிச்சு ஒரு இடத்துக்கு போய்
சேந்தாங்க.. லேசான இருட்டுல நாலஞ்சு பேர கொண்டாந்து காட்ட, தலீவர் ஒருத்தர
டிக் பண்ணியிருக்காரு.. "ரூம்ல வெயிட் பண்ணுங்க சார், வரும்"ன்னு புரோக்கர்
சொல்லிட்டு 10 நிமிசம் கழிச்சு அனுப்பி விட்டிருக்கான்.
போன வேல
முடிஞ்சது. கவிஞர் தலீவரிடம் "காசு குடுத்திருப்பா"ன்னு சொல்ல, தலீவரோ "நீ
வெச்சுருப்பன்னு நான் கொண்டு வரலியே"ன்னு சொல்ல சன்னமா ரெண்டு பேருக்கும்
கசமுசா ஆகிடுச்சி.. விடுவாரா நம்ம தலீவரு.. "ஆடாம இரும் கவிஞரே, நான்
பாத்துருக்கேன்"னுட்டு, புரோக்கர கூப்பிட்டிருக்காரு..
அவனைப்
பாத்து நம்ம தலீவரு மூஞ்சிய உக்கிரமா வெச்சுகிட்டு, "ஏன்டா, ஆரு கிட்ட உன்
வேலைய காட்டுற, காட்டுனது 18, அனுப்பினது 32-ஆ?, பிச்சிபுடுவேன்,
நாங்கெல்லாம் ஆருன்னு தெரியுமில்ல, நாள பின்ன நீ தொழில் நடத்துனுமா
வேண்டாமா"-ன்னு வேட்டிய தூக்கிட்டு எகிற, புரோக்கரோ, "அய்யா தொர, நீ ரூவாவே
தர வேணாம், முதல்ல எடத்த காலி பண்ணு"-ன்னு அனுப்பி வெச்சிட்டானாம்.
பி.கு: ஆராவது, ஆரு அந்த தலீவரும் கவிஞரும்-ன்னு கேட்டாக்க "ஜில்லா" படத்துக்கு டிக்கெட் வாங்கி குடுத்துருவேன்..!!