Tuesday, 26 January 2016

"பத்தமடை பாய்" விருது

இன்று மாலை ஆறரை மணிக்கு மாஸ்கோவிலிருந்து ஐரோப்பிய பாரம்பரிய உயரதிகாரியான கில்மாசபனோவ் என்பவர் அழைத்தார்.  எனக்கு வரும்  லா-டோமாடின பண்டிகையன்று எஸ்பானியலில் "பத்தமடை பாய்" விருது அளிக்கப்படவிருப்பதாக அறிவித்தார்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே அதை நான் அறிந்திருந்தேன்.  மால்டாவிலிருந்து என் பால்யகால நண்பரான CIA வின் உயரதிகாரி என்னை கூப்பிட்டு பத்தமடை விருதுகளுக்கான நுண்ணிய முன்னோக்குப் பட்டியலில் என் பெயர் இருப்பதாகச் சொன்னார்.  என் எழுத்துக்களை ஒரு குழுவாக உட்கார்ந்து தீவிரமாக கழுவி ஊற்றும் தீவிர பக்த கலாச்சார உயரதிகாரி முயற்சியால் அப்போது என்பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.  ஆனால் அதை நான் வழக்கம் போல் என்னை கலாய்க்கும் கும்பலின் ஒரு வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன்.

முழு beep பாடலையும் நாவலாக எழுதும் கருங்குழல் தொடங்கியபோது அந்தப் பெரு முயற்சியை பிரபஞ்சம் முழுக்கக் கவனப் படுத்த வேண்டும் என்று உலகளாவிய நண்பர்கள் விரும்பினர்.  அதற்கிணையான இலக்கிய முயற்சியோ அதை ஒட்டிய கலாச்சார பண்பாட்டு நடவடிக்கையோ கூட உலகத்தில் எங்குமில்லை.  அதனால் மீண்டும் "பத்தமடை" விருதுக்கான முயற்சிகளை வெளிநாட்டு நண்பர்கள் முன்னெடுத்தனர் எனக்குத் தெரியாமலே... லியோ டால்ஸ்டாய், பியோதர் தாஸ்தாவோய்ஸ்கி, மிகல் டெ செர்வன்ட்ஸ், சார்லஸ் டிக்கன்ஸ் உள்ளிட்ட பலரும் என்னை பரிந்துரை செய்திருக்கின்றனர்.

நான் அதை அறிந்தது அம்முயற்சி பரவலாக கசிந்து அதற்கு எதிராக சா.நி., ம.பு., எஸ்.ரா., த.ம., நா.நா. போன்றோர் எழுப்பிய கசப்பின் வன்மங்கள் வழியாகத்தான். என் தவத்தை அவதூறு செய்யும் செய்திகள் முன்னாள் நண்பர்களால் முன்னெடுக்கப் பட்டபோது என்னுடைய fake id மூலம் அவர்களின் whats app குழுவில் புகுந்து அறிந்து கொண்டேன்... என்னா அடி!!  முயற்சிகள் என்றால் என் பங்காளியைப் பற்றிய ஒரு விரிவான குறிப்பும் கருங்குழலின் ஐம்பதினாயிரம் அத்தியாயங்களின் போர்த்துகீசிய மொழியாக்கமும் தான்.  beep பாடல் டைனசர் போல, அதற்கான விளம்பரத்தை அதுவே உருவாக்கிக் கொள்ளும்.  அதைக் கேட்ட அனைவரும் அதன் உள்ளர்த்தத்தை உணர்ந்தனர் என்பதே வழிகளை வலியில்லாமல் ஆக்கியது.

ஆனால் அண்டார்டிகாவில் எழுந்த காந்தப் புயலால் கசங்கி இவர்களிடமிருந்து எதையும் உருவிக் கொள்ளப் போவதில்லை என்றும் இவர்களின் எந்தவொரு பூப்பு நீராட்டு விழாவிலும் கலந்து கொள்வதில்லை என அறிவித்தேன்.  சிலநாட்களுக்கு முன் Mujer  எஸ்பாநியல் இதழில் என்னுடைய மிக நீளமான கிட்டத்தட்ட 12 நாடிகல் மைல் இருக்கும் பேட்டி ஒரு பெட்டிச் செய்தியாக வந்தது.  அதில் கருங்குழல் குறித்து விரிவானதொரு சுருக்கமாக பேசப் பட்டிருந்தது.  "பத்தமடை பாய்"க்கு அதுவும் ஒரு காரணமாகியது.

திரு.கில்மாச்பநோவிடம் நான் இதை மறுக்கிறேன் என அறிவித்தவுடன் அதிர்ச்சியுடன் “எண்ணிப் பார்த்துதான் சொல்கிறீர்களா?” என்றார்.  "நல்லா எண்ணிப் பாத்துட்டேன், ரிடர்ன் லாரியில போகக் கூட பத்தாது.." என சொன்னவுடன் அவர் மேலும் அதிர்ந்தார்.  "இது UNO அளிக்கும் விருது அல்ல, 700 கோடி மக்களும் 7000 கோடி ஏலியன்களும் கொண்ட இப் பிரபஞ்சம் அளிக்கும் விருது" என்றார்.  "எனக்கு எல்லா beep ம் தெரியும், தேவையில்லை.." என்றேன். "இப்பதான் சந்தோசமா இருக்கு.." என்று சொல்லி அவர் வைத்து விட்டார்.

நான் மறுக்கும் அடிப்படை இதுதான், என் கிறுக்கல்களும் என்னைச் சுற்றியுள்ள கிறுக்கர்களும் எனக்கு முக்கியம்.  இலக்கியத்தின் அழகியல் நடுகீழ்மேல், அதனை ஏறி தழுவிய நான் ஒரு மேல், பி.வாசு முதல் பேரரசு வரை, சிம்பு முதல் அனிருத் வரை, நான் வரித்திருக்கும் இலக்கிய ஞானாசிரியர்களின் மேல் எனக்கிருக்கும் ஈடுபாடே என் செயல்பாட்டின் அடித்தளம்.  நவீன பாடல்கள் மேல் என் குருமரபாக வந்த ஞானத்தின் மேல் எனக்கிருக்கும் அழுத்தமான நம்பிக்கையையே நான் முன்வைத்து எழுதி வருகிறேன்.

கசப்பும் காழ்ப்புகளும் ஓங்கிய தமிழ்க் கருத்துச் சூழலில் வாங்கிய அடி, உதை மற்றும் அவமானங்களைக் கடந்து, தாக்குதல்களையும் தாண்டி நின்று கடந்த முன்னூறு ஆண்டுகளாக மிக மெல்ல நான் உருவாக்கியிருப்பது என் தரப்பு.  இவ்விருதால் பத்து பைசா உபயோகம் இல்லை என தெரிந்தால்  அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும்.

இவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் என்னாகும்? பொச்சரிப்பு பிடித்த நவீன இலக்கியவாதிகள் இதை நான் காசியப்பன் பாத்திரக் கடையில் வாங்கியது என்பார்கள்.  நடுவீதியில் க்வார்ட்டர் அடிப்பவர்களும், திறந்த வீட்டில் நியுட்ரல் அடிப்பவர்களும் நானும் அவர்களைப் போன்றவனே என்பார்கள். அவர்களுக்கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் முனி. முனி மட்டுமே.  என்னை வைத்து காஞ்சனா எடுக்கலாகாது...

என் ஒன்று விட்ட மச்சினியின் ஓரகத்தியோட புருசனுக்கும், என்னை ஓங்கி ஒன்னு விட்ட 7வது வீதியில் 4வது வீட்டிலுள்ள தாத்தாவின் 3வது மனைவியின் 4வது புருசனக்கும் மிக மிக வருத்தம். அறிஞர் அண்ணா என்ன சொல்வாரென்றெ தெரியவில்லை..

என் பெரும் வருத்தம் என்னவென்றால் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பலரும் கொண்ட இந்த தேசத்தை ஒரு பெரிய பண்பாட்டு வெளியாக எண்ணக் கூடியவன்.  குளங்களும், குட்டைகளும், எருமைகளும், தண்டவாளங்களும் என்னைப் பொறுத்தவரை தெய்வத் தோற்றங்களே... இவ்விருதை நான் மறுப்பதை குஷ்பூ புரிந்து கொள்வார்.  அவரில்தானே அன்னை இந்திராவைக் காண்கிறோம்..!!

Wednesday, 20 January 2016

இவனுங்களை என்ன பண்ணலாம்..!?


செவாலியே சூப்பர்ஸ்டார் வருங்கால அமெரிக்க ஜனாதிபதி விஜய் ஆண்டனி நடிப்பில்(!) வெளிவர இருக்கும் "பிச்சைக்காரன்" (பிச்சகாரனுக்கு செக்குருட்டி பிச்சகாரனேவா... யுனிபார்ம் பிரமாதம்) படத்தில் "பாழாப் போன ஒலகத்துல.."ன்னு ஒரு சமுதாய சீர்திருத்த தத்துவப் பாடல்.  முழுசா கேட்டிங்கனாக்க அம்புட்டையும் அவுத்துப் போட்டு (பாட்டோட பேரு க்ளாமர் சாங்) பரமண்டலத்தில் இருக்கும் பிதாவேன்னு பாவமன்னிப்பு கேட்க ஓடுவீங்க... அப்படியொரு உணர்வைக் கொடுக்கும்.

கவுஜய எழுதின லோகனோ, எவனோ அதுல என்ன சொல்றாருன்னா...

"கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுறான்...
தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்..."

தப்பு தப்பான்னா..., கவிஞருக்கு ஏதோ கோட்டா டாக்டர் ஊசிய பின்னாடி போடுறதுக்கு பதிலா முன்னாடி போட்டுட்டாரோ என்னமோ?

கோட்டாவுல சீட்டு வாங்கின சூத்திர டாக்டராவே இருந்தாலும் அவரு சுயமா படிச்சு பாஸ் பண்ணாத்தான் டாக்டராகி  கிளினிக் வெச்சு நடத்த முடியும்.  பாஸ் பண்றதுக்கெல்லாம் கோட்டா கிடையாது.   என்னவோ கோட்டாவுல சீட்டு வாங்கினவன் எல்லோரும் MBBS பெயிலாகி போலி டாக்டரா சுத்திட்டு இருக்க மாதிரியில்ல இருக்கு இவனுங்க சொல்ற தத்துவம்..!!

Quotaன்னாலே அறிவற்றவன், தகுதியற்றவன், திறமையற்றவன் பெரிய பதவிகளில் உட்காரப் பயன்படுத்தப்படும் ஒரு தந்திரம் என நன்கு படித்த அரிப்புஜீவிகள் அப்பப்போ கொந்தளித்து அடங்குவது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.  அவர்களின் பார்வைக்காக 2012-ம் ஆண்டின் cut-off லிஸ்ட் இதோ...
இந்த லிஸ்ட்ல தகுதியற்றவனோ, திறமையற்றவனோ இருக்கிறா மாதிரி என் மனசுக்குத் தெரியல.  அப்படியே இருந்தாலும் அவனுடைய பின்புலத்தை ஆராய்ந்தால் முதல் அல்லது இரண்டாவது தலைமுறையில் படித்தவனாக இருப்பான்.

வாச்சாத்தி, மேலவளவு, தின்னியம், கீழ்வெண்மணி, உத்தப்புரம், இளவரசன் இதுக்கெல்லாம் சற்றும் குறைவில்லாத வன்முறை சம்பவம் ரோஹித்வெமுளாவின் மரணம்...  பலரும் இச் சம்பவம் பற்றி பலதும் எழுதிக் கொண்டிருந்தாலும் ஒரு படம் முழுக்கதையையும் சொல்லிவிட்டது.
இம் மரணத்திலும் ஓர் அரிப்புஜீவி செய்த வேலை என்னன்னா, "தற்கொலை செய்து கொண்ட ரோஹித் ஒரு தலித்தே இல்லை. அவர் பிறப்பு சான்றிதழை செக் செய்து பார்த்ததில் அவர் ஆந்திரால ஓபிசி தான். அவர் தலித் என்று போடுவதற்கு முன்னால் அது உண்மைதானா என்று உறுதி செய்யுங்கள் " என்று facebook-ல் உளறிக் கொட்டியது பானு கோம்ஸ் என்ற கால் வேக்காடு!!  "இட ஒதுக்கீட்ல படிச்ச டாக்டர் கிட்ட ஊசி போட்டுக்க மாட்டேன்.."ன்னு சொன்ன அதே RSS மங்கையர்த் திலகம் தான் அது.
சாதிச் சான்றிதழுக்கும் பிறப்பு சான்றிதழுக்கும் கூட வித்தியாசம் தெரியாம அவசர அவசரமா வன்மத்தைக் கொட்டிய அந்த சம்முவ ஆர்வலர ஆளாளுக்கு கழுவி ஊத்த ஆரம்பிக்க கமுக்கமா போஸ்ட்ட டெலிட் பண்ணிட்டு பம்மிடுச்சு...

பொதுவாக ஒருவர் மீது தோன்றும் வெறுப்பில் அவரின் சொந்தங்களை வசைபாடுவதை முடிந்தவரை ஒரு போதும் செய்வதில்லை. ஆனா இப்படி ஒரு செய்தியை வெளியிட்ட ஒரு பொறம்போக்கை குலதெய்வம் வரை இழுத்து திட்டணும் போல இருக்கு...
பாலா-ராஜாவை விமர்சித்ததற்காக அல்ல...  என்னமோ சமுதாயத்தையே காப்பாத்துற பெரிய யோக்கிய beep மாதிரி,  நியூஸ் போடுற beep son அதுக்கு வரலட்சுமியோட தொப்புள் தெரியும் இடையை என்ன beepக்கு வெளியிடணும்!?

சமீபத்துல கொஞ்ச நாளா whatsapp ல சுத்திட்டு இருக்க கோமாதா சம்மந்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சியின் அதிர்ச்சிகர  முடிவுகள்:

நொய்யில ஆக்சிஜன் வர்றது, மழை கொட்டுறது கூட பொறுத்துக்கலாம்...,
ஆக்ஸிஜன சுவாசித்து ஆக்சிஜனையே வெளிய வுடுற கண்டுபிடிப்ப கூட தாங்கிக்கலாம்...,
ஆனா, கழுத்துல விஷத்த அடக்கி வெச்சுக்கிதுன்னு நாசா காரனே சொல்லிட்டான்னு விட்டான் பாரு...!! டேய்...!!


இந்த நாதாரிகளை என்ன பண்ணலாம்?!

---------

 

Thursday, 14 January 2016

தாரை தப்பட்டை - அடிச்சு பிரிச்சாச்சு...

நீங்க ஜல்லிக்கட்ட நடத்துங்க இல்ல நாசமா போங்க... ஒன்னுக்கு நூறு ஜல்லிக்கட்டு பாத்தாச்சு... வரலட்சுமியோட தாரை தப்பட்டை ஆட்டம் தான்...!! யப்பா என்னா ஆட்டம்டா...!! அதுவும் ஆடும் போது ஏறிய மேலாடையை தோரணையாக இறக்கி விட்டு அடுத்த குத்தை ஆரம்பிப்பது... அப்பப்பா...!! கூட ஆடுன மத்தவங்களையும் சும்மா சொல்லக் கூடாது, ச்சும்மா பிச்சு உதறிட்டாங்க..., பொங்கல் போனஸ்சா காயத்ரி ரகுராமோட கலகலப்பான ஒப்பாரி ஆட்டம்...!!

GMகுமார் தவில் வாசிப்புக் காட்சியிலிருந்து ஆரம்பிக்கும் ராஜாவின் ராஜாங்கம் இன்னுமொரு ஆயிரம் படத்துக்கு தாங்கும். சன்னாசி, சூறாவளிக்கு மேக்அப் போடும்போது "ஆட்டக்காரி மாமன் பொண்ணு" பாடலை instrumental bgm-மாக வருவதாகட்டும், இடிந்த கட்டிடத்தினுள் இருந்து ஆட்ட கோஷ்டி வெளியே வருவதாகட்டும், பின்னணி-முன்னணி...!! climax சண்டைக் காட்சிக்கு தாரை தப்பட்டை theme இசையை கோர்த்த அந்த 5 நிமிடம் அகோர தாண்டவத்தின் உச்சம்...!!

"ஆட்டக்காரி மாமன் பொண்ணு..." பாடல் படத்தில் இல்லாதது ஏமாற்றம். அமுதவாணன் தங்கை கேரக்டருடன் பாடும் பாடல் ஆடியோ ரிலீசில் இல்லாதது மகிழ்ச்சி, beep பாடலே கிட்ட நிக்க முடியாது. விஜய் சூர்யா ரஜினி கமல் அஜித் என அனைவரையும் ரவுண்டு கட்டி அடித்த அடி, ஐயோ..!! குறிப்பா "ஒன்னார்ரூவா ப்ளேடு வாங்கி செரச்சு வெச்சிருக்கேன்...", "சோடா, சோடா இவன் குண்டு இல்லாத சோடா...", "பொதுவாக எம்மனசு தங்கம் ஒரு பொம்பளைய பாத்துப்புட்டா தொங்கும்..."

கலாசார காவலர்கள், மாதர் சங்கங்கள் மீண்டும் ஒரு ரவுண்டு வர வாய்ப்பிருக்கு...!! ஆனா இணைய அறச்சீற்ற நட்புறவுகள நெனச்சா தான் டரியலா இருக்கு. அதுவும் குறிப்பா பாலா-இளையராஜவ புடிக்காதவங்களுக்கு ஒரு வாரத்துக்கு புர்ர்ச்சி பண்ணி போராடுற அளவுக்கு மேட்டர் இருக்கு. மீண்டும் "அறிவிருக்கா..."ன்னு ஆரம்பிச்சு கும்மியடிக்கலாம்.

படத்துல கஞ்சா அடிக்கிற சீன் இல்லாம பாலாவுக்கு படம் எடுக்க வராது போல...!!

பக்காவான பாலா டெம்ப்ளேட் படம்... விளிம்பு நிலை மனிதர்கள், கொடூர வில்லன், அவனுடைய அதிகொடூரமான சாவு.., etc, etc..
கர்ப்பிணிகள் குழந்தை பிறக்கும் வரை இப்படத்தை பார்க்க வேண்டாம், 18 வயசுக்கு கீழுள்ளவர்கள் வயசுக்கு வர வரைக்கும் வெயிட் பண்ணி பார்க்கலாம்.


தாரை தப்பட்டை - அடிச்சு பிரிச்சாச்சு...

Sunday, 3 January 2016

பொங்கியெழும் மனோகரன்களுக்கு ஒரு வேண்டுகோள்...

மேலே உள்ள படம் கடந்த இரண்டு நாட்களா facebook, whatsapp, twitter என சுத்திக் கொண்டு இருக்கு.

அரசாங்கம் அறிவித்துள்ள 10லட்சம் வருமானத்துக்கு மேலுள்ளவர்களுக்கு கேஸ் மானியம் ரத்து என்ற அறிவிப்பிற்கு இணையாக 10லட்சம் வருமானத்திற்கு மேலுள்ளவர்களுக்குண்டான Reservation-யும் ரத்து செய்தால் என்ன என்று பல அறச்சீற்ற கனவான்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதை முழுமையாக ஆதரித்து வழிமொழிகிறேன்...


எரிவாயு பற்றாக் குறையைப் போக்க இயலாத அரசாங்கத்த தட்டி கேக்காம, எப்படா சான்ஸ் கிடைக்கும் வேதாளத்தை நெளிய விடலாமென காத்திருக்கும் இந்தப் பொங்கியெழும் மனோகரன்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்...


முதல்ல உங்க ஏரியாவுல இருக்க காலனிப் பகுதிய சீரமைச்சிட்டு (ஒழிச்சுக் கட்டிட்டு இல்ல),
உங்க வீட்டு சாக்கடையில நீங்களே இறங்கி அடைப்பெடுத்துட்டு,
வர்ணாசிரமத்தையும் மனுஸ்ம்ருதியையும் மயானத்துல நீங்களே இறங்கி குழிவெட்டி புதைச்சிட்டு,
10லட்சத்துக்கே மேல சம்பளம் வாங்குற யாராயிருந்தாலும் உங்க வீட்டு வாரிசு விரும்பும் பட்சத்தில் பெண் எடுக்கும்/கொடுக்கும் மனநிலையோட,
Equality-க்கும் Justice-க்கும் உள்ள வித்தியாசத்தை புரிஞ்சிக்கிட்டு,
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதியது எட்டு பேர் சேர்ந்த ஒரு குழு என்பதை தெரிஞ்சுகிட்டு...

அப்புறமா வந்து சமூக அநீதிக்கு எதிரா மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் போங்க..!!

Saturday, 2 January 2016

நம்பள்கியின் "கான்டம்" பதிவிற்கு பதிலடி

பிரபல பதிவர் நம்பள்கி (நமக்கு நாமே சொல்லிக்க வேண்டியது தான்) ஒரு சிறந்த மருத்துவர், பண்பாளர், படித்தவர் (படிச்சா தானே வைத்தியம் பாக்க முடியும்!!) மூத்தவர், முற்றும் அறிந்தவர் இன்று எழுதிய பதிவைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த லிங்க் இதோ: காண்டம் பற்றி விஷால் பேசியது தப்பு!: காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும்!

மாதர்குல மாணிக்கம் சொன்ன அரிய கருத்தை அறியாமல் அதை மனைவி, கடவுள் என முடிச்சுப் போட்டு புனிதத்தை புண்ணாக்கி..., என்ன ஒரு சிறுபிள்ளைத்தனம் நம்பள்கியாரே..?!  கேள்வி கேட்க ஆளில்லை என்ற நினைப்பா?

அவருக்கான பதில் கீழே.., என் சீர் விருத்த ஆசிரியப்பாவில்.....

கண்டம் விட்டு கண்டம் போனாலும்
கான்டத்த மட்டும் கண்டுக்காம விடுங்க
கான்டம் போட்டா கடவுளே காண்டாவாரு
ஆறு காண்டங்கள் எழுதிய கம்பரே
ரப்பர் கான்டத்தை தொடவில்லையே...
கண்டம்ண்ட் ஆப் கோர்ட் தான் இருக்கே ஒழிய
கான்டம்ட் ஆப் கோர்ட் அறிந்ததுண்டா
கான்டத்த கண்டுபுடிச்சவன் கெடச்சா
கண்டதுண்டமா ஆகிடுவான்
காண்டாமிருகமே கண்டு நடுங்கும் நம்ம ஆள (கோடிட்ட இடத்துல beep கூட போட்டுக்கலாம்)
கான்டத்த கண்டுக்கோடான்னு சொல்வீங்களா?
கண்ணு தெரியாத கணவனுக்காக கண்ணை கட்டிகிட்ட காந்தாரி
அவன் கான்டம் போட்டிருந்தா என்ன பண்ணியிருப்பா?!


இப்படிக்கு,
 - கான்டத்தை விமர்சிப்பவர்களை கண்டம் பண்ணுவோர் சங்கம்
Caption: (கண்டுக்காம போ, இல்ல கட் பண்ணிடுவோம்)Friday, 1 January 2016

2015 - அவார்டெல்லாம் கிடையாது, எனக்குத் தோனினது மட்டும்...

சிறந்த எடிட்டிங்:
Nominees
புவன் ஸ்ரீனிவாசன் - டிமாண்டி காலனி
லியோ ஜான் பால் - இன்று நேற்று நாளை
அனுசரண் - கிருமி
சௌந்தர் ராஜா - CSK
Winner - லியோ ஜான் பால் - இன்று நேற்று நாளை

சிறந்த ஒளிப்பதிவு:
Nominees
பி.சி.ஸ்ரீராம் - ஓகே கண்மணி
சானு ஜான் வர்கீஸ் - தூங்காவனம்
பி.சி.ஸ்ரீராம் - ஐ
பாஸ்கரன் KM - 10 எண்றதுக்குள்ள
Winner - சானு ஜான் வர்கீஸ் - தூங்காவனம்

சிறந்த வசனம்:
Nominees
பிரம்மா - குற்றம் கடிதல்
மணிகண்டன் - காக்கா முட்டை
சுபா - தனி ஒருவன்
ஜனநாதன் - பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை
Winner: சுபா - தனி ஒருவன்

சிறந்த திரைக்கதை:
Nominees
R .ரவிக்குமார் - நேற்று இன்று நாளை
மோகன் ராஜா - தனி ஒருவன்
அனுசரண் & மணிகண்டன் - கிருமி
அஜய் ஞானமுத்து - டிமாண்டி காலனி
Winner: R .ரவிக்குமார் - இன்று நேற்று நாளை

சிறந்த கதை:
Nominees:
ஜனநாதன் - பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை
மணிகண்டன் - காக்கா முட்டை
பிரம்மா - குற்றம் கடிதல்
கமல்ஹாசன் - உத்தமவில்லன்
Winner: பிரம்மா - குற்றம் கடிதல்

சிறந்த பின்னணிப் பாடகர் (பெண்)
Nominees:
கரெஷ்மா ரவிச்சந்திரன் - காதல் கிரிக்கெட் (தனி ஒருவன்)
பத்மலதா - காதலாம் கடவுள் முன் (உத்தமவில்லன்)
சாஷா த்ரிபாதி - நானே வருகிறேன் (ஓகே கண்மணி)
நிகிடா காந்தி - லேடி யோ (ஐ)
Winner: பத்மலதா - காதலாம் கடவுள் முன் (உத்தமவில்லன்)

சிறந்த பின்னணிப் பாடகர் (ஆண்)
Nominees:
சங்கர் மகாதேவன் - ரோஜா கடலே (அநேகன்)
பென்னி தாயள் - உனக்கென்ன வேணும் (என்னை அறிந்தால்)
கார்த்திக் - மழை வரப் போகுதே (என்னை அறிந்தால்)
சத்ய பிரகாஷ் - செல் செல் (காக்கா முட்டை)
Winner: கார்த்திக் - மழை வரப் போகுதே (என்னை அறிந்தால்)

சிறந்த பாடலாசிரியர்:
Nominees:
hiphop தமிழா / சுபா - தீமை தான் வெல்லும் (தனி ஒருவன்)
தாமரை - மழை வரப் போகுதே (என்னை அறிந்தால்)
நா.முத்துக்குமார் - செல் செல் (காக்கா முட்டை)
கபிலன் - பூக்களே சற்று ஓய்வெடுங்கள் (ஐ)
Winner: நா.முத்துக்குமார் - செல் செல் (காக்கா முட்டை)

சிறந்த பாடல்:
Nominees:
தீரா உலா - A R ரஹ்மான் (ஓகே கண்மணி)
மழை வரப் போகுதே - ஹாரிஸ் ஜெயராஜ் (என்னை அறிந்தால்)
காதலாம் கடவுள் முன் - ஜிப்ரான் (உத்தம வில்லன்)
காதல் கிரிக்கெட்டு - hiphop தமிழா (தனி ஒருவன்)
Winner: தீரா உலா - A R ரஹ்மான் (ஓகே கண்மணி)

சிறந்த ஆல்பம் / இசையமைப்பாளர்:
Nominees:
தனி ஒருவன் - hiphop தமிழா
என்னை அறிந்தால் - ஹாரிஸ் ஜெயராஜ்
ஓகே கண்மணி - AR ரஹ்மான்
அனேகன் - ஹாரிஸ் ஜெயராஜ்
ஐ - AR ரஹ்மான்
Winner: ஓகே கண்மணி - AR ரஹ்மான்

Best supporting actor (பெண்)
Nominees:
சாந்தி மணி - காக்கா முட்டை
லீலா சாம்சன் - ஓகே கண்மணி
ஆன்ட்ரியா - உத்தமவில்லன்
ஆஷா சரத் - பாபநாசம்
Winner: ஆஷா சரத் - பாபநாசம்

Best supporting actor (ஆண்)
Nominees:
சத்யராஜ் - இசை
தம்பி ராமையா - யட்சன்
KS ரவிக்குமார் - தங்கமகன்
அரவிந்த் சாமி - தனி ஒருவன்
அருண் விஜய் - என்னை அறிந்தால்
ராஜ்திலக் - ஆரஞ்சு முட்டாய்
பாவெல் நவகீதன் - குற்றம் கடிதல்
MS பாஸ்கர் - உப்பு கருவாடு
ஜோ மல்லூரி - காக்கா முட்டை
Winner: பாவெல் நவகீதன் - குற்றம் கடிதல்

சிறந்த குழந்தை நட்சத்திரம்
Nominees:
பேபி எஸ்தர் அனில் - பாபநாசம்
மாஸ்டர் அஜய் - குற்றம் கடிதல்
பேபி அனிக்கா - என்னை அறிந்தால்
மாஸ்டர் V ரமேஷ் - காக்கா முட்டை
மாஸ்டர் அமான் அப்துல்லா - தூங்காவனம்
Winner: மாஸ்டர் அஜய் - குற்றம் கடிதல்

சிறந்த Remake
Nominees:
பாபநாசம் - Wide Angle Creations & Raj Kumar Theatres
தூங்காவனம் - Raaj Kamal Films International & Sri Gokulam Movies
எனக்குள் ஒருவன் - Thirukumaran Entertainment & Abi TCS Studios
ஒருநாள் இரவில் - Paulsons Media
36 வயதினிலே - 2D Entertainment
Winner: தூங்காவனம் - Raaj Kamal Films International & Sri Gokulam Movies

சிறந்த பொழுதுபோக்கு
Nominees:
ஆம்பள - சுந்தர்.C
வேதாளம் - சிவா
நானும் ரவுடி தான் - விக்னேஷ் சிவா
உப்பு கருவாடு - ராதா மோகன்
Winner: நானும் ரவுடி தான் - விக்னேஷ் சிவா

சிறந்த Horror / Thriller
Nominees:
மாயா - அஷ்வின் சரவணன்
டார்லிங் - சாம் அன்டன்
கிருமி - அனுசரன்
இசை - SJ சூர்யா
Winner: கிருமி - அனுசரன்

சிறந்த Fantasy / Fiction
Nominees:
வை ராஜா வை - ஐஸ்வர்யா தனுஷ்
இன்று நேற்று நாளை - R ரவிக்குமார்
புலி - சிம்பு தேவன்
அனேகன் - KV ஆனந்த்
Winner: இன்று நேற்று நாளை - R ரவிக்குமார்

Best Attempt
Nominees:
திறந்திடு சீசே - நிமேஷ் வர்ஷன்
49-O - P.ஆரோக்கிய தாஸ்
பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை - ஜனநாதன்
ஆரஞ்சு முட்டாய் - பிஜு விஸ்வநாத்
Winner: 49-O - P.ஆரோக்கிய தாஸ்

சிறந்த நடிகர் (ஆண்)
Nominees:
கமல்ஹாசன் - பாபநாசம்
விக்ரம் - ஐ
அஜீத் - என்னை அறிந்தால்
கமல்ஹாசன் - உத்தமவில்லன்
விஜய் சேதுபதி - ஆரஞ்சு மிட்டாய்
Winner: கமல்ஹாசன் - உத்தமவில்லன்

சிறந்த நடிகர் (பெண்)
Nominees:
தன்ஷிகா - திறந்திடு சீசே
ஐஸ்வர்யா ராஜேஷ் - காக்கா முட்டை
நயன்தாரா - மாயா
நித்யா மேனன் - ஓகே கண்மணி
ஜோதிகா - 36 வயதினிலே
Winner: ஐஸ்வர்யா ராஜேஷ் - காக்கா முட்டை

சிறந்த இயக்குனர்
Nominees:
ரமேஷ் அரவிந்த் - உத்தமவில்லன்
அனுசரண் - கிருமி
கௌதம் மேனன் - என்னை அறிந்தால்
M மணிகண்டன் - காக்கா முட்டை
M ராஜா - தனி ஒருவன்
G பிரம்மா - குற்றம் கடிதல்
Winner: G பிரம்மா - குற்றம் கடிதல்

சிறந்த படம்
Nominees:
குற்றம் கடிதல்
காக்கா முட்டை
தனி ஒருவன்
உத்தமவில்லன்
கிருமி
Winner: காக்கா முட்டை

பெருத்த ஏமாற்றம்
Nominees:
மாஸ் - சூர்யா - வெங்கட்பிரபு
புலி - விஜய் - சிம்பு தேவன்.
லிங்கா - ரஜினி - KS ரவிக்குமார்
வேதாளம் - சிவா
ஓகே கண்மணி - மணிரத்னம்
ஐ - ஷங்கர்
Loser: மாஸ் - சூர்யா - வெங்கட்பிரபு

பி.கு: பூலோகம் பசங்க-2 ரெண்டையும் 2016ல் தான் நான் பார்த்தபடியால் அடுத்த லிஸ்ட்டில் சேர்க்கப் படும்.

எதிர்பார்ப்புகள் 2016
கபாலி
வடசென்னை 
தெறி
காதலும் கடந்து போகும்
எந்திரன் 2.0
விசாரணை