Tuesday, 26 January 2016

"பத்தமடை பாய்" விருது

இன்று மாலை ஆறரை மணிக்கு மாஸ்கோவிலிருந்து ஐரோப்பிய பாரம்பரிய உயரதிகாரியான கில்மாசபனோவ் என்பவர் அழைத்தார்.  எனக்கு வரும்  லா-டோமாடின பண்டிகையன்று எஸ்பானியலில் "பத்தமடை பாய்" விருது அளிக்கப்படவிருப்பதாக அறிவித்தார்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே அதை நான் அறிந்திருந்தேன்.  மால்டாவிலிருந்து என் பால்யகால நண்பரான CIA வின் உயரதிகாரி என்னை கூப்பிட்டு பத்தமடை விருதுகளுக்கான நுண்ணிய முன்னோக்குப் பட்டியலில் என் பெயர் இருப்பதாகச் சொன்னார்.  என் எழுத்துக்களை ஒரு குழுவாக உட்கார்ந்து தீவிரமாக கழுவி ஊற்றும் தீவிர பக்த கலாச்சார உயரதிகாரி முயற்சியால் அப்போது என்பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.  ஆனால் அதை நான் வழக்கம் போல் என்னை கலாய்க்கும் கும்பலின் ஒரு வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன்.

முழு beep பாடலையும் நாவலாக எழுதும் கருங்குழல் தொடங்கியபோது அந்தப் பெரு முயற்சியை பிரபஞ்சம் முழுக்கக் கவனப் படுத்த வேண்டும் என்று உலகளாவிய நண்பர்கள் விரும்பினர்.  அதற்கிணையான இலக்கிய முயற்சியோ அதை ஒட்டிய கலாச்சார பண்பாட்டு நடவடிக்கையோ கூட உலகத்தில் எங்குமில்லை.  அதனால் மீண்டும் "பத்தமடை" விருதுக்கான முயற்சிகளை வெளிநாட்டு நண்பர்கள் முன்னெடுத்தனர் எனக்குத் தெரியாமலே... லியோ டால்ஸ்டாய், பியோதர் தாஸ்தாவோய்ஸ்கி, மிகல் டெ செர்வன்ட்ஸ், சார்லஸ் டிக்கன்ஸ் உள்ளிட்ட பலரும் என்னை பரிந்துரை செய்திருக்கின்றனர்.

நான் அதை அறிந்தது அம்முயற்சி பரவலாக கசிந்து அதற்கு எதிராக சா.நி., ம.பு., எஸ்.ரா., த.ம., நா.நா. போன்றோர் எழுப்பிய கசப்பின் வன்மங்கள் வழியாகத்தான். என் தவத்தை அவதூறு செய்யும் செய்திகள் முன்னாள் நண்பர்களால் முன்னெடுக்கப் பட்டபோது என்னுடைய fake id மூலம் அவர்களின் whats app குழுவில் புகுந்து அறிந்து கொண்டேன்... என்னா அடி!!  முயற்சிகள் என்றால் என் பங்காளியைப் பற்றிய ஒரு விரிவான குறிப்பும் கருங்குழலின் ஐம்பதினாயிரம் அத்தியாயங்களின் போர்த்துகீசிய மொழியாக்கமும் தான்.  beep பாடல் டைனசர் போல, அதற்கான விளம்பரத்தை அதுவே உருவாக்கிக் கொள்ளும்.  அதைக் கேட்ட அனைவரும் அதன் உள்ளர்த்தத்தை உணர்ந்தனர் என்பதே வழிகளை வலியில்லாமல் ஆக்கியது.

ஆனால் அண்டார்டிகாவில் எழுந்த காந்தப் புயலால் கசங்கி இவர்களிடமிருந்து எதையும் உருவிக் கொள்ளப் போவதில்லை என்றும் இவர்களின் எந்தவொரு பூப்பு நீராட்டு விழாவிலும் கலந்து கொள்வதில்லை என அறிவித்தேன்.  சிலநாட்களுக்கு முன் Mujer  எஸ்பாநியல் இதழில் என்னுடைய மிக நீளமான கிட்டத்தட்ட 12 நாடிகல் மைல் இருக்கும் பேட்டி ஒரு பெட்டிச் செய்தியாக வந்தது.  அதில் கருங்குழல் குறித்து விரிவானதொரு சுருக்கமாக பேசப் பட்டிருந்தது.  "பத்தமடை பாய்"க்கு அதுவும் ஒரு காரணமாகியது.

திரு.கில்மாச்பநோவிடம் நான் இதை மறுக்கிறேன் என அறிவித்தவுடன் அதிர்ச்சியுடன் “எண்ணிப் பார்த்துதான் சொல்கிறீர்களா?” என்றார்.  "நல்லா எண்ணிப் பாத்துட்டேன், ரிடர்ன் லாரியில போகக் கூட பத்தாது.." என சொன்னவுடன் அவர் மேலும் அதிர்ந்தார்.  "இது UNO அளிக்கும் விருது அல்ல, 700 கோடி மக்களும் 7000 கோடி ஏலியன்களும் கொண்ட இப் பிரபஞ்சம் அளிக்கும் விருது" என்றார்.  "எனக்கு எல்லா beep ம் தெரியும், தேவையில்லை.." என்றேன். "இப்பதான் சந்தோசமா இருக்கு.." என்று சொல்லி அவர் வைத்து விட்டார்.

நான் மறுக்கும் அடிப்படை இதுதான், என் கிறுக்கல்களும் என்னைச் சுற்றியுள்ள கிறுக்கர்களும் எனக்கு முக்கியம்.  இலக்கியத்தின் அழகியல் நடுகீழ்மேல், அதனை ஏறி தழுவிய நான் ஒரு மேல், பி.வாசு முதல் பேரரசு வரை, சிம்பு முதல் அனிருத் வரை, நான் வரித்திருக்கும் இலக்கிய ஞானாசிரியர்களின் மேல் எனக்கிருக்கும் ஈடுபாடே என் செயல்பாட்டின் அடித்தளம்.  நவீன பாடல்கள் மேல் என் குருமரபாக வந்த ஞானத்தின் மேல் எனக்கிருக்கும் அழுத்தமான நம்பிக்கையையே நான் முன்வைத்து எழுதி வருகிறேன்.

கசப்பும் காழ்ப்புகளும் ஓங்கிய தமிழ்க் கருத்துச் சூழலில் வாங்கிய அடி, உதை மற்றும் அவமானங்களைக் கடந்து, தாக்குதல்களையும் தாண்டி நின்று கடந்த முன்னூறு ஆண்டுகளாக மிக மெல்ல நான் உருவாக்கியிருப்பது என் தரப்பு.  இவ்விருதால் பத்து பைசா உபயோகம் இல்லை என தெரிந்தால்  அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும்.

இவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் என்னாகும்? பொச்சரிப்பு பிடித்த நவீன இலக்கியவாதிகள் இதை நான் காசியப்பன் பாத்திரக் கடையில் வாங்கியது என்பார்கள்.  நடுவீதியில் க்வார்ட்டர் அடிப்பவர்களும், திறந்த வீட்டில் நியுட்ரல் அடிப்பவர்களும் நானும் அவர்களைப் போன்றவனே என்பார்கள். அவர்களுக்கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் முனி. முனி மட்டுமே.  என்னை வைத்து காஞ்சனா எடுக்கலாகாது...

என் ஒன்று விட்ட மச்சினியின் ஓரகத்தியோட புருசனுக்கும், என்னை ஓங்கி ஒன்னு விட்ட 7வது வீதியில் 4வது வீட்டிலுள்ள தாத்தாவின் 3வது மனைவியின் 4வது புருசனக்கும் மிக மிக வருத்தம். அறிஞர் அண்ணா என்ன சொல்வாரென்றெ தெரியவில்லை..

என் பெரும் வருத்தம் என்னவென்றால் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பலரும் கொண்ட இந்த தேசத்தை ஒரு பெரிய பண்பாட்டு வெளியாக எண்ணக் கூடியவன்.  குளங்களும், குட்டைகளும், எருமைகளும், தண்டவாளங்களும் என்னைப் பொறுத்தவரை தெய்வத் தோற்றங்களே... இவ்விருதை நான் மறுப்பதை குஷ்பூ புரிந்து கொள்வார்.  அவரில்தானே அன்னை இந்திராவைக் காண்கிறோம்..!!

26 comments :

 1. அது சரி..
  சா.நி., ம.பு., எஸ்.ரா., த.ம., நா.நா.
  இவங்க எல்லாம் யாரு ?

  ReplyDelete
  Replies
  1. சாந்த நிர்வாணி
   மங்கூஸ் புத்திரன்
   எஸ். ராவுத்தர்
   தனி மணியன்
   நாலூரு நாட்டாமை

   Delete
  2. அடடே.. நல்ல வேளை சொன்னீங்க.
   நா என்னவோ
   சாரு நிவேதிதா,
   மனுஷ்ய புத்திரனைத்தான் சொல்றீங்களோன்னு நினைச்சுட்டேன் நல்ல வேளை இல்ல தானே? (ஆமா இதில் ஆட் மேன் அவுட் மாதிரி எஸ்.ரா.சேர்க்கை என்ன அரசியலோ?)

   Delete
  3. குத்தறதுன்னு முடிவு பண்ணியாச்சுன்னா ஆட் மேனாவது, ஆடு மேய்க்கிற மேனாவது; எல்லாரையும் அவுட் ஆக்க வேண்டியதுதான்...

   Delete
  4. ஆட் மேன்ன குத்துங்க கொல்லுங்க


   ஆனா எதுக்கு இதுல ஆடு மேய்க்கரவன ஒப்பிடரீங்க இது என்ன சமன்பாடு

   Delete
  5. ஆட் மேன்ன குத்துங்க கொல்லுங்க


   ஆனா எதுக்கு இதுல ஆடு மேய்க்கரவன ஒப்பிடரீங்க இது என்ன சமன்பாடு

   Delete
  6. அ..ஆங்..ங்க..., தப்பு தானுங்க...,
   தெரியமங்க..., ஆங்... நடந்து போச்சுங்க..
   திருத்திக்கிறனுங்க...

   Delete
 2. ஐயோ சாமீ...! எங்கெல்லாம் போய் வர்றீங்க...!

  ReplyDelete
 3. என்ன DD இம்புட்டு அதிர்ச்சிய குடுக்குறீங்க?!
  ஏதோ நம்மால முடிஞ்சது...
  spoof முயற்சி பண்ணலாம்னு தோணிச்சு.. வகையா சிக்குனாரு.. வெச்சு செய்தாச்சு...

  ReplyDelete
 4. எப்படி...இப்படி்யெல்லாம் எழுதிறீங்க.ச நி,ம பு,எஸ் ர....சூப்பர்

  ReplyDelete
  Replies
  1. spoof முயற்சி பண்ணலாம்னு தோணிச்சு ஜானி.. வகையா சிக்குனாரு.. வெச்சு செய்தாச்சு...

   Delete
 5. ஹா ஹா ஹா.. பின்னிட்டேள் ஓய்... பிரமாதம்..

  - நந்தன் ஶ்ரீதரன்

  ReplyDelete
  Replies
  1. பஹவானே... நானும் பொறுத்துப் பொறுத்து பாத்தேன்.., கடைசில என்னையும் பேச வெச்சுட்டாளே...!!

   Delete
 6. பதம்டையில் வசிக்கும் 'பாய்' கூட விருது கொடுக்கிறாரா என்ன?

  ReplyDelete
  Replies
  1. அதுசரி.., அவரு விருந்து இல்ல கொடுப்பார்!!
   புக்குன்னு நெனச்சுடாதேள், பிரியாணியாக்கும் !!

   Delete
  2. ஐந்து லட்சம் ரொக்கமும் ,ஐந்து பவுன் பதக்கமும் உடன் கொடுப்பார்கள் என்று எண்ணி இருந்தேன் , பொசுக்குன்னு பத்து பைசவுக்கு பெறாது -ரிடர்ன் லாரியில போகக் கூட பத்தாது- ன்னு சொல்லிட்டீங்க .அதுதான் மேட்டரா ...!!

   Delete
  3. பின்ன, அந்த விருத வெச்சு உங்களால ஒரு
   சன்னிலியொன் படத்துக்கு டிக்கெட் வாங்க முடியுமா?
   சரவணபவன் ஓட்டல்ல வடை வாங்க முடியமா?
   அட, காங்கிரஸ்ல ஒரு சீட்டாவது வாங்கத்தான் முடியுமா?!

   Delete
  4. ப.ஜ.கவில்சீட்டு பேஷா வாங்கலாம்! அங்கே 234 pபேர்கள் மொத்தமே இல்லையாம்! போறேளா? அங்க நிக்கப் போறவா எல்லாமம் தேர்தலில் ஜெயிக்க இல்லவாம்! செலவு செய்யக்கொட்டும் கும்பனியார்கள் பணத்திற்க்கா மட்டுமே!

   Delete
  5. என்னது பிஜேபி-ல நிக்கறதுக்கா?
   ம்ஹ்ம்ம்..., "ஒருத்தனுக்கு எந்திருச்சி நிக்கவே முடியலையாம், அவனுக்கு ஏழு பொண்டாட்டியாம்.."

   Delete
  6. [[[என்னது பிஜேபி-ல நிக்கறதுக்கா?
   ம்ஹ்ம்ம்..., "ஒருத்தனுக்கு எந்திருச்சி நிக்கவே முடியலையாம், அவனுக்கு ஏழு பொண்டாட்டியாம்.." ]]]

   அவனாலே தானே எந்திருச்சி நிக்க முடியலை---அப்புறம் என்ன? படுத்துகிட்டே ஜெயிக்கலாம்!

   Delete
 7. ஹஹஹஹ்.. //பத்து பைசவுக்கு பெறாது -ரிடர்ன் லாரியில போகக் கூட பத்தாது// கில்மானு ஆரம்பிச்சு இட்லில முடிச்சு....நல்லாவே கழுவி ஊத்தியிருக்கீங்களே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசியாரே...!!
   //"இட்லி..!?"// - குசும்பை ரசித்தோம்...

   Delete
 8. என் ஒன்று விட்ட மச்சினியின் ஓரகத்தியோட புருசனுக்கும், என்னை ஓங்கி ஒன்னு விட்ட 7வது வீதியில் 4வது வீட்டிலுள்ள தாத்தாவின் 3வது மனைவியின் 4வது புருசனக்கும் மிக மிக வருத்தம். அறிஞர் அண்ணா என்ன சொல்வாரென்றெ தெரியவில்லை..
  வயறு வலிக்குதுங்க

  ReplyDelete
  Replies
  1. டாக்டர் செனா மோனா எம்பிபிஎஸ்(ப்ளுடோ கிரகம்), எபார்சிஎஸ்(வீனஸ் கிரகம்) வயித்து வலி ஸ்பெஷலிஸ்ட் , முயற்சி பண்ணி பாருங்களேன்... கைராசிக்காரர்

   Delete
 9. சூப்பர். நான் கூட இதைப் பற்றி எழுத நினைத்தேன். இருந்தாலும் உங்களது சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி...
   நினைக்கிறதோட விடாம பிரிச்சு மேய்ஞ்சுடுங்க...

   Delete