Monday, 20 June 2016

RIP சரித்திரம்

அதிர்ச்சி, கவலை, ஆத்திரம் இதெல்லாம் ஒன்னா வரணும்னா..., மேற்கொண்டு படிங்க...

பொதுவாக அந்தந்த கட்சியை அல்லது ஜாதியை சேர்ந்த பத்திரிக்கையோ, டிவியோ அவங்களுக்கு ஏத்தா மாதிரி செய்திகளை போட்டு நமக்கு நாமேன்னு சொறிஞ்சிக்கிறது இப்போ நமக்கெல்லாம் பழகிப் போச்சு.  அவங்கவங்களுக்கு புடிச்ச நாலாவது தூணை போய் கட்டி புடிசிச்சுக்கலாம்.  ஆனா குழந்தைகளோட பாடத் திட்டத்துல அநியாயத்துக்கு அடிச்சு விட்டத சமீபத்துல படிக்க நேரயில தான் சத்தியமா எந்த மாதிரி நாட்டுல வாழுறோம்னு தோணுச்சு...!!

ஆறாம் வகுப்பிற்கான CBSE பாடப் புத்தகத்தில் அசைவம் சாப்பிடுபவர்கள் ஏமாற்றுபவர்களாகவும், பொய் சொல்பவர்களாகவும், நேர்மையற்றவர்களாகவும், வாக்குத் தவறுபவர்களாகவும், தீய வார்த்தைகள் பேசுபவர்களாகவும், திருடுபவர்களாகவும், வன்முறையாளர்களாகவும், பாலியில் குற்றங்கள் செய்பவர்களாகவும் இருப்பார்கள் என குறிப்பிடப் பட்டுள்ளது.  கீழுள்ள link-ஐ சுட்டிப் பார்க்கவும்.

இப்போ இந்தக் குறிப்பை எழுதுனவன், அச்சிட்டவன், வெளியிட்டவன் எல்லாம் யாருன்னு ஆராயத் தேவையில்லை, அவனுங்க யாருன்னு எல்லோருக்கும் நல்லாவே தெரியும்.  அவனுங்கள திருப்பி நாண்டுக்கிட்டு சாகிற மாதிரி நாலு இல்ல, நானூறு கேள்வி கூட கேட்க முடியும்.  ஆனா, ஒட்டு மொத்த சமூகத்தின் மேலயும் இப்படியொரு அநியாயத்தை சுமத்தும் அதிகாரத்தைக் குடுத்த இந்த சிஸ்டத்தை அல்லது ஆட்சியை தேர்ந்தெடுத்த நம்மள என்ன சொல்றது?

குஜராத்திய பாடப் புத்தகத்தில் "Internal achievements of Nazism," என்ற தலைப்பில் "Hitler lent dignity and prestige to the German government within a short time, establishing a strong administrative set-up."என சொல்லப் பட்டிருக்கிறதாம்.

செம காமெடி என்னான்னா, சைவம் மட்டுமே சாப்பிட்டு வந்து, பின் கற்பழிப்பு வழக்கில் கைதான ஜாமியார் ஆசாரம் பாபு ராஜஸ்தானின் 3-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் சிறந்த புனிதர்களில் ஒருவனாக காட்டப் பட்டிருக்கிறது.  கூடவே நம்ம ஜில்பா ஜெட்டிக்கு யோகா சொல்லிக் குடுத்த பாபா ராம் தேவும்...!!

குஜராத் பாடத்திட்டத்தில் மற்றுமொரு வரலாற்றுப்(!!) பதிவு.  "கடவுள் ரொட்டி சுடும் போது முதலில் வெந்தும் வேகாமலும் பொறந்தவன் வெள்ளைக்காரனாகவும் , அடுத்ததா கருகிப் போய் பொறந்தவன் கறுப்பர்கள்ன்னும் ஆகிடுகிச்சாம்.  முதல் ரெண்டு தவறுகளுக்கு அப்புறம் கரெக்ட்டா சுட்ட ரொட்டி இந்தியர்களாம்..."

The National Council of Educational Researchன்னு ஒன்னு இருக்காம், அது என்னமோ படிச்சவங்களுக்குத் தானே தெரியும் போல, அவங்க ஒரு மேட்டர் விட்டிருக்காங்க பாருங்க.., சோனியா காந்தி, பர்வேஸ் முஷாராஃப், ஜார்ஜ் புஷ், இவிங்கெல்லாம் மிகப் பெரும் தலைவர்களாம்...!!

அடுத்தது இன்னும் பயங்கரம், வாத்ஸாயனருக்கே அடுக்காது... 
"Lesbianism is a product of "unnaturally intense friendships... where outlets for a more normal sex drive do not exist" or even a "faulty environment" and claims that the "accompanying deep love... may lead to suspicion, jealousy, suicide or murder"
இது ஏதோ இஸ்கூலு புக்ல வந்துச்சான்னு நினைக்காதீங்க, AIIMS-யுடைய சிலபஸ்ல http://www.aiims.edu/aiims/academic/aiims-syllabus/Syllabus%20-%20MBBS.pdf, Forensic Medicine-ன்ற தலைப்புல இருக்கு... https://books.google.co.in/books?id=cLemGip2794C&pg=PA216&lpg=PA216&dq=tribadism+forensic+medicine+india&source=bl&ots=gS3OFioVZi&sig=PXrb6mnfQD-GZyiHqN4_hUAAd0I&hl=en&sa=X&ei=U5KSVb7AD8mwuATSk4DwAQ&ved=0CC8Q6AEwAw#v=onepage&q=tribadism%20forensic%20medicine%20india&f=true

மேலும் இதுபோன்ற தரித்திர, ஸ்லிப் ஆகிடுச்சு, சரித்திர நிகழ்வுகளுக்கு இந்த link-ல http://www.scoopwhoop.com/inothernews/indian-school-textbooks-contained-really-disturbing-things/ போய் பார்க்கலாம்.  கல்கி, சாண்டில்யனை எல்லாம் கலங்கடிக்கும் பல வரலாற்று குறிப்புகளை கண்டு குமுறலாம்...

இதில் பலதும் பழைய செய்திகள் என்றாலும் ஒட்டுமொத்தமாக தற்போது பார்க்க நேர்ந்ததால் இப்பதிவு.  அஞ்சு வருச ஆட்சி முடியங்காட்டியும், IAS, BSRB, கோன் பனேகா க்ரோர்பதி, LKG எல்லாத்துக்கும் இருந்துதான் கேள்விகள் கேப்பாய்ங்க போல..!!


4 comments :

 1. எல்லாம் சரி! இது ஓகேவா என்று சொல்லுங்கள்...
  http://www.nambalki.com/2016/06/blog-post_19.html
  வீடியோவில்..நேரம் 3.20 -ல் பொதுவில் இவர் விளையாடுவது சரியா தப்பா?

  அவர்கள் சொன்னது...கீழே உள்ளது தப்பு என்றது.

  "Lesbianism is a product of "unnaturally intense friendships... where outlets for a more normal sex drive do not exist"

  இப்படி சொல்லலமா?

  "பொது இடத்தில் கை போடுவது, is a product of "unnaturally intense friendships... where outlets for a more normal sex drive do not exist"

  என்ன சொல்றேள்? புத்தகம் எழுதுனவா கிட்டே கேட்டு சித்த சொல்றேளா?

  ReplyDelete
  Replies
  1. விளையாடுறதுன்னு முடிவு பண்ணிட்டா மூணு இருவதா இருந்தா என்ன, முப்பத்தியாறா இருந்தா என்ன உள்ள பூந்து வெளாட வேண்டியது தானே?!

   அப்புறண்ணா புத்தகம் எழுதினவா எல்லாம் வேதபாடசாலையில உபநிஷதம் கட்திண்டிருப்பா போல, டவுட்டு கேட்டு கேக்க போயி சாபம் விட்டுட்டாள்னா?!

   Delete
 2. என்ன நண்பரே என்னை எல்லோரும் நல்லவருன்னு சொல்றாங்க நான் அசைவம் சாப்பிடுகிறேனே......

  காணொளி இன்னும் காணவில்லை காணப்போகிறேன்.
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர் ஜ்ஜீ
   அதுல இன்னொரு காமெடி என்னன்னா சில பேரு, "அசைவத்துல இருக்க எல்லாம் சைவத்துலயும் இருக்கு"ன்னு வாதாடுவாங்க...!!

   Delete