Thursday, 7 July 2016

கண்ணுதானே போச்சு!! உசுரா போச்சு?!

கீழுள்ள ரெண்டு linkம் பார்வைக்காக...

http://tamil.thehindu.com/tamilnadu/மேட்டூர்

http://tamil.thehindu.com/india/மஹதிபட்டினம்

மேட்டூர், மஹதிப்பட்டினம் ரெண்டு சம்பவங்களிலுமே உள்ள பெரிய டவுட்டு என்னன்னா...

ஆப்பரேஷன் பண்ணதுல முறையே 19 மற்றும் 13 பேருக்கு கண்பார்வை பறி போயிருக்குன்னா இது டாக்டர்களின் கவனக் குறைவு மட்டுந்தானா?!

ஆஸ்பத்திரிக்கு வரும் மருந்துகள் முறையானதுதானா? முடிவு தேதிகளுக்கு முன்னமே உபயோகப் படுத்தப் பட்டனவா? கலப்படம் அற்றதா? அரசு ஆஸ்பத்திரியில் இருக்கும் டாக்டர் நிச்சயமா இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?!

அதெப்படி ஒரு அரசு டாக்டர் ஒரே நாள்ல தொடர்ந்து 10-க்கும்  மேற்பட்டவர்களுக்கு ஒரே மாதிரி தப்பு தப்பா பார்வை பறி போகிற அளவுக்கு ஆப்பரேஷன் பண்ணியிருப்பார்?!

அப்படியே டாக்டர் செய்திருந்தாலும் அவரை அடுத்த ஊருக்கு ட்ரான்ஸ்பர் செய்தால் மட்டும் எல்லாம் சரியாகிடுமா?  அடுத்த ஊர்ல போய் அவர் என்ன பஞ்சு முட்டாயா விற்பார்? அதே தொழிலைத்தான் பார்க்கப் போகிறார்!!

பாலாஜி சக்திவேல்-ன் "சாமுராய்" படம் தான் கண்முன் வந்து போகிறது...

ஆஸ்பத்திரி மருந்துகளுக்கு விடப்படும் டெண்டர், டெண்டரை எடுத்து நடத்தும் நிறுவனம்/ஆள், வாங்கப் படும் மருந்து நிறுவனங்கள், அவற்றின் முதலாளிகள், மருந்துகளின் சந்தை விலை, அரசு நிர்ணயித்த விலை, அரசின் கொள்முதல் விலை, மருந்துகள் தயாரிக்கப் படும் ஆய்வுக்கூடங்கள்/தொழிற்சாலைகள், மருந்துகள் சேமித்து வைக்கப் படும் குடோன்கள், அந்தந்த ஊர்களில் இம்மருந்துகளை அனுமதிக்கும் மருத்துவ டீன்கள், பின்னணி டீலிங்குகள் இந்த விபரமெல்லாம் மீடியாகாரங்க நோண்டி போட மாட்டாங்களா?!

அவங்கள இதுமாதிரி CBI விசாரணை பண்ணுவாங்களா?!


சுமார் பத்து வருடங்களுக்கு முன், சன் டிவி- ன்னு நெனைக்கிறேன்... லஞ்சம் புழங்குவதில் டாப் 10 துறைகளில் முதலிடத்தில் உள்ளது எது என எதிர்ப்பார்ப்புடன் ஒரு டாக்குமெண்டரி வந்தது... பலரும் போலீஸ் அல்லது RTO தான் இருக்கும் என நினைத்திருக்க முதலிடம் பிடித்ததோ மருத்துவத் துறை..!!  அந்த இடத்தை யாருக்கும் விட்டுத் தராமல் இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறதோ?!

இன்னும் எத்தனை பேருக்கு என்னவெல்லாம் போகப் போகுதோ?!

20 comments :

 1. இதுக்கே பயந்தா எப்படி.. மாடியில் இருந்து நாயை வீசின ரெண்டு பேர் அடுத்த வருஷம் ஸ்டெதஸ் ஸ்கோப் மாட்டின்னு வருவான். அவன் வந்தவுடன் இருக்கு .. அதுவரைக்கும் ... கண் போன போக்கில்லே... இருங்க.. .

  ReplyDelete
  Replies
  1. ஓ... இன்னும் அதுவேற இருக்கில்ல, பேஷண்ட்டுகளை எல்லாம் தூக்கி போட்டு செத்து செத்து வெளாடுவானுங்களோ?!

   Delete
  2. சேம் சொல்ல வந்தா இங்க நம்ம விசு...ம்ம்ம் இன்னும் என்னென்னலாமோ நடக்குது...

   Delete
  3. அந்த "நாய் மருத்துவ மாணவர்கள்" மேட்டர்ல விசு கொஞ்சம் அதிகமாவே பாதிக்கப் பட்டுட்டார்.

   Delete
 2. நியாயமான கேள்விகள் நண்பரே....

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜீ...,
   அதுனாலதானே ஆதங்கத்தோட போட்டிருக்கோம்.

   Delete
 3. மலர்!
  டாக்டர்களை நன்னா குத்துங்க எஜாமன்! நானும் சேம்-சைடு கோல் போடப்போகிறேன்! விக்ரம்-சாமுராய் படத்தை பத்திய இந்த பதிவு--என் அந்த நாள் நியாபங்களை உசுப்பிவிட்டு விட்டது!

  அந்த ஸ்டில்லின் வசனம்...
  என் நினைவில் இன்றும் உள்ளது...

  அந்த மூன்று பெரும் விகரமிடம் கேட்பார்கள்.
  ஊம்..பெயர் தியாகராஜன் MBBS; அப்பா பெயர் நல்லமுத்து சாமி! அம்மா பெயர் ________ காமேஸ்வரி! உங்களுக்கு என்ன வேண்டும்!

  வருகிறேன்...புது வீச்சோடு கல்லூரி நியாபகங்கள் சுமந்து கொண்டு!

  பின்குறிப்பு:
  இந்த படம் அற்புதமான படம்; கடைசி அரை மணி நேரம் சங்கரின் டெம்ப்ளேட் படம்; போர்! அதை நீக்கி விட்டால் படம் சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. சாமுராய் சங்கர் படம் இல்லையே நம்பள்கி....சாமுராய் பாலாஜி சக்திவேல்

   Delete
  2. ஓ ஓகெ பாலாஜி சங்கரின் சிஷ்யன்...

   கீதா

   Delete
  3. @ நம்பள்கி
   சீக்கிரம் வாங்கோண்ணா, வெயிட்டிங்

   Delete
  4. பா.ச.வோட முதல் படம் சாமுராய் தான்..., தொடர்ந்து வந்தவை காதல், கல்லூரி, வழக்குஎண்
   முதல்ல சாமுராய் கதையை அஜித்திடம் சொல்ல, அஜித்தோ சில மாற்றங்களை கேட்க திட்டம் கைவிடப் பட்டது.
   பின்பு சரவண சுப்பையா அஜித்திடம் ஒரு கதையை சொல்ல, அஜித்தோ சாமுராய் கதையை அவர் இஷ்டத்திற்கு மாத்தி எடுக்கச் சொல்ல இருவரும் சேர்ந்து எடுத்த வாந்தி தான் "சிட்டிசன்"

   Delete
 4. this happens all over India... the reason is Pharmacies test new medicines on indian patients.
  March 11, 2015: Four elderly persons of the 18 operated at Navjeevan Eye Hospital in Panipat lost their sight. The victims were rushed to PGIMER, Chandigarh, on March 13. Private eye surgeon Ankur Gupta and Samalkha-based Samaj Sewa Samiti Sewarth Charitable Hospital booked for negligence.
  November 4, 2014: Thirty-three of 153 operated at eye camp at Ghuman village in Gurdaspur lost sight due infection after cataract surgery. Doctor arrested on Nov 7 and case registered against hospital and Mathura-based NGO.

  ReplyDelete
  Replies
  1. வளர்ந்த நாடுகளின் ஆய்வுக்கூடமாகவும், ஆய்போகும் இடமாகவும் மாறிப்போனது நம்மூரு...

   Delete
 5. Yeanda naayae ...Doctors pathi thappa pesura Mayirae illadha mayirapudungi , rating kudutha sun tvyae oru thirutu kudumbamdhaanda .. Aambalaya irundha avangala pathi blog eludhuda paapom , thorathi thorathi adipaanganu doctors pathi thappu thaapa eludharadhu . Doctors lifestyle theriyuma unaku evalo stressful life theriuma ... Blognu onnu create pannikitu kaiku vandhadhellam eludhuradhu " we are doctors not gods if you want to be treated by a god please visit the temple next door" 'By a DOCTOR'

  ReplyDelete
  Replies
  1. அனானியா வந்து கமெண்ட் போட்டிருக்க நீங்க ஆம்பளையா, பொம்பளையா திருநங்கையான்னு தெரியல, உங்க கமெண்ட் என் உதிர்ந்த மயிருக்கு தான் சமம் என்றாலும் ஒரு புரிதலுக்காக இந்த reply இடுகிறேன்.

   இப்பதிவில் மருத்துவத் துறைன்னு தான் குறிப்பிட்டு இருக்கேனே ஒழிய, மருத்துவர்கள்ன்னு எங்கேயும் நான் குத்திக் காட்டலியே..!! நாலு வரியை முழுசா படிச்சு புரிஞ்சுக்காத மண்டைகள் எல்லாம் எப்படி மருத்துவம் படிச்சு முடிச்சுதுகள்?!

   சன்டிவி பன்டிவி உன்டிவி உங்காயாடிவி பத்தியெல்லாம் எப்போ எப்படியெழுதனும்ன்னு நாங்க பாத்துக்கிறோம்..

   உங்க lifestyle பத்தி நான் என்ன **க்கு கவலைப் படணும்? வேலை செய்ய வக்கில்லன்னா சுலபமா சம்பாதிக்க உள்ள வழிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து செய்யலாமே?! உங்களை கஷ்டப்பட்டு டாக்டர் தொழில்தான் பாக்கணும்னு எவன் சொன்னான்?!
   நீங்க ஒரு டாக்டர்-ன்றதே சந்தேகமா இருக்கு, இதுல கடவுள்ன்னு சொல்லுவோம்ன்னு நப்பாசை வேற..!!

   உங்களுக்கு காமெடி சரியா வரலன்னு தோணுது.., தெரிஞ்சதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!!

   என் blog-ல் வரும் கமெண்ட்டுகளை auto publish mode-ல் தான் வைத்துள்ளேன். Blogger approval எல்லாம் தேவையில்லை.
   நீங்க உண்மையிலே மெடிக்கல் சீட்டு கிடைச்சு, படிச்சு, பாஸ் பண்ணி வைத்தியம் பாக்குற மருத்துவர்ன்னா, if you really have balls, உங்க உண்மையான பேர்ல கமென்ட் போடுங்க.

   Delete
  2. ஆமா நீ ஏன் பேர் கூட சொல்ல முடியாத ஆளுங்களுக்கெல்லாம் பதில் சொல்லின்னு நேரத்தை வீணடிக்கிற... ?

   Delete
  3. அது சரி... உங்க விளக்கத்துல்ல சொல் குற்றம் இல்லாட்டியும் பொருள் குற்றம் இருக்கும் போல இருக்கே...

   ஆரம்பத்தில்...

   //நீங்க ஆம்பளையா, பொம்பளையா திருநங்கையான்னு தெரியல//
   ன்னு எழுதி இருக்கீங்க.. ஆனா முடிக்கும் போது...

   //if you really have balls//
   ன்னு எழுதி இருக்கீங்க..

   சம்மந்தம் எங்கேயோ இடிக்குதே...

   Delete
  4. கூட்டி கழிச்சு பாருங்க, கணக்கு சரியா வரும்...

   Delete
 6. Sorry guys ... Was busy in casuality yesterday , couldn't reply .To my medical knowledge and my experience having or not having balls , male , female and transgenders are not related to guts ,Its all about hypothalamic - pituitary - gonadal axis . Having guts is related to limbic system in our brain and I have it .... Please enquire before blogging anything. By a DOCTOR

  ReplyDelete