Sunday, 3 January 2016

பொங்கியெழும் மனோகரன்களுக்கு ஒரு வேண்டுகோள்...

மேலே உள்ள படம் கடந்த இரண்டு நாட்களா facebook, whatsapp, twitter என சுத்திக் கொண்டு இருக்கு.

அரசாங்கம் அறிவித்துள்ள 10லட்சம் வருமானத்துக்கு மேலுள்ளவர்களுக்கு கேஸ் மானியம் ரத்து என்ற அறிவிப்பிற்கு இணையாக 10லட்சம் வருமானத்திற்கு மேலுள்ளவர்களுக்குண்டான Reservation-யும் ரத்து செய்தால் என்ன என்று பல அறச்சீற்ற கனவான்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இதை முழுமையாக ஆதரித்து வழிமொழிகிறேன்...


எரிவாயு பற்றாக் குறையைப் போக்க இயலாத அரசாங்கத்த தட்டி கேக்காம, எப்படா சான்ஸ் கிடைக்கும் வேதாளத்தை நெளிய விடலாமென காத்திருக்கும் இந்தப் பொங்கியெழும் மனோகரன்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்...


முதல்ல உங்க ஏரியாவுல இருக்க காலனிப் பகுதிய சீரமைச்சிட்டு (ஒழிச்சுக் கட்டிட்டு இல்ல),
உங்க வீட்டு சாக்கடையில நீங்களே இறங்கி அடைப்பெடுத்துட்டு,
வர்ணாசிரமத்தையும் மனுஸ்ம்ருதியையும் மயானத்துல நீங்களே இறங்கி குழிவெட்டி புதைச்சிட்டு,
10லட்சத்துக்கே மேல சம்பளம் வாங்குற யாராயிருந்தாலும் உங்க வீட்டு வாரிசு விரும்பும் பட்சத்தில் பெண் எடுக்கும்/கொடுக்கும் மனநிலையோட,
Equality-க்கும் Justice-க்கும் உள்ள வித்தியாசத்தை புரிஞ்சிக்கிட்டு,
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எழுதியது எட்டு பேர் சேர்ந்த ஒரு குழு என்பதை தெரிஞ்சுகிட்டு...

அப்புறமா வந்து சமூக அநீதிக்கு எதிரா மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் போங்க..!!

7 comments :

 1. ரிசர்வேஷன் பெறுபவர்களில் எத்தனை பேர் தங்கள் வீட்டு சாக்கடைகளை சுத்தம் செய்து கொள்கிறார்கள் என்று சொல்லுங்களேன். அதிக வருமானம் உள்ள யாராவது இந்த வேலைகளெல்லாம் செய்திருக்கிறார்களா? நீங்கள் செய்திருக்கிறீர்களா? முற்பட்ட இனத்தவர்களை விட ஆண்டுக்கு 10 லட்சம் வாங்கும் இதர இனத்தவர்களே அதிகம். அவர்களுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக் கோருவதில் என்ன தவறு? அந்த இட ஒதுக்கீட்டு சலுகை அதே இனத்தை சேர்ந்த குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு போய் சேரட்டுமே.சமூக நீதி பெயரில் அதிக வருமானம் உள்ளவர்களே மீண்டும் மீண்டும் அனுபவிப்பதுதான் சமூக நீதியா?

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய ஆதரவைத் தானே நான் முதலாவதாக பதிவு செய்திருக்கிறேன்.
   ஏற்றத் தாழ்வுகள் முழுமையாக ஒழிக்கப்பட்டு, சமத்துவ நிலை வரும்வரையில் போராளிகள் பொறுத்துத்தான் ஆக வேண்டும். இந்த மாதிரி கண்ட கண்ட சூழலுக்கும் reservation-ஐ தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம்.

   //முற்பட்ட இனத்தவர்களை விட ஆண்டுக்கு 10 லட்சம் வாங்கும் இதர இனத்தவர்களே அதிகம்//
   இந்த புள்ளிவிவரத்தை எங்கிருந்து எடுத்தீங்க..? விளக்கமா சொல்ல முடியுமா?


   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. மலம் அள்ளுபவன் மகன் (ரிசெர்வேஷன் உதவியால் படித்து} வருடம் பத்து லட்சம் பணம் வாங்குகிறான்! ஒரு வருடத்தில் வேலை போகிறது? அப்ப மறுபடியும் அப்பனுடன் சேர்ந்து மலம் தான் அள்ள வேலை கிடைக்கும்!

   அது சரி! திருவண்ணாமலை கோவிலில் லட்டு கூட பிடிக்க முடியாது! பிராமணாள் மட்டும் தான் அந்த வேலைக்கு apply செய்யமுடியும். லட்டு பிடிக்க என்ன ஜாதி ஒய்!

   Delete
  4. ஹ்ம்ம்... அப்படித்தான்...
   இன்னும் நல்லா போட்டுத் தாக்குங்க ஓய்

   Delete
 2. யாரும் இந்த உண்மையான பதிவுக்கு பின்னூட்டம் இடமாட்டார்கள். அதான் தமிழனின் நிலமை. ஜால்ரா அடிப்பதில் ""நம்ம ஆளுக்கு"" ஈடு யாரும் இல்லை.

  இதிலிருந்து டோட்டல்லா ஏன்னா தெரியுதுன்னா உலகத்தில் உள்ள எல்லா கருமத்துக்கும் ஒரே காரணம் இந்த ரிசர்வேஷன் தான். இந்த வெள்ளத்திற்கு கூட ரிசர்வேஷன் தான் காரணம். போதுமா?

  ரிசர்வேஷன் எதுக்கு கொண்டு வந்தார்கள் என்ற அடிப்படை புரிதல் இல்லாதவர்களிடம் பேசி என்ன பயன்? ரிசர்வேஷன்-ஆல் பயன்பட்ட ஒருவர் கூட உங்கள் வாசகர் இல்லையா? இல்லை நாம் ரிசர்வேஷன் மூலம் முன்னுக்கு வந்ததை சொல்ல வெட்கமா? இல்லை வெட்கமாக இருப்பதை விட, உங்களுக்கு சப்போர்ட் பண்ணி எழுதி அவா கோவிச்சிண்டா என்ற நினைப்பே முக்கிய காரணமாக இறுக்குமா?

  இருந்தாலும், ரிசர்வேஷன் நூற்றுக்கு நூருக்கு நூறு சரி!

  எங்கள் முன்னோர்களும் ஆண்டடைகள் தான்---இதற்கு நான் வெட்கப்படவில்லை; அந்தக்காலம் அப்படி! தவறுகள் மன்னிக்கப்பட்டால் மட்டும் போதாதது--அதற்கு நிவர்த்தியும் செய்யணும். அதைத்தான் அரசு இப்படி ரிசர்வேஷன் மூலம் நிவர்த்தி செய்கிறது---இன்னும் செய்யணும்---மண்டல் கமிஷன் உள்பட!

  இப்படிக்கு,
  ரிசர்வேஷனால்ல் தமிழ்நாட்டில் வேலை கிடைக்காமல் முழுவதும் பாதிக்கப்பட்டவன்.

  ReplyDelete
  Replies
  1. //தவறுகள் மன்னிக்கப்பட்டால் மட்டும் போதாதது--அதற்கு நிவர்த்தியும் செய்யணும். அதைத்தான் அரசு இப்படி ரிசர்வேஷன் மூலம் நிவர்த்தி செய்கிறது//

   நறுக்குன்னு சொல்லிட்டீங்க...
   நன்றி

   Delete